வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.
Showing posts with label ஸ்ரீலங்கா செய்திகள். Show all posts

Tuesday, August 19, 2008
மாகாணசபைத் தேர்தலுக்கு முன் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் படையினரால் கிளிநொச்சியை கைப்பற்ற முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கருவிட்ட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்து போனார் என்ற செய்தி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.படையினர் கிளிநொச்சியை நெருங்கியுள்ளனர். எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சியையும் கைப்பற்றமுடியும் எனவும் ரட்ணசிறி விக்கிரநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடம் வேலை வாங்கும் சிப்பாய்கள்
யாழ்.மாவட்டத்திலுள்ள மின்மாற்றிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்குடன் மின்மாற்றி அமைந்திருக்கும் இடங்களைச் சுற்றி பனைமரங்களினால் இராணுவத்தினர் காப்பரண்களை அமைத்து வருகின்றனர்.
காப்பரண்களை அமைப்பதற்கென பெருந்தொகையான பனைமரங்களைத் தறித்தெடுத்து வரும் படையினர் பொதுமக்களைப் பயன்படுத்தி மேற்படி காப்பரண்களை அமைத்து வருகின்றனர்.
பொது இடங்கள், வீதிகள் மற்றும் சந்திகளில் அமைந்திருக்கும் மின்மாற்றிகளில் சில அண்மைக்காலமாக இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டு வந்ததையடுத்தே படையினர் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம் மின்மாற்றிகளுக்கு காப்பரண்களை அமைப்பதற்காக அயற்பிரதேசங்கள் மற்றும் வீதிகளில் பயணிப்போரை அழைத்து நீண்ட நேரம் தாமதிக்க வைத்து வேலைகளை வாங்கி வருவதால் தமது சொந்தக் கருமங்களைக் கவனிக்க முடியாதிருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

Monday, August 18, 2008
புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுவது படைகளிலிருந்து இராணுவத்தை தப்பியோட வைக்கும்
விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார்.
வெலிக்கந்தை பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார்.
கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவும், புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தத் தகவல்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்குமானால் அவர்கள் இந்த நேரம் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களெனவும் கூறியுள்ளார்.
அத்துடன், களமுனையில் போரிடும் படையினரின் காதுகளில் இவ்வாறான தகவல்கள் எட்டினால் அவர்கள் பெரிதும் குழப்பமடைவதுடன், படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடுமெனவும் கூறி இந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார்.
இதேநேரம், இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து அரசு கவலையடைந்துள்ளது.

Monday, August 11, 2008
கிளிநொச்சி வரை படையினர் முன்னேற்றம் காலை வாரிவிடும் செயலில் எவரும் ஈடுபடாதீர்
கிளிநொச்சி வரை படையினர் முன்னேறிவிட்ட நிலையில், அவர்களின் கால்களை வாரிவிடும் செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாதெனத் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியுமென்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
அரசு, புலிகளின் ஒவ்வொரு முகாம்களையும், பதுங்கு குழிகளையும் தகர்த்துக்கொண்டு முன்னேறும்போதும் எதிர்க் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளையும் கிளப்புகின்றனர். மனித உரிமை மீறல்களை முன்வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படுகின்றனர். இந்த செயற்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கே உந்துசக்தியைக் கொடுக்கும்.
உலகில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற பலரையும் இணைத்துக் கொண்டு செயற்படுகின்றனர். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களே மனித உரிமை மீறல்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுகின்றன. இவர்களே இலங்கைக்கு எதிராக சதி செய்கின்றனர். இவர்கள் வெளியிடும் அறிக்கைகளையே ஐ.தே.க.வினர் இங்கே வாசிக்கின்றனர்.
தமது தலைவர்கள் புலிகளால் கொல்லப்படும்போது மௌனமாகவிருந்த சம்பந்தன் போன்றோர் இப்போது மனித உரிமைகள் தொடர்பில் உரத்துக் குரல் கொடுக்கின்ற?ர்.
ஜனநாயகத்திற்கு உரமூட்டுவதன் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியுமென்பதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் அதன் முதலமைச்சரும் சிறந்த உதாரணம். கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தை குழியிலிருந்து தோண்டியெடுத்து உயிர் கொடுத்துள்ளோம்.

