Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, August 5, 2008

தேசியம் என்றுகூறிய நீ தெருவோரங்களில் பிணங்களை குவித்ததுதான் நீ கண்டமீதம்

தேசியம் தேசியம் என்றுகூறிய ஓருவன்
தேசத்தை கலங்கவைத்து
தெருவோரம் மக்களை தூங்கவைத்து
தேகம் சாய்த்து களைப்பாறுகிறான்
தேசத்தின் அடியில் வீடு கட்டி


தப்புகள் ஆயிரமாயிரம்... தரணியில் நீசெய்தாய்
தண்டணையிலிருந்து தப்பித்து நீ வாழ
தமிழீழம் எனும் பேச்சு
தலைவாசல் புரியாத தவித்திடும் மக்கள்
தலைவிரிகோலமாய் தள்ளாடும் கால்கள்


தாய்பிறந்த மண்ணை தன்நலத்துக்காய்
தவிடுபொடியாக்கிவிட்ட தன்நலத்தைகாக்கும்
தவக்களையே?? நீ தலைவனா??
தலைவன் என்றவன் எப்படி ??


தன்நலத்தை பேனாதவன்
தன் உயிரை போற்றாதவன்
தவித்திடும் மக்களுக்கு
தண்ணீர் ஊற்றுபவன் புசிக்க உணவு கொடுப்பவன்
அவன்தான் தலைவன் ஆவான்

உன்எண்ணம் எதுவென்று புரியவில்லை
உள்ளம் வாடும் மக்களுக்கு தீர்வு
உண்மைஎதுவென்று தோணவில்லை
ஊற்றெடுக்கும் மண்ணுக்குள் உருமாறிபோனவனே?


இறைவன் தந்த உடல் மண்ணுக்கு
இரையாகும் காரணம் மனிடனுக்கு
இன்பம் தரும் காரணியாக அமைந்து விடும்
இறையின் காலடியிலும் சேர்ந்துவிடுவர்
இன்று இறப்பவர்களினால் என்ன..?பயன்


இறுமாப்புடன் இருக்கும் நீ
இதயம் இல்லாத ஓருஇராவணனா?
இரக்ககுணம் இல்லாத அரக்கனா நீ
இமைமூடி திறக்குமுன்
இடுகாட்டுக்கு அனுப்புகிறாய் உன் இனத்தை


தேசியத் தலைவன் என்று கூறி
தேசத்தின் வீதிகளில் பிணங்களை குவிப்பவனே
தெருக்களில் எருதுகளின் எருக்கள் கிடப்பது ஞாயம்
தேசப்பற்றாளர்களின் தேகங்களுமா? தெருக்களில் கிடப்பது


சுகமான ராகம் கேட்ட நம் மண்னை
சோகமான (முகாரி) ராகம் கேட்கும்
சுடுகாடாக ஆக்கிவிட்டாய்
சுவையான பதார்த்தம் சுவைத்த மக்கள்
சுடுவெயிலில் Àங்க வைத்து விட்டாய்


அதிபர் ஆனந்தராஐhவை கொண்றாய்
அண்ணன் அமிர்தலிங்கத்தை கொண்றாய்
அகிம்சைவாதி துரைப்பாவை கொண்றாய்
அப்பாவி லக்ஸ்மன் கதிர்காமரை கொண்றாய்
அள்ளிச்சென்றது என்ன..? உன்
அகத்தில் இருப்பது என்ன..??


சிந்தித்து பார்? சிந்தித்து பார்..?
சிறகைவிரித்து சுதந்திரமாய் பறந்து
சூழ்ச்சிக்குள் அகப்படாமல்
சுயசந்தனையுடன் சிந்தித்து பார்..நீ...
சிந்திக்கும் போது சிவந்து நனைதிருக்கும்மண்....
சிந்திக்கும் மக்களின் கண்ணீரால்....


என்றென்றும்அன்புடன்
வவிதரன்

தமிழீழம் வேண்டுமா அல்லது வெள்ளவத்தையில் வீடு வேண்டுமா??

தமிழீழமும் வேண்டும் கொழும்பில்
பல அடுக்குமாடி வீடுகளும் வாங்கவேண்டும்.



புலம்புகின்றனர் தமிழீழம் வேண்டும் என்று
புலம்பெயர் நாடுகளில்
புதிது புதிதாய் வாங்கி வருகின்றனர்
புண்ணிய பூமியாம் கொழும்பில்
பல அடுக்குமாடி வீடுகளை....


