Showing posts with label விசித்திரமான செய்திகள். Show all posts
Showing posts with label விசித்திரமான செய்திகள். Show all posts

Monday, August 4, 2008

மாற்று ஆபரேஷன் மூலம் இரண்டு முழு கைகளை பொருத்தி சாதனை


உலகிலேயே முதல் முறையாக, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு முழு கைகளும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த 54 வயது ஆண் விவசாயி, ஆறு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி தனது இரண்டு கைகளையும் இழந்தார். செயற்கை கைகளை பொருத்துவதற்கு இரண்டு முறை சிகிச்சை பெற்றும், அது சரிவரவில்லை.

இதையடுத்து, முனிச் நகரில் உள்ள தொழில்நுட்பப் பல்கலையின் ரெச்டஸ் டெர் இசார் மருத்துவமனை டாக்டர்களை அவர் சந்தித்தார். 40 நிபுணர்கள் அவரை பரிசோதித்தனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த மருத்துவமனையின் இயக்குனராக பொறுப்பேற்ற பேராசிரியர் ஹன்ஸ் குயின்டென் என்பவர் அந்த விவசாயிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், கைகளை பொருத்த முடிவு செய்தார்.

இதில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் இருந்தன. மாற்று கைகளை நிராகரிக்க முடியாதபடி, விவசாயியின் உடல், நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல, விவசாயியின் பாலினம், வயது, நிறம், அளவு, ரத்த வகையை ஒத்த மாற்று உறுப்பு கிடைக்க வேண்டும். மாற்று உறுப்பு கிடைத்ததை அடுத்து, அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் தயாராயினர். கடந்த ஜூலை 25ம் திகதி ஆரம்பமாகிய இந்த அறுவை சிகிச்சை, 15 மணி நேரத்துக்கு பிறகு, மறுநாள் முடிந்தது. நோயாளிக்கு எந்த நேரத்திலும் பிரச்சினை ஏற்படலாம் என்பதால், அருகிலேயே டாக்டர்கள் இருந்து கவனித்து வந்தனர். தற்போது, விவசாயியின் உடல், மாற்று உறுப்பை ஏற்றுக் கொண்டு, இயல்பாக செயல்படத் ஆரம்பித்துள்ளது.

Saturday, May 31, 2008

தன்னை தீண்டிய கருநாகத்தை குறிவைத்துப் பிடித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்து விட்டு சிகிச்சை பெற்ற மூதாட்டி

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன்னை தீண்டிய கருநாகத்தின் கழுத்துப் பகுதியை குறிவைத்துப் பிடித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துணிகர சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மூதாட்டி சம்பவதினம் தனது கோழிகளுக்கு இரை போடுவதற்காக கோழிக் கூண்டுக்குள் கைவிட்டபோது இவரை நாகம் தீண்டியுள்ளது. கோழிகள் தான் கொத்துகின்றன என்று எண்ணிய மூதாட்டி கையை விட்டபோது, நாகம் தீண்டியதையடுத்து பாம்பை அவதானித்த மூதாட்டி பாம்பின் கழுத்துப் பகுதியைக் குறிவைத்து பிடித்துத் து}க்கிக் கொண்டு அயலவர்களை அழைத்துள்ளார். சுமார் ஐந்து அடி நீளமான இந்த கருநாக பாம்பைப் பிடித்த மூதாட்டி அதனை தன்னுடனேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று வைத்தியர்களிடம் ஒப்படைத்துள்ளார். ஒப்படைத்ததன் பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். எஸ்.கதிஜா உம்மா என்ற இந்த 82வயதான முஸ்லிம் மூதாட்டியின் துணிகரச் செயலை அறிந்து பிரதேசவாசிகள் பலர், வைத்தியசாலைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டு வருகின்றனர்.

Wednesday, May 14, 2008

கரண்டியால் விடுதலை

பப்புவா நியூ கினியா நாட்டில் சிறைக் கைதிகள் தான் கரண்டியை வைத்து சுவரை தோண்டி எஸ்கேப் ஆகி இருக்கின்றனராம்.

அந்நாட்டில் அண்மையில் பெய்த பலத்த மழையினால் சிறைச் சாலையின் பழைய சுவர்கள் ஈரப்பதம் மிக்கதாக ஆகி விட்டதாம்.

இதனை பயன்படுத்திக் கொண்டு உள்ளே இருந்த கைதிகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் கரண்டிகளை கொண்டு சுவரை தோண்டி அதன் வழியே தப்பிச் சென்று விட்டார்களாம். இதே முறையில் 36 கைதிகள் தப்பிச் சென்று விட்டனராம்.

பூனையை கண்டேன்

பிரிட்டனில் பல மாதங்களாக காணாமல் போன பூனை வெப் கேமரா மூலம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம். இதில் என்ன விசேஷம் என்றால் இந்த பூனையை அமெரிக்க பெண்மணி ஒருவர் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள கான்வால் நகரத்தில் வசிக்கும் ஆபி எனும் பெண்மணி வளர்த்து வந்த பூனை கடந்த அக்டோபர் மாதம் காணாமல் போய் விட்டதாம். இந்த பூனையை கண்டுபிடித்து தருமாறு அவர் பல முறை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடைசியில் அவரது கிராமத்தில் இருந்த வெப் கேமரா மூலம் பூனை நடமாட்டத்தை பார்க்க அமெரிக்க பெண்மணி இது பற்றி அவருக்கு தகவல் கொடுத்தார். இதனை யடுத்து அவர் பூனையை சுலபமாக தேடி கண்டுபிடித்து விட்டார்.

