Thursday, August 7, 2008
டாபூர் பிரதேசத்தை ஒத்ததாக மாறிவரும் இலங்கைத் தீவு
அடிப்படைத் தேவைகளுக்குரிய அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியாத அள வுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வரவு செலவுத் திட்டம் கையை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் சூடானின் டாபூர் நிலைமையை ஒத்த மோசமான பட்டினி நிலையை இலங்கை மக் கள் எதிர்கொள்ளும் பேராபத்துக் கட்டம் சூழ்ந்து நெருங்கி வருவதாக முக்கிய ஆய்வு மையங்களும், நிறுவனங்களும் எச்சரித்திருக்கின்றன.
இந்தப் பின்புலத்தில் இலங்கையின் பொருளா தார நிலைமை குறித்து சாதாரண மக்களின் வாழ் வாதார நிலைமைகள் பற்றி இலங்கையின் முக்கிய ஆய்வு மையம் மக்கள் கணிப்பைக் கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வின்படி
* நாட்டில் முக்கிய மிக அத்தியாவசிய பொருள் களின் விலைகள் நெருக்கடிக் கட்டத்தை அடைந்து விட்டன என்பதை 96 வீதமான மக்கள் ஆமோதித் திருக்கின்றார்கள்.
* இந்த நெருக்கடிக் கட்டத்துக்கு அரசுதான் பொறுப்பு என்று 82 வீதமான இலங்கை மக்கள் கருது கின்றார்கள். அரசு மீது குற்றம் சுமத்த முடியாது என் போர் ஆகப் பதினாறு வீதத்தினர் மட்டுமே.
* வெளிநாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக் கான விநியோகமும் கேள்வியும் அதிகரித்திருப்பதும் உள்நாட்டில் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ற கருத்தை இலங்கை நாட்டு மக்களில் 72 வீதமானோர் ஏற்றுக் கொள்ளுகின்றனர். விடை தெரியாது என்று பதினாறு வீதத்தினர் கூறுகின்றனர். அத்தியாவசியப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் கேள்வி அதிகரிப்பும் இலங்கையில் விலைவாசி அதிகரிப்புக்குக் காரணம் என்ற நியா யத்தை நாட்டு மக்களில் 12 வீதத்தினர் ஏற்கவில்லை.
* இன்றைய பொருளாதார இக்கட்டு நிலையைச் சமாளித்து, மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவ சியப் பொருள்களுக்கு அரசு மேலும் மானியமளித்து, பொருள்களின் விலையைக் குறைக்க விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களில் 78 வீதத்தினர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
இவையே மேற்படி ஆய்வுகளில் மக்கள் கருத்துக் கணிப்பில் வெளியான முடிவுகளாகும்.
இன்று இத்தகைய மோசமான பொருளாதார நெருக் கடி நிலைமை ஏற்பட்டு, மக்கள் தமது வாழ்வியலுக் கான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாது அந்தரிக்கும் சூழ்நிலை ஏற்பட்ட மைக்கு அரசே அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், வீண் விரய நடவடிக்கைகள், ஊதாரித்தனமான செயற் பாடுகள், தவறான ஆட்சி முறைகள் என்பனவே காரணம் என்று எண்பது வீதமான மக்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
பொதுச்சொத்தை சீரழிக்கும் செயற்பாட்டுக்கு உதாரணமாக "மிஹின் ஏயார்' நிறுவனச் சீர்கேட்டை இந்த ஆய்வில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த விமான சேவை நிறுவனத்தை உருவாக்கி, செயற்படுத் தியதன் மூலம் பல நூறு கோடி ரூபா அரசநிதி எவ் வாறு வீண் விரயமாக்கி, அழிக்கப்பட்டது என்பது இன்று பரகசியமான விவகாரமாகும். அதைச் சுட்டிக் காட்டியதன் மூலம் இன்றைய குளறுபடி நிலைக்கு அரசுத் தலைமையே பொறுப்பும் பின்னணியும் என்று பொதுமக்கள் நேரடியாகவே குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இதற்கிடையில்
இலங்கையின் நான்கு சிறுவர்களுள் ஒருவர் போசாக்கின்மையால் வாடுகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் புள்ளி விவரத்தை "யுனிசெவ்' அமைப்பும் வெளியிட்டிருக்கின்றது.
அந்த அமைப்பின் ஆய்வுகளின்படி இலங்கைச் சிறுவர்களில் 22 வீதத்தினர் எடை குறைந்தவர்கள். மேலும் 18 வீதத்தினர் வளர்ச்சி குன்றியவர்கள்.
இந்த ஆய்வுகள் தரும் புள்ளி விவரங்களும் கணக் குகளும் சரியானவை என்றால்
இனப்பிரச்சினை, கொடூர யுத்தம், பேரழிவுகள், மோசமான மனித உரிமை மீறல்கள், அரசு ஆதரவுத் துணைப்படைகளின் ஆதரவோடு முன்னெடுக்கப் படும் அரச பயங்கரவாதச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மட்டுமல்லாது, பட்டினிச்சாவு உட்பட்ட போஷாக்கின்மைப் பிரச்சினை களிலும் டாபூர் தேசத்தை ஒத்ததாக இலங்கைத் தீவு உருவாகப் போகின்றது என்பதே அர்த்தம்.
சூடானின் அரசுத் தலைவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலைமை அந்த நாட்டில் ஏற்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
அத்தகைய கட்டத்தையும் தாண்டி இலங்கை நிலைமை சென்றாலும் கூட ஆச்சரியப்படுவதற் கில்லை என்பதே அவதானிகளின் கருத்தாகும்.
Sunday, August 3, 2008
"சார்க்'கின் பின் இனி என்ன?
பாதுகாப்பு என்ற பெயரில் ஏகக் கெடுபிடி, நெருக்கடி களைத் தலைநகரத்து மக்கள் சார்க்கின் பெயரால் அனுப விக்க வேண்டியதாயிற்று.
சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையை சுளையாக விழுங்கி, ஏப்பம் விட்டதோடு ஒருவாரகால "சார்க்' ஆரவாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது.
"சார்க்' ஏற்பாடுகள் மற்றும் தடல்புடல் ஒழுங்குகளைப் பார்க்கும்போது உண்மைச் செலவினம் மேற்படி உத்தேசச் செலவினத்தைத் தாண்டி மேலும் பல கோடி ரூபாவை எட்டலாம் என்று கருதப்படுகின்றது.
"சார்க்'கின் பெயரால் வாரி இறைக்கப்பட்டு, வீண் விரயம் செய்யப்பட்ட நாட்டின் நிதி மற்றும் பொருளாதார வளம் என்னவென்பது இனித்தான் மெல்ல மெல்ல அறிய தெரிய புரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.
கொழும்பு "சார்க்'கை ஒட்டி ஒருதலைப்பட்சமாகப் புலிகள் அறிவித்த யுத்தநிறுத்தம் பற்றிய பிரகடனத்தின் புண்ணியத்தால், ஏக பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்த போதிலும், மோசமான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் குழப்பங்கள் இன்றி "சார்க்' நடந்தேறியிருக்கின்றது. இதை நடத்தி முடித்த திருப்தியில் கொழும்பு அரசுத் தலைமை பெருமூச்சுவிட்டு ஆசுவாசப்படலாம்.
ஆனால் இனி என்னவென்பதுதான் இப்போது எழுந் துள்ள கேள்வியாகும்.
"சார்க்' மாநாட்டை ஒட்டிப் புலிகள் அறிவித்த ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவித்தலை நிராகரித்து உதா சீனம் செய்த கொழும்பு அரசுத் தலைமை, அந்த யுத்த நிறுத்த காலத்தில் இன்று வரையான பத்து நாள்களில் வன்னியில் பெரும் படை நகர்வு முயற்சிகளை முன்னெ டுத்தது. புலிகளின் நிலைகள் மீது வான் குண்டுவீச்சுத் தாக் குதல்களை நடத்தியது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைக் கைப்பற்றியதாகவும் அறிவித்தது.
ஆனால் புலிகளோ தாம் அறிவித்த இந்தப் பத்துநாள் யுத்த நிறுத்த காலத்தில் வன்னியில் அரசுப் படைகள் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் தற்காப்பு யுத்தம் ஒன்றையே பின்பற்றினர். அங்கும் கூட வலிந்து தாக்கும் நடவடிக்கை எதிலும் இக்காலப் பகுதியில் அவர் கள் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள், தகவல்கள் ஏதுமில்லை.
தமது யுத்த நிறுத்த அறிவித்தல் பிரகாரம் தென்னிலங் கையில் "சார்க்' காலத்தில் தாக்குதல் அல்லது வன்முறைச் சம்பவம் எதிலும் புலிகள் ஈடுபடவில்லை என்பதும் தெரிந்ததே.
தங்களின் கைகளைத் தாங்களே கட்டிப்போட்டுத் தெற்கில் புலிகள் மேற்கொண்ட யுத்த நிறுத்தத்தால் வன் முறைக் குழப்பங்கள், நெருக்கடிகள் இல்லாத ஒரு "சார்க்' மாநாட்டை பெயரளவுக்காவது இலங்கையினால் நடத்தி முடிக்க முடிந்தது.
அந்த யுத்த நிறுத்தம் இன்றோடு முடிவுக்கு வந்த பின்னர் இனி நிலைமை என்னாகும் என்பதே பலரினதும் கேள்வியாக இருக்கின்றது.
தாம் ஒருதலைப்பட்சமாக அறிவித்த யுத்த நிறுத்தத் துக்குப் பதிலாக, அரசுத் தரப்பு புலிகளின் அரசியல் தலை மைத்துவப் பணிமனை உள்ள கிளிநொச்சி மீதும் வலிந்த படை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதால் அதற் கான தமது பதிலடிப் பிரதிபலிப்பை இன்றுடன் அந்த யுத்த நிறுத்தம் காலாவதியான பின்னர் புலிகள் வெளிப்படுத் துவர் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
அதுவும், புலிகளின் இந்த யுத்த நிறுத்த காலத்தில்தான்
மன்னார் மாவட்டத்தை முழுமையாகப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்தாயிற்று என்ற அறிவிப்பையும்
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலத்தின் பின்னர் முதற்றடவையாக நேரடியாகப் படை நடவடிக்கை ஆரம் பிக்கப்பட்டிருக்கின்றது என்ற விளக்கத்தையும்
அரசுத் தரப்பின் பாதுகாப்பு வட்டாரங்கள் வெளிப்படுத்தியுமிருக்கின்றன.
மாவிலாறில் ஆரம்பித்த அரசுப் படைகளின் முன்நகர்வு பெரிய "பிரேக்' இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக் கின்றது. இவற்றுக்குப் புலிகளின் பதில் என்னவென்பதே வினா. பின்வாங்கி நகர்வதுதான் புலிகளிடம் உள்ள ஒரே மார்க்கம் என்று நையாண்டி செய்கின்றது தென்னிலங்கை.
எனினும், இச்சமயத்தில் கடந்த வருடம் தமது மாவீரர் தின உரையில் பிரபாகரன் குறிப்பிட்ட கருத்தும் கவனிக்கத் தக்கது.
""எமது விடுதலை இயக்கத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள தேசம் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்கிறது. குறைத்தே மதிப்பீடு செய்கிறது. பூகோள அமைப்பையும், புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தை யும் பலவீனத்தையும் சரியாக எடை போட்டு, எதிர் விளை வுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும், உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே எமது போர்த் திட்டங்களை வகுக்கின்றோம். இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த் திடடங்களை வகுத்தோம். தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியவாறு தந்திரோபாயமாகப் பின் வாங்கினோம். புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டு வதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிகுறு' சமரில் கற்றறிந்திருக்கலாம். ஆனால் சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சி புரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியில் சிங்களம் மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பார தூரமான விளைவுகளை அது விரைவில் சந்தித்தே ஆக வேண்டிவரும்.'' என்று பிரபாகரன் அப்போது குறிப்பிட் டிருந்தார்.
இதனைக் கருத்தில் எடுக்கும்போது, கள நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்குக் காலம்தான் பதில்சொல் லும் என்று பலரும் கருதுகின்றனர்.
Thursday, July 31, 2008
புலிகளின் கோட்டையை இராணுவம் முற்றுகையிடும்போது மோசமடையும் பொருள் பற்றாக்குறையும் பாதுகாப்பின்மையும்
இலங்கையின் வடக்கே தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வன்னியை இலங்கை இராணுவம் நெருங்கவே போருக்குள் சிக்கியுள்ள குடிமக்கள் பொருள் தட்டுப்பாட்டால் அவதியுறுவது மாத்திரமன்றி தங்கள் உயிர் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்றி பெரும் அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தொடர்ந்தும் அப்பிரதேசத்தில் தங்கியிருக்கும் மனித நேய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
வன்னிப் பிராந்தியத்தில் கிழக்குக் கரையோரமாக கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வடமேற்கு கரையோரமாக வவுனியாவினதும் மன்னாரினதும் சில பகுதிகளும் அடங்கியிருக்கின்றன.
அரசாங்க துருப்புகள் கடும் தாக்குதல்களை நடத்தி மன்னார் , வவுனியா மாவட்டங்களின் 90 சதவீதமான நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்துள்ளன. இதேவேளை , ஏனைய இரண்டு மாவட்டங்களான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் துறைமுக நகரான திருகோணமலை உட்பட பல பகுதிகளை விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் இழந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான தமது யுத்தத்தில் தமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றபோது செய்தி நிருபர்கள் மத்தியில் உரையாற்றிய போது தற்போது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என்றும், ஆனால் அதற்கு அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நான் தயார். ஆனால், அவர்கள் ஆயுதங்களைக் கிழே போடவேண்டும். ஏனெனில், அவர்கள் பலவீனமடையும் போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுவது வழக்கம் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அறிக்கை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டது.
ஆனால், விடுதலைப் புலிகள் வெளியிட்ட தகவலில் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக பெரும் மனிதநேய அவலங்களை மக்கள் எதிர்நோக்குகிறார்கள் என்றும் வன்னியில் 100,000 க்கும் அதிகமானோர் அவர்களது வீடு, வாசல்களை விட்டு வெளியேறி அகதிகளானார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களில் பெரும் தொகையானோர் திறந்தவெளிகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களப் பெரும்பான்மையினரால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு பாரபட்சம் காண்பிக்கப்படுகிறதெனக் குற்றம் சாட்டி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கென தனியான தாயகம் ஒன்றை உருவாக்குவதற்கென 1980 களிலிருந்து போராடி வருகின்றார்கள்.
2001 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை ராஜபக்ஷவின் தேசியவாத கூட்டரசாங்கம் இரத்துச் செய்து கொண்டது.
ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும் இடம்பெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தமிழர் ஆதிக்கம் செலுத்திவரும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவம் தொடர் தாக்குதல்களை ஆரம்பித்தது.
விடுதலைப் புலிகள் தலைமைக் காரியாலயத்தை வைத்திருக்கும் கிளிநொச்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் மோட்டார் சைக்கிள்களையும் சில கார்களையும் ஒட்டுவதற்கு பெற்றோல் கிடைக்காததால் மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்று மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன. நகரில் அரசாங்க விமானங்கள் புலிகளின் நிலைகளை இலக்கு வைத்து வகைதொகையின்றி குண்டுகளை வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள். மக்கள் அங்கிருந்து தப்பி வெளியேறாமல் புலிகள் தடுத்து விடுகிறார்கள்.
உணவுப் பொருட்கள் , எரிபொருட்கள் , ஏனைய பொருட்கள் ஆகியன அப்பகுதிகளுக்கு சென்றடையாதமை குறித்து தாங்கள் கவலையடைவதாக மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன. பலர் பல்வேறு தடவைகளில் சொந்த வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள் என்று தமது பெயரை வெளியிட விரும்பாத ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரி ஒருவர் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.
சிறுபராயத்தினர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவது, பாடசாலைகள் இயங்காமை, வெளி இடங்களிலிருந்து வன்னிக்குச் செல்வோர் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்படுவது போன்ற ஏனைய பிரச்சினைகளும் உண்டென்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உணவுப் பிரச்சினையிலும் பார்க்க மோசமான மனிதநேயப் பிரச்சினை பாதுகாப்பின்மையும் உயிர் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையுமே ஆகும் என்று ஒரு தொழிலாளி கூறினார்.
வன்னி பிராந்தியத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிக்குமிடையில் போக்குவரத்துப் பாதையான ஏ9 வீதியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பயன்படுத்தி வந்த இரண்டு பாதைகளுக்கு அருகில் அரசாங்கத்தினதும் புலிகளினதும் கூட்டு அனுமதியுடன் அது அமைத்திருந்த வீதித் தடைகளுக்கருகில் அரச விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறி செஞ்சிலுவைச் சங்கம் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து வீதி மூடப்பட்டதால் இந்த மாத முற்பகுதியில் வன்னியில் நிலைமை மேலும் மோசமடைந்தது.
யுத்தசூனியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படமாட்டாதென இரு தரப்பினரும் உறுதியளித்ததையடுத்து ஜூலை மாதம் 7 ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் அங்கு சென்று வீதியைத் திறந்துள்ளது. ஏ9 வீதி மூடப்பட்டதால் சுமார் 500,000 பேர் வசித்துவந்த வன்னிக்கு விநியோகங்கள் தடைப்பட்டு அம்மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளானார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவரத்ன தகவல் தெரிவிக்கையில்;
தேவைகளின் அடிப்படையில் பிராந்தியத்திலுள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட சகல உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் பொருட்களை ஏற்றி அனுப்புவதில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது உணவு லொறிகள் அங்கு செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், கிளிநொச்சியில் பணியாற்றும் தமது பெயரை வெளியிட விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் தருகையில்;
இடம்பெயர்ந்த மக்கள் உணவு மற்றும் எரிபொருள் இருப்புகள் பற்றாக்குறை காரணமாக பெரும் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கூறினார். இனந்தெரியாத நபர்களால் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கிளைமோர் கண்ணிவெடிகளால் ஆபத்துகள் மேலும் அதிகரித்துள்ளன என்றும் இதனால், தங்கள் உத்தியோகத்தர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஜூன் மாதம் 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற அதிகாரி ஒருவர் கண்ணிவெடி ஒன்றில் சிக்கி உயிரிழந்தமையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தங்கள் பிரதேசத்தினுள் இலங்கை இராணுவம் ஆழ ஊடுருவும் விசேட படையை அனுப்பி குண்டுத் தாக்குதல்களை நடத்துகிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விசேட கொரில்லா பாணியிலான படை தங்களிடம் இருப்பதை ஒப்புக் கொண்ட இராணுவம் தங்கள் இலக்கு விடுதலைப் புலிகளே அல்லாமல் சிவிலியன்களோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
வன்னியில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் உள்ளூர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து கிரமமாகத் தயாரித்த தரவுகளின்படி 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்த வருடம் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை வன்னியிலுள்ள 3 மாவட்டங்களிலிருந்து சுமார் 170,736 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விமானக் குண்டு வீச்சுகள் அதிகரித்து வருவதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுவதுடன் எப்பொழுது என்ன நடக்குமென எதிர்வுகூற முடியாத நிலை இருந்து வருவதாக நிறுவனங்களுக்கிடையிலான நிலையியற் குழு தெரிவித்துள்ளது. தீவிர யுத்தம் காரணமாக பொருட்கள் எதுவும் இருப்பில் இல்லாததால் மனிதநேய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஆற்றல் அற்றுப் போய்விட்டது என்றும் இக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினைகளை சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் மனிதநேய பணியாளர் ஒருவர் ஊர்ஜிதம் செய்தார். சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் இராணுவத்திற்கும் ஊடாக பல்வேறுபட்ட பணிகளைச் செய்யலாம். ஆனால், திடீர் மாற்றங்களும் இடம்பெறலாம். ஜூலை மாதம் 2 ஆம் திகதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வன்னியில் பணியாற்றும் 8 ஐக்கியநாடுகள் நிறுவனங்களுக்கென 24,800 லீற்றர் டீசல், 1,030 லீற்றர் பெற்றோல் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கினார். ஆனால், இந்தத் தொகை மிகவும் குறைவானதே.
பிரதேசவாசிகளைப் பொறுத்த வரையில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு வாசிகளுக்கு மிக நெருக்கடியான காலமாகும். விடுதலைப் புலிகளினாலும், இராணுவம் புதைத்திருக்கும் கிளைமோர் கண்ணிவெடிகளாலும் இம்மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அப்பிரதேச செய்தியாளர் ஒருவர் ஐ.பி.எஸ்.ஸிற்குத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் செய்தி எழுதுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமது பெயரை வெளியிட மறுத்த இந்த செய்தியாளர் மண்ணெண்ணெய் , மின் விநியோகமின்மை ஆகியன காரணமாக வீடுகளின் விளக்குகளை எரிக்க முடியாத மக்கள் சகல வேலைகளையும் மாலை 6 மணிக்குள் முடித்து விடுவார்கள் என்று கூறினார். மாணவர்கள் இரவில் தங்கள் பாடங்களைப் படிக்க முடியாது. எப்போது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஏங்கியவாறே அவர்கள் இருக்கிறார்கள்.
மக்களின் கஷ்டங்களைத் தணிப்பதற்காக அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து தாங்கள் பணியாற்றுவதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் பணியாளர் ஒருவர் சில அரச அதிகாரிகள் மிக்க உதவியாகவும் நிலைமையைப் புரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் . ஆனால், விநியோகங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அவர்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்றும் கூறினார்.
ஐ.பி.எஸ்
Thinakural
Wednesday, July 16, 2008
போராட்டம் மக்களின் சுதந்திரம் சுயமரியாதையுடன் கூடிய கௌரவமான வாழ்விற்காகவே!
இறுதியாக விடத்தல் தீவு புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகிவிட்டது. புலிகளின் அரசியல், இராணுவ வறுமையின்வெளிப்பாடிது. வியட்னாம்- அமெரிக்கப்போரில் டனாங் வீழ்ந்தது, நொம்பென் வீழ்ந்தது என்ற செய்திகள் வியட்கொங்கின் வெற்றிச்செய்திகளாக 1970களின் நடுப்பகுதியில் வெளிவந்த வீரகேசரியின் முற்பக்கங்களை அலங்கரித்திருந்தன. ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு விடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சி என பல தமிழர்கள் குழம்பிப்போயிருப்பார்கள். உண்மையில் இது தமிழ் பாசிசத்தின் வீழ்ச்சி.
மக்களின் அபிலாசைகள் மீதல்லாமல் தமது அதிகார அகங்கார நப்பாசைகளைக் கொண்ட இயக்கத்தின் வரலாறு எவ்வாறான துன்பியலில் முடிவுறும் என்பதற்கு தற்போதைய நிகழ்வுகள் சாட்சி. முதலில் துன்பத்தில் உழலும் மக்கள் பற்றி கொஞ்சமேனும் பிரக்ஞை வேண்டும். ஒன்றிரண்டு ஆண்டுகளல்ல 30 ஆண்டுகள் இந்த மக்களின் வாழ்வு பந்தாடப்பட்டு வந்திருக்கிறது அல்லது பகடைக்காயாக பாவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனைஆயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எத்தனை லட்சம் மக்கள் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்றார்கள். வாழிடங்களுக்கும் சொத்துக்களுக்கும் நேர்ந்த நாசங்கள் இங்கு கணக்கிடமுடியுமா. போராட என்று புறப்பட்டவர்களுக்கு கொஞ்சமேனும் மக்கள் பற்றிய அக்கறை இருந்திருக்குமானால் தமிழ் சமூகம் இன்றைய அவல நிலையை எய்தியிருக்காது.
இன்றும் தமிழ்மக்களின் வாழ்வுப்பரிமாணங்கள் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுரைகள் ஆவணச்சித்தரிப்புக்கள் வெளிவருகின்றன. ஆனால் சொந்த நிலத்தில் தமிழ் சமூகம் நொந்து நூலாகிவிட்டது. இன்னும் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் தமிழ் சமூகத்தின் நிலை என்னவாகும் என்பது நினைவுகளை நெருடுகிறது.போராட்டம் என்பது சுதந்திரம் சுயமரியாதையுடன் கூடியகௌரவமான வாழ்விற்காகவே. ஆனால் இங்கு நடந்திருப்பது என்னவோ இருந்த சுதந்திரத்தையும் இழந்த நிலையே. இதற்கு சிங்களவர்கள் மீதோ அல்லது பௌத்த சிங்கள மேலாண்மையின் மீதோ மாத்திரம் குற்றம் சொல்வதை விட பாசிசமாக மாறிய தமிழ் தேசியத்தின் குரூரம் மீதும் தான் குற்றம் சொல்ல முடியும்.
சமூகம் என்ற ரீதியல் அதன் பெறுமதியான அத்தனை விடயங்களையும் அவர்கள் அழித்தார்கள். இறுதியாக சமூகத்தை குற்றுயிராக நிறுத்தினார்கள் .இந்த நிலையில் தன்னும் அவர்களால் ஆக்கப+ர்வமாக சிந்திக்க முடியவில்லை அல்லது சிந்திக்க மறுக்கிறார்கள். இதற்கு மேலும் சமூகம் துன்புறமுடியாது. மீள் கட்டியெழுப்பமுடியாத அளவிற்கு வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. எனவே சர்வதேச அணுசரணையுடன் இணக்கப்பாடு விட்டுக்கொடுப்புடன் தமிழ்மக்களின் குறைந்த பட்ச அடிப்படை அபிலாசைகளைத் தன்னும் அடைவதற்கான செயற்பாடு;களை முன்னெடுப்பதற்கான திராணியோ நேர்மையோ அறிவோ அற்றவர்களாகவே காணப்படுகிறார்கள் .
ஆக்கபூர்வமாக யாரேனும் சிந்திப்பார்களால் அவர்கள் உடல் மீதியின்றி அழிக்கப்படுகிறார்கள்.அவ்வாறு சிந்திப்பவர்கள் “கொல்லப்படக் கடவர்” என்பதே எமது சமூகத்தில் நிலவும் எழுதப்படாத விதியாகும். எனவே எமது சமூகத்தில் புதியதேடலுடன், சமூக பிரக்ஞையுடன் யாரும் வெளிக்கிளம்பி வருவது உயிரைப்பணயம் வைக்கும் , ஊரை குடும்பத்துடன் துறக்கவேண்டிய தியாகத்திற்குரிய செயலாகும் .எமது சமூகப்பிரஜை ஒருவன் சிந்திக்குமாற்றல் கொண்டவனாக மனித உரிமைவாதியாக கவிஞனாக ,இலக்கிய வாதியாக இருப்பது மிக மிக ஆபத்தானதாகும் .வன்னியின் தெய்வங்களை சிரமேற்கொள்பவனாகவும் அதன் விருப்பங்களுக்கேற்ப தாளம் தப்பாமல் ஆடுபவனாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு ஆடுவதற்கு சன்மானமாக சில போகப்பொருட்கள், வழங்கப்படும். சில பொற்காசுகள் விட்டெறியப்படும். புலிகளின் உறுப்பினர்கள் மத்தியகால ரோமானிய அடிமைகள்போல வாழப்பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சண்டையிட்டு மடிவதை இந்த போகித்தொண்டரடிப்பொடிகள் ஐரோப்பிய வடஅமெரிக்க நாடுகளில் பிரசாரம் செய்து செகரியங்களை அனுபவித்துக்கொண்டு திரிகிறார்கள்.பலாத்காரமாக பிடிக்கபட்டு பங்கர் பொறியில் வைக்கபட்ட எமது மக்களின் பிள்ளைகள் மரணிப்பதற்கு நியாயம்சொல்லித் திரியும் சிவாஜிங்கம் ,ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன் வகையறாக்களைதான் யாம் இங்கு குறிப்பிடுவது. யுத்தமுனை காப்பரண்களில் பலாத்காரமாக சிறைவைக்கப்பட்ட- பொறியாக மாற்றப்பட்ட சிறுவர் சிறுமியரின் எதிர்காலத்தை விற்று ஐரேப்பாவில் சுதி பண்ணித் திரியும் இந்த திருக்கூட்டத்தை தமிழர்கள் முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.
'பொங்குதமிழ் என்று ஹிட்லர் பாணிச் சத்தியப்பிரமாணம் செய்யும் உலகத் தமிழர் கூட்டம் நேர்த்தியாக உடையணிந்து பொழுதுபோக்காக இதனை நடத்துகிறது. ஆனால் உருவழிந்து மனம் பேதலித்து மரணிக்கும் எம் சின்னஞ்சிறுசுகள் பற்றி இந்த பிரகிருதிகளுக்கு கொஞசமேனும் கருணை உண்டா. புலி போல் வேசமணிந்து வருவது இந்த பிரகிருதிகளுக்கும் இவற்றின் பெண்டுபிள்ளைகளுக்கும் உற்றசுற்றத்திற்கும் டிஸ்னிலாண்ட- மிக்கிமௌஸ-; ரெடிபியர் விளையாட்டு. இங்கு வாழ்க்கை கந்தலாகிப் போன பெற்றோரின் பிள்ளைகளின் அவலமானதும் அனாதரவானதுமான மரணம். இந்த மரணங்களில் தனது அதிகார அகங்காரத்தை நிலை நிறுத்த முயலும் பாசிசத் தலைவனின் படத்தை இவர்கள் காவித் திரிகிறார்கள் .இங்கு தமிழர்களின் வாழ்வில் விடிவென்று எதுவும் கிடையாது. அது குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடக்கிறது.
இந்த அவலவாழ்வை எள்ளி நகையாடும் புலம்பெயர்ந்த வண்ண விளையாட்டே பொங்கு தமிழ" ஊரிலுள்ள தமிழர்கள் தாம் வாழ்வது போல் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சுதந்திரமாக கௌரவமாக வாழ்வதற்கு தாம் ஏதாவதுசெய்கிறோமா என்பதை தம் மனச்சாட்சியிடம் இவர்கள் கேட்கவேண்டும்.தனித்து விடப்பட்ட வதை கூடங்களில் போல் தொடர்பின்றி வாழும் எம்மக்கள் ஹிட்லர்கால யூதர்கள் போன்று மஞ்சள் நட்சத்திரங்களை அணியவில்லையே தவிர, மற்றப்படி சகல துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு அழிவின் விழம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சமூகத்தைப்பற்றி கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்துடன் சிந்திப்பீர்களானால் நீங்கள் மனிதர்கள்.
தமிழ்நியூஸ்வெப்
Monday, June 23, 2008
ஜானக பெரேராவின் அறிமுகம் தமிழருக்கான தவறான சமிக்ஞை
இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை "ஒரு குட்டையில் ஊறிய மட் டைகள்தாம்.'
இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினரான தமிழர் கள் மீது தங்களது பேரினவாத பௌத்த, சிங்கள மேலாண்மை அதிகாரத்தைச் செலுத்தி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் தமது மேலாதிக்கப் போக்கில் என்றுமே பின்னின்றமை கிடையாது. அதுவே கடந்த அறுபது ஆண்டுகால "சுதந்திர இலங்கையின்' வரலாறாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மாற்றோ, வேறு பாடோ கிடையாது. இதுவே இன்றும் சரித்திரமாக நீடிக் கின்றது.