சுயநல மனிதரெல்லாம்
சுகபோகமாய் தலைநகரில் வாழ்ந்திட
சுமைகள் சுமந்த பொதுநலவாதிகள் எல்லாம்
சூழ்ச்சிக்குள் பொசுங்கி போயினர்

புலியின் வால்பிடித்து
புகழ்ச்சி தேடி பொருள் தேடி
புலம்பெயர் நாடுகளில்
புண்படாமல் வாழ்கின்றனர்


மனதில் சுபோகம் எனும் நஞ்சுவைத்து
மனம் குண்றிய மக்களை
மறைக்கின்றனர் மண்ணுக்குள்ளே
மதிகெட்ட மனிதர் இவர்கள்


தமிழீழம் கேட்டு விட்டு
தரம் கெட்டமனிதர் எல்லாம்
தாவியேறினர் விமானம்
தனை மட்டும் பாதுகாக்க.......


புலம் பெயர் நாடுகளில்
பூக்கள் போல் மென்மையாக வாழ்ந்து கொண்டு
புலம்பினர் அழுதனர் திறம்பட நடித்தனர்
பூமியொன்று வேணும் என்று


தன்பிள்ளையை நிறைவாக பள்ளி சென்றிட
தடக்கி விழாதவண்ணம் பாதணி அணிந்து
தடவிக்கொடுத்து அனுப்பினர்
தங்கமகனே சென்று வாடா என்று......


அப்பாவி மக்களின் பிள்ளைகள்
அப்பா அம்மா என கதறி கதறி அழுதிட
அப்பாவி குழந்தைகளின் கைகளிலே விலங்கு மாட்டி
அழைத்து சென்றனர் ஆயுத பயிற்ச்சிக்கென்று...


சுயநலம் மனதில் கலந்திட
சூத்திரங்கள் நெஞ்சில் நிறைந்திட
சூடான படுக்கை அறைகளிலே
சுவையான பாதார்த்தம் அருந்தி
சுவைக்கின்றனர் வெளிநாடுகளில்...


சுயநலத்தை கைவிட்டால்
சுதந்திரம் உன் கையில்வரும்
சூனியத்தை சுட்டெரித்தால்
சுமைகள் எல்லாம் சுகமாகிவிடும்.



எழுதியவர்- வவிவரதன்

Saturday, June 21, 2008

சுனாமி

முல்லை தீவின் கடல் முகத்திரையை
முட்டிமோதி மேவி கிழித்துகொண்டு
சுனாமிவந்து சுழன்றடித்து சுற்றியிருந்த
சுற்றுபிரதேசம் முழுவதையும் சுடுகாடாக்கி விட்டு
தட்டிகேக்க ஆளில்லாமல் தன்னிச்சையாய்
தவித்து நின்ற உயிர்களை எல்லாம்
தன்னகத்தே உள்வாங்கி கொண்டு சென்றது

உற்றார் உறவினர் என்று ஒருவர் பாராமல்
மூச்சு விடுவதற்கே முழுநேரம் வைக்காமல்
முடிந்தவரை பிணமாய் சுனாமி அள்ளிச் சென்றது
முழுப் பிணத்தையும் முழுவதுமாய் அள்ளி
அடக்கம் செய்வதற்குள்…..

புலம்பெயர் நாடுகளில் புலிப் பினாமிகள்
புற்றுக்குள்ளிருந்து புதிதாய் முளைத்து புறப்பட்டு
புனர்வாழ்வுக் கழகமாய் புலர்நிவாரண நிதியென்றும்
புதுப்புது பெயர்களில் புலன் பெயர்ந்தோரிடம் புலம்பியழுது
வகைதொகையின்றி பணத்தை அள்ளி வாரி
சுளை சுளையாய் சுருட்டி கொண்டு போனது

தாயகஉறவென்று நினைத்து தவித்து நின்ற தமிழன்
தானமாய் கொடுத்தான் பணத்தை தயங்காமல்
தவித்த முயல் அடிப்பது போல் அடித்தார்கள்
அள்ளினார்கள் அள்ளினாhகள் காசை அள்ளினார்கள்
அதில் அரவாசியை ஆளுக்கு ஆள் பங்கிட்டுவிட்டு
அதில் மீதி காசை ஆயுதமாக்கி பெட்டிகளில் அடிக்கி
அனுப்பிவைத்தார்கள் அங்கே புலிகளுக்கு
அய்யோ பாவம் அனாதையாய் நம்மினம்
அழுது அழுது அரசாங்கத்திடம் வாங்கிய பணத்தையும்
அதுகளிடம்மிருந்து அபகரித்துவிட்டார்கள் படுபாவிகள்



பாதகம் செய்வோரை ஏறிமிதித்து வதம்செய்வோம் என்று
சபதம்எடுப்போம் சபதம்எடுப்போம் சபதம்எடுப்போம்

