Showing posts with label வங்கியட்டை மோசடி. Show all posts
Showing posts with label வங்கியட்டை மோசடி. Show all posts

Thursday, August 7, 2008

புலிகளின் பெயரில் மோசடிசெய்யும் மாற்று இயக்கத்தவர்களின் வஞ்ச செயளால் தலைகுனியும் தமிழ் சமூகம்

பிரித்தானியாவில் வங்கியட்டை மோசடியில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தனி நபர்களளும் மாற்று இயக்கத்தினரும் ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன் தண்டனையில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள புலிகளின் மேல் பழியைப்போட்டவர்கள் தான் அதிகமான தமிழர்கள் என்பது மக்கள் அறிந்த உண்மை . இதேசமயம் தம்மை புலிகள் தான் துர்ண்டினார்கள் என்று சொல்லி தப்பினவர்களும் உண்டு. இத்தகைய மோசடிகளில் மட்டுமல்ல மற்றைய மோசடிகளிலும் இத்தகைய கைவண்ணமும் விசமத்தனத்தை மேற்கொண்டவர்கள் மாற்று இயக்குத்தினரே என்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுந்துள்ளது இந்தக் குற்றுச்சாட்டு உண்மையானது இதற்கான ஆதாரங்கள் பல சுவிசர்லாந்திலே இருப்பதாகவும் தெரியவருகின்றது. புலிகளின் தூண்டுதலில் மோசடியில் தாம் ஈடுபட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெரியவந்தது. இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா??? என்ற சந்தேகம் தற்பொழுது வெளிநாட்டு புலணாய்வுத் துறை மத்தியில் வலுப்பெற்று இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இலங்கை இந்தியா போன்ற பகுதிகளில் பெருமளவு சொத்துக்களை வாங்கியுள்ளார்கள் இவர்கள் அனைவரும் மாற்று இயக்கத்தின் பிரதிநிதிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் லீசெஸ்ரர்சையர் பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் என்ற முஸ்லீம் நபர், வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தற்பொழுது பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் தானாக சென்று காவல்துறையினரிடம் சரணடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் செயற்பட்டதாகவும், அவர்களே கடனட்டை மோசடிக்கான உபகரணங்களை தனக்கு வழங்கியதாகவும் விசாரணையில் கூறியிருக்கின்றார். இந்த விசாரணைகள் தொடரும் தர்னத்தில் பிரித்தானியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தமிழ் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பலர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் குழுக்களாக மோதல்களில் ஈடுபடுவது, தமிழ் சிறார்களை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குதல் கடனட்டை மற்றும் மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோரத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ரூற்றிங்கில் பிரபா என்ற இளைஞனைப் படுகொலை செய்த சிறீலங்காவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞருமாக 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனையும்: ஏனையோருக்கு பல வருடங்கள் சிறைத்தண்டனையும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்டிருக்குpன்றது. பிரித்தானிய ஊடகங்களும் உண்மையைக் கண்டறிந்து செய்தி வெளியிடும் ஊடக தருமத்தை மறந்து நீதிமன்றங்களில் குற்றவாளிகள் கூறும் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு வருவதால் பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் இது பற்றி குறிப்பிட்ட ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.