இப்போதும்கூட, ஈழத் தமிழர்களின் இராணுவ ரீதி யான வலிமையைப் படை நடவடிக்கைகள் மூலம் சித றடித்து, உரிமைகளுக்கான அவர்களது பேரம்பேசும் வலிமையைச் சின்னாபின்னமாக்கி, அவர்களை நிரந்தர அடிமைகளாக்கும் திட்டத்துடன் தமிழர் தாயகத்தின் மீது பெரும் போரைத் தொடுத்து நிற்கிறது ஆளும் கட்சி.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவோ வெளிவேடத் துக்கு சமரசம் பேசுகிறது. அமைதித் தீர்விலும், சமாதா னப் பேச்சிலும், இணக்கப்பாட்டிலும் ஆர்வம் உள்ளது போல இன்று அது காட்டிக் கொண்டாலும், அதன் ஆட் ஒடுக்கி, அடிமைப்படுத்துவதாகவே இருந்தது என்பதை நாம் மறந்து விடமுடியாது.
இந்தச் சமயத்திலும் கூட, சமாதானத் தீர்வில் ஆர்வம் உள்ள கட்சி போலத் தன்னைக் காட்டிக் கொண்டு மறுபுறம் இராணுவ வெறிப் போக்கில் தீவிரம் கொண்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி பிழையான சமிக்ஞையை அது வெளிப்படுத்துகின்றது.
எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முதலமைச்சர் வேட்பாளராக மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை முன்னிறுத்தப் போகின்றது. இனி அக்கட்சியின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளராகவும் அவரே பணிபுரியப் போகின்றார் என் றும் கூறப்படுகின்றது.
இது, தமிழர் தரப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி கொடுக் கும் ஓர் அபாய எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டிய விடயமாகும்.
தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத் துக்கு எதிரான சிங்களப் படையெடுப்பின் குறியீடாகக் கருதத்தக்கவர் ஜானக பெரேரா. அவரது கடந்த கால செயற்பாடுகள் அதனை உறுதிப்படுத்தி, நிரூபிப்பவை.
1995 96 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். குடா நாட்டை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின்னர் அச்செழு ஊரெழுப் பகுதியில் தலைமையகத்தைக் கொண்டு செயற்பட்ட 51 ஆவது படையணிக்கு (டிவிஷனுக்கு) பொதுக் கட்டளையிடும் அதிகாரியாக இவர் பணியாற்றினார். அப்போது தான் இவரது அதி காரத்தின் கீழ் இருந்த யாழ். குடாநாட்டுப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் கைதா கிப் பின்னர் காணாமற் போனார்கள். பின்னர் இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்தி ருந்த பாரிய செம்மணி நிலப் பகுதியில் ஓரிரு இடங்க ளில் நடத்தப்பட்ட தோண்டுதல்களின் போது சுமார் இரண்டு டசின் மனித எலும்புக் கூடுகளும் மனித சடலங்களின் எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. பல நூற்றுக்கணக்கில் காணாமற் போனவர்கள் இந்த செம்மணி யில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று இன்றும் கருதப்படு கின்றது.
அதிஷ்டவசமாக ஜெனரல் ஜானக பெரேரா யாழ். குடா நாட்டிலிருந்து குறுகிய காலத்தின் பின் இடமாற்றம் செய்யப்பட்டமையை அடுத்து, ஆள்கள் கடத்திக், காணாமற் போதல் அங்கு உடனடியாக முடிவுக்கு வந்தது. அது இப்போது அங்கு மீண்டும் மோசமாகத் தலைதூக்கியிருக்கின்றமை வேறு விடயம்.
ஜெனரல் ஜானக பெரேராவின் அதிஷ்டமோ, என்னவோ அப்போதைய அந்த மனித குலத்துக்கு எதிரான கொடூ ரங்கள் பற்றிய விடயங்களில் சட்டச் சான்றுகளும், சாட் சிக ளும் இல்லாமல் போனதால் அவர் நீதியின் முன் இலகுவாகச் சிக்காமல் தப்பிப் பிழைக்க முடிந்தது.
பின்னர் மீண்டும், 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவுப் படைத்தளம் புலிகள் வசம் வீழ்ந்து, குடாநாட்டை அரசுப் படைகள் தக்கவைத்திருப்பது கேள்விக்குறியானபோது, மீண்டும் யாழ். குடாநாட்டின் படைத்தளபதியாகப் பொறுப் பேற்று 2000 மேயில் யாழ். சென்றார் ஜானக பெரேரா. அவர் அந்தப் பொறுப்பை ஏற்று சில தினங்களில், எந்தவித நியாய மான காரணங்களோ, விளக்கங்களோ வெளிப்படுத்தப் படாமல், யாழ்ப்பாணத்திலிருந்து ஈழத் தமிழரின் தேசியத் தைப் பிரதிபலிக்கும் வகையில் பிரசுரமாகும் "உதயன்' நாளிதழ் அரசினால் "சீல்' வைத்து மூடப்பட்டது. அந்த ஊடக அடக்குமுறைக்கு அப்போதைய அரசை சிபார்சு செய்து வழி நடத்தியவர் ஜெனரல் ஜானக பெரேராதான் என்பதும் ஊர றிந்த இரகசியம்.
அதற்கு முன்னர் சில காலம் அவர் மட்டக்களப்பு மாவட் டப் படைத் தளபதியாக இருந்தபோதும் அங்கும் அப்போது தமிழ் இளைஞர்கள் கடத்தி அல்லது கைது செய்யப்பட்டுக் காணாமற்போகும் சம்பவங்கள் தாராளமாகவே அரங்கேறின.
தமிழர் மீதான இராணுவக் கொடூர அழுத்தத்தின் குறியீ டான சின்னமான ஜெனரல் ஜானக பெரேராவை இந்தச் சமயத்தில் முன்னுக்குக் கொண்டு வருவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மக்களுக்கு பூடகமாக ஒரு தகவலை முன்வைக்க முயல்கின்றது போலும். ஆனாலும் அதுவே மறுபுறத்தில் தமிழர்களுக்கும் ஒரு முக்கிய செய்தியை உரைகின்றது என்பதைத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது.
தீவிர இராணுவ அராஜகத்தில் முனைப்புக் கொண்ட வரான கடும் போக்காளர் ஜெனரல் ஜானக பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராகவும் நியமிக்கப்படவிருக்கின்றமை, ஐ.தே.கட்சியைப் பொறுத்தவரை "மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகின்றது' என்பதையே கோடிகாட்டுகின்றது என்பது தெளிவு.
இனப்பிரச்சினைக்கு, விட்டுக்கொடுப்புடன் தமிழர்களுக்கு நியாயம் செய்வதே நீதியான நடைமுறை என்ற வாதத்தை சில காலம் வெளிப்படுத்தி வந்த ஐ.தே.க. அந்தக் கோஷம், பௌத்த சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கையில் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்டு, தனது சமரச வேடத்தைக் கலைத்து, மீண்டும் பழையபடி தனது உண்மையான பேரினவாத முகத்தைக் காட்டத் தயாராகி விட்டது. அதற்கான கட்டியம் கூறலே ஜெனரல் ஜானக பெரேரா வின் அரசியல் அறிமுகமாகும்.
Sunday, June 22, 2008
தீர்க்கமான கட்டத்தில் அரசுபுலிகள் உறவு; பேச்சுக்கு வருவதைத் தவிர அவர்களுக்கு வேறு தேர்வு இல்லை
விடுதலைப்புலிகளின் பலம் கிழக்கில் தற்போது குறைவடைந்து விட்டதால் மிக விரைவில் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருக்கும். வடமாகாணம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் போன்று அங்கும் தேர்தல் நடத்தப்படும். 9/11 இற்குப் பின்னரும் கிழக்கை இழந்தபின்னரும் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப விடுதலைப்புலிகள் தாங்களே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய நிலைமை உள்ளது என்று நிறுவன அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சென்னையில் "இந்து' பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது ஆரம்ப உரையில் தெரிவித்ததாவது;
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் இப்போது தீர்க்கமான கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம். இப்போது கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் இடம் பெற்று கருணாவின் உதவியாளராக இருந்த பிள்ளையான் முதலமைச்சராகியுள்ளார். சிறுவராக படையணியில் சேர்ந்து விடுதலைப் புலிகளூடாக உயர் மட்டத்திற்கு வந்தவர். ஆனால் பாதுகாப்பு படையினருடனான மோதலின் போது கருணா குழு எம்முடன் இணைந்தது. கிழக்கில் விடுதலைப் புலிகளின் பலம் பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் நாம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தினோம். பின்னர் மாகாணசபைத் தேர்தல் இடம் பெற்றது. பிள்ளையான் வெற்றி பெற்றார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையானும் அரசாங்கமும் வெற்றி பெற்றனர். தற்போது அவர் முதலமைச்சர். ஏனைய முதலமைச்சர்கள் போன்று தற்போது அவர் பிரபல்யம் பெற்று வருகிறார். அண்மையில் முதலமைச்சர்கள் பேரவைக்கு அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகளவிலான விளைவுகளுக்கு இது இட்டுச் சென்றுள்ளது.
முதலாவதாக கிழக்கு மாகாணத்தில் இது இன ரீதியான பதற்றத்தை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கையிலுள்ள சகல மாகாணங்களிலும் கிழக்கே இன மோதலின் வழமையான தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனெனில் 1/3 தமிழர்களும் 1/3 முஸ்லிம்களும் 1/3 சிங்களவர்களும் அங்குள்ளனர். அவர்களிடையே சில வித உறவுகள் எதிர்காலத்துக்கான சகுனமாக உள்ளது. முதற்தடவையாக மூன்று சமூத்தவர்களுக்கு மிடையிலான மிகவும் நெருக்கடியான உறவு தொடர்பான பிரச்சினையை நாம் கையாண்டு கொண்டிருக்கிறோம். முதலாவது முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்த்த முஸ்லிம்கள் சிறியளவில் விசனமடைந்தனர். ஆனால் அரசு சரியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது வடமாகாணத்திற்கு ஒரு செய்தியாகும், அவர்கள் ஜனநாயக வழியில் பிரவேசிப்பதற்கான செய்தியாகும். விடுதலைப்புலிகள் போன்ற அமைப்போ அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளோ தமது சொந்த முதலமைச்சரை வடக்கிற்கு கொண்டிருக்கலாம். ஏனெனில் வடக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். தெற்கிலுள்ள மாகாணங்கள் போன்றே வடக்கிற்கும் கிழக்கிற்கும் இரு மாகாண சபைகள் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் அமுனுகமவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு.
வடக்கு, கிழக்குமாகாணங்களின் இணைப்பு தொடர்பான நிலைமை என்ன?
இலங்கை இந்திய உடன்படிக்கையில் நிரந்தர இணைப்பு இடம் பெற்றிருக்கவில்லை. தற்காலிக இணைப்பே இடம் பெற்றிருந்தது. கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அவர்களே இணைந்திருப்பதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இனவாரியான தரவுகளின் பிரகாரம் அவர்கள் இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது மிகத் தெளிவானது.
உடன்படிக்கை கைச்சாத்திட்டதை தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ராஜிவ் காந்தியுடன் அருகிலிருந்து மாநாட்டில் கருத்துதெரிவித்த ஜே.ஆர்.ஜயவர்த்தனா நானும் இணைப்புக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். பின்னர் தற்காலிக இணைப்பு இருந்தது. அது கூடுதலாகவோ குறைவாகவோ அரசின் மனப்போக்கில் தங்கியிருந்தது. இப்போது அது அரசியலமைப்பு ரீதியானதல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இணைப்பை சிங்கள மக்களும் முஸ்லிம் சமூகமும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது புலிகளின் நோக்கத்திற்கு அடியாக இருந்தாலும் நிலைமை தெளிவாகியுள்ளது. ஆதலால் அரசின் நிலைப்பாடானது மிகத் தெளிவானதாகும்.
வடக்கு மாகாணம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் போது கிழக்கில் பயன்படுத்திய சூத்திரத்தையே நாம் பின்பற்றுவோம். தேர்தல் இடம் பெறும். யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் வடக்கின் முதலமைச்சராவார். மீண்டும் நாம் பிரிட்டிஷாரின் பழைய முறைமையான 9 மாகாண முறைமைக்கு செல்வோம். இந்தியா இலங்கை உடன்படிக்கை 8 மாகாணங்களாக மாற்றப்பட்டிருந்தது. ஆதலால் அரசு அந்தத் திட்டத்தைப் பின்பற்றுகின்றது.
வடக்கில் இடம் பெறும் மோதல்களின் நிலைமை என்ன?
புலிகள் முற்றுகைக்குள்ளாக்கப்படும் ஒவ்வொரு தடவையும் கிழக்கிலிருந்து படையணிகள் வந்துவிடும். அடிப்படையில் வடக்கிலுள்ள துருப்புகளின் எண்ணிக்கை குறைவானதாகும். கருணா அகன்றபின்னர் பாரியளவிலான யுத்தமிடும் படையை வைத்திருப்பது புலிகளுக்கு கடினமான விடயமாக இருந்தது. நடவடிக்கைகளின்போது அவர்கள் அதிகளவு ஆயுதங்களை இழந்து விட்டனர். அதன் பின் புலிகளின் சண்டையிடும் ஆற்றல் குறைந்து விட்டது. அதேசமயம் அரச பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பேர்லினில் கிட்லரின் பதுங்கு குழிகள் மீதான தாக்குதல் குறித்து நான் வாசித்துள்ளேன். ரஷ்யர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்து வந்தனர். பேர்லின் உதாரணத்தின் பிரகாரம் மோதல்கள் வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. ஒரு உப எல்லைக்குள் ஊடுருவினால் நேரடியாகவே பேர்லினுக்குள் பிரவேசிக்க முடியும். இங்கு நான்கு முன்னரங்குகளில் மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஒரு தீர்க்கமான (காரணி) நான் நினைக்கிறேன். எந்தவொரு முன்னரங்க நிலை வீழ்ந்தாலும் முல்லைத்தீவுக்கு செல்வதற்கு வழி வகுத்து விடும். இது பேர்லினில் இடம் பெற்றதைப் போன்றதொன்றாகும். இறுதியான, தீர்க்கமான மோதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த முனைகள் இழக்கப்பட்டு விட்டால் உதாரணமாக முகமாலை போன்று அது ஒரு முக்கியமான நிலை, முகமாலை நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் நேராக முல்லைத்தீவுக்கு செல்ல முடியும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பரிமாணம் என்ன?
பிரபாகரனின் விடுதலைப்புலிகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்படுவார்களென நீங்கள் நினைக்கிறீர்களா?
முன்னர் இந்த இரு மாகாணங்களிலும் 8 மாவட்டங்களை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இப்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கிழக்கை இழந்ததால் இதுவென கூறுகிறேன். கருணாவும் கிழக்கும். அவர்களுக்கு வேறுதெரிவுஇல்லை. விரைவில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டியநிலை உள்ளது. சர்வதேச சமூகமும் அவர்களுக்கான நிதி வளங்களைக் கட்டுப்படுத்திவிட்டது. 9/11 இற்குப் பின்னர் (அமெரிக்க உலக வர்த்தக நிலையத் தாக்குதல் ) அவர்கள் பயங்கரவாதப்பட்டியலில் அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா என்பன அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சகல இடங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு ஆதரவளித்த சிலரும் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சமாதான வழியில் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முன் முயற்சிகள் குறித்தும் உங்கள் நாட்டின் முன்னால் இருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் தொலைநோக்கு குறித்து எவ்விதம் தங்களைப் புரிந்துகொண்டீர்கள்?
அடிப்படையில் இந்த இனப்பிரச்சினையில் இரு உப விடயங்கள் உள்ளன. அதிகாரப் பகிர்வு அலகு ஒன்று மற்றையது பகிர்ந்தளிக்கப்படவுள்ள அதிகாரங்கள் .
அந்தக் கேள்விகளை மையப்படுத்தியதே சகல விடயங்களுமாகும். அதிகாரப் பகிர்வு அலகுப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. வேறு வார்த்தையில் சொன்னால் நாம் மீண்டும் 9 மாகாணங்களுக்குச் சென்றுள்ளோம். இது பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டதொன்றாகும்.
பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அதிகாரங்களைப் பொறுத்தவரை நாம் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு செல்ல முடியும்.
அதாவது 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு செல்ல முடியும். அவை இந்திய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டவை போன்றதொரு பிரதிமையாகும். இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் நாம் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் அது நியாயமானதாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல் இந்தியாவும் புகார் தெரிவிக்காது. ஏனெனில், அது தனது சொந்த மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரங்களாக இருக்கும். இது ஜெயவர்த்தனாவின் திட்டமாகும். இது தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடும்.
அதுமிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாகும்.
இந்தத் தொலைநோக்கில் ஜனாதிபதி ஈடுபட்டு உள்ளாரா?
ஜனாதிபதி முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளார். நிரம்ப அழுத்தங்கள் அவர் தற்போதும் முழு அளவிலான ஈடுபாட்டுடன் இருக்கிறார்.
Tuesday, June 17, 2008
வவுனியா தற்கொலையின் மர்மமும் அரசின் யுத்தியும்
சரத் பொன்சேகா தனது இலக்கை அடைய புலிகள் அனுமதிப்பார்களா?
இவர்கள் தவிர அமைச்சர்கள், படையணிக் கட்டளைத் தளபதிகள் என ஒவ்வொருவரும் சுமார் ஒன்றரை வருடங்களாக தாங்கள் விரும்பியபடி இவ்வாறு ஒவ்வொரு சூளுரைப்புகளையும் காலக்கெடுக்களையும் விடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், களமுனைகளில் இராணுவத்தினர் எதிர்பார்க்கும் வெற்றிகளை அடைந்து கொள்ள புலிகள் இடமளிக்காத நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வடபோர் அரங்கைப் பொறுத்தவரை புலிகள் எக்காலத்திலும் பலமாகவே உள்ளனர் என்று கூறி வடபோரரங்கில் இனிமேல் ஏற்படவிருக்கும் தோல்விகளுக்கும் பிராயச் சித்தம் தேடுவதற்கு முற்பட்டிருக்கும் சரத் பொன்சேகா, மன்னார் களமுனை மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இன்னமும் இழந்துவிடவில்லை என்றே தெரிகிறது.
மன்னார் களமுனையில் அடம்பனில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அடம்பன் சந்தி எனப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
அடம்பனைக் கைப்பற்றி அங்கு தமது வலுவான படைத்தளம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பது இராணுவத்தினருக்கு சுமார் ஒருவருடமாக இருந்துவரும் ஆசையாகும். அடம்பனைக் கைப்பற்றி விட்டதாக இராணுவத்தினர் அறிவிப்பது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் அடம்பனைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத்தினர் அறிவித்திரு;நதனர். ஆனால், உண்மையில் அடம்பன் நகர மையப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
இறுதியாக தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முதல்நாளன்று அடம்பன் நகரைக் கைப்பற்றும் பாரிய நடவடிக்கை இடம்பெற்று அது படுதோல்வியில் முடிந்தது. இந்நிலையிலேயே மீண்டும் அடம்பனைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது. உண்மையில் அடம்பனில் நடப்பது என்ன என்பது குறித்து இனிப் பார்க்கலாம்.
பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்ட 58 ஆவது படையணியைச் சேர்ந்த ஒட்டுமொத்த துருப்பினரும் அடம்பன் நகர மையப் பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சுற்றி வளைத்திருந்தனர்.
58 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் கேணல் சுஜீவ தலைமையில் உயிலங் குளத்தில் இருந்து கட்டுக்கரைக் குளம், மணல் மோட்டை, பாலைப்பெருமாள் கட்டு, இலந்தைவான், இத்திக் கண்டல், கள்ளிக் குளம் ஊடாக முன்னேறி அடம்பன் சந்தியை அண்மித்துள்ள மாந்தோட்டையில் நிலைகொண்டிருந்தது. அடம்பன் சந்தியில் இருந்து மாந்தோட்டை மேற்காக 800 மீற்றர் தூரத்திலேயே அமைந்திருப்பதாக இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.
58 ஆவது படையணியின் இரண்டாவது பிரிகேட் கேணல் சஞ்சய வணிகசிங்க தலைமையில் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து மாந்தை, வேட்டை முறிப்பு, கொல்லன் குளம் ஊடாக முன்னேறி வண்ணாங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்தது. அடம்பன் சந்தியிலிருந்து கிழக்காக ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திலேயே பாப்பா மோட்டை அமைந்துள்ளது.
58 ஆவது படையணியின் மூன்றாவது பிரிகேட் உயிலங்குளத்தில் இருந்து கடாவெட்டிக் கண்டல், பாலைக்குழி ஊடாக முன்னேறி அடம்பன் நகருக்கு தெற்காக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது.
அடம்பனைக் கைப்பற்றும் நோக்கில் சுமார் ஓரு வருடமாக இந்த சுற்றிவளைப்பை 58 ஆவது படையணி மேற்கொண்டிருந்த போதும் அந்த இலக்கை அடைவது இராணுவத் தரப்பிற்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. மன்னார் களமுனையில் இதுவரை நடைபெற்ற சமர்களில் அடம்பன் நகரைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்ற சமரே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது.
இந்நிலையில்தான் கடந்த 4 ஆம் திகதி இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வன்னிக் கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அடம்பன் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கைத் திட்டத்தை இறுதி செய்தார் என்று இராணுவத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. அவரது திட்டப்படியே அடம்பனில் கடந்த 8; ஆம் 9 ஆம் திகதிகளில் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டது.
கேணல் சுஜீவ தலைமையிலான 58-1 பிரிகேட் படையினரே இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். மாந்தோட்டையில் இருந்து நடுக்கண்டல் ஊடாக அடம்பன் சந்தி நோக்கி முன்னேறுவதே இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம். இந்த பிரிகேட்டில் உள்ள 10 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினர் மேஜர் சாரத சமரக்கோன் தலைமையிலும், 8 ஆவது கெமுனு வோச் படையினர் லெப். கேணல் சமிந்த ஜெயசுந்தர தலைமையிலும், 8 ஆவது சிங்க றெஜிமென்ட் படையினர் லெப். கேணல் ரமேஷ் பெர்னாண்டோ தலைமையிலும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டனர்.
இரண்டு முனைகளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றது. முதலாவது முனை மாந்தோட்டையில் இருந்து நடுக்கண்டல் ஊடாகவும் இரண்டாவது முனை மாந்தோட்டையில் இருந்து மணிப்புல் குளம் ஊடாகவும் முன்னேறி அடம்பன் நகரைச் சென்றடைவதென திட்டமிடப் பட்டது.
இந்த திட்டத்தின்படி 8 ஆம் திகதி காலை 4.30 மணியளவில் ஆரம்பித்த தாக்குதல்கள் இரண்டாவது நாளான 9 ஆம் திகதியும் தொடர்ந்தது. 9 ஆம் திகதி காலை 8 மணியளவில் அடம்பன் நகரப்பகுதியை இராணுவத்தினர் சென்றடைந்தனர். ஆட்லறி, மோட்டார்கள், பல்குழல் பீரங்கிகள் என்பனவற்றின் சூட்டாதரவுடனும் விமானத் தாக்குதல் ஆதரவுடனும் இடம்பெற்ற இந்த முன்னேற்ற முயற்சியில் நடுக்கண்டல் பகுதி ஊடாக முன்னேறிய இராணுவத்தினர் பொறிவெடிகளில் சிக்கிக் கொண்டனர்
இந்த பகுதியில் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரம் புலிகளைத் திசைதிருப்பும் நோக்கில் பாலம்பிட்டியை அண்மித்து நிலைகொண்டிருந்த 57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் இராணுவத்தினர் ஒரு திசைதிருப்பும் தாக்குதலை மேற்கொண்டு பலத்த எதிர்ப்பைச் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மடுப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருந்தபோது அடம்பன் சந்தியை உள்ளடக்கிய பகுதியை விட்டுக் கொடுக்க முன்வராத புலிகள், மடுவில் இருந்து வெளியேறியதன் பின்னர் அடம்பன் நகரிலிருந்து பின்வாங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. மடுவில் புலிகள் இல்லாத நிலையில் அடம்பனுக்காக தமக்கு சாதகமில்லாத ஒரு இடத்தில் நின்றபடி அதிக விலை கொடுப்பதற்கு புலிகள் தயாராக இல்லை என்பதே உண்மையாகும்.
அதேவேளை, மடுவிலிருந்து வெளியேறிய பின்னர் மன்னார் களமுனையில் புலிகள் தமது போர்த் திட்டங்களை மாற்றியமைத்துள்ளனரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில், மடுவில் புலிகள் நின்றபோது மடுவிற்கான விநியோக மார்க்கமாக இருந்த பாலம்பிட்டியை விட்டும் புலிகள் அதிக எதிர்ப்பின்றி பின்நகர்ந்துள்ளனர்.
இந்நிலையில்தான் “மிகக்குறுகிய தூர நடவடிக்கை” ஒன்றைச் செய்து அடம்பன் நகருக்கும் இராணுவத்தினர் சென்றிருக்கின்றனர். மாந்தோட்டையில் இருந்து 800 மீற்றர் தூரத்திலுள்ள அடம்பன் நகரை சென்றடைய முடியாமல் சுமார் ஐந்து மாதங்களுக்கும் இராணுவத்தினர் திணறிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 800 மீற்றர் பகுதியைத்தான் இப்போது இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 5 மாத காலமாக அடம்பன் நகரை தக்கவைத்த புலிகள் திடீரென அடம்பன் நகரை கைவிடுமளவுக்கு வந்துள்ளனர் எனில் நிச்சயமாக அதற்கு வலுவான காரணங்கள் இருக்கும். புலிகள் எப்போதும் தமக்கு பாதகமான களநிலமைகளில் நின்று போரிட்டது கிடையாது. ஆனால், சாதகமான நேரம் வரும்போது மரண அடி கொடுக்கவும் புலிகள் தவறியதில்லை. அந்த வகையிலேயே அடம்பன் நகரிலிருந்தும் புலிகள் விலகியுள்ளனர்.
புலிகளின் ஆயுதவளத்தைக் குறைக்க திட்டம் வகுத்து அதேதிட்டத்தில் தாமே சறுக்கி விழுந்த கதையாகத்தான் இராணுவத்தின் நிலை உள்ளது.
புலிகளின் இந்த விலகலானது இராணுவத்தினர் அடம்பனைக் கைப்பற்றி, மன்னார் களமுனையில் அகலக்கால்வைக்க வியூகம் வகுக்கின்றனரா என்ற சந்தேகமும் பலமாக எழுந்திருக்கிறது.
அதேநேரம் அடம்பன் நகரில் இருந்து விலகிய புலிகள் அதேதினத்தன்று அடம்பனை அண்மித்துள்ள கட்டுக்கரைக் குளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு கறுக்காய்குளத்தில் வைத்து மரண அடி கொடுத்துள்ளனர். கறுக்காய் குளத்தில் இடம்பெற்ற மோதல்களில் 30 இராணுவத்தினர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள புலிகள், இராணுவத்தினரின் 5 சடலங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெருமளவான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
அடம்பன் விலகலும் கறுக்காய்க்குள மரண அடியும் புலிகளின் போர்த் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதிப் படுத்தியுள்ளன. மன்னார் களமுனையைப் பொறுத்தவரை புலிகளின் தளபதிகளான கேணல் பானு, கேணல் ரமேஸ், கேணல் விதுசா, கேணல் ஜெயம், கேணல் லக்ஸ்மன் ஆகியோர் பரப்புக் கடந்தான் என்ற இடத்தில் உள்ள புலிகளின் மன்னார் களமுனைக்கான கட்டளை மையத்தில் நிலைகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடம்பனில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இடம்தான் பரப்புக் கடந்தான். பரப்புக் கடந்தானில் புலிகளின் தளபதிகள் கூடும் நிலையம் எனக்கருதப்படும் இடம்மீது கடந்த 9 ஆம் திகதி கடுமையான விமானத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படையினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
அதாவது அடம்பனிலுள்ள 58 ஆவது படையணியின் அடுத்தகட்ட நகர்வு பரப்புக் கடந்தான் நோக்கியதாகவே இருக்கலாம். அதேநேரம் மடுவிலுள்ள 57 ஆவது படையணி தற்போது மடுவை அடுத்துள்ள பெரிய மடுவையும் பள்ளமடுவையும் கைப்பற்றும் தாக்குதல்களை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கலாம்.
ஆனால், புலிகளைப் பொறுத்தவரை தற்போதைய இராணுவ நடவடிக்கையை இன்னொரு ஜயசிக்குறு சமர் என்றே அவர்கள் நோக்குகின்றனர். எனவே மன்னார் களமுனையில் இராணுவத்தினருக்கு வலைவிரிக்க மேலும் பல இடங்களிலிருந்தும் விலகி, ஓயாத அலைகள் -3 தாக்குதல் போன்று திடீரென அழித்தொழிப்பு தாக்குதல்களை நிகழ்த்தும் சாத்தியங்களும் அதிகமாகி வருகின்றன.
அதேநேரம் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியபோது குறைந்தது ஒரு வருட தொடர்த் தாக்குதல் மூலம் புலிகளின் ஆயுத வளத்தைக் குறைத்து விடலாம் என்றும் அதன்பின்னர் மன்னார் களமுனை ஊடாக வன்னிக்குள் இலகுவாகச் செல்லலாம் என்றும் இராணுவத்தினர் போட்ட கணக்கு இன்று பிசகிவிட்டது.
மன்னாரில் தொடர் தாக்குதல் நடத்தியதால் தமது ஆயுதக்களஞ்சிய சாலைகளை வெறுமையாக்கியது மட்டுமன்றி கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் அரசாங்கம் மாட்டியிருக்கிறது. ஆனால், புலிகளோ அண்மைக் காலமாக களமுனைகளில் தாரளமாக ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தி வருவதுடன் புதிய புதிய ஆயுதங்களையும் பாவனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இது இராணுவத்திற்கு பெருத்த தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தானுக்கு அவசர விஜயத்தை மேற்கொண்டு ஆயுதங்களை வாங்கிக் குவிக்க பயணிக்க – புலிகள் முல்லைத்தீவுக் கடலிற்கு தமது ஆயுதக் கப்பல்களை கொண்டு வந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி இரண்டாம் ஈழப்போரில் உள்ள+ர் தயாரிப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு யாழ் கோட்டை, மாங்குளம் இராணுவ முகாம் தகர்ப்புகளில் பெரும் பங்காற்றிய உள்ளூர் எறிகணைகளையொத்த புதிய புதிய எறிகணைகளையும் புலிகள் களமுனைகளுக்குக் கொண்டு வந்துள்ளனர். உள்ளூரில் கிடைக்கும் மிகச் சொற்ப மூலப் பொருட்களை ஒருங்கிணைத்துத் தயாரிக்கப்படும் “சமாதானம்”, “ராகவன்;” என்ற பெயரிலான புலிகளின் இந்த சக்திவாய்ந்த சிறியரக எறிகணைகள் களமுனைகளில் அதிகளவில் பயன்படுத்தப் படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் ஆயுதவளத்தைக் குறைக்க திட்டம் வகுத்து அதேதிட்டத்தில் தாமே சறுக்கி விழுந்த கதையாகத்தான் இராணுவத்தின் நிலை உள்ளது.
அதேநேரம் மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் இறுதி இலக்கு விடத்தல் தீவாகவே உள்ளது. விடத்தல் தீவைக் கைப்பற்றி கடற்புலிகளின் செயற்பாட்டை மேலும் முடக்கி, பூநகரியிலுள்ள இராணுவத்தினருடன் தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிரதான திட்டம்.
