Showing posts with label உலக நடப்புகள். Show all posts
Showing posts with label உலக நடப்புகள். Show all posts

Tuesday, June 10, 2008

மகன் மது அருந்தினால் தந்தைக்கு தண்டனை

இளம் வயதினரிடையே குடிப்பழக்கம் அதிகரித்துள்ளமையை அடுத்து பிரிட்டன்
அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 18 வயதிற்குட்பட்ட
இளைஞர்கள் பொது இடங்களில் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் அவர்களின்
பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படுவர் என்று பிரிட்டன் அரசு
எச்சரித்துள்ளது.

பிரிட்டன் இளைய தலைமுறையினரிடையே குடிப்பழக்கங்கள்
அதிகரித்துள்ளதால் 18 வயதிற்கு உட்பட்டவர்களில் ஐந்து பேரில் ஒருவர்
தினமும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே உள்ளனர.; இதனால் கடந்த சில
ஆண்டுகளாக பிரிட்டனின் மது விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது
மற்றும் குடித்து விட்டு வீதியில் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து
பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜாக்வி ஸ்மித் தெரிவித்தது வருமாறு 18
வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருவது
கவலை அளிக்கிறது இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து விழிப்புணர்வு
பிரசாரம் செய்யப்பட்டது. தகுந்த பலன் கிடைக்கவில்லை இதனையடுத்தே
இத்தகையதோர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தங்கள் குழந்தைகளைச் சிறந்தவர்களாக உருவாக்குவதில் பெற்றோருக்கு
முக்கிய பொறுப்பு உள்ளது. பொது இடங்களில் குடித்து விட்டு ரகளையில்
ஈடுபடும் இளைஞர்களை முதல் முறையாக எச்சரிப்போம் மீண்டும் அந்த
செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவர் அபராதமும்
விதிக்கப்படும் அத்துடன் பெற்றோரும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்படுவர் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுவிற்பனை செய்யும்
கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஸ்மித் மேலும்
தெரிவித்தார்.

Thursday, May 29, 2008

பாகிஸ்தான்- சீன எல்லையில் மலையில் மறைந்திருக்கிறார் ஒசாமா பின்லேடன்

பாகிஸ்தான், சீன எல்லையை ஒட்டியுள்ள காரகோரம் மலைப்பகுதியில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருப்பதாக அரபு தொலைக்காட்சி நிறுவனமான அல்- அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. இமயமலைத் தொடரின் ஒரு பகுதி காரகோரம் மலைப்பகுதி ஆகும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சேரும் இடத்தில் இந்த மலைப் பகுதி உள்ளது. இந்த மலையின் பாகிஸ்தான் பகுதியில் அல்காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருக்கிறார் என்று அல்- அரேபியா கூறியுள்ளது. அவர் அங்கு பதுங்கியிருப்பதை, அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கண்டுபிடித்துவிட்டதாம். கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் அமெரிக்க ராணுவ அதிகார்கள் சில நாட்களுக்கு முன்பு கூடி பேசினர்.

பின்லேடன் ஒளிந்திருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்த அவர்கள் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் ஆன் பேட்டர்சன், இராக்கில் செயல்படும் அமெரிக்கப்படைகளின் தளபதி டேவிட் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர் என்றும் அல்- அரேபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியில் இருக்கும் அல்காய்தா பயங்கரவாதிகள், அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று டேவிட் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களும், பாகிஸ்தான் பழங்குடியினரும் பின்லேடனை ஆதரிக்கின்றனர். வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருப்பதை எதிர்த்து பின்லேடன் போராடுவதாக அவர்கள் கூறுகின்றனர் என்றும் அல்- அரேபியா செய்தி வெளியிட்டது.

