Showing posts with label திவயின. Show all posts
Showing posts with label திவயின. Show all posts

Monday, August 18, 2008

வன்னிப்புகைப்படங்களை இஸ்ரேல் ""ஒபெக் செய்மதிப்பிரிவு' றோ அமைப்புக்கு வழங்கியது

கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடாகிய ""ஸ்ரேற் ரைம்ஸ்' (State Times) செய்தித்தாள் சார்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் செவ்வி காணப்பட்ட போது பத்திரிகையாளர் ஸ்ரீலங்காவில் தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் பற்றியும் எதிர்பார்க்கப்படக்கூடிய யுத்த விளைவு பற்றியும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய பாதுகாப்பு ஆய்வு அமைப்பாகிய ""றோ' அதன் அறிக்கையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்ந்து யுத்தம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ""றோ' அமைப்பு இந்தப் பாதுகாப்பு நிலைமை ஆய்வை பாதுகாப்புத் தகவல்களின் அடிப்படையில் மட்டும் செய்யவில்லை எனவும் ஸ்ரீலங்கா இராணுவப் படையணிகள் புலிகள் இயக்கத்தின் பலக்கோட்டைகள் எனக்கருதப்படும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்குள் பிரவேசித்து கேந்திரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் ""றோ' அமைப்புக்குக் கிடைத்துள்ளதாகவும் அத்துடன் புதுடில்லியில் அமைந்துள்ள ""றோ' தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு புலனாய்வுகளை மேற்கொள்ளுவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஆயுதக்கருவிகள், உபகரணங்கள் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு களநிலைமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வன்னியில் அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் கேந்திரப் பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் யுத்தம் மற்றும் அரசபடையினர் வன்னிக்குள் முன்னேறித் தற்போது நிலைகொண்டுள்ள கேந்திரப் பகுதிகள் ஆகியவற்றைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் இஸ்ரேலின் அதிஉயர் தொழில்நுட்பங்கள் கொண்ட ""ஒபெக்' செய்மதி மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகைப்படங்களை ""ஒபேக்' செய்மதிச் செயற்பாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அண்மையில் இந்திய அரச பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு ""றோ'வுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பாதுகாப்புத் தகவல்களுக்கு அப்பால் ""றோ' அதன் உயர்தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பெற்ற புகைப்படங்கள் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் ""ஒபெக்' செய்மதி வழங்கிய புகைப்படங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு பிரபாகரன் தொடர்ந்தும் யுத்தம் செய்யமுடியாத நிலையில் முடங்கிவிட்டதாக ""றோ' அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆதாரபூர்வமான ""றோ'வின் இந்த அறிக்கை காரணமாகவே அண்மையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மேற்படி சிங்கப்பூர் ""ஸ்ரேற் ரைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்று உறுதியாகத் தெரிவித்தார். இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அவர் தெரிவித்த ஏனைய காரணங்களில் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கடத்த முடியாத வகையில் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்பிராந்தியங்களில் ஸ்ரீலங்கா கடற்படையினராலும் இந்தியக் கடற்படையினராலும் எடுக்கப்பட்டிருப்பதும் புலிகள் இயக்கம் பலமிழந்துபோய்விட்டதற்குக் குறிப்பிடும்படியான காரணம் எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரபாகரனின் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்பதை இந்தியப் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பாகிய ""றோ' அமைப்பும் இந்திய பாதுகாப்புத்துறை உயர்அதிகாரி ஒருவரும் வெளிப்படையாகக் கூறியிருப்பதும், ஏற்றுக்கொண்டிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

திவயின விமர்சனம் 17/08/2008

Wednesday, July 23, 2008

இந்தியப் பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல் அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவிப்பு