சரத் பொன்சேகா தனது இலக்கை அடைய புலிகள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, இராணுவத்தினரை காடுகளுக்குள் வரவழைத்து, அகலக்கால் விரிக்க வைத்து, மரண அடி கொடுப்பதற்கே முனைவர். அதற்கான வியூகங்களே தற்போது புலிகளால் வகுக்கப்படுகின்றன என்பதையே களமுனை நகர்வுகள் உணர்த்தி நிற்கின்றன.
-மகிழினி
நிலவரம் - ஆனி 17, 2008
சுவிஸ் முரசம்
Sunday, June 15, 2008
பயங்கரவாத முத்திரையின் கீழ் உண்மைகள் மறைந்து விடா
""உலகில் பயங்கரவாதம் என்பது ஒன்றுதான். அதில் "நல்ல பயங்கரவாதி', "கெட்ட பயங்கரவாதி' என்று இரு வகை இல்லை'' என பிரிட்டனுக்கும் மேற்குலக நாடு களுக்கும் "பயங்கரவாதம்' குறித்துப் பாடம் புகட்ட முயல் கிறார் அவர். அதுவும் அக்கரைச் சீமையில் போயிருந்து கொண்டு அவர்களுக்குப் "பயங்கரவாதம்' குறித்து அரிச்சுவடி படிப்பிக்கின்றார் அவர்.
"நல்ல பயங்கரவாதம்', "கெட்ட பயங்கரவாதம்' குறித்தெல்லாம் பேசமுன்னர் "பயங்கரவாதம்' என்றால் என்ன என்பதற்கு சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் வெள்ளைக்காரர்களுக்கு அவர், அது குறித்து பாடம் புகட்ட முயல்கிறாரா என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது.
தவிரவும் "நல்ல பயங்கரவாதம்', "கெட்ட பயங்கர வாதம்' என இரண்டு இருக்கின்றதோ, இல்லையோ ஆனால் "நல்லாட்சி', "கொடூர ஆட்சி' என இரண்டு உலகில் காலாதி காலம் இருந்து வந்திருப்பதையும், அதிலும் இந்த கொடூர ஆட்சியின் ஓர் அம்சமாக "அரச பயங்கரவாதம்' என்ற மிகக் கொடூரப் போக்கும் அராஜகச் செயற்பாடும் விளங்கி வருவது நினைவூட்டத் தக்கதாகும்.
தமது தாயக உரிமைக்காக நியாயமான சுதந்திரங் களுக்காக கௌரவ வாழ்வுக் காக இனத்தின் இருப் புக்காக தமது பாரம்பரிய வதிவிடத்தைப் பறிபோகா மல் தக்க வைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடுவது, அதுவும் சுமார் மூன்று தசாப்தகாலம் காந்திய முறை யிலும், அகிம்சை நெறியிலும், சாத்வீக வழியிலும் போராடித் தோற்றபின்னர் வேறுவழியின்றி இராணுவ நெறிமுறையைத் தேர்ந்தெடுத்துப் போராடுவது வெறு மனே "பயங்கரவாதம்' என்று வகைப்படுத்தக் கூடியது என்றால்
1770களின் மத்தியில் வெடித்த அமெரிக்க சுதந் திரப் போராட்டத்திலிருந்து அண்மையில் தனிநாட்டுப் பிரகடனத் துக்கு வழிவகுத்த கொசோவோ விவகாரம் வரை அனைத்து விடுதலைப் போராட்டங்களுமே வெறும் பயங்கரவாதமாக அர்த்தப்படுத்தக் கூடியவை யாகிவிடும்.
தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதம் கருத்துருவத்துக்குள் சிறைப்படுத்தி விட முடியாது.
ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்துக்கு எதிராக ஆயுதம் தூக்குவதும், வன் முறையில் ஈடுபடுவதும், கலகம் செய்வதும் எடுத்த எடுப்பிலேயே "பயங்கர வாதம்' என்று வர்ணிக்கப்படக் கூடியவை அல்ல.
அத்தகைய போராட்டங்களின் பின் புலத்தில் புதைந்து கிடக்கும் நியாய, அநியாயங்களின் அடிப்படை யிலேயே அந்தப் போராட்டத்தை எந்தவகைக்குள் அடக்குவது என்பதை உலகம் தீர்மானிக்கிறது.
இந்த அடிப்படையை மறந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்குல கினருக்குப் புத்தி புகட்ட முயன்றிருக் கின்றார்.
அதே சமயம் நாடு, இறைமை, ஆட்சி அதிகாரம் என்ற கவசங்களை வைத்துக் கொண்டு முன்னெடுக் கப்படும் சர்வதி காரத்தையும், ஜனநாயகத்தின் பெய ரால் மேற்கொள்ளப்படும் எதேச்சதிகாரத் தையும் உல கம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டு வாளா விருக்கும் எனவும் எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில்ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மனித உரிமை மீறல் துஷ் பிரயோகங்கள் மிக மோசமாக எல்லை மீறி இடம்பெற்று வருகின்றன. இதனை சர்வதேச அமைப்புகள் வரை பல தரப்பினரும் அடையாளம் கண்டு அம்பலப்டுத்தி வரு கின்றனர்.
"சட்டத்தின் ஆட்சி'' என்ற வெளித் தோற்றத்தில் "அரசபயங்கரவாதம்' இங்கு அப்பட்டமாக அரங்கேறு கின்றமையை உலகம் அறிந்து கொண்டிருப்பதால் அது குறித்துக் கண்டனக் குரல்கள் தீவிரமாக எழுந்துள்ளன.
அதை மூடி மறைப்பதற்காக சர்வதேச ரீதியில் தமது அரசுக்கு எதிராகப் புலிகள் ஆதரவு சக்திகள் நடத்தும் பிரசாரப் போராட்டத்தில் தாங்கள் தோற்றுவிட்டனர் என்று கதை விடவும் முயற்சிக்கிறார் அவர்.
"கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு' நோக்குவது போல இலங்கை விவகாரத்தையும் இங்கு நடப்பவற்றையும் சர்வதேசம் நுணுக்கமாக அவதா னித்துக் கொண்டிருக்கின்றது.
எது பயங்கரவாதம், எது நல்லாட்சி, எது கொடூர ஆட்சி, சட்டத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதம் எது என்பவை எல்லாம் சரியான அளவு கோலால் இன்று அளவெடுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன.
யாருக்கு இரத்தவெறி, யாருக்கு அதிகார மமதை, எவரது நடவடிக்கை கொடூரமானது என்ற கேள்விகளுக் கெல்லாம் தீர்ப்பு ஒரு நாள் வந்தேயாகும்.
அப்போது கூட உண்மை கசக்கும். அதிகப்படி என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கு அடங்காமல், நீதியின்படி என்ற அடிப்படையில் தீர்ப்பு எழுதப்படும் போது நியா யம் வெல்லும்; விதண்டாவாதங்கள் தோற்றுப் போகும்.
Thursday, June 12, 2008
அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா?
ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம்.
இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் அப்பாவிகள் படுகொலைகளுக்குப் பதிலடியாகவே தென்னிலங்கையில் அப்பாவிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற நிலைப்பாடு உண்மையானால் அது பெரும் துரதிஷ்ட வசமானதாகும்.
ஓர் அப்பாவியின் படுகொலைக்காக இன்னொரு அப்பாவியைப் படுகொலை செய்யும் "கொலை கலாசாரம்' நாகரிக உலகில் எந்தக் கோட்பாட்டின் கீழும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே அல்ல. கடும் கண்டனத்துக்கும், ஆட்சேபத்துக்கும், விசனத்துக்கும், விமர்சனத்துக்கும் உரிய போக்கு இது.
ஆனாலும் கூட இந்தக் கொடூரப் போக்கு ஏற்படக் கூடிய சூழலை இங்கு வித்திட்டு உருவாக்கி வளர்த்த பின்புலத்தையும் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது.
இவ்வாறு பழிக்குப் பழி என்ற ரீதியில் அப்பாவிகளின் உயிரைக் காவு கொள்ளும் போக்கு எவ்வளவு தூரம் கண்டிக்கப்படுகின்றதோ, அதேயளவு தூரத்துக்கு இத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுத்த அகோரச் செயற்பாடுகளும் கண்டிக்கப்பட வேண்டும்.
அப்பாவித் தமிழர்கள் மீதான இனவஞ்சிப்புத் தாக்குதல்கள் என எல்லாளன் படை அணி வரிசைப்படுத்திப் பட்டியலிட்டிருக்கும் கொடூரங்கள், தமிழர் தாயகத்தில் தினசரி அரங்கேறி வரும் துன்பியல் நிகழ்வுகள்தாம். தெற்கில் மூடி மறைக்கப்படும் பரகசியங்கள் இவை.
இந்தக் கோர நிகழ்வுகளை ஒட்டிப் பின்வரும் அவதானிப்புகள் இந்தச் சமயத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகின்றன.
தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களின் கொடூரங்களையும், கோரங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டி உலகுக்கும் தென்னிலங்கைக்கும் மனதைத் தொட வைக்கும் விதத்தில் உருக்கமான செய்திகளை வெளியிடும் தென்னிலங்கை ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும், தமிழர் தாயகத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இதேபோன்ற கொடூரங்களை மூடி மறைத்து அமுக்கி விடுகின்றன.
அல்லது அவை எல்லாம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் என்று திரிப்பு வேலை செய்து சித்திரித்து ஒதுக்கி விடுகின்றன.
இத்தகைய போக்கு மூலம் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மேற்படி கோரங்களையும் கொடூரங்களையும் சம்பந்தப்பட்டோர் தொடர்ந்தும் இழைப்பதற்கான நியாயப்பாட்டை உருவாக்கித் தரும் பெரும் தவறை சர்வதேச ஊடகங்களும், தென்னிலங்கை ஊடகங்களும் தொடர்ந்து இழைத்து வருகின்றன.
அதேபோலத்தான் ஐ.நாவிலிருந்து சாதாரண அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வரை ஏன் சர்வதேச நாடுகள் கூட தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பில் காட்டும் தீவிர அதிருப்திப் போக்கையும் கண்டனப் பிரதிபலிப்பையும் தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய இனவன்முறை நாசவேலைகள் விடயத்தில் வெளிப்படுத்துவதில்லை.
இத்தகைய தரப்பினருக்கு இவ்வாறான பதிலடிகள் மூலமே உண்மையை வெளிப்படுத்தி உணர வைக்கலாம் என்ற தீர்மானத்துக்கு எல்லாளன் படை அணியோ அல்லது இராணுவத் தரப்புக் கூறுவது போல விடுதலைப் புலிகளோ செல்வதற்கான புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்துக் குற்றமிழைத்தவர்களாக தென்னிலங்கை ஊடகங்கள், சர்வதேச ஊடகங்கள் மற்றும் சர்வதேச தரப்புகள் அமைவது கண்கூடு. அத்தகைய விதத்தில் ஒரு பக்கச் சார்பாக அல்லது "ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பு' என்ற போக்கில் செயற்படும் தரப்புகளும் இந்நிலைமையை உருவாக்கித் தந்தமைக்காகக் கண்டிக்கப்பட்டேயாகவேண்டும்.
சரி. அரசும் அதன் படைத்தரப்பும் சொல்வது போல தென்னிலங்கையில் அப்பாவிகள் மீதான தாக்குதல்களுக்குப் "புலிப் பயங்கரவாதிகளே' காரணமாக இருக்கட்டும். அதேபோல வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அப்பாவிகள் மீது இடம்பெறும் தாக்குதல்களுக்கும் அரசுக்குமோ, அரசுப் படைகளுக்குமோ எந்தத் தொடர்புமில்லை என்று கொழும்பு கூறுவதையும் ஒரு பேச்சுக்கு அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
அப்படியானால் கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற இடங்களிலும் அரசு குற்றம் சுமத்துவதுபோல புலிப்பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு "இன்று தாக்குதல்; நாளை நஷ்டஈடு' என்ற வேகத்தில் விரைந்து நிவாரணமளிக்கும் அரசு, தமிழர் தாயகத்தில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களுக்கு மட்டும் ஒரு சதம் தன்னும் நிவாரணம் காலம் தாழ்த்தியும் கூட வழங்காமல் அதைப்பற்றியே அலட்டிக் கொள்ளாமல் இருப்பது ஏன்? இவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடப்பதன் மூலம், இவ்விடயத்தில் அரசுத் தரப்பு சொல்லாமல் சொல்லும் செய்திதான் என்ன?
அதைப் புரிந்து கொள்ள முயல்வோமானால் தென்னிலங்கைக் கொடூரங்களுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் கருத்து நிலைப்பாடுகளை நாம் ஓரளவு புரிந்து கொண்டவர்களாவோம்.
Friday, June 6, 2008
நாட்டின் பிரிவினை வாதத்திற்கு வித்திட்ட ஜூன் 5
பிரித்தானியரிடமிருந்து சுதேசிகள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட இந்நாட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பன பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை இனப்பிரிவினைக்கு வித்திட்ட நாளாகக் கொள்ளும் போது தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த யூன் ஐந்நாம் நாளை இனப்பிரிவினைக்கு உரமூட்டிய நாளாகக் கொள்ள முடியும்.
ஆம். இந்நாட்டில் தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கும் நிம்மதிக்கும் சகோதரத்துவத்திற்கும் ஆப்பு வைத்தது தனிச்சிங்களச்சட்டம் என்பதை காலம் கடந்த நிலையில் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் என்பது இதைத்தானோ.
தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் பெரும்பான்மை இனத்தவரைத் தமிழ் மக்களின் எதிரிகளாக, அந்நியர்களாக நோக்கும் அவலம் ஏற்பட்டது ஒருபுறமிருக்க பெரும்பான்மையோர் தமிழ்மொழியையும் தமிழரையும் அந்நியராக இந்நாட்டிற்கு உரித்தற்றவர்களாக நோக்கும் நிலைக்கும் அச்சட்டம் வழிவகுத்தது என்பது வரலாற்றில் ஒரு பக்கமாக அமைந்துள்ளது.
ஒரு இனத்தின் இருப்புக்கு, உரிமைக்கு அடிப்படையாக அமைவது மொழி. ஒரு நாட்டில் தனது மொழி மூலம் ஒருவன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத் தொடர்புகளையும் ஆற்றும் உரிமை மறுக்கப்படும் போது அவனின் உரிமை பறிக்கப்பட்டதாகவும் நாட்டின் தேவையற்ற அந்நியனாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றான் என்பதே யதார்த்தமுமாகும்.
இலங்கையில் இன்று நிலவும் அமைதியின்மைக்கு அடித்தளமாக அமைந்தது இந்த மொழிச்சட்டத்தால் உரமூட்டப்பட்ட பிரிவினை வாதமேயாகும். காலம் கடந்த நிலையில் இன்று கேவலமான அச்சட்டம் சட்டப்படி செல்லாததாகி விட்டாலும் அதன் பாதிப்பு இன்னும் நீடிக்கவே செய்கிறது. சிக்குன்குன்யா என்ற காய்ச்சல் வந்து சுகமாகி விட்டாலும் ஆண்டுகள் கடந்தாலும் அதன் தாக்கம் நீடிப்பது போல புத்தியுள்ள சிங்களத் தலைவர்கள் இந்த சட்டத்தின் எதிர் விளைவுகளை அன்று கூறினாலும் அவையாவும் மக்களது உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற முற்பட்ட கீழ்த்தர அரசியல் முன் செல்லாக்காசாகி விட்டன.
தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது அதன் எதிர்விளைவுகளை, ஏற்படப்போகும் பிரச்சினைகளை உணர்ந்த கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா "இரு மொழிகள் என்றால் ஒரு நாடு. ஒரு மொழியென்றால் இரு நாடுகள்' என்று கூறினார். தமிழர்கள் பிரிவினை வாதத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்பதை 1956இல் அதாவது இந்நாட்டில் பிரிவினைவாதம் பற்றி சிந்திக்கப்படாத காலத்தில் தீர்க்கதரிசனமாக அவர் கூறினார்.