Wednesday, May 28, 2008

எத்தியோப்பியாவின் முன்னாள் சர்வாதிகாரிக்கு மரண தண்டனை

எத்தியோப்பியாவின் முன்னாள் சர்வாதிகாரி மெங்கிஸ்து ஹெய்ல் மரியமுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மரண தண்டனை விதித்தது. 1977 முதல் எத்தியோப்பியாவை ஆட்சி செய்து வந்த மரியம், தன்னை எதிர்த்தவர்களை கொன்று குவித்தார். சிவப்புப் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலை தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. 1991-ம் ஆண்டில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதும், ஜிம்பாப்வேக்கு தப்பியோடினார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அவருக்கும் அவருக்கு உதவியாக இருந்த 11 உயர் அதிகாரிகளுக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

ஒபாமாவுக்கு முஷரப் குடும்பத்தினர் தாராள நிதி உதவி

பாகிஸ்தான் அதிபர் முஷரப்பின் மகன் மற்றும் தம்பி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமாவுக்கு தாராளமாக நிதி உதவி அளித்து உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ஜார்ஜ் புஷ்சும் குடியரசுக்கட்சியை சேர்ந்தவர் ஆவார். அவர்தான் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு நெருக்கமானவர். முஷரப் அதிபராக இருந்த காலத்தில் பாகிஸ்தானுக்கு அதிக அளவு நிதிஉதவி செய்தவர். முஷரப்புக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போது அவற்றை சமாளிக்கவும் புஷ் உதவி செய்தார். அவரது கட்சியை சேர்ந்த ஜான் மெக்கைன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு உதவி செய்யவில்லை. அவரை ஆதரிக்கவும் இல்லை. முஷரப்பின் தம்பி நவீத் முஷரப், மகன் பிலால் முஷரப், மருமகள் ஆகியோர் ஜான் மெக்கைனுக்கு நன்கொடை வழங்கவில்லை. அவர்கள் புஷ்சின் கொள்கைகளை எதிர்த்து பிரசாரம் செய்து வரும் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள ஒபாமாவுக்கு தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்கி இருக்கிறார்கள். 2004-ம்ஆண்டு தேர்தலில் ஜார்ஜ் புஷ் போட்டியிட்டபோது கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை.அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜான்கெரியை தான் ஆதரித்தார்கள். முஷரப் குடும்பத்தினர் ஒருகாலத்திலும் குடியரசு கட்சிக்கு நன்கொடை வழங்கியது கிடையாது என்று அந்த நாட்டு தேர்தல் கமிஷன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட பெண் உடைக்குள் பிஞ்சுக்குழந்தை

ஈராக்கில், சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் மேல் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பிஞ்சுக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஈராக் கிர்குக் மாகாணத்தில் அல்டோன் கோப்ரி என்ற கிராமத்தில், இரு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நிலத்தகராறு காரணமாக, இரு பெண்களும் கடத்தி வரப்பட்டு, இந்த இடத்தில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த பெண்களின் உடல் களை மீட்டபோது, ஒரு பெண்ணின் மேல் உடைக்குள் குழந்தையின் முனகல் சத்தம் கேட்டது. அவர் உடலை போலீசார் பரிசோதித்த போது, உடைக்குள் பிஞ்சுக்குழந்தை உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் என்று தெரிந்தது, மற்ற எந்த விவரமும் தெரியவில்லை. வெளியூரில் இருந்து கடத்தி வரப்பட்டுள் ளனர் என்பது உறுதியானது. உயிருடன் மீட்கப்பட்ட பிஞ்சுக்குழந்தையை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அலி முகமது கூறுகையில்,"வழக்கமான ரோந்து போன போது, சாலையோரம் இரு பெண்களும் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். நள்ளிரவில் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அப்போது தான் ஒரு பெண்ணின் மேல் உடையில் பிஞ்சுக்குழந்தை கண்டெடுக்கப்பட்டது' என்றார்.

Thursday, May 15, 2008

சீனாவை இன்று மீண்டும் பயங்கர பூகம்பம் தாக்கியுள்ளது!

சீனாவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 12ம் திகதி அன்று இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 15000 பேருக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது.