சார்க் மாநாட்டுக்காக ஸ்ரீ லங்கா வரவிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தற்போதுள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் இந்த வகையில் புலிகள் இயக்கத்தினர் ஸ்ரீ லங்காவில் வைத்து இந்திய பிரதமர் மீது தற்கொலை தாக்குதலையோ அல்லது வேறு வகையிலான கொலை தாக்குதலையோ மேற்கொள்ளக் கூடும் எனவும் பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையான "த அவுஸ்ரேலியன்' ( THE AUSTRLIAN) செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடந்த 18 ஆம் திகதி வெளியான மேற்படி அவுஸ்திரேலியப் பத்திரிகையில் பிரசுரமாயிருக்கும் தகவலை மேற்கோள் காட்டி இந்தியத் தரப்பில் சிரேஷ்ட இந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இந்திய பாதுகாப்பு துறையின் தலைமைப்பீடத்துக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் உட்பட புலிகள் இயக்கத்தினரால் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி இந்தியப் பாதுகாப்பு துறை நன்கு அறியும் எனவும் எனவே தற்போது ஸ்ரீ லங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு நடக்கப் போகும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதில் பங்குபற்ற வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது புலிகள் இயக்கத்தினர் கொலை தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளதையிட்டு இந்தியப் பாதுகாப்புத்துறை விசேட எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளதாக மேற்படி இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் புலிகளிடமிருந்து இந்திய பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புத் துறை ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதற்கேற்ப இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைநகர் கொழும்பில் வந்திறங்குவதற்கு முன்னரும் பின்னரும் இந்திய விமானப்படையின் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் அவர் நடமாடவிருக்கும் கொழும்பு தரைபகுதிகள் மீது தீவிரமாக நோட்டமிடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கும் மேற்படி "த அவுஸ்திரேலியன்' பத்திரிகை இவை அனைத்தும் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு நடக்கும் சந்தர்ப்பத்தில் இந்திய பிரதமர் மீது புலிகள் இயக்கத்தினர் கொலைத்தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற தகவல்களையும் அவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்பாட்டை உறுதிசெய்வதாக அமைந்துள்ளதாக அந்த பத்திரிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதேவேளை சார்க் மாநாட்டில் பங்குபற்ற வேண்டாமென இந்தியாவில் தமிழ் நாட்டில் இயங்கும் புலிகள் இயக்கத்துக்கு சார்பான பல அரசியல் கட்சிகள் இந்திய பிரதமரைக் கேட்டுள்ளபோது அவர்களின் கோரிக்கையை அவர் மறுத்துவிட்டதாகவும் மேலும் குறித்த அவுஸ்திரேலியப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

திவயின :19.7.2008

Monday, July 21, 2008

மனித கேடயமாக மக்களை பயன்படுத்தும் புலிகள் இயக்கம்

கடந்த காலங்களில் அரச படையினரின் உறுதியான இராணுவ நடவடிக்கை காரணமாக அனைத்துப் பிரதேசங்களையும் இழந்து வன்னிப்பிரதேசத்துக்குள் மட்டுமே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்போது எஞ்சியிருக்கும் வன்னி நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக யுத்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை காட்டிலும் பொதுமக்களைப் பயன்படுத்தும் உத்தியையே கையாண்டு வருகிறார்.
இந்த வகையில் தமிழ் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பிரதேசங்களிலேயே பெரும்பாலும் நடமாடி தங்கள் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாகப் புலிகளின் நடமாட்டமறிந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவதும் அதன் மூலம் பொதுமக்களுக்குப் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதுமே தற்போது புலிகள் இயக்கத்தலைவரின் குறிக்கோளாக உள்ளது. அத்துடன் வன்னிபிரதேசங்களில் புலிகள் இயக்கத்தினர் செயற்படும் முக்கிய மறைவிடங்கள் மற்றும் முகாம்கள் மீதெல்லாம் கடந்த காலங்களில் விமானப்படையினர் குறிதவறாத தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புலிகள் இயக்கத்தினர் பொதுமக்களுடனேயே பதுங்கி வாழும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் விமானத்தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக பொதுமக்களை முன்னிலைப்படுத்தி மனித கேடயமாகப் பயன்படுத்திவருகிறது புலிகள் இயக்கம். அத்துடன் இவ்வாறு பொதுமக்கள் பெருந்தொகையில் கொல்லப்படும் சூழ்நிலைகள் உருவானது அவ்வாறு பொதுமக்களுக்கு பெரும் உயிர்சேதம் ஏற்படும்போது அந்தசம்பவங்கள் மூலம் அரசபடையினருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக சர்வதேசம் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையை உருவாக்குவதும் இந்தப் பிரச்சினையை சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக்கி சர்வதேசத் தலையீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமே புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அடிப்படையான குறிக்கோள்களாகும். இதன் மூலம் அரசபடையினரின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கும் எஞ்சியிருக்கும் வன்னிப் பிரதேசங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பிரபாகரன் நினைக்கிறார். மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பிரதேசங்களையும் இழந்துவிட்ட பிரபாகரன் அனைத்து ஆயுத நடவடிக்கையிலும் நம்பிக்கையிழந்த நிலையில் தற்போது தன்னையும் இயக்கத்தினரையும் எஞ்சிய பிரதேசங்களையும் பாதுகாக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதை விட்டு பொதுமக்களை கேடய ஆயுதமாகப் பயன்படுத்த முன்வந்துவிட்டார்.