கி.பி பாஸ்கரன்

திராவிட இனம்

ஆரியன் அவன் பல காரியங்கள் செய்வான்
தன்னை அண்டி பிழைப்பதற்கோ-பல
கொள்கைகள் வகுப்பான்
மான்டேபோனதடா நம் திராவிடஇனம்
அவன் மாயையில் வீழந்;ததடா
ஆயிரம் ஆயிரம் கடவுள் என்பான்
அவவை அனைத்துக்கும் கோயில் வைப்பான்

அவை அனைத்தையும் நாம் கும்பிட்டு
அரோகரா செய்து வணங்கிட செயதிடு;வான்
அந்தணன் என்று அவனில் ஒருவன்
சந்தணமும் வீபூதியும் தந்து எம்மிடம்
வந்தனம் வரபிரதாசமும் வாங்கிடுவான்

பொய்யன் எனும் பெயர் மருவி அய்யன்
ஆகிவிட்ட அவனில் ஓருவன்
ஐந்து ரூபாய்க்கு ஓர் மந்திமும்
ஐம்பது ரூபாய்க்கு ஓர் மந்திரமும் ஓதிடுவான்
இருப்பவனையும் அவன் விடுவதில்லை
இறந்தவனையும் அவன் விடுவதில்லை
எங்கும் அவன்தான் நம் வாழ்வில் இருப்பான்

முன்னவர்கள் சொன்னார்களாம் மூழைகெட்டவர்
நம்மவாகள்; அவன்பின்னே சென்றிடுவார்
காசை அள்ளிகொட்டிடுவார் அவன் கையில்
நம் காரியத்தை முடித்திடுவான் என்று எண்ணி
நம்மவர் மகிழ்வுடனே சென்றிடுவார்
பணத்தை அள்ளி வீசிவிட்டால்-இவன்
பிணத்துக்கும் பெரிசாய் பூசை செய்வான்

ஏழை என்று ஓருவன் வந்து விட்டால்
இவன் எட்டியும் பார்கமாட்டான்
இருப்பவர் சிலர் வந்துவிட்டால்-இவன்
இறங்கி கீழே வந்து தலை வணங்கிடுவான்
உழைத்து பிழைபோர் உடம்பை பாருங்கள்
உழகை;காமல் இவன் வைத்திருக்ம் உடம்பை
கொஞ்சம் உற்று நோக்குங்கள்

இவன் மாய கொள்கைகளில் மாய்ந்துவிட்டதடா
நம்மினம் மாயம் என எதுவம்மில்லை
நம் மனசு வாழ்வுதனில் தெளிவுபட்டால்
இம் மானிலத்தில் வாழ்வுதனை மாற்றிடலாம்
வாழிய! வாழியவே! நம் திராவிட இனமே!
இவ்வையகத்தில் தழைதோங்கி வாழியவே!

கி.பாஸ்கரன்
சுவிஸ்

திக்கு தெரியாத துப்பாக்கிகளுக்கு

திக்கு தெரியாத துப்பாக்கிகளுக்கு
தின்னக்கொடுத்தோம் எங்கள்
ஐனநாயக உரிமைகளை!....

தேசத்தின் விடுதலை என்றார்கள்...
தமிழீழ தாகம் என்றார்கள்.....
தாயகம் என்றார்கள்.....

புலிகள் சொன்ன தாகம்
தமிழர்களின் குருதியை
தமிழர்களே குடித்து சுவைத்தது...

சமாதானம் கனவாகியது...
கனவு கண்டு விழித்த தமிழர்கள்
ஓர் அரக்கன் கனவில் வந்ததாக
சொன்னார்கள்.....

தமிழர்கள்

சாம்பல் விரும்பி
சாம்ராச்சிய கனவு கண்ட
பிரபாகரனை கனவு கண்டனர்.....

அவன் சொன்னான்
கனவில் வந்து.....

எனக்கு வேண்டும் படுகொலை!
மக்களுக்கு ஏன் விடுதலை?...

அன்றும்……...இன்றும்……….நம்மினம்

அம்மையோடும் அப்பனோடும்
அக்காள் தங்கையோடும்
அண்ணன் தம்பியோடும்
அண்டை அயலவரோடும்
அகமகிழ்ந்து வாழ்ந்தோம்

மாஞ்சோலை கிழியும் மைனாவும்
மணிப்புறாவும் மாடமாளிகைகளும்
ஆடும் மாடும் அன்னப்பறவையும்
அழகிய மயிலும் பாடும் குயிலோடும்
அகமகிழ்ந்து வாழ்ந்து வந்தோம்

தென்னையும் பனையும்
தேனும் கள்ளும் தென்றல்காற்றும்
தீன்சுவை தமிழும் திகட்டாத கரும்பும்
தின்பதற்கு மிதமிஞ்சிய உணவும்
தின்னையில் பயம் இல்லாமல்
தினம் படுத்துறங்கினோம்

வட்டநிலாவும் வயல்வெளிகளும்
வண்ணத்துபூச்சியும் வண்ண மலரோடும்
வாழைமரங்களோடும் வசதியான வீட்டோடும்
வசதிகள் பலபெற்று வறுமை எதுவும்மின்றி
வாழ்ந்தோம் அகமகிழ்ந்து வாழ்ந்தோம்.