கடந்த முறையைவிட இந்த பூகம்பம் கடுமையாக இருந்ததாகவும்,12ம் திகதி ஏற்பட்ட பூகம்பம் ரிச்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியதாகவும் தெரிவிக்கபடுகிறது.பயங்கர பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது வழக்கம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது முந்தைய பூகம்பத்தை விட கடுமையாக ஏற்பட்டுள்ளதால் சேதம் இன்னும் அதிகமாகும் என்று அஞ்சபடுகிறது.

Friday, May 9, 2008

இங்கிலாந்தில் ஆந்திர மாணவி படுகொலை

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஆந்திர மாணவி, படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் இந்திய மாணவ, மாணவிகள் ஏராளமானபேர் படித்து வருகிறார்கள். ஆந்திராவை சேர்ந்த நகசைபாபு என்பவரின் மகள் ஜோதிர்மயி (வயது 23) உல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்து வந்தார். பர்மிங்ஹாம் நகரத்தின் புறநகர் பகுதியான ஹாண்ட்ஸ் ஒர்த் என்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஜோதிர்மயி வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதிர்மயி, அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அருகில் ஒரு வாலிபர் படுகாயத்துடன் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, வாலிபரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை சோதனை செய்து கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலையை செய்தது யார்? காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகள் அந்த பகுதியில் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க வீடு, வீடாக சோதனை நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, `காயத்துடன் மீட்கப்பட்ட வாலிபர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். கொலை நடப்பதற்கு முன்பு ஜோதிர்மயியின் வீட்டில் தெலுங்கு பேசும் மாணவ, மாணவிகள் 4 பேர் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

ஹிலரியின் இந்தியப் பாசம்

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலரி கிளிண்டன், இந்தியா மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைவாய்ப்புகளை (அவுட்சோர்சிங்) வெளிநாடுகளுக்கு அளிப்பதை தடை செய்வேன்' என்று ஹிலரி அறிவித்துள்ளார்.

இதனால், சாப்ட்வேர் துறையில் கோடிகளை அள்ளும் இந்திய நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று கூறப்பட்டது.ஆனால், இந்தியாவுக்கு எதி ராக இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. சீனாவை மனதில் வைத்துதான் ஹிலரி இவ்வாறு பேசினார் என்று அவரது பிரசார குழுத் தலைவர் டெரி மெக்லிஃப் தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்றும் ஹிலரி விரும்புகிறார்.இரு நாட்டுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என்று டெரி மெக்லிஃப் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷுக்கு நேர் மாறாக இந்தியா மீது ஹிலாரி பாசம் வைத்திருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது நாய்க்கு இந்தியா என பெயர் வைத்தது, உலகில் உணவுப் பற்றாக்குறை, கச்சா எண்ணெய் விலைஉயர்வுக்கு இந்தியர் கள்தான் காரணம் என அதிபர் புஷ், விதண்டாவாதங்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 1, 2008

பிரிட்டனுக்குள் நுழைய பின்லாடன் மகனுக்குத் தடை

ஒசாமா பின் லாடன் மகன் உமர் ஒசாமாவுக்கு, பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.தனது தந்தை பின்லேடனுடன் உமர் ஒசாமாவுக்கு, இன் னும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே, அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

27 வயதாகும் உமர், பிரிட்டனில் வசிக்கும் 52 வயதான ஜென் பிளிக்ஸ்
பிரவுனே என்ப வரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர், தற்போது எகிப்து நாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டனின் ஷேஸ்ஷையர் நகரில் குடியேற விரும்பிய இவர்கள், எகிப்து நாட்டில் உள்ள பிரிட்டன் தூத ரகத்தில் விசா கோரி விண்ணப் பித்திருந்தனர்.
இவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தூதரக அதி காரிகள், உமருக்கு தனது தந்தை பின்லேடனுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த ஆண்டு நடைபெற்ற லண்டன் குண்டு வெடிப்பில் இவருக்கும் பங்கு இருப்பதாகக் கூறி, அவர் பிரிட் டனில் குடியேறுவதற்கு அனு மதி மறுத்துள்ளனர்.