திவயின விமர்சனம் :20.07.2008

Tuesday, July 1, 2008

இத்தாலி நீதிமன்றத்தில் மொழி தெரியாது எனக்கூறி தப்பிக்க முயன்ற புலிகள்

இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்கான தடையைத் தொடர்ந்து இத்தாலிய பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடந்த 17 ஆம் திகதி நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தின் இத்தாலியத் தலைவர், பிரதித் தலைவர் உட்பட 33 ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த தமிழர்களை இத்தாலியப் பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை இத்தாலிய நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகளின் பேரில் ஆஜர் செய்தபோது மேற்படி புலிகள் இயக்க இத்தாலிய பிரதிநிதியும் சகாக்களும் தமக்கு இத்தாலிய மொழி தெரியாதெனவும் அதனால் நீதிமன்றத்தில் இத்தாலிய மொழியில் வாக்குமூலம் அளிக்கவோ அல்லது வழக்கு விசாரணைகளை விளங்கிக்கொள்ளவோ முடியாதெனவும் கூறி பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணைகளைத் திசை திருப்ப முயன்றுள்ளனர்.
ஆயினும் அவர்களின் இந்த விதண்டாவாதத்தையிட்டு கடும் எச்சரிக்கை செய்த நேப்பல் பிரதேச நீதிமன்ற நீதிபதி, அவர்களை ஜூன் 30 ஆம் திகதி வரை தடுப்புக் காவல் சிறையில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி பெண் நீதிபதியாகிய அவர் இட்டுள்ள உத்தரவில் இத்தாலியில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் மேற்படி புலிகள் இயக்கத்தவர்கள் இத்தாலியப் பாஷை தெரியாதெனச் சொல்வது ஏற்றுக் கொள்ளமுடியாத வாதம் என நிராகரித்துள்ளார். இவர்கள் மீது பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள இத்தாலியப் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் தரப்பில் தாக்கல் செய்த பத்திரத்தில் மேற்படி புலிகள் இயக்கத்தினர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்காக இத்தாலியின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழர்களிடமிருந்து நீண்ட காலமாக நிதி சேகரித்து வந்துள்ளார்கள் எனவும் இவ்வாறு அவர்களிடம் பலாத்காரமாக "கப்பப்பணம்' வாங்கி வந்தார்கள் எனவும் இந்தவகையில் மேற்படி இத்தாலியப் புலிகள் இயக்கப் பிரதிநிதியும் சகாக்களும் வருடம் ஒன்றுக்கு சுமார் 4 மில்லியன் யூரோ பணத்தை சேகரித்து வந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேற்படி கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினர் மீதான விசாரணை நேப்பல் நீதிமன்றத்தில் மீண்டும் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

