Showing posts with label புலிகளுக்கு மரணஅடி கொடுத்த கருணாநிதி. Show all posts
Showing posts with label புலிகளுக்கு மரணஅடி கொடுத்த கருணாநிதி. Show all posts

Wednesday, June 4, 2008

புலிகளுக்கு மரணஅடி கொடுத்த கருணாநிதி !

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக
முதல்வர் கருணாநிதி 'பழமும்
தின்று கொட்டையும் போட்டவர்'
என்றும் சொல்லலாம் அல்லது 'சூடு கண்ட
பூனை' என்றும் சொல்லலாம். அந்தப்
பிரச்சினையில் ஏதாவது கருத்துச் சொல்ல
நேர்ந்தால் மிகவும் கவனமாகவே தனது
வார்த்தைகளைப் பிரயோகிப்பார். கேட்பவர்கள்
அவர் அதைச் சொல்கிறாரா, அல்லது இதைச்
சொல்கிறாரா என மண்டையைப் போட்டு
உடைக்கும் அளவுக்கு இருக்கும் அவரது
வார்த்தைகள்.
தனது நேரடி எதிரியான வை.கோபாலசாமிக்கும்
மறைமுக எதிரியான எஸ்.ராமதாசுக்கும் பிடி
கொடுக்கக் கூடாது என்பதே அவ்வாறு அவர்
கருத்துக் கூறுவதற்கு பிரதான காரணம்.
அத்துடன் புலிகள் முன்பு அவருடன் விட்ட
சே~;டைகள் இன்னொரு காரணம். அதனால்
கருணாநிதி என்ன சொன்னாலும் 'அவன்
சரியான கள்ளனப்பா' என இலங்கைத்
தமிழர்கள் சிலர் சொல்வதுண்டு.
ஆனால் தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் கருணாநிதி
அளவுக்கு ராஜதந்திரிகள் எவரும் இல்லையெனலாம். அதேபோல
அவர் அளவுக்கு அனுபவவாதியும் யாருமில்லையெனலாம்.
அண்மையில் வைகோவும் ராமதாசும் இலங்கைத் தமிழர்
பிரச்சினையைக் கையிலெடுத்த போது அவர் அதைக் கையாண்ட
முறை அதற்கொரு உதாரணம்.
வன்னியில் புலிகள் நாளுக்கு நாள் வேண்டும் அடியைக் கண்டு
பொறுக்காத வை.கோ. அண்மையில் நோர்வே சென்று உலக
நாடுகளிடம் ஒப்பாரி வைத்தார். பின்னர் இந்தியா திரும்பி பிரதமர்
மன்மோகன்சிங்கிடம் ஓலமிட்டார். புலிகளைப் பாதுகாப்பதற்காக
'யுத்தத்தை நிறுத்த வேண்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என
அங்கும் இங்குமாக கத்தித் திரிகின்றார். இறுதியில் தனது கட்சி
எம்.எல்.ஏ. மூலம் சட்டசபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு
வந்தார். ராமதாஸ் கட்சி எம்.எல்.ஏ அதை வழி மொழிந்தார். ஆனால்
கருணாநிதி முந்திக்கொண்டு இந்திய அரசாங்கம் தலையிட்டு
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என
அனைத்துக் கட்சியின் பொதுத்தீர்மானமாக அதை நிறைவேற்றி
வைகோவினதும் ராமதாசினதும் திட்டத்தில் மண்ணைப்
போட்டுவிட்டார்.
போதாதிற்கு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது கருணாநிதி
நிகழ்த்திய உரையில் குறிப்பிட்ட வி~யங்கள் புலிகளுக்கும்
அவர்களின் தமிழக பினாமிகளுக்கும் ஏககாலத்தில் கொடுத்த மரண
பெரும் அடியாகவும் இருக்கின்றது.
மிகக் கவனமாக அவர் ஆற்றிய உரையில்
அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்:
'ஒரு குழுவாக அவர்கள் இருந்து
போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி
பெற்றிருப்பார்கள். வேறு பல நாடுகளைப் போல
விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக்
குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல்
காரணமாகத்தான் இந்தப் பேராட்டம்
பலவீனமாகிவிட்டது. இன்று அவர்களுக்கு
பரிந்துரை செய்து பேச வேண்டியிருக்கிறது.
இலங்கையில் விடுதலை பெற சகோதர
யுத்தத்தை நிறுத்துங்கள் என்று
போராளிகளுக்கு வேண்டுகோள் விடும்
நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு
குழுவுடன் மோதும் போக்கைக்
கடைப்பிடித்தது. தலைவர்கள்
கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள்,
சுடப்பட்டார்கள்.
அங்கு ம.பொ.சி. போன்று இருந்த
அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா?
விருந்துக்கு அழைக்கப்பட்டு, சிற்றுண்டி வழங்கி, தேனீர் எடுத்து வர
அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும்
உடனிருந்த தோழர்களும் பிணமாகக் கிடந்தார்கள். போராளிகளே
அவர்களுக்குள் அடித்துக்கொணடு தமது போராட்டத்தை
பலவீனமாக்கிவிட்டார்கள்.'
ஆதமட்டுமன்றி கருணாநிதி, தமிழீழமென்பது புலிகளின் வெறும் கனவு
என்றும் கூறியிருப்பதோடு புலிகளை ஒடுக்குவதற்காக இலங்கைக்கு
கொடுக்கப்படும் ஆயுதமோ அல்லது புலிகளுக்கெதிரான இராணுவ
நடவடிக்கையோ இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல
என்றும் கூறியிருக்கிறார்.

இவ்வளவும் கருணாநிதி சொன்ன வார்த்தைகள்! எவ்வளவு
அப்பட்டமான உண்மை. கருணாநிதிக்கு தெரிந்த இவ்வுண்மைகள்
ஏன் வைகோவுக்கும் ராமதாசுக்கும் நெடுமாறனுக்கும் கோமாளி
திருமாவளவனுக்கும் தெரியவில்லை? தெரியாமலல்ல புலிகளிடம்
மாதாமாதம் கைநீட்டி வாங்கும் காசுக் கத்தைகளுக்காக
இல்லாததையும் பொல்லாததையும் பேசித் திரிகின்றனர். 'பூனைக்குக்
கொண்டாட்டம் - சுண்டெலிக்கு திண்டாட்டம்' என்பது போல
அவர்கள் காசு உழைப்பதற்காக புலிகளின் யுத்தத்தை ஆதரித்துச்
செய்யும் பிரச்சாரத்தால் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை எவ்வளவு
தூரம் நாசம்குகிறது என்பதைக் கொஞ்சமாவது அவர்கள் எண்ணிப்
பார்த்தார்களா? செய்யமாட்டார்கள். பதிலுக்கு என்ன செய்வார்கள்?
‘கருணாநிதி துரோகி’ என்று சொல்லிவிட்டு புலிகளிடம் மேலும்
பணம் கறந்து கொள்வார்கள்!

- அழகிரி -

முரசொலி