இதனிடையே, தனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப் புத் தெரிவித்து தூதரகத்தில் உமர் முறையீடு செய்துள்ளார்.தனது தந்தையைக் காரணம் காட்டி, தனக்கு அனுமதி மறுக் கப்படுவது தவறு என அதில் கூறியுள்ளதாக, அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்
செய்தி வெளியாகியுள்ளது.

Sunday, April 27, 2008

எவராவது பாராளுமன்றத்தை கலைக்க முயற்சிப்பின் அவரது கைகள் முறிக்கப்படும்

"பாகிஸ்தானின் புதிய பாராளுமன்றத்தைக் கலைக்க எவராவது முயற்சிப்பின், அவரது கைகள் முறிக்கப்படும்" என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இதன்போது எவரையும் பெயர் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுக்கவில்லை என்றபோதும், அவர் மறைமுகமாக ஜனாதிபதி முஷாரப்பை குறி வைத்தே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஏற்கனவே கூட்டமைப்பு அரசாங்கத்தால் இணக்கம் காணப்பட்ட காலக்கெடுவுக்கு அமைய, ஜனாதிபதி முஷாரப்பால் பணி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் மீள அவரவர் பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் நவாஸ் ஷெரீப் இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் நீதிபதிகளை மீள அவரவர் பதவிகளுக்கு நியமனம் செய்யத் தவறுமாயின், தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக நேரிடும் என நவாஸ் ஷெரீ ப்பின் கட்சியைச் சேர்ந்த தலைவர்களிலொருவரான ஜாவீத் ஹஷ்மி அச்சுறுத்தல் விடுத்து ஒரு நாள் கழித்து, நவாஸ் ஷெரீப்பின் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஷாரப் தொடர்பில் ஷெரீப் குறிப்பிட்டுக் கூறுகையில்,

"கண்டனத் தீர்மானத்தை தவிர்ப்பதற்கு அவர் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்தார்.

சதாம் செய்த இரு பெரிய தவறுகள்!

கடைசிவரை அமெரிக்காவின் அடாவடித்த னத்துக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாத இரும்பு மனிதரா கத் திகழ்ந்த இராக் அதிபர் சதாம் ஹுசைன் மீது அமெரிக் காவுக்கு கோபம்வர அவர் செய்த இரு பெரும் தவறுகளே காரணம் என இராக்கிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ரஞ்சித்சிங் கல்ஹா தெரிவித்துள்ளார்.

அவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள, "தி அல்டிமேட் பிரைஸ்' என்ற புத்தகத்தில் இந் தத் தகவலை அவர் பகிரங்கப்ப டுத்தியுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்க டாலரின் புழக்கத்தைக் கடுமையாக எதிர்த் துவந்த சதாம் ஹுசேன், 2000-ம் ஆண்டு தங்களது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியத்துக்கு அமெரிக்க டாலரை வாங்க மறுத்தார்.

அத்துடன் உடனடியாக 10 பில்லியன் வைப்பு நிதியாக இருந்த அமெரிக்க டாலரை அப் படியே யூரோவுக்கு மாற்றி மேலும் தனது எதிர்ப்பை கடு மையாகத் தெரிவித்தார். இத னால் சதாம் ஹுசேன் மீது அமெரிக்காவின் ஆத்திரப் பார்வை திரும்பியது.

இராக் இதுபோன்ற நடவடிக் கையில் இறங்கியதும் அவ்வ ழியை ஈரானும் பின்பற்றியது.
இதைத் தொடர்ந்து பெரும்பா லான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளும் இராக்கின் அமெ ரிக்க டாலர் புறக்கணிப்பு வழியை பின்பற்றத் தொடங் கின. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துடன் சதாமின் மீதான கோபத்தையும் அதிகரித்தது.

