Showing posts with label விவேகானந்தர் விவகாரம். Show all posts
Showing posts with label விவேகானந்தர் விவகாரம். Show all posts

Thursday, April 24, 2008

சாதுக்கள் சவால் விடக் கூடாது

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி செய்ய வில்லை என்று முதல்வர் கருணாநிதி மறுத்தார்.

தமிழ் செம்மொழி மையம் தாற்காலிகமாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய தமிழக அரசு நிர்பந்தம் செய் வதாக செய்திகள் வெளியாயின. அரசின் இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சட்டப் பேரவை வியாழக்கிழமை காலை கூடியதும் அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்து முதல்வர் கரு ணாநிதி பேசியதாவது: விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸோ கடிதமோ எழுதவில்லை. விவேகானந்தர் இல்லத்தை இடிப்பதாகவோ அல்லது புதிய இடத்துக்கு மாற்றுவதாகவோ எந்தப் பிரச்னையும் எழவில்லை.

சாமியார்களிடம் மோத விடுவதா?
அதை ஏன் அபகரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிய வில்லை. பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிறபோது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ள வேண்டும்? தமிழ் செம்மொழி மையத்துக்கு தாற்காலிகமாக இடம் தேடியபோது, ஏதேதோ கதை கட்டி, அது பலிக்காத காரணத்தால் எங்களை சாமியார்களுடன் மோதவிடுவதற்காக சில காரி யங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சாமியார்களிடம் மோதவிட்டாலும், மாமியார்களிடம் மோதவிட்டாலும் நாங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை.

மூட நம்பிக்கைகளை சாய்த்தவர்:
விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தியவர். புகை பிடித்தவர். மனம் சுத்தமாக இருந்தால் இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கத்தோடு செயல்பட்டவர்.
கட்டடத்தை எடுக்கப் போவதில்லை என்றபோதிலும் விவேகானந்தர் குறித்து எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக இடம் கொடுத்தோம்.
அப்படிப்பட்ட விவேகானந்தரின் பெயரால் இருக்கிற மண்டபத்தை இடிக்க யாரும் விரும்பவில்லை.

நினைக்கவும் இல்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.
ரூ. ஆயிரம் குத்தகை:1897-ம் ஆண்டில் 9 நாட்கள் விவேகானந்தர் தங்கி சொற்பொழிவுகள் நிகழ்த்திய இடம் என்பதால், அதன் நினைவாக அந்த இல்லத்தை சென்னை ராமகி ருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கு மாறு மடத்தின் தலைவர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்படி 27,546 சதுர அடி பரப்ப ளவு கொண்ட அந்த இடம் 1997-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, சில நிபந் தனைகளுடன் ராமகிருஷ்ண மடத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ. ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன் பிறகு, விவேகானந்தர் இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி, அந்த இல்லத்தின் முன்பு உள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை குத்த கைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் கோரியது.
அதையும் திமுக அரசு பரிசீலனை செய்து 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி மூன்று ஆண்டு குத்தகைக்கு விட் டது.

இந்த இல்லத்தை 30 ஆண்டு குத்த கைக்குத் தர வேண்டும் என்று ராமகி ருஷ்ண மடம் கோரிக்கை வைத்த போது "அமைச்சரவைக் கூட்டத்தில் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண் டும்' என்றேன். விவேகானந்தர் இல் லத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடிக் கும் மேல் என்பதால் சலுகை குத்த கையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டு களுக்கு 2000-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி குத்தகைக்கு விடப்பட்டது.

சாதுக்கள் சவால் விடக் கூடாது: "அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம்; முறைப்படிதான் நடக்கிறோம்' என்று அந்த மடத்தின் பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார்.

நான் அந்த சவால்களுக்கு எல்லாம் பயப்படவில்லை. சாதுக்கள் சவால் விடுகிற அளவுக்கு வரக் கூடாது.