இத்தனிச் சிங்களச் சிந்தனை முளைவிட்ட நோக்கை வரலாற்று ரீதியாக ஆராயலாம்.
1952 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1957 இறுதிவரை ஆட்சி செய்யும் காலம் இருந்தது. தெரிவுசெய்யப்பட்ட 89 உறுப்பினர்களில் 54 பேரைக் கொண்டிருந்த அரசாங்கம் தன் பாராளுமன்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக அதாவது 16 மாதங்களுக்கு முன்னதாகப் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் சென்றது.
பெரும்பான்மை சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டி தன்வசம் ஈர்க்கும் நோக்கில் அதுவரை சிங்களம், தமிழ் இரண்டும் அரசாங்க மொழிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி 1956ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற அதன் களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரசாங்க மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் சூத்திரதாரி ஜே.ஆர்.ஜயவர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி ஒரு அடி பாய்ந்தால் தாம் எட்டடி பாய வேண்டும். சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறவேண்டும் என்று திட்டமிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அக்காலத்தில் வளர்சியடைந்து வந்த மக்கள் ஐக்கிய முன்னணியும் 24 மணித்தியாலத்தில் சிங்களத்தை அரசாங்க மொழியாக்குவதாகக் கூறினர்.
மொழியுணர்வைத் தூண்டி ஆட்சியை உறுதிப்படுத்த வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைய அக்கட்சியின் அடியொட்டி குரல் கொடுத்து வாக்குகளைப் பெற்ற பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி ஆட்சியமைத்தது. மொழிப்பிரிவினைக்கு வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிட்டாதது மட்டுமன்றி சிங்கள மொழி மட்டும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன களனித் தொகுதியில் படுதோல்வியடைந்தார். மொழியைக் காட்டி மக்களை ஏமாற்றி நாட்டில் இனங்களிடையே பிளவை ஏற்படுத்திய கீழ்த்தரமான அரசியல் உருவாவதைத் தடுக்கும் நோக்கில் 1955ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி "சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் நாடுமுழுவதற்கும் சமஉரிமை பெறும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்' என்று அன்றைய ருவான்வெல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி என்.எம்.பெரேரா பாராளுமன்றத்தில் பிரேரணையை முன்மொழிய தெகியோலிற்ற பாராளுமன்ற உறுப்பினர் எட்மன்ட் சமரக்கொடி வழிமொழிந்தமை பதிவாகியுள்ளது.
அன்றிருந்த அரசாங்கம் தனிச்சிங்கள மொழிக் கொள்கையை நிறைவேற்ற எண்ணியிருந்த வேளை அதைத் தடுக்க உண்மையை உணர்த்த கலாநிதி என்.எம்.பெரேராவும், எட்மன்ட் சமரக்கொடியும் அவர்கள் சார்ந்த லங்கா சமசமாஜக் கட்சியும் மேற்கொண்ட நாட்டுப்பற்றுமிக்க ஒரு முயற்சியாக இதைக் கொள்ளலாம்.
குறிப்பட்ட பிரேரணையைச் சமர்ப்பித்து கலாநிதி ரெரேரா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, "இப்பிரச்சினை தொடர்பில் சரியான தீர்வு ஏற்பட்டால் எதிர்காலத்திலும் ஐக்கிய இலங்கையைப் பேணிக் கொள்வதற்கு அது மிகவும் ஆதாரமாக இருக்கும் என்பதைக் கூறிக் கொள்வதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை. இருப்பினும் நாம் அவ்வாறான தீர்மானத்தை எடுதால் நாம் எவரும் காண்பதற்கு விரும்பாத பயங்கர நிலை ஏற்பட இடமுண்டு. நான் இந்த நிலைமையின் முக்கியத்துவத்தையிட்டு மிகவும் அவதானமாக இருக்கின்றேன் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்' என்று 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கூறியுள்ளார்.
இனவாதம், மொழிவாதம், சமயவாதம் என்று பல்வேறு பிரிவுகளுக்குள் சிக்கி அவலமுறும் இந்நாட்டின் இன்றைய நிலைக்கு அடித்தளமிட்ட சுயநல அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலை அன்று தடுக்க முனைந்த தேசப்பற்றாளர்களாக கலாநிதி என்.எம்.பெரேராவும், எட்மன்ட் சமரக்கொடியும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களும் விளங்கியுள்ளார்கள்.
நாடு அல்லறுறப் போகின்றது. நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கப் போகின்றது அதைத் தடுக்க வேண்டும் என்று குரலெழுப்பியவர்களின் வாதம் வகுப்புவாத இனவாத, மொழிவாத அரசியலால்பின்தள்ளப்பட்டு இன்று நாடும் பல வழிகளில் பின் தள்ளப்பட்டு விட்டது.
வரலாற்றில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி நாட்டில் சமத்துவமும், அமைதியும், பிணைப்பும் அதன் மூலம் சுபிட்சமும் ஏற்பட வகுப்புவாத அரசியலே தடையாகவுள்ளது.
-த.மனோகரன்-
Wednesday, June 4, 2008
'தவிச்ச முயல் அடிக்கும்' தந்திரோபாயம் இது!
தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், தமது தாயக மண்ணில் பாரம்பரிய பூமி யில் தமது இனத்தின் இருப்புக்காகவும் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்கள்.
பாரத மாதாவைத் தமது பெரியன்னையாக வரித்து, மதித்துப் போற்றி வரும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பி, அவர்தம் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு.
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொப்புள் கொடி இணைப்புப் போல தாய் சேய் நேசம் கொண்டது. "தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பார்கள்.' அது போல ஈழத் தமிழர்களுக்காக இந்தியா குரல் எழுப்பா விட்டாலும், தமிழகம் குரல் எழுப்பி, உதவ ஓடோடிவரும்; வரவேண்டும்.
ஆனால், யதார்த்தத்தில் தெனிலங்கைப் பேரினவாதத் தின் கொடூர அடக்குமுறையில் சிக்கி அவலப்படும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வராத பாரதம், உபத்திரவம் செய்யத் துடியாய்த் துடிக்கின்றதோ என்ற சந்தேகம் விசனம் தமிழர் மனதில் எழுந்துள்ளது. அதைத் தமிழகம் பார்த்து வாளாவிருப்பது இன்னும் வேதனைக்குரியது.
ஒருபுறம் ஈழத் தமிழர்கள் மீது கொடூர யுத்த வெறிப் போக்கை வெளிப்படுத்தும் கொழும்பு நிர்வாகத்துக்கு ஆயுதத் தளபாடங்களை வாங்கிக் குவிக்க இந்தியா பெருந் தொகைக் கடனுதவி வழங்கி உதவுகின்றது. "ராடர்' போன்ற கண்காணிப்பு ஆயுதங்களை விநியோகித்து ஒத்து ழைக்கின்றது. படை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிய ளித்து தமிழர் எதிர்ப்புப் போராட்டத்தில் கொழும்பின் கையை வலுப்படுத்துகின்றது.
அதேசமயம், மறுபுறம் தமிழர் தாயக மண்ணை ஆக்கிரமிக்கும் கொழும்பின் செயற்பாடுகளிலும் இந்தியா நேரடியாகப் பங்களிக்கின்றது என்ற குற்றச்சாட்டு இப் போது முன்வைக்கப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் கள் காரணமாக சம்பூர்ப் பிரதேசத் தமிழ் மக்கள் பல்லா யிரக் கணக்கில் இடம் பெயர்ந்தனர். அவர்கள் இப்போது இடைத்தங்கல் முகாம்களில் அவல வாழ்வு வாழ்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக பல தலைமுறை தலைமுறை களாக சம்பூரில் தமிழர்கள் வசித்து வந்தார்கள். வரலாற் றுத் தொன்மையும் தமிழரின் பூர்வீகச் சிறப்பும் மிக்க பூமி அது.
அதனைத் தனது படை ஆக்கிரமிப்பு மூலம் கைப்பற் றிக் கபளீகரம் செய்த தென்னிலங்கை அரசுப் படைகள். சம்பூரையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து, அப்பிரதேசத்தின் பூர் வீகக் குடிகளான தமிழ் மக்கள் தமது இடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரத் தடை போட்டுள்ளது.
சம்பூரில் தமிழர் தாயக மண் அரசின் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்ற மையத்துக்கான இலக்காகும் சூழல் இதனால் உருவாகியிருக்கின்றது.
இந்தப் பின்புலத்திலேயே
தமிழரின் பூர்வீகத் தாயக மண்ணான சம்பூருக்குத் தமிழர்கள் இனித் திரும்பவே முடியாத வகையில் ஓர் அரண் அமைக்கும் நோக்கத்தோடு அங்கு அனல் மின் திட்டம் ஒன்றை உருவாக்க கொழும்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வளம் கொழிக்கும் தமிழர் தாயகத்திலிருந்து தமிழர் களை விரட்டியடிக்கும் இந்தக் கபட சதித் திட்டத்துக்கு முதுகு கொடுத்து உடந்தையாகும் செயலை இந்தியா முன் னெடுப்பதுதான் கேவலத்திலும் கேவலம்.
ஐம்பது கோடி அமெரிக்க டொலர் செலவில் இத் திட்டத்தை 2012 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்து, பல்லாயிரம் தமிழ்க் குடும்பங்களை சம்பூருக்கு தமது தாயக பூமிக்கு திரும்பி வரவே முடியாத கொடூரத்தை நிறைவேற்றிக் கொடுக்கப் போகிறாள் பாரத அன்னை.
இலங்கையில் ஓர் இனப்போர் இடம்பெற்றுக்கொண்டி ருக்கின்றது. ஐந்து தசாப்த காலமாக நீடித்த இனப்பிரச் சினை கொடூர உள்நாட்டுப் போராக இப்போது விஸ்வ ரூபம் எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களின் உரிமைகளுக்கான நியாயத்தை யுத்த களத்தில் உரசிப்பார்க்கும் நிலைமை நீடிக்கின்றது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புக்கும் அடிமைத்தனத்துக் கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுபான்மை இனத்தின் நலிவற்ற சமூகத்தின் தாயக பூமியில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு உள்ளூர் வளங்களைச் சூறையாடும் விதத்தில் அந்நிய சக்திகள் தலையிடுவது மிக மோசமான, நியாயப்படுத்த முடியாத, கேவல நடவடிக்கையாகும்.
மன்னாரை அண்டி, எண்ணெய் அகழ்வு என்ற பெயரி லும், திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையத் திட்டம் என்ற நாமத்திலும், புல்மோட்டையில் இல் மனைட் கனிவள அகழ்வு என்ற வடிவிலும் இந்த இக் கட்டுச் சமயத்தில் தமிழர் தாயக வளங்களைச் சூறையாடு வதும், அதில் அந்நிய நாடுகளும் சக்திகளும் தலையிடு வதும் "தவித்த முயல் அடிக்கும்' வேலையாகவும் "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' காரியமாகவுமே அர்த்தப்படுத்தப்படக் கூடியவை.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் எப்போதுமே முறையற்ற விதத்தில் தலையிட்டு மூக்கறுபட்ட அனுப வத்தை ஏற்கனவே பெற்றுக்கெண்டுள்ள இந்தியா, இன் னும் அப்போக்கிலிருந்து மாறாமல் இருப்பது விசனத்துக் குரியது.
Uthayan
Saturday, May 31, 2008
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்பு போர் ஒன்றை புலிகள் விரைவில் துவங்கக்கூடும்!
இதேவேளை இவ்வாறான தாக்குதல் முன்னோட்டங்கள் புலிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள அவாவி நிற்கும் பெருமெடுப்பிலான பாரிய தரைவழித்தாக்குதலுக்கான முன் அதிர்வுகளாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக நாயாற்றில் கடந்த மார்ச் மாதம் கடற்படையினரின் பீரங்கிப் படகு தாக்கப்பட்டதை தொடர்ந்து,புலிகள் தீவிரப்படுத்தி வரும் கடல் வழித் தாக்குதல்கள் தரைவழியாக புலிகள் பெரும் நில மீட்புச் சமரொன்றுக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துகிறது.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரில்,புலிகளை பொறுத்தவரையில் கடல் வழி அணி நகர்த்தல்களும் முக்கியத்துவம் பெறும் அதேவேளை, எதிகாலச் சமர்க்களங்களில் புலிகளின் விமானப்படை பங்கேற்க போவதும் நிதர்சனம்:கிழக்கிலோ,அல்லது வடக்கிலோ உள்ள பெரும் பகுதி ஒன்றை விடுவிப்பதற்கு,விடுதலைப்புலிகள் தங்களது முப்படைப்பலத்தையும் இதன்போது பிரயோகிக்கக்கூடும்!
இதேவேளை கிழக்கை விட வட பகுதியான இலங்கையின் உச்சியில் நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தை கருத்தில் எடுத்து,விடுதலைப்புலிகள் தாக்குதலை நெறிப்படுத்தக்கூடும்!
யாழ்ப்பாண மக்கள் கடந்த 3 அல்லது 4 வருடங்களாக பல்வேறு அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலையில்,இதுவரை சர்வதேச சமூகமோ, இந்தியாவோ மனிதாபிமான ரீதியில் மக்கள் துயர் போக்க,இரு தரப்பையும் இவ் விடயத்தில் இணங்க வைக்க அக்கறை காட்டாத போதும்,குடா நாட்டுக்கான ஒரே ஒரு தரவழிப் பாதையான A-9 வீதியின் முக்கியத்துவம் குறித்து பல தரப்பினரும் யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைத்தே வந்துள்ளனர்.
இவ்விடயத்தில் இரு தரப்பினருக்கும் தீவிர அழுத்தங்களை கொடுத்து மூடப்பட்ட A-9 ஐ திறப்பதற்கு சர்வதேச நாடுகளும்,மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும்,தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால்,யாழ்ப்பாண மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.
அத்துடன் இது தொடர்பாக பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்த கருத்துகளும் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே உள்ளது.அரசாங்கத்தை பொறுத்தவரை வன்னியை மீட்பதே அதன் இறுதிக்கட்ட இலக்காகி திக்குமுக்காடி வரும் நிலையில்,மக்கள் நலன் சார்ந்த நோக்கில் விடுதலைப் புலிகள் முன்கூட்டியே பெருமெடுப்பிலான பாரிய நில மீட்புச் சமர் ஒன்றை எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடும்!
வீரகேசரி இணைய ஆய்வு 5/31/2008
Wednesday, May 14, 2008
விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா?
நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியில் பின்னப்பட்டிருந்த கபட வலையைப் புரிந்து கொள்ளாமல், "அதிகாரப் பகிர்வுக்கான முதல் காலடி' என்று அந்த முயற்சிக்குப் புகழாரம் சூட்டியது இந்தியா. இப்போது அந்தத் தொடர் நடவடிக்கைத் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கிழக்கு மாகாணத் தேர்தல் ஜனநாயகப் படு கொலையாக அரங்கேறியமையைப் பார்த்து இந்தியா விக்கித்து, வாயடைத்து நிற்கின்றது கருத்துஎதுவும் வெளியிடாமல் அமைதி காத்து.
ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தை எப்போதுமே கொச்சைப்படுத்தி, குறை கூறி, அதற்கு ஆப்பு வைக்கும் தனது காலாதிகாலப் போக் கைக் கைக்கொள்கின்ற "த ஹிண்டு' போன்ற இந்திய அதி கார வர்க்க அடிவருடிகள் மட்டுமே, ஜனநாயகத்தை அடித் துப் பறிக்கும் பகற்கொள்ளை கிழக்கிலங்கையில் அரங் கேறியமையைக் கண்டுங்காணாமல் இருப்பது போல கவனிக்காமல் புறமொதுக்கிவிட்டு, அந்தத் தேர்தல் முடிவுகளை வரவேற்று சப்புக்கட்டுக் கட்டியி ருக்கின்றனர்.