மல்லிகை மலரும் மங்கைளோடும்
மனதிற்கினிய மழலைகளின் மொழிகளோடும்
மண்பானையில் தண்ணிவைத்து தாகம்தீர்த்து
மாமனுடனும் மச்சான் மச்சாளுடனும்
மானத்துடனும் மரியாதையுடன் மகிழ்ந்திருந்தோம்

காற்றும் கடலலைகளும் கட்டுமரங்களும்
வலைகளும் மீனும் வாடியகருவாடும்
வாடைகாற்றும் வசதியான வீடும்
கிணற்றுத் தவளையும் கீரியும்பாம்பும்
பானையும் நீரும் பாலும்சோறும்
தூங்கப் பாயுடன் பயமின்றி
வாழ்ந்தோம் அகமகிழ்ந்து வாழ்தோம்



இன்று

அந்தோ வந்தது பயங்கரவாதம்

அம்மை அப்பன் ஓரிடம்

அண்ணன் தம்பி ஓரிடம்

அக்காள் தங்கை வேறிடம்

அயல் அட்டங்கள் ஓரிடம்


ஆட்டுகுட்டி அருமையான

நாய்குட்டி அத்தனையும் இழந்தோம்

சொல்லொண்ணா துயரம் கொண்டோம்

சொந்தத்தையும் பந்தத்தையும்

சொத்தையும் இழந்தோம்

சோதனைகளையும் பல

வேதனைகளையும் கண்டோம்


எஞ்சியது எதுவும்மில்லை

எல்லாமே இழந்து விட்டோம்

இழப்பதற்கும் எனி ஒன்றுமில்லை

இறப்பவனின் எண்ணிக்கை ஏராளம்

இழவு வீடுகளின் எண்ணிகையும் தாராளம்

ஏன் என்றுகேப்பதற்கும் யாருமில்லை

ஏறுஎடுத்துப் பார்பதற்கும் ஒருவரில்லை

என்னெவென்று சொல்லி

அழுவதென்றே தெரியவில்லை

ஏன் இந்தபிறப்பு என்றே புரியவில்லை


மிதிவெடியும் கண்ணிவெடியும்

குண்டும் கொலையும்

குறைவின்றி விழும்பிணங்களும்

குவிந்துகிடக்க கான்கின்றோம்


பள்ளி சென்ற சிறுவனை

பாதிவழியில் காணவில்லை

பாவியொருவன் பலிகொடுக்கு கடத்திவிட்டான்

பிரபாகரன் பிள்ளைமட்டும் பிழைத்துவிட்டான்

பிறரின் பிள்ளைகளை பிணமாக்கிவிட்டான்

பிழைப்பதற்கும் பணம்சேர்த்துவிட்டான்

பயங்கரவாதத்தை பிரபாகரன் தோற்றிவித்தான்

பயந்தே பயந்தே தமிழன் வாழபழகிவிட்டான்


வறுமை எங்கும் நம்மினத்தை

வதைக்கக் கண்டோம்

வாழ பலவழிகள் இருந்தும்

வன்முறையால் வாழ்வைதனை

இழக்க கண்டோம்

என்று தணியும் இந்தபயங்கரவாதம்

என்று தீரும் நம்மினத்தின் சோகம்



நன்றி. கிபாஸ்கரன்

சுவிஸ்

Saturday, May 10, 2008

காசி ஆனந்தன் நறுக்குகள்

முரண்

இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை

நாயே!பன்றியே!குரங்கே!


அடக்கம்

அடக்கம் செய்யப்படுகிறோம்...

இரண்டு பெட்டிகளில்.

சவப்பொட்டியிலும்

தொலைக்காட்சிப் பெட்டியிலும்


நாற்காலி

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை

நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்

நாடு தூங்க நாற்காலி


உலகமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்

புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.

போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.


ஞானம்

ஞானம் பெற்றது

நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்

கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்

பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


அடி

கலையை கலைஞனை

போற்றிய நாடிது என்கிறாய்...

காலம் காலமாய்

பறையை பறயனை தாழ்த்திய நீ.




பாடம்

புரட்சியாவது வெங்காயமாவது

என்கிறாய்

தெரிந்து பேசு

காயப்படுத்தியவனின் கண்ணீரை

வாங்கும் வெஙகாயம்.

சென்னிரை வாங்கும் புரட்சி



ஆணாதிக்கம்

எப்படியும் இருக்கலாம்

ஆணிண் திமிர்

திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்

அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்






கோயில்

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.