சதாமின் இதுபோன்ற நடவ டிக்கையை தங்களுக்கு அவர் விடுக்கும் நேரடி சவாலாவும் அமெரிக்கா ஒருகட்டத்தில் எண்ணத் தொடங்கியது. இதன் பின்னரும் சதாமை வாலாட்ட விட்டால் அது தனக்கு பெரும் துன்பமாகவே முடியும் என்றும் அமெரிக்கா கருதியது.
அன்று முதல் சதாமுக்கு எதி ராக அமெரிக்கா தருணம் பார்த்து காய் நகர்த்த ஆரம்பித் தது. இருப்பினும் இதற்கெல் லாம் சதாம் ஹுசேன் அஞ்ச வில்லை. தனது அமெரிக்க டாலர் நிராகரிப்பை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

இரண்டாவது தவறு:இது போன்ற நிலையில் அமெரிக் காவை மேலும் கோபப்படுத்தும் விதமாக சதாம் ஹுசேன் மற் றொரு செயலில் ஈடுபட்டார்.தங்களது நாட்டில் அமெரிக்காவை சாராத எண்ணெய் கம் பெனிகளுக்குதான் ஒப்பந்தத் துக்கு அனுமதி என்பதுதான் அது. சதாமின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஒருகணம் தூக்கிவாறிப்போட்டதுடன் அவர் மீதான கோபத்தை கடுமையாக்கியது.

எனினும் இதனால் சதாமுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவால் முடிய வில்லை. அவரை அனுசரித்து போகவேண்டிய கட்டாய நிலைக்கே அமெரிக்கா ஆளாகி யிருந்தது. காரணம், தங்களது பெரும்பகுதி எரிபொருள் தேவைக்கு அமெரிக்கா இராக்கை சார்ந்திருந்ததே ஆகும்.

இருப்பினும் சதாம் ஹு சேனை பழி தீர்க்கவேண்டும் என்பதில் மட்டும் அமெரிக்கா குறியாக இருந்தது. அதை வெற் றிகரமாக நிறைவேற்றியும் விட் டது என ரஞ்சித்சிங் கல்ஹா, தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள் ளார்.

உலகிலேயே மிகவும் செக்சியான பெண்


உலகிலேயே மிகவும் செக்சியான பெண் மேகான் பாக்ஸ் (Megan Fox) என எப்எச்எம் இதழ் அறிவித்துள்ளது. இந்த இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்எச்எம் இதழ் ஆண்டுதோறும் செக்சியான பெண் யார் என்பது குறித்து தனது வாசகர்களிடையே கருத்துக் கணிப்பை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் உலகிலேயே செக்ஸியான பெண் டிரான்பார்மர்ஸ் படத்தில் 2வது நாயகியாக நடித்துள்ள மேகான் பாக்ஸ் என வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனராம். மொத்தம் 100 செக்ஸி அழகிகளை இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் இருக்கிறார் பாக்ஸ். 21 வயதாகும் பாக்ஸ், நடிகை, மாடல் என பல அவதாரத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர். கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்த ஜெஸ்ஸிகா அல்பா, இம்முறை 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலிக்கு இந்தப் பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. கருப்பழகி ரிஹானாவுக்கு 14வது இடமும், கிம் கர்டஷியானுக்கு 17வது இடமும் கிடைத்துள்ளது. பாரிஸ் ஹில்டன் 77வது இடத்திதல் இருக்கிறார். மேகான் பாக்ஸ், கடந்த 2006ம் ஆண்டு இந்த அழகிகள் வரிசையில் முதன் முதலில் இடம் பிடித்தார். அந்த ஆண்டு 68வது இடம் இவருக்குக் கிடைத்தது. கடந்த ஆண்டு 65வது இடத்திற்கு முன்னேறினார். இந்த ஆண்டு ஒரே பாய்ச்சலாக முதலிடத்திற்கு ஓடி வந்துள்ளார். முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் விவரம்: மேகான் பாக்ஸ், ஜெஸ்ஸிகா பியல், ஜெஸ்ஸிகா அல்பா, எலிசா குத்பர்ட், ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மானுவேல் சிர்கி, ஹிலாரி டப், டிரிசியா ஹெல்பர், பிளேக் லைவ்லி, கேட் பெக்கின்சேல். பாப் இளவரசி, பிரிட்னி ஸ்பியர்ஸ் கட்டக் கடைசி இடத்தில் அதாவது 100வது இடத்தில் இருக்கிறாராம். என்ன கொடுமை இது!