ஜனநாயகக் கோட்பாடுகளும் அடிப்படைப் பண்பி யல்புகளும் கடந்த பத்தாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் வாக்களிப்பின்போது பகல் கொள்ளையாகச் சூறையாடப்பட்டமை தொடர்பாக அமெரிக்க அரசு தனது கவலையையும் சிரத்தையையும் இலங்கை அர சுக்கு இராஜதந்திர ரீதியில் கடிதம் மூலம் தெரிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாய மாகவும் நடத்தப்படவேயில்லை எனப் பல பொது அமைப் புகள், நிறுவனங்கள், சுயாதீனக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்திருக்கின்றமையைக் கணக்கில் எடுத் திருக்கும் அமெரிக்கா, பொதுமக்கள் தங்களின் பிரதிநிதி களையும், நிர்வாகத்தையும் சுயாதீனமாகத் தெரிவுசெய் வதற்கு அனுமதிக்கப்படாதமை பல புதிய பிரச்சினைக ளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் ஆபத்தை ஏற்ப டுத்தியுள்ளது என்பதை இப்போதாவது உணரத் தலைப்பட்டிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க அம்சமே.
ஈழத் தமிழர்கள் தங்களின் சுதந்திர உரிமைகளுக்கும், கௌரவ வாழ்வுக்குமாக நடத்தும் போராட்டத்தை "பயங்கரவாதமாக' அடையாளம் கண்டு, அப்போராட் டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை "பயங்கரவாத அமைப்பாக' பட்டியலிட்ட மேற்குலகம், இப்போதுதான் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சியை அடக்கி, ஒடுக்குவதற்காகத் தென்னிலங்கை முன்னெடுக்கும் "அரச பயங்கரவாதத்தின்' ஆழ, அக லங்களையும், அதன் கொடூரத்தையும், தாற்பரியத்தை யும் புரிந்துகொள்ளத் தலைப்பட்டிருக்கின்றது.
அதேபோல, புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகா ணத்தை அரசுத் தரப்பு விடுவித்தபோது அதனை வர வேற்ற அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், அந்த விடு விப்பின் பின்னர் அங்கு "ஜனநாயகம்', "சட்டத்தின் ஆட்சி' , "நியாயச் செயற்பாடுகள்' என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, ஆட்சித் தரப்பின் பயங்கரவாதம் கட்டவிழும் போதுதான் கிழக்கு மாகாணம் "சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த' தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கின்றன.
அதேவேளை
உலக நாடுகளும், கண்காணிப்புக் குழுக்களும் அக லக் கண்விழித்துப் பார்த்திருக்கவே "ஜனநாயகப் படு கொலையை' கிழக்குத் தேர்தலில் வெகு "ஸிம்பிளாக' ஆட் சித்தரப்பு அரங்கேற்றியமையை உள்வாங்கி நோக்கும் சர்வதேச சமூகத்துக்கு, அதே ஆட்சிப் பீடம் சர்வதேசப் பார்வை விழாத யுத்த முனையில் குறிப்பாக இராணுவ நடவடிக்கைகளின் கோரப் பிடிக்குள் சிக்கியிருக்கும் தமிழர் தாயகத்தில் எவ்வளவு "நியாயமாக' செயற்படும் என்பதை உணர்ந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கஷ் டமான காரியமாக இருக்காது.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் மற்றும் தென்னிலங் கையிலும் ஆள்கடத்தல்கள், பலவந்தமாகக் கடத்திக் காணாமற்போகச் செய்தல், சட்ட விரோதப் படுகொலை கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடல் என்று மோசமான அராஜகங்களும், மனித உரிமை மீறல்களும் தமிழர்க ளுக்கு எதிராகப் பெருமளவில் தொடர்கின்றன.
அரசு, புலிகளின் பிடியிலிருந்து விடுவித்ததாகக் கூறிக் கொள்ளும் கிழக்கிலும் இந்நிலைமை மோசமாகத் தொடர் கின்றது. போதாக்குறைக்கு ஜனநாயகத் தேர்தலின் போதும் அங்கு அட்டூழியம் அரங்கேறியிருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் மாண்பும் அங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கையில் கிழக்கை உண்மையில் "விடுவிக்கப்பட்ட பிரதேசமாக' கருத முடியுமா கூறமுடியுமா என்பது குறித்து அமெரிக்காவுக்கு சந் தேகம் எழுந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
காலம் கடந்தாவது உண்மை நிலைவரத்தைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு அமெரிக்கா வந்திருப்பது ஓரளவு நல்ல சகுனமே.
Sunday, April 27, 2008
சொல்லப்படாத தகவல்கள்
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:
அரசின் பிரச்சாரப் போர் அதிக காலம் நீடிக்காது என்பதற்கான தீர்க்கமான ஆதாரம் வட போர்முனையில் நடந்த பயங்கர சமராகும்.
கடந்த புதன்கிழமை வட போர்முனையில் நடைபெற்ற சமர் மூலம் வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது.
வட போர்முனையில் படையினர் சந்தித்த மூன்றாவது பேரழிவு இதுவாகும்.
முன்னைய சமர்களில் படையினர் பெற்ற அனுபவங்கள் மிகக்குறைந்த பலனையே அவர்களுக்கு கொடுத்துள்ளது. முகமாலையில் நடைபெற்ற சமரை வெற்றியான சமராக சித்தரிக்க அரசு மேலதிக நேரம் எடுத்து வேலை செய்துகொண்டிருக்கையில் 100-க்கும் அதிகமான படையினர் தமது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிறிலங்கா இராணுவத்தின் இளைஞர்கள் தமது உயிரையும், அவையவங்களையும் இழந்திருந்தனர்.
முகமாலை களத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக மக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
அரசு இதனை மூடிமறைக்க முற்பட்டது அதனை மேலும் மோசமாக்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத்தளங்களும், அனைத்துலக ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இழப்புக்கள் தொடர்பாக அரசு தெரிவித்ததனை விட மிகவும் அதிகமான தகவல்களை வெளியிட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை விடிந்து இரு மணிநேரம் கடந்த நிலையில் படையினர் தமது நடவடிக்கையை தொடங்கினர்.
போர் வலிமையுடைய 55 மற்றும் 53 ஆவது படையணிகளைச் சேர்ந்த இராணுவத்தினர் கிளாலி - முகமாலை நிலைகளில் இருந்து நகர்வை தொடங்கினர்.
படையினரின் முன்னணி அரண்கள் மேற்கில் கிளாலி - எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து கிழக்கே நாகர்கோவில் வரையில் அமைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் படையினரின் நிலைகளில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சமாந்தரமாக அமைந்துள்ளன.
இருளின் உதவியுடன் படையினர் விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களை நோக்கி நகர்ந்தனர். எனினும் முகமாலைக்கு தென்புறமாக நகர்ந்த 53 ஆவது படையணியின் நகர்வு, மிதிவெடிகள்- பொறிவெடிகளால் தாமதமாகியது. 55 ஆவது படையணியின் நகர்வு அதிகம் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.
முகமாலைக்கு வடக்காக நகர்ந்த இந்த படையணி விடுதலைப் புலிகளின் முன்னனி அரண்களை கைப்பற்றியது.
காலை 6:00 மணியளவில் கைப்பற்றப்பட்ட இந்த அரண்களை 55 ஆவது படையணி பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக இடைநிலை இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் முற்பகல் 9.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடங்கின.
பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணைகள் மழைபோல வீழந்து வெடிக்க ஆரம்பித்தன. இது முன்நகர்ந்த படையினருக்கான உதவிகள் சென்றடைவதனை தடுத்திருந்தன.
மேலும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அவர்களின் வரைபடத்தில் உள்ளவை. அவற்றின் மீது அவர்களால் மிகவும் துல்லியமாக எறிகணைகளை ஏவ முடியும்.
விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி நிலைகள் மீது படையினர் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்திய போதும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் ஓயவில்லை. கடுமையான இந்தச் சமரின் போது 53 ஆவது படையணியைச் சேர்ந்த கஜபா மற்றும் விஜயபா இலகு காலாட் றெஜிமென்ட் படையினர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் மேலதிகமாக ஊடுருவி விட்டனர்.
கடந்த பல மாதங்களாக விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்கள் மீது படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வந்ததனால் விடுதலைப் புலிகள் தமது இரண்டாவது பாதுகாப்பு அரண்களை பலப்படுத்தியிருந்ததுடன், கவசப் படையணியின் வாகனங்களை கைப்பற்றுவதற்கான பொறிக்கிடங்குகளையும் அமைத்திருந்தனர்.
கிளாலிப் பகுதியில் நகர்ந்த இராணுவத்தினர் மீது படகில் பொருத்தப்பட்ட 0.50 கலிபர் கனரக துப்பாக்கிகளினாலும் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகள் சார்பு இணையத்தளங்கள் வெளியிட்ட படங்களில் இராணுவத்தினர் பதுங்கு குழிகளில் வீழந்து கிடக்கும் காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
முன்னணி நிலைகளுக்கு நகர்ந்த படையினருக்கான விநியோகங்கள் பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களினால் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்த தாக்குதலில் சிக்கிய பல இராணுவத்தினர் களத்தின் நடுவில் வீழந்தனர். இந்த நிலையில் இராணுவத்தினர் வான் தாக்குதல் ஆதரவை கோரியிருந்தனர்.
எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள், தாக்குதல் வானூர்திகள் விடுதலைப் புலிகளின் மோட்டார் நிலைகள் மீது தாக்குதலை நடத்தின.
ஆனால் 81 மி.மீ, 60 மி.மீ. எறிகணைகள் தொடர்ச்சியாக வீழந்து வெடிக்கத் தொடங்கின. விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளுக்கள் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது ஜீப் வண்டிகளில் பொருத்தப்பட்ட பின்னுதைப்பற்ற பீரங்கிகள் மூலமும் விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
இராணுவத்தரப்பின் தகவல்களின் படி விடுதலைப் புலிகள் 80 இடங்களில் இருந்து மோட்டர்கள் மற்றும் பீரங்கி எறிகணைகளை ஏவியிருந்தனர். அவர்கள் விரைவாக மோட்டார் மற்றும் பீரங்கிகளை நகர்த்தி தாக்குதல்களை மேற்கொண்டது படையினரின் எதிர்த்தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றியிருந்தது.
பிற்பகல் 1:00 மணியளவில் தாக்குதல் தீவிரமடைந்தது, படையினர் பெரும் அழிவுகளைச் சந்தித்தனர். அவர்களுக்கான விநியோகங்களும் முடக்கப்பட்டிருந்தன. இராணுவத்தினாரிடம் இருந்த வெடிபொருட்களும் தீர்ந்து போகும் நிலையை அடைந்திருந்தது.
இந்த நிலையில் படையினர் பின்வாங்கும் முடிவை எடுத்திருந்தனர். அப்போது காயமடைந்த அதிகளவான படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்படுவதற்காக காத்திருந்தனர். எனவே இராணுவத்தினர் தமது உயிரிழந்த சகாக்களை கைவிட்டுச் செல்லும் நிலையை அடைந்திருந்தனர்.
பின்னர் தமது தரப்பில் 38 பேர் காணாமல் போனதாக படையினர் அறிவித்திருந்தனர். எனினும் விடுதலைப் புலிகளால் 28 சடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. 5 சடலங்களை படையினர் பின்னர் கண்டெடுத்திருந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னர் அரசு அதனை மூடிமறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. முதலில் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலையே தாம் முறியடித்ததாக படையினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் அதனை சிலரே நம்பினர்.
எனவே அதன் பின்னர் படையினரின் தகவல்களில் மேலும் சில வரிகள் சேர்க்கப்பட்டன. அதாவது விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்துவதாக அறிந்த படையினர் முன்நகர்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் பின்னர் படைத்தரப்பு தமது தரப்பில் 43 பேர் பலியானதாகவும், 120 பேர் காயமடைந்ததாகவும், 30 பேர் காணாமல் போனதாகவும் தெரிவித்திருந்தனர். எமக்கு கிடைத்த தகவல்களின் படி 370 பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் 174 பேர் படுகாயமடைந்துள்ளனர். 169 பேர் கொழும்புக்கு வானூர்தி மூலம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
117 இராணுவத்தினரும் அதிகாரிகளும் ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
32 பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2:00 மணிக்கு தாக்குதலை நடத்திய இளம் படை அதிகாரி ஒருவர் தாம் முன்நகர்ந்த போது பதுங்கு குழியில் இருந்த இரு பெண் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதுங்குகுழியின் மீது கையெறிகுண்டை எறிவதற்கு தயாராக அதன் பாதுகாப்பு ஊசிகளை தாம் அகற்றிய சமயம் 81 மி.மீ எறிகணைகள் தமக்கு அருகில் வீழந்து வெடித்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் அந்த அதிகாரியின் கை துண்டிக்கப்பட்டதுடன் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலுக்கு முதல் நாள் நடைபெற்ற மோதலில் படையினர் இலகு காலாட்படை தாக்குதல் வாகனம் ஒன்றையும் இழந்திருந்தனர். இந்த வாகனம் ஆர்பிஜி மூலம் தாக்கப்பட்டதாகவும், அதில் இருந்த 4 படையினர் காயமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம் இணையதளம்
Muhamalai Battle: Untold Story
- Hard facts speak of gloomy picture
- Madhu capture overshadowed by heavy toll in north
- Letters highlight the plight of Tiger conscripts
Ranga Jayasuriya
Notwithstanding the overdose of government propaganda, the only sensible explanation available for the horror drama that took place ahead of the Northen Defence Lines on Wednesday was that it was a tragic repetition of history.
This is not the first time that a military operation to advance the Northern Forward Defence Lines ended with heavy casualties. This is the third occasion, in one and a half years that troops emerged bruised in the northern front
Yet, lessons from past mistakes appear to have little effect.
This does not mean to suggest that the LTTE emerged unscathed from the attack. According to reports, casualties are high on its part. Yet, Zombie sacrifices had been part of its military strategy throughout history.
Irrespective of the fact that the government’s propaganda mill works overtime to project what happened in Muhamalai as a “victory,” the hard facts speak of a different picture.
Away from the limelight of state media, hundreds of soldiers are nursing their wounds; they, the valiant men of the Sri Lanka Army fought fearlessly and paid with life and limb. Should their sacrifices be forgotten, not to be talked of in order to ensure the feel good attitude of the public?
Grinding halt
In a country where public life gets to a grinding halt over a government enforced mourning, over the death of some unsavory politicos, should the public be kept in the dark on what happened ahead of the Northern Defence Lines on that fateful day?
Worse still, the efforts for a cover up have done more damage than damage control.
Websites, both pro- Tiger and pro opposition and foreign news agencies of international repute reported the casualty figures of the troops much higher than the officially stated figure.
We understand such a situation is inevitable in the absence of verifiable sources-though the underpinning political motives and loyalties of handlers of some of these websites could also not be ruled out.
All this contributed to an absolute confusion in the aftermath of the Muhamalai battle. If not all, at least a significant portion of people of this country are discerning enough to contrast fact from fiction.
Yet, they were also at a loss, bombarded by conflicting reports.
Surely, people, who send their children to the battlefront and fund the government’s war chest deserve more than the government concocted propaganda.
Narrating this account, we try to do justice to them and to the soldiers who made the supreme sacrifice, yet, we are also faced with the same constraints.
Here is the story.
Two hours after the dawn of Wednesday, troops embarked on an ambitious mission.
Soldiers of the battle hardened 53 Division and 55 Division broke away from their defended localities in the northern Forward Defence Lines in Kilali and Muhamalai.