Thursday, August 7, 2008
மட்டு. தொப்பிக்கல தரவையில் இராணுவ "ட்ரக்' மீது கிளைமோர்! 23 படையினர் உயிரிழப்பு என்கின்றனர் புலிகள்
மட்டக்களப்பு தொப்பிக்கல தரவைப் பகுதியில் பெரியவட்டுவான் என்ற இடத்தில் இராணுவத்தினர் பயணம் செய்த "ட்ரக்' ஒன்றின் மீது நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி யளவில் விடுதலைப் புலிகள் கிளை மோர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அந்தத் தாக்குதலில் 23 படையினர் உயிரிழந்தனர் என்றும் நான்கு பேர் காய மடைந்தனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 30 வரை யான படையினரை ஏற்றிச் சென்ற "ட்ரக்' இந்தத் தாக்குதலில் சிக்கி, தூக்கி வீசப் பட்டு சின்னாபின்னமாகிக் கிடந்தது என் றும் புலிகள் கூறுகின்றனர். காயமடைந்த படையினர் வெலிகந்த வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தக் கிளைமோர் தாக்கு தல் தொடர்பாகத் தகவல் வெளியிட்ட படைத்தரப்பு, ஆக ஒரேயொரு இராணுவ சிப்பாய் மாத்திரமே பலியானார் என்றும் மூவர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறு கிறது. மட்டக்களப்பு தொப்பிக்கல பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்குப் பின்னர் கடந்த சுமார் ஒருவருடகாலத்தில் அங்கு படையினர் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது.

Wednesday, August 6, 2008
இறுதி போருக்கு தயாராகும் புலிகள்
கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத் திசையில் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்துள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மானின் நேரடிக் கண்காணிப்பிலேயே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகள் பிரிவு உறுப்பினர்களுக்காக விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டுஅம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத்தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட தாக்குதல் பயிற்சிகளை வழங்க புலிகள் இயக்கத்தின் மத்திய முகாம் நிலையங்கள் மேற்படி திருவையாறு பிரதேசத்தை அண்டியே அமைந்திருந்தன.
எவ்வாறாயினும் இந்தப் பிரதான முகாம்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்புத்துறைப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் அறிந்துகொண்டதைத் தொடர்ந்து கண்காணிப்பு விமானங்கள் மூலம் தீவிர அவதானிப்புச் செய்யப்பட்டுக் கடந்தவாரம் இந்தப் பிரதேசத்தில் முகாம் பகுதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையங்கள் மீது தீவிர குண்டுத்தாக்குதல்களை விமானப்படையினர் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் இதில் கரும்புலிகள் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. பயிற்சி முகாம்களிலிருந்த புலிகள் தரப்பில் ஏற்பட்ட உண்மையான உயிர்ச்சேதம் தெரியாவிட்டாலும் பிரதான கரும்புலிகள் பயிற்சி முகாம்களிலிருந்த கரும்புலி உறுப்பினர்கள் பலர் இத்தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திருவையாறு பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இரகசியமான முறையில் அமைந்திருந்த முக்கிய பயிற்சி முகாம்களில் இருந்த புலிகள் இயக்கத்தினர் ஏதோ வகையிலான விசேட பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்புப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அப்பகுதியில் இரகசியமாக அமைந்திருந்த “லெப்டினன் கேர்ணல் சூட்டி’ பயிற்சிமுகாம் எனக்கூறப்படும் விசேட பயிற்சி முகாமில் அண்மையில் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினருக்கு விசேடமான தாக்குதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு கடந்த 26 ஆம் திகதியே அதாவது விமானப்படைத் தாக்குதல்களுக்கு முன்னரே இவ்வாறு விசேட பயிற்சிபெற்ற புலிகள் இயக்கத்தினர் வெளியேறிவிட்டனர் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் குறித்த “லெப்டினன் கேர்ணல் சூட்டி’ முகாம்களில் அளிக்கப்பட்ட விசேடமான அந்தப் பயிற்சிகள் என்ன என்பதும் அந்தப் பயிற்சிகள் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டது என்பதுமே ஆகும். இதுபற்றி பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி பயிற்சி மத்திய நிலையமாகக் கருதப்படும் லெப்டினன் கேர்ணல் சூட்டி முகாமில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் திட்டமிட்டிருக்கும் பாரியதொரு தாக்குதல் நடவடிக்கைகளுக்காகவே குறித்த விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த விசேட அணியினரையே இறுதித் தாக்குதல்களுக்காகப் புலிகள் இயக்கம் தயார்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Tuesday, August 5, 2008
இரணைதீவில் உள்ள விடுதலை புலிகளின் முகாம் ஒன்றை இராணுவத்தினர் அளித்துள்ளனர்.
இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையின் துரித நடவடிக்கைப் ப அணியினரும், விசேட படகு அணியினரும் அந்தத் தீவுக்குச் சென்று, அங்கு அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை அழித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை, மன்னார், வவுனியா, வெலிஓயா, யாழ்ப்பாணம் முகமாலை ஆகிய களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் நேற்று மாத்திரம் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