வேலி

மயில் இறகு புலித்தோல்

மான் கொம்பு யானைத்தந்தம்

அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.

வனவிலங்குகள் காப்பாளர் அப்பா


தளை

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


காலம்

உன் கையிலா கடிகாரம்?

கடிகாரத்தின் கையில் நீ.


வில்

வீழ்ந்த தமிழன் கதையை

விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது

மேடையில்-

வெட்கம் கெட்ட வில்



கடற்கரை

உடல் நலம் தேடி

காற்றுவாங்க வந்து போகும்

பெரியஇடத்து மாடிகள்

இங்கேயே நோயோடும் நொடியோடும்

ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்



பெண்மை

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர் நிலவு

புராணமாய் இறைவனின் தலையில்

வரலாறாய் மனிதனின் காலில்.



வெறி

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்...எரிந்ததுஅடுப்பல்ல-சேரி



இருள்

பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற

நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்...

எங்கேவெளிச்சம்?


வீரம்

உன் கனவில் பாம்பு துரத்துகிறது

நீ ஓடுகிறாய்

குறவன் அவன் துரத்துகிறான்

பாம்பு ஓடுகிறது

வீரம் தொழிலாலிக்கு


தாஜ்மஹால்

காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்

காதலை புதைத்த இடம் காட்டு

எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட

அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?


சாமி

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம



புலமை

கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக

இவன் உவமைகளும்...முத்துக்கள்

என்றானே கண்ணீரை



நிழல்

எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்

நிமிர்ந்தோம்

இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்



பால்

என்னைத் தெய்வம் ஆக்கினாய்

சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-

உன்பால் வேறுபாடு அழுத்தமானது

சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


மாவீரன்

இது உயிருக்கு வந்த சாவு அல்ல

சாவுக்கு வந்த உயிர்;



அரண்

என் வலகையில் ஐந்துவிரல்கள்

உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல

அறையவும்தான்




போர்

ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.




தேர்தல்

மாலை வளையல் ழூக்குத்தி

பென்னான எதுகும் இல்லை

எங்கள் குடிசையில்.

அவன் செல்கிறான்

இருக்கிறதாம் எங்களிடம்...

பொன்னான வாக்குகள்


உறுத்தல்

இரவெல்லாம் விழித்திருந்து

எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்...

வாங்கினேன் உறங்குவது எப்படி

இவள் பாயில்?


இனவெறி

மாடுகள் காணாமல்போகும் என்று

தோலில் குறிபோடும் எங்கள் மண்

கொஞ்சநாளாய்...

மனிதர்களையே காணவில்லையே.


மனிதன்

இவன் பசுவின் பாலைக்கறந்தால்

பசு பால் தரும் என்கிறான்.

காகம் இவன் வடையை எடுத்தால்

காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்....


குப்பைத்தொட்டி

அலுவலகத்தில் இருக்கிறவனுக்

இதுகுப்பைதn;தாட்டி

குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு

இதுஅலுவலகம்.



மானம்

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?

அவன் கைகளை வெட்டு

கெஞ்சி கோவணம் கட்டாதே

அம்மணமாகவே போராடு. ஏழ்மை

சதை பிடித்து விடுகிறாள்

அழகு நிலையத்தில்

எலும்புக்கைகளால்



அறுவடை

திரைப்படச்சுவரொட்டியை

தின்றகழுதை கொழுத்தது

பார்த்த கழுதை புழுத்தது


மாடு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்

வண்டி இழுக்கிறது

கொம்பைமறந்தமாடு



மந்தை

மேடை

தமிழா!

ஆடாய் மாடாய்

ஆனாயடா...நீ என்றேன்

கைதட்டினான்


கண்ணோட்டம்

செருப்பைப்பார்கையில் நீங்கள்

அணிந்திருக்கிறவனின்

காலைப்பார்க்கிறீர்கள்.

நான் செய்;தவனின்

கையைப்பார்க்கிறேன்


பெண்

ஏடுகளில் முன்பக்கத்தின்

அட்டையில்

வீடுகளில் பின்பக்கத்தில்

அடுப்பங்கரையில்


நிமிர்வு

தேவை பயில்வன்களல்ல வீரர்கள்

உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு

வில்லில் இல்லாத நிமிர்வா?



கோடை

தங்க வளையலைக்கழற்றி

போராளியிடம் தந்தாள்

செலவுக்குவைத்துக்கொள்

உங்களில் பலருக்கு

கைகளே இல்லை

எனக்கு எதுக்கு வளையல்


கூண்டு

விடுதலை ஆவாரா சிறையில்

இருந்து என்கணவர்?