திவயின : 26.06.2008

Wednesday, June 18, 2008

புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது

புலிகள் இயக்கத்திற்காக நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பெருந்தொகையான நிதி உதவிகளைச் சேகரித்தவரும் போலிக் "கிறடிற் காட்'களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைச் சூறையாடி புலிகள் இயக்கத்துக்கு வழங்கிவருபவரும் எனக் கருதப்படும் பிரபல புலிகள் இயக்க நிதிப் பொறுப்பாளர் ஒருவரைக் கடந்த 14 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் வைத்து விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்தப் புலிகள் இயக்கப் பிரமுகர் பல வருடங்களாக இவ்வாறு போலிக் "கிறடிற் காட்' களைப் பயன்படுத்தி சுமார் 500 கோடி ரூபாக்கு மேற்பட்ட பணத்தைச் சூறையாடியுள்ளார் என விசேட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், இவ்வாறு சூறையாடிய பணத்தை வெளிநாட்டு, உள்நாட்டு வங்கிகளில் தனது பெயரில் இட்டு வைத்துள்ளார் எனவும் இதற்கான வைப்புச் சிட்டைகள் மற்றும் வங்கிப் பத்திரங்களும் அவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விசேட பொலிஸ் விசாரணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விடயம் யாதெனில் இவரை விசேட பொலிஸ் குழுவினர் பம்பலப்பிட்டியில் வைத்துக் கைது செய்தவேளையில் அவர் ரூபா ஒரு கோடி பணத்தை இலஞ்சமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கொடுத்து தப்பிக்கொள்ள முயன்றதே ஆகும். ஆயினும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறாது அவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்தப் புலிகள் இயக்க நிதிப் பிரிவுப் பிரமுகர் பற்றி விசேட பொலிஸ் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவருடைய பெயர் ஆனந்தன் எனவும் இவர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இவர் நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் தங்கியிருந்து புலிகள் இயக்கத்துக்காகக் கோடிக்கணக்கில் நிதி சேகரித்து வழங்கியுள்ளார். மேலும், இவர் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பெருந்தொகையில் பணம் இட்டிருக்கும் வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்களின் வங்கிக் கணக்குகளின் இரகசிய இலக்கங்களைப் பயன்படுத்தி போலி "கிறடிற் காட்' களைத் தயார் செய்து இங்குள்ள சுப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் வங்கிகள், வர்த்தக நிலையங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பெற்றுள்ளார்.

இவரைப்பற்றி விசேட பொலிஸ் நடவடிக்கைக் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்ட இரகசிய தகவல்களைத் தொடர்ந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவரைக் கைது செய்யமுடிந்துள்ளது. இவ்வாறு இவர் பதினைந்து இலட்சத்துக்கு நகைகள் வாங்குவதற்கு குறிப்பிட்ட சுப்பர் மார்க்கெட் பகுதிக்கு வந்துகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து நகைகள் வாங்குவதற்காக இவர் பம்பலப்பிட்டியிலுள்ள குறிப்பிட்ட சுப்பர் மார்க்கெட் நிலையத்துக்கு வந்து சேர்ந்த வேளையில் அங்கு வைத்து விசேட பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப இந்தப் புலிகள் இயக்க நிதித் தொடர்புப் பிரமுகர் இவ்வாறு போலிக் கிறடிற் காட் பணமோசடி, இங்கிலாந்து முதலாக வெளிநாடுகளில் சேகரிக்கும் நிதி உதவிகள் என்பவற்றில் சுமார் 60 வீதமான தொகையை புலிகள் இயக்கத்துக்கு வழங்கி வந்துள்ளதாகவும் மீதி சுமார் 40 வீதமான பணத்தை அவரும் அவருடைய கூட்டாளும் பயன்படுத்திவந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இவருடைய நிதி மோசடிச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஏனைய புலிகள் இயக்க நபர்கள் இங்கிலாந்தில் இருப்பதாகவும் இவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொலிஸ் குழுவினர் கைப்பற்றிய கையடக்கத் தொலைபேசி மூலம் அவர் அவ்வாறு இங்கிலாந்திலுள்ள புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புகொண்ட தொலைபேசி இலக்க விபரங்களைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலிகள் இயக்கச் சந்தேகநபர் போலி கிறடிற் காட்கள் அச்சடித்தது மற்றும் புலிகள் இயக்கத்துடனான நிதித் தொடர்புகள் சம்பந்தமான மேலதிக இரகசியங்களை அறிந்துகொள்வதற்காக இவரை விசேட பொலிஸ் நடவடிக்கை பிரிவினர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திவயின:16.06.2008