Sunday, August 3, 2008
ராமேஸ்வரம் அருகே விடுதலைப் புலி கைது
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் கைது செய்யப்பட்டார்.
மண்டபம் கடற்பகுதியில், நேற்று மாலை பைபர் கிளாஸ் படகு ஒன்று அனாதரமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படகை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், இன்று மண்டபத்தில் முரளிதரன் (39) என்பவரைக் கைது செய்தனர்.
இவர் மண்டபத்திற்கு வருவதற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பே கடலில் குதித்து நீந்தி மண்டபத்தை அடைந்துள்ளார் முரளிதரன். இவர் எதற்காக ரகசியமாக மண்டபம் வந்தார், ஆயுதம் வாங்க வந்தாரா அல்லது அகதியாக வந்தாரா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முரளிதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான தம்பி அண்ணா என்கிற டேணியலை கியூ பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக முரளிதரன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 31, 2008
மணலாற்றில் புலிகளின் தாக்குதலில் பெல் 212 ரக உலங்குவானூர்தி கடும் சேதம்
மணலாற்றுப் பகுதியில் இலங்கை வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது
மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுரம் மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் இந்த உலங்குவானூர்தி ஈடுபட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுரம் வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கைப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன.
அதில் ஒன்றே விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

Tuesday, July 22, 2008
முல்லைத்தீவு மேற்கை நோக்கி படையினர் முன்னேற்றம்
கிழக்கு மாகாணத்தினை முழுமையாக மீட்டுள்ள படையினர் வடக்கிலும் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதுடன் தற்போது முல்லைத்தீவு மேற்குப் பகுதியினை நோக்கி முன்னேறி வருகின்றனர். இப்பகுதியும் இன்னும் சில தினங்களில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடிய உதய நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; மன்னார், இலுப்பைக்கடவை பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள படையினர் அங்கிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவை நோக்கி முன்நகர்ந்துகொண்டிருக்கின்றனர்
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களையடுத்து விடத்தல்தீவு மற்றும் இலுப்பைக்கடவை போன்ற பகுதிகள் படையினரால் கைப்பற்றப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 53 ஆம் படையணியினரின் தீவிர படை நடவடிக்கை காரணமாக 2007ஆம் ஆண்டு தொப்பிகலைப் பகுதி கைப்பற்றப்பட்டதை அடுத்து கிழக்கு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கிழக்குப் பிரதேசம் முழுமையாக கைப்பற்றப்பட்டதை அடுத்து யோதவாவிக்கருகே அமைந்துள்ள உயிலங்குளம், ஆந்தன்குளம், பரப்பாங்கண்டல், பரப்புக்கடந்தான், மனனாரின், விடத்தல் தீவு, இலுப்பைக்கடவை, என்று விடுதலைப் புலிகளின் இதயமாக விளங்கிய அனைத்தப் பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. தற்போது இலுப்பைக்கடவைப் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவை நோக்கி படையினர் தற்போது முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, July 21, 2008
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பன்னிரண்டு வயது மகள் விரக்தியுற்று தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த துயர சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சிறுமியின் மரண விசாரணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நகர மரண விசாரணை அதிகாரி எட்வேட் அகங்கம முன்னிலையில் நடைபெற்ற போது இத்தகவல் தெரியவந்தது.
இறந்த சிறுமி தீக்காயங்களுடன் முதலில் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமானார்.
கடல்கோளினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தில் 16 வயதுடைய மூத்த மகள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரையும் தனது கணவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் எனவும் மரண விசாரணையில் சாட்சியம் அளித்த தாயார் கூறினார்.
தனது இளைய மகளையும் தந்தையார் கெடுத்த சம்பவத்தையடுத்து அவர் மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி தீமூட்டினார் எனவும் தாயார் தனது சாட்சியத்தில் கூறினார்.
மரண விசாரணை முடிவில் தற்கொலை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Saturday, July 19, 2008
Halt of offensives after Vedithaltivu - 'Lanka'
Saturday, 19 July 2008 12:17
With the intensification of military offensives to liberate the Wanni, the Sri Lankan government is under demand by India, at the instigation of Tamil Nadu, to halt offensives against the LTTE, 'Lanka' reports, quoting political sources.
More pressure is being exerted after the capture of the Sea Tiger base at Vedithaltivu in Mannar, a main supply route from South India.
According to the JVP-backed newspaper, troops of the 57, 58 and 59 divisions are now marching towards the Mallavi, Thunukkai and Alampil bases in Mullaitivu.
In the meantime, Iceland, a country that supports the LTTE, has come forward to facilitate peace negotiations, it said.
Defence and political sources said that the month of August would be crucial in the quest to defeat the terrorists.
President Mahinda Rajapaksa and Indian Prime Minister Manmohan Singh are to hold talks on this matter on the sidelines of the SAARC summit in Colombo in a few weeks' time.
However, senior government ministers have advised the president to continue with the military operations, to target polls for the North Central and Sabaragamuwa Provincial Councils on August 23rd.
Commanders of the three armed forces have personally expressed their displeasure to Mr. Rajapaksa over India's exertion of pressure on Colombo, 'Lanka' adds.