The security forces Forward Defence Line runs from Killali-Eluthumattuwal in the west to Nagar Kovil in the East. Muhamalai where there was an entry-exit point for civilian travel on the Alpha 9 road during the not -so -distant days of the peace process is located in the centre.
The Forward Defence Lines of the LTTE is located 500 meters away from the security forces line, running parallel to it.
Under the cover of darkness they moved towards the Forward Defence Line of the Tigers. Military sources said the advance of the 53 Division, which forged ahead along the stretch south of Muhamalai, was delayed due to heavy trapping and anti personnel mines.
Whereas the 55 Division moved with relatively lesser resistance and captured the Forward Defence bunker line of the LTTE. They were advancing along the stretch North of Muhamalai. Military source said troops captured the LTTE Forward Defence Line by sunrise of Wednesday.
“By six in the morning we had brought reinforcements and built bunkers in the captured positions,” a middle ranking military officer said.
Resistance
However, from 9 am, the resistance from the Tigers began to mount. Artillery and mortar fire began to rain.
This hindered reinforcements for the troops holding the frontline.
Furthermore, the locations of captured Tiger bunkers are generally registered in the maps of the LTTE.
This enabled the Tigers to bombard these positions accurately using their artillery and mortar batteries. Counter battery fire targeted the LTTE’s mortar and artillery positions, yet, mortars continued to rain. Despite heavy fighting, a team of soldiers belonging to the 5 Vijayaba Infantry Regiment and 1 Gajaba Regiment of the 53 Division, who took control of the first Defence Line of the LTTE, advanced further into the Tiger territory.
They moved 150 meters ahead of the LTTE FDL, closing on the secondary Defence Line of the LTTE.This heavily fortified bunker line is located several hundred meters behind the FDL.
During the past several months as the Special Infantry Operation troops of the Army stepped up regular attrition attacks on the Forward Defence Line of the LTTE, the Tigers left their FDL sparsely guarded.
To supplement that, the Tigers fortified the secondary Defence Line. Trenches were built to hinder the advance of the Infantry Fighting Vehicles and Tanks of the newly established Mechanized Infantry Regiment.
A trench line links the Tiger FDL with their secondary Defence Line. Soldiers were approaching the secondary bunker line when a boat fitted with a medium calibre gun emerged from the direction of Kilali.
A military official said the LTTE fired at the troops with a five Zero gun mounted on the boat.
Later in the evening, the pro Tiger websites flashed pictures of the soldiers fallen in a trench line.
By noon, resistance mounted on troops holding the FDL of the LTTE.
A rain of artillery and mortar fire had cut off the reinforcement to the front line. Some valiant soldiers who braved the mortar fire fell injured in the middle of the ground.
The Army called for air support. MI 24 attack helicopters and fighter jets bombed LTTE mortar and artillery positions.
Two artillery gun positions located in Sorampattu, 10-12 km inside Tiger territory were targeted by the fighter jets.
Ground troops said the artillery attack from the location ceased after the air attack.
An operational base was also targeted.
Short of ammunition
But, 81 mm and 60 mm mortar continued to rain on the ground. Tiger bunker lines, now occupied by the soldiers came under heavy attack from a Recoilless Gun. The gun had apparently been fitted to a jeep for fast mobilization.
According to military sources, the LTTE had fired mortar and artillery from over eighty locations. The fast mobilization of mortar and artillery guns, needless to say, enabled, the LTTE, to a greater degree, to evade counter battery fire and air attacks.
By 1 pm, mortar and artillery fire had been stepped up; the troops holding the captured bunker lines had sustained considerable damage. Their reinforcements had been cut off by the rain of mortar and artillery fire. Some were running short of ammunition. They had met with stiff resistance from the Tigers guarding their secondary bunker line.
With resistance mounting, they decided to pull back. During the withdrawal, with so many wounded waiting to be evacuated, they were compelled to leave the dead.
Later, the Army announced that 38 security forces personnel were missing in action. 28 bodies were later handed over by the LTTE through the International Committee of Red Cross.
Five bodies were later recovered by troops.
The attack and its aftermath were overshadowed by confusion courtesy an apparent government effort for a cover- up.
Initially the security forces tried to project the attack as retaliation to a Tiger attack
First official announcement
“This morning LTTE terrorists launched an attack on Army FDL from North and South of the A 9 route at MUHAMALAI. The Army troops in retaliation launched a fresh offensive, killing 52 terrorists and wounding a large number.
The troops were able to capture and consolidate the positions newly captured
Fifteen soldiers died and 74 injured during the confrontation.”
This is the first official announcement on the Muhamalai battle issued by the government’s Media Centre for National Security (MCNS).
The same line of the story had been maintained when the security forces commander, Jaffna and field commanders addressed journalists of state media institutions.
However, very few appeared to have believed that story. Therefore, another line was later adopted. Accordingly, the troops had pre-empted, following reports of a heavy LTTE buildup ahead of the security force’s FDL.
As we stated earlier, the casualty figures of the security forces are shrouded by confusion.
MCNS in its website stated, hidden somewhere in a lengthy statement, that:
“Those closely-fought battles claimed the heroic lives of forty-three soldiers and wounded one hundred and twenty more. Reports also confirmed that some thirty-eight soldiers, most probably got trapped in the clashes, had gone missing since Wednesday (23) morning.”
It further stated: “Defiant Army troops, serving in and around Muhamalai , Jaffna in the aftermath of fierce and tough clashes and offensives that went on till Wednesday (23) forenoon between Tiger terrorists and valiant troops, have completed and re-established their re-deployment positions consequent upon induction of reinforcements as dusk fell on Wednesday (23)”
Independent verification of these figures had been a daunting task, mainly due to conflicting reports; most of which suggested higher casualty figures than what was officially announced by the government.
However, we understand, 370 soldiers were wounded in action, of which nearly a half was classified as P3 injuries aqua walking wounds.
174 classified as P 1 (serious) and P 2 (somewhat serious) injuries; 169 were airlifted to Colombo for treatment.
117 soldiers and officers were admitted to Jayawardenepura hospital. 32 security forces personnel were admitted to the National hospital and eight to the Eye hospital.
However, the valour of the soldiers who fought fearlessly against all odds deserves to be preserved in Lankan memory.
I spoke to several brave men who were undergoing treatment at the National hospital. Some of them have lost their limbs being blown off by anti personnel mines; some have been hit by projectiles of mortar and artillery shells. Yet, they were undaunted and focused in their cause.
A young soldier, an SIO, who took part in the first assault mission at 2 am, said his team approached the Tiger bunker line with little resistance.
His team approached the trench line. Two female Tiger cadres were firing from the bunker. Just after he removed the pin and lobbed a grenade into the bunker, he was struck by a projectile of an 81 mm mortar attack.
Five soldiers were wounded in the attack, yet, the bunker was captured. The young soldier’s left arm has been fractured.
Many military officers were full of praise for their men. They forged ahead in the battle front disregarding the looming threat, simply because of the dedication for their cause.
Toll on the LTTE
A day before the Muhamalai battle, an Infantry Fighting Vehicle (IFV) was destroyed when it was engaged in the LTTE Defence Line in Muhamalai. The ill- fated IFV was believed to be attacked by a Rocket Propelled Grenade (RPG). Four crew members were wounded in the attack.
The military operation had its toll on the LTTE. According to military sources, LTTE casualties are higher and it will be many months before they are replenished.
MCNS reported on Friday that 157 LTTE cadres have been killed of whom ninety eight names had been announced by the LTTE, according to monitored transmissions.
Similarly a total of about 300 LTTE cadres had reportedly sustained injuries during the clashes, it added
MCNS posted names of 98 LTTE cadres, which it said were announced by the LTTE.
During the mission, soldiers of the 55 Division who stormed the LTTE’s FDL recovered 6 bodies of fallen LTTE cadres, including three female cadres.
A letter was recovered in the possession of one of the slain Tiger cadres named Sarojani Devi. The letter was addressed to her mother and it provides an insight into the plight of young women who were forced to the frontline of the battle. She went on to lament in the letter: “Mother, I cant live without you. I don’t have a life here. Mum, please try to bring me home. There is no day which I don’t cry. Now, it is almost a year since I was conscripted. I don’t want to serve any more. Mum please try to bring me home.”
The capture of Madhu
On Thursday, the Security Forces entered the sacred Madhu shrine premises without a fight. According to military sources, several small teams had been deployed by the security forces to monitor LTTE deployment in the vicinity of the sacred shrine, during the past several weeks.
These small units have monitored that the LTTE was gradually vacating the area.
The withdrawal of the LTTE has been accelerated as troops cut off supply routes to the shrine which had been deserted by the clergy who shifted the holy statue of Our Lady of Madhu deep inside the Wanni. The last string was the capture of Palampiddi, located 8 km North of Madhu.
On Thursday, at about 1 pm, soldiers of the 7 Ceylon Light Infantry and Singha Regiment entered the church premises.
Initially it was feared that fighting would flare up in the church premises as the LTTE showed indication to hold on the ground. Hence the military strategy was to cut off their supply routes.
According to latest reports, soldiers have vacated the sacred Madhu shrine and the surrounding No Fire Zone. Military sources said the clergy will be invited to resume religious activities in the near future. It will also be requested to return the statue of ‘Our Lady of Madhu’ which had been moved from the beleaguered shrine early this month.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் "டெக்கான் குரோனிக்கல்' ஊடக மையத்தின் செய்திப் பிரிவுத் தலைவருமான ஆர். பகவான் சிங் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் லண்டன் ஹரோவில் நேற்று முன்தினம் நடத்திய கருத்தரங்கில் பகவான் சிங் உட்படப் பல ஊடகவியலாளர்களின் காத்திரமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. "இலங்கைப் பிணக்கின் மத்தியில் ஊடகம்: உண்மை எங்கே?' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்தும், ஈழத் தமிழர் பிரச்சினையின் போக்குக் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றிய விடயமும் விரிவாக அலசப்பட்டது.
"பதினேழு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வில் சிக்கி நிரந்தரமாகத் தடைப்பட்டுத் தங்கிவிட முடியாது. கடந்த கால அனுபவச் சிந்தனையில் தேங்கி இடக்குப் பட்டு நிற்காமல் எதிர்கால நலன் நோக்கிச் சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டிய கட்டம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. அதற்கான ஆக்கபூர்மான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன." என்று இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், "டெக்கான் குரோனிக்கல்' ஆங்கில நாளிதழின் சென்னைப் பதிப்பின் ஆலோசக ஆசிரியராகப் பொறுப்பேற்கவிருப்பவருமான பகவான் சிங் மேலும் குறிப்பிட்டார்.
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்குப் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இப்போது ராஜீவின் மகள் பிரியங்கா சிறைச்சாலைக்குச் சென்று நளினியைச் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.
"இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தியல் நிலைப்பாடே மாநில அரசின் நிலைப்பாடுமாகும் என்று தெரிவித்து, இவ்விடயத்தில் ஒதுங்கி நின்று செயற்பட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்போது தமிழகத்தின் தனியான கருத்தை வெளிப்படுத்தி, மத்திய அரசை வழிப்படுத்தும் நிலைக்கு மாறிக்கொண்டுள்ளார். இவை புதிய ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள்.
"கடந்த கால சரித்திரத்தை இறுகப் பற்றிநின்று எதிர்காலச் சுபீட்சத்தைத் தொலைத்து விடமுடியாது" என்ற உண்மையை இந்தியர் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
"ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு தீர்வே அது மட்டுமே சாத்தியப்படக் கூடும் என்று நான் நம்புகிறேன். இதனை இந்தியாவும் புரிந்துகொண்டிருக்கும் எனக் கருதுகிறேன்." என்று பகவான் சிங் மேலும் குறிப்பிட்டார்.
இந்த யதார்த்தத்தை இந்தியா உண்மையில் புரிந்துகொண்டதா? அல்லது வெளியில் ஒரு படத்தைக் காட்டிக்கொண்டு, மறைவில் தென்னிலங்கையோடு கைகோக்கும் கபடத்திட்டம் ஒன்றைத் தொடர்ந்தும் நிறைவேற்றுகின்றதா? என்ற சந்தேகம் ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் நோக்கர்களுக்கும் ஏற்படவே செய்கின்றது.
இலங்கை விவகாரத்தை ஒட்டிய இந்தியாவின் நடத்தையைக் காரசாரமாக விமர்சிக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கையிலும் அதேபோன்று, இந்தியாவின் செயற்போக்கைக் குறைகூறும் விதத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" மாத சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கத்திலும் கூறப்பட்ட கருத்துகளும் கூட இவ்வாறு இந்தியாவின் நிலைப்பாடு குறித்த தமிழர்களின் பெரும் சந்தேகத்தைப் பிரதிபலிப்பனவாகவே கொள்ளப்பட வேண்டும்.
உண்மையில் இந்தியா என்னசெய்கின்றது? என்ன செய்யப்போகின்றது?
மீண்டும் புலிகளின் வான்தாக்குதல் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. திரும்பவும் தனது "ராடர்" சாதன வசதிகளையும் உதவிகளையும் மேம்படுத்துவதாகக் கூறி ஓடோடி வந்து ஒத்தாசை புரிந்து, இலங்கைப் படைகளின் தமிழர் தாயக ஆக்கிரமிப்புக்கு உதவப் போகின்றதா? அல்லது, இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகித்து இலங்கையை அதன் போர் வெறிப் போக்கிலிருந்து அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகளின் பக்கம் திருப்பும் எத்தனத்தில் ஈடுபடப்போகின்றதா?
"இப்பொழுது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைப் போக்கில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது இருப்பது எப்போதும் போல இந்தச் சந்தர்ப்பத்திலும் கூட உணரப்படுகின்றது. தனது நலன்கள் எவை, அவற்றுக்குத் துணை போகின்றவர்கள் யார், அல்லது துணைபோகின்ற தரப்புகள் எவை? எத்தரப்பை அரவணைத்துக் கொள்வது போன்ற விடயங்களில் பல தடுமாற்றங்கள் கொண்டதாக இந்தியா உள்ளது" எனப் புலிகளின் மூத்த பிரமுகர் வே. பாலகுமாரன் குறிப்பிடும் கருத்தும் இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.
இலங்கை விவகாரத்தில் சீனாவும், பாகிஸ்தானும் அதிகம் மூக்கை நுழைத்துள்ளன.
இந்தியாவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில், அதன் விரோதப் போக்கு நாடுகளான பாகிஸ்தானையும், சீனாவையும், இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள இலங்கையில் காலூன்றுவதற்கு வாய்ப்பு, வசதி அளித்து, வெற்றிலை வைத்து நிற்கின்றது கொழும்பு.
இதன் அர்த்த பரிமாணங்களையும் ஆழமான பாதிப்புகளுக்கான அடிப்படைகளையும் புரிந்துகொள்ளாத புதுடில்லி, இரண்டுங்கெட்டான் நிலையில் நடந்து கொள்கின்றது என்பதே தமிழர்களின் ஆதங்கம்.
உண்மையான நண்பர்கள் யார், கபட வேடம் தரித்த எதிரி யார் என்பதை அடையாளம் காணாமல், வெறும் அரசுக் கட்டமைப்புகளின் அடிப்படையில் மட்டும் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு, தனது நாட்டுக்குரிய தொடர்ச்சியான, விவேகம் மிக்க இராஜதந்திர வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாமல் தடுமாறும் இந்தியா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படிச் செய்யப்போகின்றது?
மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங் குறிப்பிடுவது போல அல்லது எதிர்பார்ப்பது போல ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயமான பக்கத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா வகுத்துக்கொள்ளுமானால் அது இந்தியாவுக்கும் நல்லது. அவலப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்கவும் வழி செய்யும்.
பாரதத்தை எப்போதும் தனது நட்புச் சக்தியாகக் கருதும் ஈழத் தமிழினம் இந்தியா நல்லதையே செய்யும் என்று இன்னமும் நம்பிக் காத்திருக்கவே செய்கின்றது.