Monday, June 16, 2008

குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்

அண்மைக்காலமாக மத்திய மாகாணப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குழுவினர்கள் கைது செய்யப்படுவது வெடிகுண்டுப் பொருட்கள் , ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மற்றும் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்படுதல் மற்றும் புலிகள் இயக்க சந்தேக நபர்களின் நடமாட்டங்கள் போன்ற சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது புலிகள் இயக்கம் அதன் பயங்கரவாதத் தாக்குதல்களை மத்தியமாகாணத்தின் பிரதான நகரப்பகுதிகளிலிருந்தும் நடத்துவதற்குத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இவ்வாறு மத்தியமாகாணத்தில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை நுவரெலியா பிரதேசத்தில் வெலிமட வீதியை அண்டிய மாகஸ்தோட்டவத்தைப் பகுதியில் அதிசக்தி வாய்ந்த ரி.என்.ரி.மற்றும் சீ 4 வகைவெடி குண்டுப் பொருட்களும் ஆயுதங்களும் பெருந்தொகையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மத்திய மலையகத்தைச் சேர்ந்த கேந்திரப்பகுதி ஒன்றில் பெரும் அழிவை ஏற்படுத்தும் பாரிய குண்டுத்தாக்குதல் மற்றும் சூட்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இவ்வாறு இவற்றை மத்திய மாகாணப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த வெடிகுண்டுப் பொருட்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இவ்வாறு 316 கிலோகிராம் நிறையான வெடிகுண்டு இரசாயனப் பொருட்கள் குறித்த மாகஸ் தோட்டவத்தைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றை புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டதில் அவற்றில் 300 கிலோ நிறையான ரி.என்.ரி.வகை அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இரசாயனங்கள் எனவும் மீதி 16 கிலோவும் சி.4 வகை வெடிகுண்டு இரசாயனங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ரி.56 வகைத் துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குண்டுகளும் மற்றும் வேறுவகையான துப்பாக்கிகளும் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பெருந்தொகையில் பெரும் அழிவு சக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு உதவிய தகவல்களை புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கச் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்தே பெற்றுக் கொண்டுள்ளனர். அண்மையில், கொழும்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதற்காக மத்திய மலையகப் பகுதியிலிருந்து தற்கொலைக் குண்டுக் கவசங்களை கொழும்புக்குக் கடத்த முயன்ற இரண்டு புலிகள் இயக்கச் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து தற்கொலைக் கவசங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நகுலன் எனப்படும் மதகுரு ஒருவரும் மற்றும் துரைசாமி முரளிதரன் எனப்படும் நபருமாவர். தொடர்ந்து இவர்களிடம் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் மேற்படி வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் ஆயுததாரிகளால் மாகஸ்தோட்டவத்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்களைக் கூறியுள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நிலையத்தைச் சுற்றிவளைத்து மேற்படி பொருட்களை மீட்டுள்ளனர் .