Wednesday, July 9, 2008
புலிகளின் முக்கிய பகுதியை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
மணலாறில் ஜனகபுரவுக்கு வடக்கே நேற்று முன்தினம் திங்கட்கிழமை விடுதலைப்புலிகளின் முக்கிய பகுதியொன்றைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஜனகபுரவுக்கு வடக்கே 10 கிலோ மீற்றர் தூரத்திலேயே, புலிகளின் தற்காப்பு நிலையான இந்தப் பகுதியை திங்கிட்கிழமை காலை 9.30 மணியளவில் படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கடும் தாக்குதலின் தொடர்ச்சியாகவே புலிகளின் இந்த முக்கிய நிலை கைப்பற்றப்பட்டதாகவும் இதன் மூலம் புலிகளின் மூன்று பதுங்குழிகளும் மூன்று அகழிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் யாழ்.குடாநாட்டில் முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன் ஆறுபடையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கிளாலி, நாகர்கோவில், முகமாலை பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அன்றையதினம் மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

சப்ரகமுவ பகுதியில் மர்ம விமானங்கள்
சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம விமானங்கள் பறப்பதாக தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வில்பிரட் மகாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அவிசாவளை இ.போ.ச.டிப்போவில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
சப்ரகமுவ மாகாணத்தில் எட்டியாந்தோட்டை, கித்துல்கலை, புளத்ஹோஹிப்பிட்டிய மற்றும் அவிசாவளை பகுதிகளில் இரவு நேரங்களில் இந்த மர்ம விமானங்கள் பறப்பதாக அவ்வப்போது தகவல்கள் கிடைத்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக இவ்வாறு இரகசிய விமானங்கள் இரவு நேரத்தில் பறப்பது தொடர்பாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட படைத்தரப்புக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
எது எப்படியோ முப்படையினராலும் பொலிஸாராலும் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்துவிட முடியாது . பொதுமக்களின் உதவியும் அவசியமென்றார்.

