Showing posts with label Italy. Show all posts
Showing posts with label Italy. Show all posts

Monday, June 23, 2008

திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றதால் 18 ஆண்டுகள் தனியறையில் கொடுமை

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முன் குழந்தை பெற்றதால் 18 ஆண்டுகள் தனியறை ஒன்றில் சித்திரவதைப்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் நொப்லஸ் நகருக்கு சற்றுத் தொலைவில் அமைந்துள்ள சான்ந் மரியா கபுவா வெடிரே என்ற நகரைச் சேர்ந்த 47 வயதுடைய மரியா மனோகா என்பவரே திருமணத்துக்கு முன்பு குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.

இதனால், சமூகத்தில் தங்களின் குடும்ப அந்தஸ்து குறைந்துவிடும் என்று அஞ்சிய மரியாவின் தாய் மரியாவின் சகோதரர் பிரிஸ்கோ, சகோதரி மிசெலினா ஆகியோர் மரியாவை தங்கள் வீட்டில் தனியறையில் அடைத்துப் பூட்டி விட்டனர்.

மரியா காணாமல் போனதாக மற்றவர்களிடம் கூறிவிட்டனர். மரியாவின் ஆண் குழந்தையை தாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கதை விட்டனர். 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனியறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார் மரியா.

இதுதொடர்பாக பொலிஸாருக்கு அநாமதேயத் தகவல் கிடைத்தது. மரியா அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை வீடியோவில் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகியது. இதையடுத்து, சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் மரியா அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, துர்நாற்றம் வீசும் அறையில் உணர்விழந்த நிலையிலும் மனநிலை குழம்பிய நிலையிலும் மரியா இருந்தார். அவர் பயன்படுத்திய கழிவறை சுத்தப்படுத்தப்படாமலும் அறை முழுவதும் பழைய உடைகள் சிதைந்தும் இருந்தன.

மரியாவை மீட்ட பொலிஸார் அவரை நாப்பில்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மனநிலை தவறிய நிலையில் எதையும் பேச முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார் மரியா. மரியா குறித்த முழுவிபரங்களும் அவரது 17 வயது மகனுக்குத் தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்தது. மரியாவின் தாய் அன்னா ரோசா மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரர் , சகோதரி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Thursday, June 19, 2008

இத்தாலியில் புலிகளின் சேவைக்கு பங்கம் துரத்த ஆரம்பித்துவிட்டுது

இத்தாலிக்கான இலங்கை தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய இத்தாலியின் உள் விவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து புலிகளின் ஒலி-ஒளிபரப்புச் சேவைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் பாரிஸில் மிலானை தமது முக்கிய தளமாகக் கொண்டு புலிகள் ஒலி-ஒளிபரப்புச் சேவையை நடத்திவருவதையும் இலங்கைத் தூதுவர் இத்தாலி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொணடுவந்துள்ளார் எனவும் ஜனாதிபதி செயலகம் மேலும் அறிவித்துள்ளது. இத்தாலியில் புலிகளின் ஒலி-ஒளிபரப்புச் சேவைக்கு தடை விதிக்க தீர்மானம்! இத்தாலியில் இயங்கும் புலிகளினது ஒலி-ஒளிபரப்புச் சேவைக்கு தடை விதிக்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்து உள்ளதாகவும் இத்தாலிய மற்றும் இலங்கை அரசாங்க உயர் அதிகாரிகள் நேற்று ரோமில் சந்தி;த்துப் பேசியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இத்தீர்மனம் பற்றி ஐரோப்பிய யூனியனின் ஏனைய உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்து இந்த நடவடிக்கைக்கு அவர்களின் ஒத்துழைப்பை பெறப்போவதாகவும் இத்தாலிய அதிகாhரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தாலியில் புலிகள் பிழையமுறையை கையாண்டுவரும் நடவடிக்கைளில் அதிகயளவு பணம் சேகரித்தும், அவ் நடவடிக்கைகளை பிரச்சாரப் படுத்தியும் வந்த புலிகளின் ஆதரவாளர்கள் 33பேர் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப் படுத்திவரும் சர்வதேச சமூகம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

33 இலங்கைத் தமிழர் இத்தாலியில் கைது

விடுதலைப் புலிகளுக்கு உதவியளிப்பதாக குற்றம் சாட்டி 33 இலங்கைத் தமிழர்களை இத்தாலிப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
இத்தாலியின் தென்பகுதியான நேபிள்லிலிருந்து வடபகுதியான போலோக்னா வரையும் சிசிலித்தீவிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சுமார் 200 பொலிஸார் 33 தமிழர்களை கைது செய்திருப்பதாக பயங்கரவாத தடை நடவடிக்கைகளுக்கான பொலிஸ் பிரிவின் உயரதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த 33 பேரும் புலிகள் அமைப்பின் உறுப்புரிமையை பெற்றிருப்பதாகவும் புலிகளுக்கு நிதி உதவியளிப்பதாகவும் சந்தேகப்பட்டு கைது செய்திருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளது.