Showing posts with label அகதிகள். Show all posts
Showing posts with label அகதிகள். Show all posts

Thursday, August 7, 2008

சென்னையில் கைதான இருவரும் புலிகளால் பொருட் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டார்களாம்


சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் பிரிவில் பணியாற்றினேன். தற்போது போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஏராளமான பொருட்களுக்கு தேவையேற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஆயுத தளபாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று கள்ளத்தோணி மூலம் நான் இராமேஸ்வரத்தை வந்தடைந்தேன். பின்னர் அங்கிருந்து சென்னை கே.கே. நகரையடைந்தேன்.அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். பின்னர் உமாரமணன் என்பவர் சென்னை வந்து இருவரும் தனியான வீடொன்றில் தங்கி இருப்போம் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் வீடு தேடினோம். எங்கள் மீது சந்தேகப்பட்டு எவரும் வீடு வாடகைக்கு விட வில்லை. எனவே அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை என்னுடைய மனைவி போல் நடிக்க வைத்து அந்த பெண்மணி கல்லூரியில் படிப்பதாக கூறி ஒருவாறாக திருமங்கலத்தில் வீடொன்று கிடைத்தது. இதனையடுத்து மனைவியாக நடித்த இளம் பெண்ணை அனுப்பி வைத்து விட்டோம்.

அதைத் தொடர்ந்து ஒருநாள் ஒருவர் இரசாயணப் பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அவை மாதிரிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசோதனை செய்து அவை தரமான பொருட்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பெரிய அளவில் கொள்வனவு செய்து தருவதாகவும் கூறினார்கள். குறிப்பாக அமோனியம் நைட்ரேட்டை சென்னையில் உள்ள ஆய்வுகூடத்தில் சோதனை நடத்தி அதன் தரத்தை பரிசோதிக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள்.

பின்னர் எமது செலவுக்காக ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தில் வீட்டுமுற்பணமாக ரூ.20 ஆயிரம் மற்றும் எங்கள் செலவுகளுக்காக ரூ.23 ஆயிரம் இருந்தது. அதை பொலிஸார் பறிமுதல் செய்து விட்டனர்.6 மாதம் சென்னையில் தங்கி இருக்க எங்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அதன்பிறகு நாங்கள் இருவரும் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம். தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் சென்னையில் தங்கி இருக்கும்போது இங்குள்ள சகோதர மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்யக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

எங்கள் நோக்கம் இங்கிருந்து பொருட்களை கொண்டு செல்வதுதான். வேறு எந்த தவறான நோக்கத்தோடும் நாங்கள் இங்கு வரவில்லை.இவ்வாறு அமலன் தெரிவித்தார்.தற்போது அமலனின் மனைவியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண் குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் யாராவது நுழைந்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் கே.கே. நகர் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

Tuesday, August 5, 2008

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவல் ஏன்?: தீவிரமாக கண்காணிக்க உளவு போலீசார் முடிவு

இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் கியூ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்து வரும் உச்சக்கட்டப் போரினால், வாழ வழியில்லாத நிலையில் ஏராளமான அகதிகள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். 2006ம் ஆண்டு முதல் இதுவரை 22 ஆயிரத்து 350 அகதிகள் வந்துள்ளனர். இவர்களில் அகதிகள் போர்வையில் வந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த 42 பேரை விசாரணை மூலம் கியூ பிரிவு போலீசார் கண்டறிந்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளனர்.

அகதிகள் தமிழகம் வரும்போது கட்டணமாக அதிகபட்சமாகத் தலா ரூ.25 ஆயிரம் வரை இலங்கைப் படகோட்டிகளுக்குக் கொடுக்கின்றனர். ஒரு படகில் கூடுதலாக 15 அகதிகள் வரை வந்து கரையிறங்குகின்றனர். இலங்கையில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறும் இவர்கள், படகுக் கட்டணமாக ரூ. பல ஆயிரங்களைச் சேமித்தது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதே போன்று, தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் அகதிகளை, அதிகாரிகள் காரணம் கேட்டுத் தடுத்து நிறுத்துவதும் இல்லை.