மேற்படி கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மேலும் தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுப் பொருட்களை கொழும்பில் முக்கியமான பொருளாதார மையம் ஒன்றைத் தாக்கி அழிக்கும் நோக்கத்துடனேயே அங்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், மேற்படி பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களையும் குண்டுத் தாக்குதலுக்காக வாகனம் ஒன்றில் பொருத்துவதற்கும் அந்த வாகனத்தை கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பது பற்றிய தகவல்கள் விசாரணைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த வெடிகுண்டுப் பொருட்களையும் துப்பாக்கிகள், ஆயுதங்களையும் கடந்த 11 ஆம் திகதி கொழும்புக்கு வாகனத்தில் கொண்டு செல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்படி கைது செய்யப்பட்ட மதகுரு மற்றும் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பெறப்பட்ட தகவல்களைக் கொண்டே முன்னரும் நுவரெலியா கந்தப்பளைப் பகுதியில் புலிகள் இயக்கத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

கொழும்பு நோக்கிய ஏனைய போக்குவரத்துப் பாதைகளிலும் பிரதேசங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுமிருப்பதால் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வெடிகுண்டுப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை பெரும்பாலும் மத்திய மாகாணப் பிரதேசங்கள் ஊடாகவே கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வுத் தடுப்புப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரும் தெரிவிக்கின்றனர். அத்துடன், தாக்குதல்களுக்கான பொருட்களை ஏனைய பிரதேசங்களில் பதுக்கி வைத்திருப்பதிலும் பார்க்க நுவரெலியா போன்ற மத்திய மாகாண நகரங்களை அண்டிய பகுதிகளிலேயே புலிகள் இயக்கத்தினர் பதுக்கி வைப்பதாகப் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

திவயின 12.06.2008

பிரபாகரனின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை

புலிகள் இயக்கத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராகிய மேஜர் கலைஞர் கடந்த 12 ஆம் திகதி திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் வைத்து பொலிஸ் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் அரச படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களிலும் மற்றும் இராணுவ முகாம் தாக்குதல்களிலும் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட பிரபல புலிகள் இயக்க மேஜர் எனவும் மேற்படி தாக்குதல்களில் சுமார் 35 அரச படையினர், பொலிஸ் பிரிவினர் கொல்லப்பட்டார்கள் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு குறித்த மேஜர் கலைஞர் கொல்லப்பட்டது சம்பந்தமாக பாதுகாப்புப் பிரிவு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி மேஜர் கலைஞர் முன்னர் கிழக்கின் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சமயத்தில் திருகோணமலை கும்புறுப்பிட்டியிலிருந்த பிரதான புலிகள் இயக்க முகாமாகிய "பாஸ்கரன் பேஸ்' முகாமில் பொறுப்பாளராகச் செயற்பட்டவர் எனவும் கிழக்கில் புலிகள் அரச படையினரால் தோற்கடிக்கப்பட்டவேளையில் இவர் தப்பியோடி விட்டார் எனவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர் திருகோணமலை கணேசபுரம் பகுதியில் மறைந்திருந்த பொழுது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவரிடம் தீவிர பொலிஸ் விசாரணையின் போது கிண்ணியாவில் புலிகள் இயக்கத்தால் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையம் பற்றி தெரிவித்தார் எனவும் கடந்த 12 ஆம் திகதி பகல் குறித்த நிலையத்தை அடையாளம் காட்டுவதற்காக மேஜர் கலைஞர் பொலிஸ் குழுவினரால் கூட்டிச் செல்லப்பட்டார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தை பொலிஸ் குழுவினர் கண்டுபிடித்த வேளையில் மேற்படி மேஜர் கலைஞர் அங்கிருந்த கைக்குண்டை எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றார் எனவும் உடனே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்தார் எனவும் மேலும் பொலிஸ் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்படி புலிகள் இயக்கத் தலைவர் மேஜர் கலைஞர் கிண்ணியா பிரதேசத்தில் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து சி.4 வகை வெடிகுண்டுப் பொருட்கள், கைக்குண்டுகள், ரி.என்.ரி. வெடிகுண்டுப் பொருட்கள், வயர் சுருள்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மேஜர் கலைஞர் பற்றி மேலும் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப இவர் நீண்டகாலமாகவே புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பாளராக இருந்துவந்துள்ளார் எனவும் இந்த வகையில் அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடனும் நெருங்கிய தொடர்புகள் உடையவர் எனவும் தேவை ஏற்படும் வேளையில் இவர் பிரபாகரனை நேரடியாகச் சந்திக்கும் அளவுக்கு பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், திருகோணமலை, கும்புறுப்பிட்டி, மூதூர் ஆகிய பிரதேசங்களில் வைத்து அரச படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களை இந்த மேஜர் கலைஞரே தலைமை தாங்கி நடத்தியுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திவயின: 13/06/2008