Wednesday, June 18, 2008
உரும்பிராய் ஆசிரியை விஜயானந்தியின் மரணத்தில் மர்மம்
நல்லூர், வைமன் வீதியில் வசித்த உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணி புரிந்த ஆசிரியை ஒருவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதை அடுத்து அவரது சட லத்தை மீள் பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துமாறு யாழ். மாவட்ட நீதிபதி இ.வசந்தசேனன் நேற்றுப் பொலீஸாருக்கு உத்தரவிட்டார்.
வைமன் வீதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆசிரியையான விஜயானந்தி ஜெக தீஸ்வரன் என்ற குடும்பப் பெண் எரிகாய முற்று மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு அங்கு மரணமானார்.
அவரது மரணம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட நீதிபதி இ.வசந்த சேனன் சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகளையடுத்து பிரேத பரிசோத னையின் பின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
விஜயானந்தியின் மரணம் குறித்து மரணமானவரின் பெற்றோர் செய்த முறைப் பாட்டையடுத்து விரிவான விசாரணை நடத்தப்பட் டது.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியை தமக்கு தாமே தீமூட்டி மரண மானார் என்று அவரது கணவரின் தரத்திப் பினர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்த னர். ஆனால், தமது மகள் நல்ல சுக தேகியாக இருந்தார் என்றும் அவரை வேறு யாரோ எரியூட்டி கொலை செய்திருக்க வேண்டும் என்றும் ஆசிரியையின் பெற்றோர் நீதிமன் றத்துக்கு தெரிவித்தனர். அதற்கு ஆதார மாக ஆசிரியைக்கு நூல் கட்டியதாகக் கூறப் படும் இரு ஆலய குருக்கள்மாரை சாட்சிக ளாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.
ஆசிரியை விஜயானந்தி ஆரோக்கிய மாக இருந்தார், திருஷ்டி கழிப்பதற்காகவே நூல் கட்ட வந்தார் என குருக்கள்மார் இரு வரும் நீதிபதியிடம் சாட்சியம் அளித்திருந் தனர். அதனையடுத்து ஆசிரியை கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பதைக் கண்டறிவதற்காக மீள் பிரேத பரிசோதனைக்கு நீதிபதி வசந்த சேனன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
நாளை வியாழக்கிழமை சடலத்தை தோண்டி எடுத்து பிரதம சட்ட வைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கராஜ் உரிமையாளரை தேடும் பொலிஸார்
வவுனியா பொலிஸ் விடுதிமுன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கராஜ் உரிமையாளர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பாகவே அவர் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எம்.டி. 90 ரகத்தைச் சேர்ந்ததெனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளை முதலில் ஒரு சிங்களவர் புதிதாக வாங்கி மாகோவில் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த மோட்டார் சைக்கிளை அவர் முஸ்லிம் ஒருவருக்கு விற்றுள்ளார்.
அவர் பின்னர் இதனை வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த கராஜ் உரிமையாளருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து திங்கட்கிழமை பிற்பகல் அந்தக் கராஜ் உரிமையாளரைத் தேடி பொலிஸார் சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் தற்கொலைக் குண்டுதாரி கிளிநொச்சியைச் சேர்ந்தவரெனவும் வவுனியா தோணிக்கல் பகுதியில் சிலகாலம் வசித்து வந்தது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துமுள்ளனர்.
தற்கொலைக் குண்டுதாரியின் தலை திங்கள் மாலையே, தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 100 யார் தூரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் முடுக்கி விட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்தை கைப்பற்றுவது என்பது விடுதலைப்புலிகளுக்கு கனவாகவே இருக்கும்
யாழ்ப்பாணம் முழுவதையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றுவது என்பது அவர்களது கனவாக மட்டும்தான் இருக்க முடியும் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார சூழுரைத்துள்ளார். குடாநாட்டின் மீதான விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பாக செய்திநிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளால் குடாநாட்டில் மக்களை இலக்குவைத்து கிளைமோர் தான் வைக்க முடியும் இதைதவிர வேறுஒன்றும் புலிகளுக்கு செய்ய முடியாது என்றார்.
Tuesday, June 17, 2008
உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் மரணம்
புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தவர் என்று கருதப்படும் ஆச்சிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். வெளிநாடு ஒன்றின் கூலிக்கும்பலாக மேலும் பலருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இவர் தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் மறைந்து வாழ்ந்து வந்தார் என்றும் உமாமகேஸ்வரன் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துகோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
‘மடுமாதா ஆடித் திருவிழா இவ்வருடம் கொண்டாடப்படாது’
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள மடுமாதா ஆலயத்தில் ஆடி மாதத் திருவிழாவைக் கொண்டாடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஆயர்கள் சங்கம், மடுமாதா ஆலயத்தின் திருத்த வேலைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள மாதாவின் திருவுருவச் சிலை இன்னும் ஆலயத்திற்குக் கொண்டு வரப்படாத நிலையில் இம்முறை மடுமாதாவின் ஆடித்திருவிழாவைக் கொண்டாட முடியாதிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.
எனினும், மடுமாதாவின் திருவிழா திருப்பலிப் பூசைகளை மன்னார் மறைமாவட்டப் பங்கில் உள்ள ஆலயங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)