பின்லேடன் பயங்கரவாதியாக மாறியது எப்படி?

விருது பெற்ற எழுத்தாளரின் புத்தகத்தில் புதிய தகவல்

அமெரிக்க அரசாங்கத்தால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வரும் அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. `தி பின்லேடன்ஸ்' என்ற அந்த புத்தகத்தை புலிட்சர் விருது பெற்ற ஸ்டீவ் கோல் என்பவர் எழுதி உள்ளார். இதில் பின்லேடன் தீவிரவாத பாதைக்கு திரும்பியது எப்படி? என்பது பற்றி புதிய தகவலை அவர் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சவூதி அரேபியாவில் மிகப்பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பின்லேடன், தனது சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோருடன் வசித்தார். சிறு வயதில் அவர் மத படிப்புகளில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தில், அதாவது 1967-ல் அவரது 9 வயது இருக்கும்போது, அவரது தந்தை ஒரு விமான விபத்தில் பலியானார். அப்போதுதான் பல பெரியவர்கள் அவருக்கு தீவிரவாத கோட்பாடுகளை போதனை செய்தனர்.

பின்லேடனின் மூத்த சகோதரர் சலீம். இவர் பின்லேடனைப் போல இல்லாமல், தன்னை முழுமையாக வர்த்தகத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது பேச்சுத் திறமை, சவூதி அரேபிய அரச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பை பெற்றுக் கொடுத்தது. அதன்மூலம் நிறைய காண்டிராக்டுகள் வந்தன. இந்த நேரத்தில் குவைத் மீது சதாம் உசேன் படை எடுத்ததால், அதை முறியடிக்க சவூதி மண்ணில் அமெரிக்க படைகள் அனுமதிக்கப்பட்டன. இதனாலும், ஓமனில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பின்லேடன் ஆதரவு தெரிவித்ததாலும், அவருக்கும், சவூதி அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவானது. இதனால் அவர் சூடானில் குடிபுகுந்தார். இந்த நேரத்தில் அவரது மூத்த மகன், அவரை விட்டு பிரிந்தார். இதனால் ஏற்பட்ட தனிமை, பின்லேடனின் தீவிரவாத கொள்கைகளுக்கு மேலும் உரமேற்றி விட்டது. எனினும் மூத்த சகோதரரான சலீம், குடும்பம் சிதறி விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவரை மீறி பின்லேடனால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் 1988-ல் எதிர்பாராத விதமாக சலீம் விமான விபத்தில் பலியானார். அவரது மரணம்தான், பின்லேடனை தீவிரவாத பாதையில் முழு தீவிரத்துடன் இறங்க வழி வகுத்துள்ளது. சலீம் மட்டும் உயிருடன் இருந்து இருந்தால், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவமே நடைபெற்று இருக்காது என்று சலீமின் பல நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர்.இவ்வாறு எழுத்தாளர் ஸ்டீவ் கோல் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.

ஸ்பெயின் இராணுவ அமைச்சராக கர்ப்பிணிப் பெண் நியமனம்


ஸ்பெயினில் நாட்டின் இராணுவ அமைச்சராக ஒரு கர்ப்பிணிப்பெண் நியமிக்கப் பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் சமீபத்தில் நடந்த தேர்தலையடுத்து சோசலிஷ அரசு பதவியேற்றுள்ளது. பிரதமராக ஜோஸ் லூவிஸ் ரோட்ரிக்ஸ் சபாடெரோ பதவியேற்றுள்ளார். அவர்களுடன் எட்டு அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

இராணுவஅமைச்சராக முதன்முறையாக ஒருபெண் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பெயர் சார்ம்சாகோன்(Carme Chacon) வயது 37 தற்பொழுது அவர் கர்ப்பிணிப் பெண்னாக உள்ளார். இராணுவம் சம்பந்தப்பட்ட எந்த படிப்பு திறமையும் இவரிடம் இல்லை அவர் பதவியேற்ற பின் இராணுவ மரியாதை ஏற்றார். ஏழமாத கர்ப்பிணியான இவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற படத்தை முதல்பக்கத்தில் பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன சர்வதேச அளவில் பிரபலமான ஹெரால் டிரிபியோனிலும் இவரின் போட்டோ முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