Tuesday, June 3, 2008

கிழக்கை மீட்க புலிகளின் ஜெயந்தன் படையணி தயார்?

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிவசங்கர் கடந்த 30 ஆம் திகதி அவருடைய இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக புலிகள் இயக்கத்தின் ஜெயந்தன் படையணி தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களிடையே புலிகள் இயக்கம் பற்றிப் பிரசாரம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மேற்படி பொட்டு அம்மானின் இணையத் தளத்தில் அவருடைய அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அந் நாடுகளில் வாழும் தமிழர் தரப்பில் கூறப்பட்டு வரும் கருத்துகளுக்கேற்ப இவ்வாறு கிழக்கு மாகாணத்தை மீட்கத் தயாராகியிருக்கும் ஜெயந்தன் படையணி கிழக்குப் பிரதேசம் அரச படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையிலும் அதற்குப் பின்னரும் இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி கிளம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட விசேட படையணிகள் அரச படையினரின் தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வன்னிக்குத் தப்பியோடியதுடன், விசேட படையணிகளுக்குத் தலைமை தாங்கிய கீர்த்தி எனப்படும் தலைவரும் வன்னிக்கு தப்பியோடினார். தற்போது இந்த கீர்த்தியின் தலைமையில் ஒரு குழுவினரை கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பவும் அங்கு முக்கிய பகுதிகளில் மர்மத் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் குழப்பநிலையை உருவாக்கவும் புலிகள் இயக்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான திட்டத்தின் அடிப்படையிலேயே புலிகள் இயக்கத்தின் மேற்படி பொட்டு அம்மானின் ஐரோப்பிய இணையத்தளத்தில் கடந்த 30 ஆம் திகதி அவர் கிழக்குமாகாண நடவடிக்கை பற்றித் தெரிவித்துள்ளார். இதில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் வன்னியிலுள்ள புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் கிழக்கு பிரதேசத்தில் மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படியும் இழந்த கிழக்குப் பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றும்படியும் இதுவரையில் கட்டளையிடவில்லை என குறித்த விசேட ஜெயந்தன் படையணித் தலைவர்கள் தெரிவித்திருப்பதாகவும், தலைவர் பிரபாகரனின் கட்டளை கிடைத்தவுடன் ஜெயந்தன் படையணியினர் கிழக்குப் பிரதேசத்தில் பிரவேசித்து அரச படையினருக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் எதிரான தீவிர தாக்குதல்களை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் புதிய முறையிலான தாக்குதல் திட்டங்களை இட்டிருப்பதாகவும் இவைபற்றி பிள்ளையான் குழுவினருக்குத் தெரியாதெனவும், பிள்ளையானுக்கும் அவருடைய குழுவினருக்கும் விரைவில் புலிகள் இயக்கம் கடும் தண்டனைகளை வழங்கும் விதத்தில் புலிகளின் விசேட ஜெயந்தன் படையணி தீவிரமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயற்படும் எனவும் மேலும் புலிகள் இயக்கத்தின் தண்டனைகளுக்கு அவரும் குழுவினரும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் மேற்படி கீர்த்தி எனப்படும் படையணித் தலைவர் எச்சரித்துள்ளார்.