அது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் கொள்கைக்கு விரோதமானது.
இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? குமரி முனையில் அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து , இங்கே விவேகானந்தர் மண்டபத்தை போஷித்து பாதுகாத்து வருகிற அரசைப் பார்த்து சவால் விடுவது நல்ல தல்ல.
சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான
பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
"பாலாறு இல்லத்தில்' செம் மொழி மையம்: தமிழ் செம்மொழி மையம், தாற்காலிகமாக அதே காம ராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.

Tuesday, April 22, 2008

உரிமத்தை ரத்து செய்ய எந்த அவசியமும் இல்லை

அரசு வழங்கிய விவேகானந்தர் இல் லத்துக்கான உரி மையை ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணே சன் கூறினார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாரத தேசத்தில் வாழ்ந்த துறவிகள் அனைவருமே தேசபக்தர்கள் என்றாலும் சுவாமி விவேகானந்தர் மட்டுமே தேச பக்த துறவி என அழைக்கப்பட்ட வர். இப்பொழுது பேசப்படுகிற பகுத்தறிவு வாதம், சமூக நீதி, மூடப்பழக்கங் களை சாடல், ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காணுதல் எல்லாவற்றையும் அவ ரைவிட ஆழமாக, ஆணித்தரமாக பரப்பி யவர் எவருமில்லை.

அவர் பாரத நாட்டில் தங்கியிருந்த இடங்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னங் களாக போற்றப்படுகின்றன. அந்த வகை யில் சுவாமி விவேகானந்தர் சென்னை யில் சில நாள்கள் தங்கியிருந்த ஐஸ்ஹ வுஸ் கட்டடம், விவேகானந்தர் இல்ல மாக செயல்பட்டு வருகிறது.
அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காரணத் துக்காக, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள நீண்டகால உரி மம் வழங்குவது உண்டு.

அப்படி வழங்கப்பட்ட இடம் எந்த நோக்கத்துக்காக தரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாது இருந்தாலோ, தவ றாகப் பயன்படுத்தப்பட்டாலோ அதை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் விவேகானந்தர் இல்லம் எந்த நோக்கத்துக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டதோ அதே நோக்கத் தில் எந்தவித பிசிறில்லாமல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு உரி மத்தை இடையில் ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை. அந்த இடத் தில் செம்மொழி மையம் அமைய உள்ள தாகத் தெரிகிறது. செம்மொழி மையம் தேவைதான். செம்மொழி மையம் எந்த இடத்திலும் அமைத்துவிடலாம்.

ஆனால் "விவேகானந்தர் தங்கியிருந்த இடம்' என்கின்ற பெருமை எல்லா இடத் துக்கும் கிடைத்து விடாது. நாடு முழுவ தும் விவேகானந்தர் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் பராமரிக் கப்பட்டு வருகின்றன. ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநில அரசு கூட விவேகானந் தரை மதிக்கிறது.

எனவே தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிட்டு விவேகா னந்தர் இல்லத்துக்கு தரப்பட்டுள்ள உரி மத்தை 2010-க்கு பின்னும் 30 ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்று இல. கணே சன் கூறியுள்ளார்.

தமிழுக்கு அவமானம்

விவேகானந்தர் நினைவு இல்லத்தை அகற்றுவது அன் னைத் தமிழை அவமதிப்பதாகும் என் றார் இலக்கியவாதி நெல்லை கண்ணன்.

இதுகுறித்து நெல்லை கண்ணன் மேலும் கூறியதாவது: "சிகாகோ மாநாட்டில் இந்து மதத் தின் சார்பில் விவேகானந்தர் உரை யாற்றச் சென்றபோது, அவருக்குச் செலவு செய்து அவரை சிகாகோ வுக்கு அனுப்பிவைத்தது ராமநாதபுரம் மன்னர் தமிழ் வளர்த்த பாஸ்கர சேதுபதி.

அவரை அனுப்பிவைத்தது மட்டுமல்ல, அத்தனை பெரிய வெற்றியை அமெரிக்க மண்ணில் அடைந்து வருகிற விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் கப்ப லில் வந்து இறங்க வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற் பாடு செய்தார்.