சோதிடம கேட்கிறாள்

கூண்டுக்கிளியிடம்




திமிர்

வேலைக்காரன்மேல் பாய்ந்தார்

நாயே பீட்டரை கவனித்தாயா?

இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்

நாய் என்றால் மனிதன


மண்

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?



கொலை

ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு...

விரியுமுன்பே பறித்து

இனறவனுக்கு அர்ச்சனை

செய்கிறான்

நூறாண்டு வாழ்ககை வேண்டி

தனக்கு



குடுகுடு

நல்லகாலம் வருகுது

நல்லகாலம் வருகுது..

தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்



காசி ஆனந்தன்

26, இராமலிங்க நகர்

பழைய மாமல்ல புரம் சாலை

கொட்டிவாக்கம்

சென்னை- 41

Saturday, May 3, 2008

அகதியின் தாலாட்டு

`பொலித்தி´னில் தொட்டில்கட்டி
பொன்னான என் மகனே
கண்ணயர்ந்து நீ தூங்க
எப்படி நான் தாலாட்ட
கட்டமறு சீலையில்லை
கன்னி மர நிழலுமில்லை
சேலையில் நானுனக்கு
தொட்டில் கட்டித் தாலாட்ட

`மல்ட்டிபரல்´ ஓசையிலே
மன்னவனே நான்படிச்ச
வண்ண வண்ணத்தாலாட்டும்
தான் மறந்து போனதினால்
போர்ப்பரணி பாடுமிந்த
பாவப்பட்ட பூமியிலே
தாயொருத்தி நானழுது
பாடும் புதுத்தாலாட்டு

படுவான் கரைப்பக்கம்
போர் தொடங்கிப்போனதெண்டு
போட்ட உடு துணியோட
பேராறு தாண்டி வந்தோம்
ஊரான ஊரிழந்தோம்
ஒப்பற்ற மனையிழந்தோம்
மாடு கன்று நாமிழந்தோம்
மக்களையும் தானிழந்தோம்

உழுதெங்கும் நெல்வெதச்சோம்
வியர்வையினால்
உரமுமிட்டோம்
களைபிடுங்கிப் பாத்தி செய்து
கண்ணீரைக் காவல் வச்சோம்
வெளஞ்ச பயிர் தலை குனிஞ்சி
அறுவடைக்குக் காத்திருக்க
இடிவிழுந்த `செல்´ மழையில்
வயல் கருகிப்போச்சுதடா

உமலுக்குள் வெச்ச முட்ட
ஈரஞ்சும் என்னாச்சோ - நேற்று
பொழுதுக்குள் பொரிச்சகுஞ்சு
ஈராறும் என்னாச்சோ
வெள்ளாடும் என்னாச்சோ
வெதநெல்லும் என்னாச்சோ
உழுத்தம் பயறரிசி
ஊறவெச்சேன் என்னாச்சோ?

உள்வீட்டுக் கதவிழுத்துப்
பூட்டியதும் நினைவிலில்ல
பூட்டித் திறப்பெடுத்து
இடுப்பினிலே
செருகியதும் நினைவில்லை
பெரிய `அங்கர்´ பெட்டிக்குள்ள
`பேமிட்´ வெச்ச நினைவுமில்ல
மூண்டடுக்குப் பானைக்குள்ளே
கூப்பன் முத்திரையும் நினைவிலில்ல

காடெல்லாம் கதிர் பொறக்கி
காசாக்கி அறுநூற
முட்டாசிப் போத்தலிலே
மூடி வைச்சேன் என்னாச்சோ
தட்டான வீடுதேடி
தங்க அறு நாக்கொடிக்கு
அச்சாரம் இட்டுவெச்சேன்
அத்தனையும் என்னாச்சோ?

காலாற நாம் நடந்து
காளியம்மன் கோவிலிலே
கோளாவில் பாய்வாங்கி
கும்பிடுவ தெப்போது
ஊருக்கு நாம் திரும்பி
உன்ர அப்பன் காணியில
வேர்புடுங்கி வெள்ளாம்
விதைப்பதுதான் எப்போது?

கடைச்சலில் செஞ்செடுத்த
கருங்காலிக் கதவு யன்னல்
முதிரையில் மூட்டெடுத்த
முத்தான கதிரை கட்டில்
அடைக்கோழி, வாத்து, அன்னம்
அடிகழன்ற தாச்சிச் சட்டி
அடிக்கழுக்கு ஈயப்பேணி
அத்தோடு குழவி அம்மி
வெண்கலத்திலான ஏனம்
பித்தளையிலான செம்பு
வெள்ளியிலே சாமிக் கென்று
வார்த்தெடுத்த நெய் விளக்கு - என்று
அத்தனையும் `ட்ரக்டரிலே´
`அப்பன்´ ஏற்றிப் போறானாம் - அதை
சிங்காரச் சந்தையிலே
சில்லறைக்கு விற்பானாம்