தமிழக முகாம்களில் அகதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற புலிகள் இலங்கைக்குப் பொருட்களை சர்வ சாதாரணமாகக் கடத்திச் செல்கின்றனர். பிடிபடும் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் அகதிகள் என்பது தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவினர் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்ட அகதி நவீன் என்பவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்தி வருவதற்காக தமிழகத்துக்கு அகதியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்புடைய அகதிகள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள், தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது உளவுப் பிரிவுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இலங்கை ராணுவம் தாக்கினால் எப்படித் தற்காத்துக் கொள்வது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படித் தப்புவது போன்ற பயிற்சிகளை புலிகள் அளித்துள்ளதாக கூறப்பட்டபோதும். இதில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளாகத் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களா? என்ற குழப்பம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுப் பிரிவினர், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Tuesday, May 20, 2008

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் அவல நிலை

மாதம் 3000 ரூபாவினைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இராஜ குமாரியின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் உள்ளது.
இந்த வருமானத்தில் ஒரு பாடசாலை ஆசிரியர் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.மாதாந்த வீட்டுச் செலவுகள் அவரது மகனது கல்வி, வீட்டு வாடகை மற்றும் அவசியமான செலவுகள் இதில் உள்ளன.

இந்த வருமானத்தை விட மேலதிகமாக இலங்கை தமிழ் அகதி என்ற ரீதியில் நல்லெண்ண அடிப்படையாக மாதாந்தம் அரசாங்கத்திடமிருந்து நிவாரண உதவிகளையும் பெறுகின்றார்.

அரசாங்கம் ஒருவருக்கு 52 ரூபா வரையில் 12 கிலோ அரிசி மற்றும் சீனி, மண்ணெண்ணை என்பவற்றையும் வழங்குகின்றது.

கடந்த இருமாதகாலமாக எவருக்கும் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை.

ஒரு மாதத்தில் ஒரு அகதிக்கு அரைக்கிலோ என்ற அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ சீனியும் 5 லீற்றர் மண்ணெண்ணையும் கிடைக்கிறது.

இந்த வருமானமும், அரசாங்கத்தின் மானிய உதவியும் காரணமாக தற்போதைய பொருள் விலையேற்றத்தால் அவர் பாதிக்கப்படவில்லை.

வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், கோழி இறைச்சி, மீன் என்பவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக எமது மாத செலவீனத்தில் 1000 ரூபாவை மேலதிகமாக இழக்க வேண்டியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

நிலமை இவ்வாறிருப்பினும் குடும்பச் செலவை சமாளிக்கவென அரசாங்கம் குடும்பத்தலைவருக்கு 400ரூபாவும், குடும்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவருக்கும் மற்றும் வயது வந்தவருக்கும் 288 ரூபாவையும், முதல் குழந்தைக்கு 180 ரூபாவையும், 12வயதுக்கு குறைவான குழந்தைகள் இருப்பின் ஒவ்வொருவருக்கும் அதற்குப் பிறகு 90 ரூபாவையும் அரசாங்கம் மாதாந்தம் வழங்கி வருகின்றது.

இவ்வாறு அரசாங்கம் எமக்கு உதவுகின்ற போதும், எங்களது உணவில் அரிசியைப் போன்று முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள சீனி மற்றும் கோதுமை மாவை அதிகமாக உட்கொள்ளும் வழக்கம் காரணமாக இந்த நிலைமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அண்மைய காலங்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 12 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் இராஜகுமாரி சுட்டிக்காட்டினார்.

5 பிள்ளைகளுடன் வாழும் பி.மரியா எனும் மற்றொரு அகதியின் பிரச்சினை இதற்குச் சமமாக இதைவிட சற்று கூடுதலாகவன்றி குறைவாகக்க காணப்படுகின்றது.

எமது குடும்பத்தின் சீனி மற்றும் எண்ணெய் என்பவற்றின் நுகர்வு வெகுவாக குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கான எமது சீனியின் பாவனையை 30 கிலோவில் இருந்து 15 கிலோவாக சரி பாதிக்கு குறைத்துள்ளோம். எண்ணெயின் பாவனையையும் அவ்வாறே மட்டுப்படுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.

இந்த நிலைமையின் காரணமாக இக்குடும்பம் நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு செல்ல வேண்டியிருப்பதாக வீட்டின் நிர்வாகங்களைக் கவனிக்கும் ஒருவர் கூறினார்.

இந்தக் கணிப்பீடு அரச்சனூர் முகாமில் வாழும் ஒரே வாழ்க்கைத் தர நிலையினைக் கொண்ட !35 குடும்பங்களின் 620க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

அநேகமாக அவர்களின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவையாக இருந்தமையால் அவர்களின் கோரிக்கையும் ஏறத்தாழ ஒரே தன்மை கொண்டனவாகவே இருந்தன.

அரசாங்கம் அகதிளுக்கென இன்றும் கூடுதலான பொருட்களை பொது விநியோக முறையின் கீழ் விநியோகிக்க வேண்டுமென அவர்கள் விரும்பினர்.

இது குறித்து அகதி முகாம் தலைவரான ஜே.பெனிற்டோ கூறுகையில், மண்ணெண்ணெய் விநியோகத்தை அரசாங்கம் இரட்டிப்பாக்கி வழங்குமாயின் (10 லீற்றராக) அது எமக்கு பெரிய உதவியாக அமையும் என கூறினார்.

எரிபொருளுக்காக நாம் மண்ணெண்ணையிலேயே தங்கியுள்ளோம். இதில் சமையலுக்கான எரிவாயுவை நாம் கோரவில்லை என்பது அவரது வாதமாக இருந்தது.

அரசாங்கம் கூதலாக சீனியை வழங்க முன்வர வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி என்ற அறிவிப்பை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

கோதுமை மா, சமையல் எண்ணெய் மற்றும் தானியங்களையும் விநியோகப்பட்டியலில் சேர்க்க வேண்டுமெனவும் அகதிகள் கோரிக்கை விடுத்தனர்.

அகதிகள் எதிர் கொண்டுள்ள நெருக்கடியை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



Lankan refugees in TN want more



R. Rajakumari’s is a three-member family that lives on Rs.3,000 a month in Erode.
Within the income, the school teacher has a lot of things to take care of: monthly household expenses, her son’s education, house rent and also exigencies.

In addition to the income, she gets a monthly, subsidised ration from the state government by virtue of her Sri Lankan Tamil refugee status.

The government provides 12 Kg. of rice per person at 52 paise per Kg. and also sugar and kerosene.

The last two, however, do not carry any subsidy.

A refugee gets half a Kg. of sugar per month subject to a maximum of two kg per family and five litres of kerosene per month per family.

The income and the government grant have, however, not insulated her from price rises.

“The rise in prices of onions, potatoes, greens, chicken and fish has forced the family suffer a Rs. 1,000 deficit budget,” she says.

This is despite the government also providing a monthly monetary grant of Rs. 400 to the head of a family, Rs. 288 for each adult and child over 12 years, Rs. 180 for the first child, if it is below 12, and Rs. 90 for each of the other children.

“Though the government helps us, we are unable to cope with the situation because we use more sugar and maida, which forms as important a place as rice in our diet,” she says.

Ms. Rajakumari points out that the price of maida alone has gone up from Rs. 12 to Rs.20 a kg in the recent past.

For B. Marina, another refugee with five children, the story is more or less the same.

She says the family has reduced its consumption of sugar and oil. “We have halved the sugar consumption from 30 to 15 Kg. a month, and also oil,” she says. This, however, has not helped her to make the ends meet.

The result: the family has been pawning jewellery to make up the deficit, the homemaker says.

The story of the 620-plus persons from 135 families in the Arachalur camp is no different.

As their sufferings are almost the same, so is their demand: They want the government to bring more items under the public distribution system for refugees.

The refugee camp leader, J. Benito, says it would be a great help if the government doubled the monthly kerosene ration from five litres to ten.

“Kerosene is the fuel we depend on, as we are not entitled to LPG,” he says. He also wants the government to distribute more sugar and remove the two Kg. a family cap. The refugee also wants maida, palm oil and pulses to be included in the distribution list.

Mr. Benito reasons that when they only get rice at a subsidised rate and everything else at prices others pay, the government can as well afford to distribute the other items.

He urges the government to make the move considering their refugee status.

(The Hindu)