கர்ப்பிணி பெண்ணான சார்ம் நியமிக்கப்பட்டதை பெண்கள் அமைப்பினர் வரவேற்றாலும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் இராணுவத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருபெண்ணை அமைச்சராக இதற்கு முன்னர் நியமித்ததே இல்லை முதன்முறையாக இப்போதுதான் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஓரினச்சேர்க்கை பிரியர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் அரசியல் கட்சிகள் நியமிக்கலாம் பொறுப்புதரலாம் என்று பல சீர்திருத்த திட்டங்களை புதிய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. சமத்துவ அமைச்சகம் என்ற ஒரு தனி அமைச்சகத்தையும் அமைக்க அது முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Saturday, April 26, 2008

மலேசிய மன்னர் மறுப்பு

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இந்து உரிமைகள் இயக்கத் தலைவர்கள் 5 பேரை விடுதலை செய்வதற்கு மன்னர் மறுத்துள்ளார்.
இதனால், அவர்கள் அனைவரும் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பரில் இந்திய வம்சாவளியினர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை இந்து உரிமைகள் இயக்கம் (இந்த்ராவ்) முன்னின்று நடத்தியது. இப் போராட்டம் தொடர்பாக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த அமைப்பைச் சேர்ந்த 5 தலைவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் 5 பேரும் மன்னரிடம் மேன்முறையீடு செய்தனர்.

ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய் லாமாவை தூற்றுவதை நிறுத்திவிட்டு சீனா அவருடன் பேச்சுகளை நடத்த வேண்டும்

திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை தூற்றுவதை நிறுத்திவிட்டு சீனா அவருடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தலாய் லாமாவுடன் பேச்சுகளை நடத்துவதற்கான வாய்ப்பை சீன அரசாங்கம் கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் கோன் நிக்ரோபெண்டே, தலாய்லாமாவை பகிரங்கமாகத் தூற்றுவது நிலைமையை சீராக்க உதவப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

செனட்டின் வெளியுறவுக்கான சபையில் விளக்கமளித்த நிக்ரோபெண்டே மேலும் தெரிவிக்கையில்;

"தலாய்லாமாவுடன் சீனா பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்கா செய்யும் முயற்சிகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டும். அத்துடன், இராஜதந்திரிகளையும் கண்காணிப்பாளர்களையும் திபெத்திற்குள் அனுமதிக்க வேண்டும். சீனா சுமார் 4000 திபெத்திய கைதிகளை தடுத்து வைத்திருப்பதுடன், அவர்களை உரிய முறையில் நடத்துவதில்லையென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே திபெத்திற்குள் செல்வதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது.

தலாய்லாமாவுடன் பேச்சுகளை நடத்தாமல் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த சீனாவால் முடியாது. இதனால் சீனாவுக்கும் தலாய்லாமாவுக்குமிடையில் உண்மையான பேச்சுகள் நடைபெற வேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கான பாலங்களை உருவாக்கி நீண்டகால துயரங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உண்மையான சுயாட்சி அடையப்பட வேண்டு"மெனத் தெரிவித்துள்ளார்.