உன்னாண் நானுனக்கு
ஊனுருக்கிச் சேர்த்து வைத்த
கண்ணான் அத்தனையும்
காவு கொண்டு போனானே - அவன்
மண்ணாகிப் போவானோ
இல்லை
மாடேற்ச் சாகானோ - நாங்க
கண்ணால உகுத்த கண்ணீர்க்
கங்கையிலே மூழ்காணோ

மாமாங்கத் தீர்த்தத்திலே
`மல்ட்டி பரல்´ வாங்கித்தாறேன்
ஏறாவூர் பள்ளயத்தில்
`ஏக்கே´யும் வாங்கித்தாறேன்
`ஆட்டிலறி´வாங்கித்தாறேன்
`பொம்மர்´ஒண்டும் வாங்கித்தாறேன்
நாளையுந்தன் பேரெழுதி
நாள்விடியும் நீ உறங்கு

அ.ச. பாவ்யா
மட்டக்களப்பு

யாரும் அறியா சடலம்

வீதியோரம் விழும் சடலங்கள்
விதியென்பதா? வினையென்பதா?
விடியற்காலை பொழுதில்
விளையாட்டாய் போய்விட்ட
மரணச் சம்பவங்கள்

வீழ்ந்தது எமதுறவா - அன்றேல்
வீரப் புதல்வர்களா?
யாரறிவார் அதை - அதுகால்வரை
வீடுதோறும் பதற்றம்

கோயிலுக்குப் போன பிள்ளை
கூடி விளையாடிய பிள்ளை
பரீட்சைக்கு சென்ற பிள்ளை
யார் வீட்டுப் பிள்ளையோ!
யாரறிவார்

காய்ந்துபோன குருதியில்
கால் மடித்து கைவிரித்து
கறுத்துப்போன சடலம்
காலை தொட்டு மதியம் வரை
அடையாளம் காணாமலே
வீதியோரம்

பவ்வியமாய் அசைந்து வரும்
ஊர்தியிலே - பலர் குதித்து
வந்து உற்று நோக்கி
அளவளாவி நிற்க

அடுத்து வரும் பவனியிலே
பெரியவர்
யாரறிவர் இவரை?
எங்கிருந்தார் இதுநாள்வரை?
கேட்டுவிட்டு
காக்கியுடைக்காரர் - நீட்டும்
காகிதத்தில் கையெழுத்திட்டு விட்டு செல்ல
பக்குவமாய் ஏற்றிச்செல்வர்
சவச்சாலை நோக்கி
அத்துடன் மூடிவிடுவர்
விசாரணைக் கோவைதனை

நித்தமும் இதுதான் இங்கு
நிதர்சனமாகிவிட்டது


வன்னியூரான் - கபில்

விலை வாசி

விஷமேறும் தலைக்கு....
"விறுவிறு" வென்று
விலை வாசியும் ஏறும்
விஷத்தைப் போல....

ஈழத்தீவிலும்
விலைவாசியின் ஏற்றமும்
விஷத்தைப் போலத்தான்!

விஷத்தின் வகைதான்
விளங்க வில்லை
ஆலகால விஷமா?
அணுத்துகள் விஷமா?
அல்ல... அல்ல...

"சயனைட்" டின்
சுவையும் அறியேன்
"சுரீர்" என ஏறும்
வேகமும் அறியேன்!
அறிந்து கொண்டேன்...
விலைவாசி மூலம்!

அரிசி விலைஏறியது
சீனி விலை ஏறியது
பெற்றோல் விலையும்
"பிசாசு" போல் ஏறியது..
முருங்கை மரத்தில்!

"மா" விலையும்
"மளமள" வென்று
ஏறிக்கொண்டேயிருக்கிறது
எல்லோரும் மௌனம்
"மௌனத்தைத் தவிர
வேறொன்றறியேன் பராபரமே"

என்று எண்ணியா
எல்லோரும் துயில்கிறார்!
அரசின் கடமை என்ன?
நாட்டில் சுபீட்சம்
பொருளாதார மேம்பாடு
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்
எல்லோர்க்கும் இல்லம்
எல்லோருக்கும் உணவு
எல்லோருக்கும் நல்வாழ்வு!
இது இயலாதென்றால்
எதற்காம் அரசு!

எவனோ ஒரு புத்திசாலி
இப்படிச் சொன்னான்
"பொருட்களை வாங்கி
விற்பதற்கு அரசு எதற்கு...
வர்த்தகரே போதும்"
அவன் வாய்க்குப்
போடவேண்டும்... சர்க்கரை!"
சர்க்கரையும் நாட்டிலில்லை!

