Showing posts with label America. Show all posts
Showing posts with label America. Show all posts

Thursday, August 7, 2008

அல் கொய்தா போராளிக் குழுவுடன் தொடர்பைக் காட்டி பாகிஸ்தானிய பெண் விஞ்ஞானிக்கு ....

பாகிஸ்தானிய பெண் விஞ்ஞானியான ஆபியா சித்திக் (36 வயது), அமெரிக்க நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆபியா சித்திக் கடந்த 5 வருட காலப்பகுதியை அமெரிக்க இரகசிய சிறைச்சாலைகளில் கழித்ததாக மனித உரிமைக் குழுக்கள் அறிக்கையிட்டுள்ளன. அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டவர்களில் முக்கியமானவரான காலித் ஷெய்க் மொஹமட்டின் மைத்துனர் ஒருவரையே ஆபியா சித்திக் திருமணம் செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். மஸாசுஸெட்ஸ் தொழில்நுட்ப நிறுவகத்தின் முன்னாள் மாணவியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமான ஆபியா சித்திக், நீதிமன்றத்தில் ஆஜராகிய சமயம் மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் அவரது கைப்பையிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் இரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான செய்முறைக் குறிப்புகள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு மறுநாள் அவரை தடுத்து வைத்திருந்த முகாமுக்கு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு அதிகாரிகளும் விஜயம் செய்தபோது, அமெரிக்க அதிகாரியிடமிருந்த "எம்4' துப்பாக்கியை கைப்பற்றி அமெரிக்க படையினர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் அமெரிக்கப் படையினர், அவரது மார்பு மீது துப்பாக்கியால் சுட்டு அம்முயற்சியை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபியா சித்திக் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கராச்சியில் வாழும் அவரின் சகோதரி பௌஸியா சித்திக் விபரிக்கையில், ஆப்கானிஸ்தானில் வைத்து அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்தது முதற்கொண்டு, கடந்த 5 வருடகாலமாக அவர் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறினார். 'எதுவித குற்றச்செயலிலும் ஈடுபடாத அப்பாவியான அவர், அநாவசியமாக 5 வருடமாக சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்'' என பௌஸியா சித்திக் மேலும் கூறினார். மேலும் ஆபியாவுக்கு அல் கொய்தா போராளி குழுவுடன் தொடர்பு இல்லை எனவும் அவர் காலீத் ஷெய்க் முஹமட்டின் உறவினர் எவரையும் ஒருபோதும் திருமணம் செய்யவில்லை எனவும் ஆபியாவின் சகோதரி வலியுறுத்தினார் எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படுமானால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20 வருட சிறைத்தண்டனையை அவர் எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகிறது.