Showing posts with label சீ.புலித்தேவன். Show all posts
Showing posts with label சீ.புலித்தேவன். Show all posts

Tuesday, June 3, 2008

புலித்தேவன் கைது உண்மையில்லை என்று பவன் மறுப்பு

புலித்தேவன் காது செய்யப்பட்டமை தொடர்பாக வெளியான செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்று புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த பவன் என்பவர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்தினருக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு வெளியிட்ட செய்திபற்றி அந்த மின் அஞ்சலில் எதுவித விளக்கமும் குறிப்பிடப்படவில்லை என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Sri Lanka Ministry: Tamil Rebels 'Arrest' Own Senior Leader



COLOMBO (AFP)--Sri Lanka's defense ministry said Tuesday Tamil Tiger rebels had "arrested" one of their own senior figures in a worsening internal dispute, a claim immediately denied by the guerrillas.

A ministry statement said Seevaratnam Prabaharan, alias Pulidevan, head of the peace secretariat of the Liberation Tigers of Tamil Eelam, had been detained on the direct orders of LTTE supremo Velupillai Prabhakaran.

"The arrest has been made as a result of a worsening internal dispute among key LTTE figures," the ministry said.

The information came from "defense intelligence authorities," the ministry statement said.

"An armed gang led by LTTE's intelligence wing leader Pottu Amman had made the arrest few days back," it added.

However, a rebel spokesman said Pulidevan was still working.

"There is no truth about the news item," spokesman V. Bavan said in an email response to AFP.

"He (Pulidevan) is still the head of LTTE peace secretariat and in the office."

Bavan made no comment on the ministry allegation of internal disputes.

Pulidevan was part of an LTTE delegation that took part in several rounds of peace talks with the Sri Lankan government during a six-year truce that Colombo scrapped in January.

The Sri Lankan government claims to have the LTTE on the run after capturing large areas of the east of the island last year following a rift in rebel ranks.

In a bid to defeat the rebels, the army has launched numerous assaults on Tiger-held territory in the north this year.

Tens of thousands have died on both sides since the LTTE launched an armed struggle in 1972 to carve out an independent homeland for Tamils from the majority Sinhalese.

புலித்தேவன் வீட்டுக்காவலிலா?

Pulidevan under house arrest?



B. Muralidhar Reddy

COLOMBO: The Sri Lankan Defence Ministry claimed here that on the basis of “intelligence reports” on Monday that senior LTTE leader Seevaratnam Prabaharan alias Pulidevan is under “house arrest on charges of treachery” against the outfit.

To buttress its claim, the Ministry said Mr. Pulidevan was not seen at the funeral of Balraj, a senior LTTE leader who died of a heart attack recently.

There was no response from the Tigers to the claim. Usually the LTTE does not respond to the military’s claims on the ground situation and suggestions of “power struggle” within the outfit.

Mr. Pulidevan is the chief of “LTTE Peace Secretariat,” a body created after the recently abrogated 2002 Cease Fire Agreement (CFA) between the government and the Tigers, and was also a member of the LTTE negotiating team in the peace talks.

In a statement here, the Defence Ministry claimed that the “arrest” had been made as a result of a “worsening internal dispute” among key LTTE figures. “An armed gang led by LTTE’s intelligence wing leader Pottu Amman had made the arrest few days back.”

It said Pottu Amman “framed charges against Pulidevan for treachery against the outfit. The bitter power struggle fought among the LTTE leaders has led to bloody violence even in European countries where the loyalists of different leaders fight internecine battles.”

Meanwhile, the LTTE alleged that displaced families from Kanchiankuda in Amparai have expressed frustration over valuables being stolen from their homes by the Special Task Force (STF). The charge has been denied by STF.

http://www.hindu.com/2008/06/03/stories/2008060355021300.htm

Monday, June 2, 2008

புலித்தேவன் கைது பற்றி மேலும் விபரங்கள்

புலித்தேவன் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்றையதினம் http://www.eeraanal.org/ இணைய செய்தியில் வெளியான தகவலை இவ்வலைப்பதிவில் பதிந்திருந்தேன். நேற்று மாலை இந்த கைது பற்றி வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதேவேளை நேற்று மாலை தமிழ் நெட் இணையதளம் வெளியிட்ட ஒரு செய்தியில் "ஸ்ரீலங்கா ராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்" என்ற தலைப்பில் இத்தாக்குதலுக்கு இலங்கை ராணுவத்தின் ஆள் ஊடுருவும் பிரிவினர் மீது புலித்தேவன் குற்றம் சுமத்தி உள்ளதாக இன்று தமிழ் நெட்டில் செய்தி வெளியாகி இருந்தது இக்கைதுபற்றிய சந்தேகத்தை வலுவடையச்செய்துள்ளது. காரணம் அண்மக்காலமாக புலித்தேவனோ அல்லது அவர் பற்றியோ எதுவித செய்திகளும் வெளிவராத இடத்தில் நேற்று சர்வதேச ஊடகங்களில் அவரின் கைது பற்றி செய்தி வெளியான ஒரு சில மணி நேரங்களில் புலித்தேவன் தெரிவித்ததாக தமிழ்நெட் தனது செய்தியில் அவரின் பெயரை வலிந்து புகுத்தியுள்ளதாகவே தென்படுகிறது.