பாம்பன் துறைமுகத்தில் விவேகா னந்தர் இறங்கும் நேரத்தில் உணர்ச்சி வயப்பட்ட மன்னர் கீழே அமர்ந்து, "என் தலையில் தங்களின் திருப்பாதங் களை வைத்து இறங்க வேண்டும்' என் றார் விவேகானந்தரிடம். ஆனால், விவேகானந்தரோ மன்னரின் தலை யில் கைவைத்து தாண்டி வந்தார். பின் னர், விவேகானந்தர் ஏறிய குதிரை வண்டியை குதிரைக்குப் பதில் தானே இழுத்தார் மன்னர்.

அப்படி தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மன்னர் சேதுபதியால் வணங்கப்பட்ட விவேகானந்தரின் மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை அமைப்பது என்பது மன்னர் பாஸ்கர் சேதுபதி யையும் அவமதிப்பதாகும்.
அதுவரை உலகத்தில், ""சீமான்களே, சீமாட்டிகளே'' என அழைத்து வந் ததை மாற்றி ""சகோதர, சகோதரிகளே'' என்று பேசியவர் வீரத்துறவி விவேகா னந்தர். விவேகானந்தரை உலகம் அறி யச் செய்தது சேதுபதி மன்னர்தான்.

அப்படிப்பட்ட விவேகானந் தரின் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம் மொழி மையத்தை ஏற்படுத் தினால், தமிழ் மன்னரால் உலகிற்கு அனுப்பிவைக்கப் பட்ட ஒரு மாபெரும் வீர னின், அறிஞனின், ஒரு சமூக விஞ்ஞானியின் பெருமையை தமிழர்கள் இழிவுபடுத்தி னார்கள் என்ற களங்கம் நமக்கு வந்து சேரும். அந்த அவமானம் தமிழர்க ளுக்குச் சேருவதை தமிழக அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும். ""ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தை யும் நான் மதம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன்'' என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகா னந்தர். அப்படிப்பட்டவரது நினைவு இல்லத்தை அப்புறப்படுத்துவது அன் னைத் தமிழை அவமதிப்பதாகும் என் றார் நெல்லை கண்ணன்.

"தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர்"

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்: விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் முயற்சி தமிழர்க ளின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது.

ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. விவேகானந்தர் தமி ழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இடிக்கக் கூடாது: எஸ்.வி. சேகர்

விவேகானந்தர் இல்லத்தை இடித்துவிட்டு தமிழ் செம்மொழி மையம் அமைக்க உள்ள அரசின் முடிவுக்கு பல் வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எஸ்.வி. சேகர் (மயிலாப் பூர் எம்.எல்.ஏ): விவேகா னந்தர் இல்லத்தை காலி செய்யச் சொல்லிவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கும் அரசின் முடிவு முற்றிலும் தவறானது.

தமிழ் செம்மொழி மையத்தை எங்கு வேண்டு மானாலும் அமைக்கலாம். விவேகானந்தர் இல் லத்தை, அவர் தங்கியிருந்த அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அமைக்க முடியாது.

கர்நாடகத்தைப் பின்பற்றி, தமிழக அரசும் விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்தி டம் ஒப்படைத்துவிட வேண்டும்.

எல். நடராஜன் (சமூக சேவகர், கே.கே.நகர்): கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது உண்மையான கலாசார சின்னத்தை தி.மு.க. அரசு இடிக்கிறது.
ஓம் பிரகாஷ் ராய் (ஆசிரியர், அசாம்): விவே கானந்தர் இல்லம் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, ஆன்மிகத் தலமும் கூட. வெளி மாநிலங்கள், வெளிநாட்டுப் பயணிகளிடம்கூட இந்த இடம் பிரபலமாக உள்ளது. அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

எஸ். மோகன் (சென்னை): அந்த செய்தியைப் பார்த்தது முதல் இதயம் முழுக்க வலியுடன் இந்த விவேகானந்தர் இல்லத்தில் அமர்ந்துள்ளேன். இந்த இடம் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் கோயில் போன்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருந்தேன். அப்போது, விவேகானந்தர் இல்லத்துக்கு வந்தவுடன் அந்த எண்ணம் நீங்கியது.