மாவையும் மண்ணெண்ணையையும்
நம்பி வாழும் குடும்பங்களெல்லாம்
நாடி இழந்து கிடக்கிறார்கள்!
அரசியல்வாதிகளோ...
தொழிற்சங்கங்களோ...
நியாயத்தைக் கேட்க
நாதியற்றுக் கிடக்கிறார்கள்!
பாவம்
போராட வக்கின்றி!
தட்டினால்தான் ஓசை!
ஆளும் அரசே!
மாவின் விலையையும்
மண்ணெண்ணையின் விலையையும் உடனே குறை!

கலைவாதி கலீல்

உரக்கமில்லா ஜீவன்கள்

அங்கே
ஒலிக்கிறது
சமாதான கீதம்
இங்கே நாளும்
ஒடுக்கப்படுகின்றது
ஜனநாயகத்தின்
உரிமைகள்
இப்பூமியில்
அப்பாவி சனங்களுக்குத்தான்
துப்பாக்கி சன்னங்களும்
தூக்கு மேடைகளும்
ஆதிக்க வெறியர்களின்
அராஜக செயலால்
ஆயிரம் உயிர்கள்
அன்றாடம் பணயம்
இனவாத இம்சை
இங்கிதமாய் தொடர்கிறது
சனங்களுக்குள் மாறாட்டம்
சமர்களில் தேரோட்டம்
அடிதடி ஆர்ப்பாட்டம்
ஆதாரமில்லாத
பயங்கரவாத பட்டம்
அதிகார பகிர்வில்
போதித்த போதனைகள் பல
சாதித்த சாதனைகள் சில
மதிக்கத்தக்க
மானுடத்தின்
மனித நேயம்
இப்படி மண்ணில்
மிதிக்கப்படுகின்றது
பொன்நிறைந்த பூமி
போரினால் மடியுது
எண்ணிறைந்த ஆசை
எம்மில் எட்டிக்காயாய் நாளும்
முட்டி மோதி கொள்ளுது
கண்ணிருந்தும் குருடாக
காதிருந்தும் செவிடாக
உடலிருந்தும் ஊனமாக
உயிர் வாழுது
உறக்கமில்லாத
ஜீவன்கள்!

கேபிரியேல் ஜோன்சன், லுணுகலை

ஏன் பெண்ணே இந்தக் கோலம்?

அல்குர் ஆனையும், அல்ஹதீஸையும்
மனத்தில் ஓத வேண்டிய நீ
ஆயிரம் சினிமாப்பாட்டை
எப்பிழையும் இல்லாமல் ஒப்பிக்கிறாய்!

"மஃரிப்' தொழுகையிலிருந்து
"இஷா' வரை
இறை வேதம் ஓத வேண்டிய நீ சின்னத்
திரையில் மெகா
சீரீயலை, சீரியஸாய்ப் பார்க்கிறாய்!

நபிமாரின்
வரலாற்றைப் படிக்க வேண்டிய நீ
நடிகர்களின் வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கின்றாய்!
சஹாபாப் பெண்மணிகளின்

சரித்திரத்தைப் படித்து
உன் வாழ்க்கையில்
நடைமுறைப் படுத்த வேண்டிய நீ
சமகால நடிகைகளின்
சரித்திரத்தைப் படித்து
உன் வாழ்க்கையில்
நடைமுறைப் படுத்துகின்றாய்!

பாணகமுவரபாய்தீன்

உனது தேசமும் எனது எலும்புக்கூடும்

உன் துவக்கு வாயில்
எனது உம்மாவின் தொங்கித் துடித்தசதைத்துண்டு
இன்னும் ஞாபகம் எனக்கு.

நீ அணியும்
கவச உடையில்
என் வாப்பாவின்
பெட்டிக் கடை
கப்பச் சில்லறைகளின் ரீங்காரம் ஒலிக்கிறது...

தொங்கும் உனது
முகத்தாடியில்
எனது வீட்டு மீன் குழம்பும்
பச்சரிசிச் சோறும்
இருப்பதாய் ஞாபகம்

உனது நீதிமன்றத்திலும்
காவல் பணிமனைகளிலும்
எனதான மானமும்
கௌரவமும்
சுயநிர்ணயமும்
கைதிகளாய் காயப்படுகிறது

உனது தேசிய கீதத்திலும்
ஒலிக்கும் கோஷத்திலும்
வரையும் பிரகடனங்களிலும்
எனதான உறவுகளின்
குருதித் தூவானம் வீசுகிறது

மொத்தத்தில்
புதையுண்டு போன
எலும்புக் கூடுகள் மீது
எழுப்பப்படும் உனதான
தேசத்தின் வேலிகள்...
எனது கண்களுக்கு
எனதான உறவுகளின்
உயில்கள் தான்.

றிஸ்வி சுபைர்