அதே வேளை ஸ்ரீலங்கா ராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை பிரசுரித்திருக்கும் புதினம் இணையதளம் புலித்தேவன் பற்றி அதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

Tamil Tigers place senior leader under house arrest: military

Mon Jun 2, 4:32 PM ET

COLOMBO (AFP) - The elusive head of the Tamil Tigers in Sri Lanka has placed a senior rebel leader under house arrest over a worsening internal dispute, the defence ministry said Monday.

Seevaratnam Prabaharan, alias Pulidevan, who is attached to the Tigers' peace secretariat, has been placed under arrest on the direct orders of the Tiger supremo, Velupillai Prabhakaran, the statement said.

"The arrest has been made as a result of a worsening internal dispute among key LTTE (Liberation Tigers of Tamil Eelam) figures," the ministry said.

It did not say when Pulidevan was placed under house arrest, but said its information was based on "defence intelligence authorities."

"An armed gang led by LTTE's intelligence wing leader Pottu Amman had made the arrest few days back," the statement said.

It added that Pulidevan was part of the LTTE delegation that took part in several rounds of peace talks with the Sri Lankan government during the Norwegian-brokered six-year truce that ended in January.

There was no immediate reaction from the LTTE to the government's statement.

In May, "Brigadier" Balraj, a commander of the LTTE's conventional fighting unit that has carried out repeated attacks on Sri Lankan troops, died of a heart attack, the rebels said.

Last November, Prabhakaran's de facto number two, S.P. Thamilselvan, was killed in an air attack by the Sri Lankan military. Prabhakaran, 53, vowed to avenge the killing.

Tens of thousands have died on both sides since the LTTE launched an armed struggle in 1972, to carve out an independent homeland for minority Tamils from the majority Sinhalese.

yahoonews


Sri Lanka Says Intelligence Reveals Rebels Divided (Update1)

Click Here

சீ.புலித்தேவன் கைது செய்யப்பட்டுள்ளாரா?


புலிகளின் சமாதானப் பணிப்பகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வன்னியில் புலிகளின் முக்கிய உறுப்பினர் உட்பட பல தாக்குதல்கள் தொடர்பாக அரச படையினருக்கும் புலனாய்வுத் துறையினருக்கும் தகவல்கள் வழங்கியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி வன்னியிலுள்ள திருவையூர் பகுதியில் அரச விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப் பட்டதாகவும் அதேபோல புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் லெப்ரினன் கேணல் கலையழகன், மற்றும் புலிகளின் புலனாய் வுத்துறைத் துணைப்பொறுப்பாளர் சாள்ஸ் ஆகியோரும் புலித்தேவனால் வழங்கப் பட்ட தகவலின் அடிப்படையிலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. அத்துடன் வன்னிப் பகுதியில் இலங்கை அரசின் ஆழ ஊடுருவும் படையினரின் பல தாக்குதல்கள் இவரின் வேண்டுகோளின் பேரிலேயே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக வன்னியில் நடைபெற்ற எந்த நிகழ்வுகளிலும் புலித்தேவன் கலந்து கொள்ளவில்லை. இலங்கை அரசின் ஆழஊடுருவும் படையினரால் 06.03.2008 இல் கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் சிவநேசன் மற்றும் அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்த புலிகளின் முக்கிய தளபதியான பால்ராஜ் மற்றும் மன்னார் களமுனையில் 25.05.2008 இல் கொல்லப்பட்ட சோதியா படையணியின் துணைத்தளபதி செல்வி போன்றவர்களின் இறுதி நினைவுகளில் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதிலும் சீவரட்ணம் புலித்தேவன் கலந்துகொள்ளவில்லை. புலிகளின் மூத்த உறுப்பினர் பால்ராஜ்ஜின் இறுதிச் சடங்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா...நடேசன், கடற்படைத் தளபதி சூசை, களமுனைக் கட்டளைத் தளபதி தீபன், அனைத்துலகத் தொடர்பாளர் மணிவண்ணன், கல்வி பொறுப்பாளர் இளங்குமரன், புலிகளின் முத்த உறுப்பினர் பாலகுமாரன் மற்றும் முக்கிய தளபதிகள் கலந்துகொண்டபோதிலும் புலித்தேவன் கலந்துகொள்ளவில்லை என்பது அவர்கள் வெளியிட்ட வீடீயோ மற்றும் இணையத்தளங்கிளனூடாகக் காணக் கூடியதாக இருந்தது.

இதேவேளை புலித்தேவன் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற பல சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது கலந்துகொண்டவர் என்பதும் இவர் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களையும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக - ரீ பீ சீ யின் செய்திப் பிரிவு புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, புலித்தேவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தலைவரின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட தகவல் இன்றைய http://www.eeraanal.org/ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.