Showing posts with label தேவாலயத்திற்குள் சீருடையில் செல்லலாமா?. Show all posts
Showing posts with label தேவாலயத்திற்குள் சீருடையில் செல்லலாமா?. Show all posts

Thursday, May 1, 2008

தேவாலயத்திற்குள் சீருடையில் செல்லலாமா?

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எவரும் சீருடை அணிந்து உள்ளே செல்லக்கூடாது என்று ஒரு நியதி உள்ளது. அதையும் மீறி இலங்கை ராணுவத்தினர் பாதர் அண்டனி விக்டர் சூசையுடன் மடு தேவாலயத்திற்குள் சென்றுள்ளனர் என்பதனை இந்த படம் தெளிவாக காட்டுகின்றது.

இவர்கள் பாதர் சூசையின் அனுமதியுடன்தான் உள்ளே சென்றார்களா என்பது தெரியாது.

பாதர் சூசையின் பாதுகாப்பிற்க்காகத்தான் உள்ளே சென்றோம் என்று இவர்கள் வக்காளத்து வாங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் பாதுகாப்புக்காக சென்றிருந்தால் அவர்கள் வெளியிலேயே நின்று பாதுகாப்பு அளித்திருக்க முடியும். உள்ளே செல்லவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

Vicar Fr. Anthony Victor Susei enters church with the army

Vicar Fr. Anthony Victor Susei and the army inside the Madu Church

அத்துடன் தேவாலயத்திற்குள் ஆண்கள் எவரும் தலையில் தொப்பி அணிந்து கொண்டு செல்லவும் முடியாது. பெண்கள் தலையில் துணி அல்லது தொப்பி அணிந்து கொள்ளலாம். இந்த படத்தில் ஒரு ராணுவசிப்பாய் சீருடையும் அணிந்து தொப்பியும் அணிந்துள்ளார்.

இதனை எப்படி பாதர் சூசை அனுமதித்தார் என்பதனை புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் இது மிகவும் வண்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயல்.