Showing posts with label Nepal. Show all posts
Showing posts with label Nepal. Show all posts

Saturday, June 21, 2008

ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த மன்னர் ஞானேந்திரா குடும்பத்தினரை அரசு அங்கிருந்து வெளியேற்றியது.

அதனைத் தொடர்ந்து, அந்த அரண்மனையை அருங்காட்சியமாக மாற்ற அரசு முடிவு செய்தது.

இதற்காக, நேபாள அரச பரம்பரைக்கு கொடையாக அளிக்கப்பட்ட பரிசு பொருள்களைச் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டாம் உலக போரின் போது, பிரிட்டன், பிரான்ஸ் படைகளுக்கு ஆதரவு கரம் நீட்டாது, ஜெர்மானிய படைகளுக்கு பக்கபலமாக இருந்ததற்காக அப்போதைய நேபாள மன்னர் திருபுவனுக்கு விலை உயர்ந்த மெர்சிடஸ் காரை ஜெர்மன் ஆட்சியாளர் ஹிட்லர் பரிசாக அளித்தார்.

இந்த கார் தற்போது அரண்மனையில் இல்லை. இதனை அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ஆனால், இந்த கார் 1943-ம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பிரதமரின் மகள் ஜனக் ராஜ்ய லஷ்மி ஷா கூறியுள்ளார். தற்போது 92 வயதாகும் இவர், இந்த கார் மன்னர் திருபுவனுக்கு வழங்கப்படவில்லை என்றும், தனது தந்தையும், அப்போதைய பிரதமருமான ஜூதா சும்ஷீர் ராணாவுக்கே அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் இந்தியா வந்த ஜூதா அந்த காரை தன்னுடனே கொண்டு சென்றார். இந்தியாவில் அந்த காரை தான் 17 ஆண்டுகள் பயன்படுத்தி வந்ததாகவும், பின்னர் அதனை தனது சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் மீண்டும் நேபாளம் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹிட்லர் கொடையாக அளித்த காரால் நேபாளத்தில் புதிய சர்ச்சை தோன்றியுள்ளது.

Thursday, June 12, 2008

அரசனும் ஒருநாள் ஆண்டியாவான் என்ற அன்றையகதை இன்று நெஐயமாகி “நேபாளம்”

நேபாளத்தின் இறுதி மன்னரான கஜனேந்திரா, நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் மாளிகையை விட்டு வெளியேறி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா மாளிகையில் குடியேறியதாக தெரிவிக்கப் படுகிறது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாடு குடியரசாக பிரகடனப் படுத்தப்பட்டதையடுத்து பதவியை விட்டு வெளியேறிய மன்னர், அரண்மனையையும் விட்டு வெளியேறவேண்டு மென மாவோவாத கட்சியினர் அழுத்தங் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களால் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்பாக முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாராயண்ஹிதி அரண்மனை தேசிய சொத்தாக தற்போது மாறியுள்ளது. முன்னாள் மன்னார் தற்போது குடியேறியுள்ள நாகார்ஜுனா மாளிகையையும் ஒரு அரண்மனைக்குரிய சகல வசதி களையும் கொண்டமைந்துள்ளது. மேற்படி மாளிகையின் கட்டிடத் தொகுதியில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு உள்ளடங்கலாக 10 கட்டிடங்கள் வரை அமைந்துள்ளன. முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறு வதையொட்டி நேற்று காலை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவுக்கும் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலாவுக் குமிடையே விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது நேபாள தலைமை இராணுவ தளபதிருக்மாங்கத் கத்வால் மற்றும் நேபாள பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தி ப்பில் கஜனேந்திரா புதிதாக குடியேறும் மாளிகையின் பாதுகாப்பு நிலை, அவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர் பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.நேபாளத்தின் இறுதி மன்னரான கஜனேந் திரா, நேற்று மாலை தனது குடும்பத்தினரு டன் மாளிகையை விட்டு வெளியேறி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா மாளிகையில் குடியேறியதாக தெரிவிக்கப் படுகிறது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாடு குடியர சாக பிரகடனப் படுத்தப் பட்டதையடுத்து பதவியை விட்டு வெளியேறிய மன்னர், அரண்மனையையும் விட்டு வெளியேற வேண்டு மென மாவோவாத கட்சியினர் அழுத்தங் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களால் விதிக்கப் பட்டகாலக்கெடுவுக்கு ஒருநாள் முன்பாக முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாராயண்ஹிதி அரண் மனை தேசிய சொத்தாக தற்போது மாறி யுள்ளது. முன்னாள் மன்னார் தற்போது குடியேறியுள்ள நாகார்ஜுனா மாளிகை யையும் ஒரு அரண்மனைக்குரிய சகல வசதி களையும் கொண்டமைந்துள்ளது. மேற்படி மாளிகையின் கட்டிடத்தொகுதியில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு உள்ள டங்கலாக 10 கட்டிடங்கள் வரை அமைந் துள்ளன. முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறுவதையொட்டி நேற்று காலை பிரதமர் கி?ஜா பிரசாத் கொய்ராலா வுக்கும் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலாவுக்குமிடையே விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது நேபாள தலைமை இராணுவ தளபதி ருக்மாங்கத் கத்வால் மற்றும் நேபாள பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் கஜ னேந்திரா புதிதாக குடியேறும் மாளிகையின் பாதுகாப்பு நிலை, அவருக்கு வழங்கப் பட வேண்டிய பாதுகாப்பு போன்ற விட யங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.