பொட்டு அம்மானின் இணையத் தளம் மூலம் அவரும் மற்றும் தலைவர்களும் மேற்படி தகவல்களை வெளியிட்டிருப்பதிலிருந்து தெரியவரும் விடயம் என்னவெனில், இவ்வாறு கிழக்கு பிரதேசத்தை மீண்டும் பிடிக்கப்போவதாக அறிவிப்புகள் மூலம் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் ஐரோப்பாவிலும் கனடா மற்றும் நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஏமாற்ற முயலுகிறது என்பதே. இது போலவே கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிய காலகட்டத்திலும் பிரபாகரன் கருணாவைப் பிடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். கருணாவைப் பிடிப்பதற்காக சிரேஷ்ட தலைவர்களான பால்ராஜ், பானு, சொர்ணம் போன்றவர்களின் தலைமையில் படையணிகளை அனுப்பி கருணா மறைந்திருப்பதாகக் கூறப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் தீவிர தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை பிரபாகரன் நடத்துவித்த போதிலும் அவர்களால் கருணாவைப் பிடிக்க முடியவில்லை. தற்போது கிழக்குமாகாணத்தை மீண்டும் பிடிப்பதற்காக அனுப்பப் போவதாகக் கூறப்படும் விசேட ஜெயந்தன் படையணியும் மேற்படி காலகட்டத்தில் கருணாவைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த வேளையில் ஜெயந்தன் படையணியில் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களால் கருணா இருக்கும் இடத்தை நெருங்கக்கூட முடியவில்லை.

தற்போது இப்படிப்பட்ட ஜெயந்தன் படையணியைத் தான் கிழக்கு மாகாணத்தை அரச படையினரிடமிருந்தும் மீட்க பிள்ளையான் குழுவினரிடமிருந்தும் கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பப் போவதாகக் கூறி ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது புலிகள் இயக்கத் தலைமைத்துவம்.

திவயின விமர்சனம் : 01.06.2008.

Saturday, May 31, 2008

மல்லாவி நோக்கி 45 கிலோமீற்றர் தூரத்திற்கு பின்வாங்கியுள்ள புலிகள்

கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வன்னிமீட்புப்போர் நடவடிக்கைகளில் அரச படையினரின் 57 ஆவது படையணி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்துக்குள் மொத்தம் 42 கிலோமீற்றர் தூரம்வரை முன்னேறிவிட்டதாகவும் இதன் மூலம் புலிகளிடமிருந்து அரசபடையினர் 600 சதுரகிலோமீற்றர் பரப்புடைய பெரும் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பெரும் பிரதேசப் பரப்பிலும் இராணுவத்தின் 57 ஆவது படையணி நிலைகொண்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கடந்த 28 ஆம் திகதி தேசிய பாதுகாப்புத் தகவல் நடுவகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வவுனியா பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தீவிர இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள மேற்படி 57 ஆவது படையணியினர் இதுவரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மொத்தம் 600 சதுரகிலோமீற்றர் பெரும்பரப்பைக் கைப்பற்றிவிட்டதைத் தொடர்ந்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மொத்தம் 45 கிலோமீற்றர் தூரத்துக்குப் பின்வாங்கிவிட்டனர் எனவும் இதற்கேற்ப புலிகளின் பதுங்குகுழிகள், அவர்களின் இறுதிக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உட்பட முன்னணித் தலைவர்கள் பதுங்கியிருக்கும் பிரதான நிலக்கீழ் பதுங்குகுழி நிலையங்கள் அமைந்திருக்கும் பிரதேசமாகவும் கருதப்படும் மல்லாவிப் பிரதேசத்தை நோக்கி பின்தள்ளப்பட்டுவிட்டனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு இதுவரை அரச படையினரால் புலிகளின் பலக்கோட்டை எனக்கருதப்பட்ட முக்கிய முகாம் அமைந்திருந்த பாலம்பிட்டி, மடு, பெரியமடு, விளாத்திக்குளம், கள்ளிக்குளம், பாலமோட்டை போன்ற பிரதேசங்கள் 57 ஆவது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

திவயின : 29.05.2008