திபெத்திய கலவரங்களின் பின்னணியில் தலாய் லாமாவே இருப்பதாக சீனா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ள தலாய் லாமா, தாம் தனிநாட்டைக் கோரவில்லை திபெத்தின் சுயாட்சியையே கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Friday, April 25, 2008

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

பாகிஸ்தானிலுள்ள தலிபான்களின் உயர்மட்டத் தளபதி தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

பாகிஸ்தானிலுள்ள தலிபான்களின் உயர்மட்டத் தளபதி நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொலை செய்வதற்கு உத்தரவிட்டவரென பாகிஸ்தான் அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்ட பைதுல்லா மெசூட் என்பவரே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கான் எல்லையிலுள்ள பழங்குடியினப் பகுதிகள் முழுவதிலும் இவ் உத்தரவு அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இவ் உத்தரவை எவர் மீறினாலும் கடும் தண்டனை வழங்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேச்சுக்கள் மூலமாக இஸ்லாமிய போராளிகளுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தவுள்ளதாக பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியக் குழுவொன்றின் சிரேஷ்ட தலைவரொருவரை கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் அதிகாரிகள் விடுதலை செய்திருந்தனர்.

வன்முறைகளைக் கைவிட்டு அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வஜிரிஸ்தானின் தென்பகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் அமைதியைக் குழப்பும் கோபமூட்டக்கூடிய நடவடிக்கைகளுக்கு தலிபான் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பைதுல்லா மெசூத் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறுபவர்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடும். எவ்வித வாதப்பிரதிவாதங்களுமின்றி இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது உறுதியான கட்டளை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய அரசாங்கத்துடன் அமைதி உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள பைதுல்லா மெசூத்தின் பேச்சாளர்களில் ஒருவர் இவ் உடன்படிக்கையின் ஓர் அங்கமாகவே சுபி முகமட் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு வழியமைக்கும் விதத்தில் தென் வஜிரிஸ்தானின் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வாபஸ் பெறுவதற்கான உத்தரவு எதுவும் அரசிடமிருந்து தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உதவியை நாடும் தலாய் லாமா

திபெத் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அமெரிக்கா உதவ வேண்டு ம் என்று தலாய் லாமா கேட்டுக் கொண்டுள்ளார்.அண்மையில் தன்னை சந்தித்த திபெத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பௌலாவிடம் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தலாய் லாமாவை சந்தித்துப் பேசிய விவரங்களை பௌலா, வாஷிங்டனில் வெளியிட்ட போது இதனை தெரிவித்தார்.திபெத் பிரச்னை தொடர்பாக தலாய் லாமாவுடன் சீனத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இருதரப்பு பேச்சுவார்த் தையை விரைவில் தொடங்க சீனத் தலைவர்களிடம் அமெ ரிக்கா வலியுறுத்தும்.

திபெத் மக்களுக்கு மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும்.கலவரத்தை கட்டுப்படுத்த தலாய் லாமாவால் மட்டுமே முடியும். எனவே அவரிடம் சீனத் தலைவர்கள் எவ்வித நிபந் தனையும் இன்றி பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும் என்று பௌலா தெரிவித்துள்ளார்.

திபெத் கலவரத்தில் இதுவரை 150 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித் துள்ளன. ஆனால் 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, April 22, 2008

தலாய் லாமாவுக்கு பிரான்ஸ் கௌரவ பிரஜாயுரிமை வாங்குவதை சீனா எதிர்த்துள்ளது


பாரிஸ் மாகரம், தலாய் லாமாவுக்கு, கௌரவ பிரஜை என்ற அந்தஸ்தை வழங்க எடுத்துள்ள முடிவை, ஒரு முரட்டுத்தனமான தலையீடு என்று சீனா வர்ணித்திருக்கிறது. இந்த நடவடிக்கை விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கோரியிருக்கிறது. இல்லாவிட்டால், இந்த நடவடிக்கை சீன பிரெஞ்சு உறவுகளை பாதிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

திபெத் லட்சியத்துக்காக பல பிரெஞ்சு அதிகாரிகளும், நிறுவனங்களும், தங்களது ஆதரவை வெளிப்படுத்திவரும் நிலையில், இந்த நெருக்கடி, சீனாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகச்சமீபத்திய கருத்து வேறுபாடாகும்.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் , இந்த விஷயத்தில் அமைதி காக்குமாறும், பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரியிருக்கிறது.

Monday, April 21, 2008

மெக்கா நேரத்தை உலக மைய நேரமாக்க வேண்டுமாம்

மெக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை


புனித மக்கா
புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.