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி

கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக் காக சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள விவேகானந்தர் இல் லத்தை கருணாநிதி அபகரிக்க முயற்சி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட் டியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கி ழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் செம்மொழி மையத்தில் கனி மொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பி னர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன் மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத் தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார்.

இந்தியத் திருநாட்டின் பெரு மையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.
அந்த இடத்தில் சுவாமி விவேகா னந்தரின் போதனைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட் சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது.

பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்" என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பய ணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகி றது.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். செம் மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என் றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமா றும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப் ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி யதாகவும் செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகா னந்தரை திட்டமிட்டு அவமதிப்பது போல் உள்ளது. தமிழ் மொழி, செம் மொழி என்று ஆரம்பித்து கனிமொ ழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம்.

மெரினா கடற்கரையில் பிரம்மாண் டமாக காட்சி அளிக்கும் விவேகானந் தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபக ரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயல லிதா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்புடையதல்ல

விவேகானந்தர் இல்லத்தை காலிசெய்ய தமிழக அரசு கொடுத்துள்ள திடீர் நெருக் கடி அதிர்ச்சி அளிக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறி னார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: "ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்" என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண் டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக்கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்ச ரியத்தைத் தருகிறது.

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக் கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.

தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல.

எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமி ழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மத நம்பிக்கை தொடர்பானவற்றை இடிப்பதில் முதல்வருக்கு ஆர்வம்

இந்து மத நம்பிக்கையுடன் சம் பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதை இடிப் பதில் முதல்வர் கருணாநிதி காட்டும் ஆர்வத் திற்கு "மதச்சார்பின்மை' என்ற பெயர் போலும் என மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி கூறி யுள்ளார்.

விவேகானந்தர் இல்லத்தை இடித்துவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்க அரசு முயற்சிப்பது தொடர்பாக "தினமணி' வெளி யிட்ட செய்தி குறித்து அவர் தெரிவித்த கருத்து கள்: செம்மொழி ஆய்வு மையம் அமைப்பதற்குச் சென்னையில் பல இடங்கள் இருக்கின்றன.
குறிப்பிட்ட இடத்தில்தான் அதைத் தொடங்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. ஆனால், விவேகானந்தர் இல்லம் அப்படியல்ல. இந்தியா வின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அவர் தங்கிய இடம் என்பதால்தான் அந்த இடமே ராமகிருஷ்ணா மிஷனுக்குத் தரப்பட்டது.

சென்னை பக்கமே எட்டிப் பார்த்திராத கண்ணகிக்கு குறிப்பிட்ட இடத்தில்தான் சிலை இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிய முதல்வர், விவேகானந்தர் தங்கியிருந்த இடத்தில் அவருடைய பெயரில் ஓர் இல்லமும், கண்காட்சி அரங்கமும் நடப்பதை ஏன் குலைக்க முயல்கி றார் என்று தெரியவில்லை.

இந்துமத நம்பிக்கைகளுடனோ, சிந்தனைகளுடனோ சம்பந்தப்பட்ட ஏதாவது ஓர் இடம் இருந்தால் -அது ராமர் பாலமாக இருந்தாலும் சரி, விவேகானந்தர் இல்லமாக இருந்தாலும் சரி -அதை இடித்துவிட வேண் டும் என்பதில் முதல்வர் காட்டும் ஆர்வத்திற்கு மதச்சார்பின்மை என்ற பெயர்போலும்.

தமிழக அரசு செய்ய முயற்சிக்கும் செயல் சட்ட ரீதியாகவும் சரி, தார் மிக ரீதியாகவும் சரி -ஏற்றுக்கொள்ள முடியாதது.

"எழுங்கள், விழிப்புணர்வு கொள்ளுங்கள்' என்பது விவேகானந்தரின் வாக்கு. முதல்வரின் கண்டிக்கத்தக்க போக்கு குறித்து தமிழகத்தின் நலன் விரும்புவோர் அனைவரும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்றார் சோ ராமசாமி.