71 நாள் நடந்தே சென்றார் 72 முதியவர்

சீனாவை சேர்ந்த 72 முதியவர், சிறையில் அடைக்கப் பட்டுள்ள தனது வளர்ப்பு மகனை பார்ப்பதற்காக 71 நாள் நடந்தே சென்றார். சீனாவில் உள்ள ஆன்கூய் மாகாணம், டெய்ஹி நகரை சேர்ந்தவர் ஷீ பெய். இவர் குவானங்டாங் மாகாணத்தில் உள்ள லியான் பிங் நகரில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இவருக்கு பெற்றோர் கிடையாது. 72 வயது முதியவர் அவரை தத்துப் பிள்ளையாக அன்புடன் வளர்த்து வந்தார். ஷீ பெய்யிடம் அதிக பாசம் வைத்திருந்தார் அவரது வளர்ப்பு தந்தை. சிறையில் அடைக்கப்பட்ட மகனை, இரண்டு ஆண்டுகளாக பார்க்க முடியாமல் தவித்தார் அவர்.



வளர்ப்பு மகனை பார்க்க ஆசைப்பட்டு, லியான் பிங் குக்கு புறப்பட்டார். ரயில் நிலையத்தில் அவரது பை திருடு போய்விட்டது. டிக் கெட் எடுக்க பணம் இல்லை. டெய்ஹி ரயில் நிலையத்தில் இருந்து நடக்கத் துவங்கினார். பசிக்கும் போது, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டார். 71 நாட்களுக்கு பின், அவர் லியான்பிங் நகருக்கு வந்து சேர்ந்தார். சிறையில் இருக்கும் தனது மகனைப் பார்த்த அந்த முதியவர், "மனம் தளரவிடாதே, விரைவில் விடுதலையாகி விடுவாய்' என்று ஆறுதல் கூறினார்.இவரது கதையை அறிந்த சிறை காவலர்கள், தங்கள் மத்தியில் பணம் திரட்டி, அவருக்கு ரயில் டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

17 குழந்தை பெற்ற பெண்ணின் சாதனை இன்னும் தொடர்கிறது

ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார். இந்த தம்பதி, இனப்பெருக்கத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மிச்லேவுக்கு 17 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். டான்டிடவுனில், குழந்தைகள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதற்காக 7,000 சதுர அடியில் பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளார் டுகார்.



17 குழந்தைகளும் இங்கு ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். மிச்லேயின் குழந்தைகளில் 10 பேர் ஆண்கள்; ஏழு பேர் பெண்கள். மூத்த குழந்தை ஜோஷ்ஷுக்கு 20 வயதாகிறது. கடைசியாக பிறந்த குழந்தையின் வயது ஒன்பது மாதம். எல்லா குழந்தைகளின் பெயர்களும், "ஜே' என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும்படி வைத்துள்ளனர். குழந்தைகளில் மூன்று பேர் டிசம்பர் மாதமும், மூன்று பேர் ஜனவரி மாதமும் பிறந்தவர்கள். எனவே, இந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து பிறந்தநாள் கொண்டாடுவதில் மிச்லே - டுகார் தம்பதி படு பிசியாக இருப்பர். இத்தம்பதியின் குழந்தைகள் தனியாக பள்ளிக்கு செல்வதில்லை; வீட்டுக்கு வந்து ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருகின்றனர்.

Tuesday, May 13, 2008

ஏமாந்த பட்டதாரி பெண்கள்


டுபாக்கூர் சாப்ட்வேர் நிறுவனத்தில், வேலைக்காக பணத்தை கட்டி, பட்டதாரி பெண்களும் அதிகளவில் ஏமாந்துள்ளனர். அண்ணாநகர் போலீசார் விசாரித்த மோசடி வழக்கு, மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தலைமறைவான சாப்ட்வேர் நிறுவன நிர்வாகிகளுள் ஒருவர், ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் நிறுவன நிர்வாகிகளை தேடி ஆந்திரா சென்ற தனிப்படை போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர்.



சென்னை அண்ணா நகர் 2வது அவென்யூ, ப்ளு ஸ்டார், திருமங்கலம் வசந்தம் காலனி, நெற்குன்றம் உட்பட 5 இடங்களில் "விஸ்ப்ரோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் "டுபாக்கூர்' சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டது. அந்நிறுவனத்தினர், "ஜாவா ப்ரோகிராமர்' வேலை தருவதாக கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர். இது குறித்து, சிவகாசியை சேர்ந்த ராஜேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். டுபாக்கூர் நிறுவனத்தினரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு தனிப்படை போலீசார், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புராஜெக்ட் மேலாளர் ஸ்ரீகணேஷ்(62), கம்ப்யூட்டர் கல்வி மேலாளர் சார்லஸ்(36), கம்ப்யூட்டர் சப்ளையர் கிரண் அகர்வால்(32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், நிறுவனத் தலைவரான ஆந்திராவை சேர்ந்த சிவக்குமார், மேலாண்மை இயக்குனர் செந்தில், பொதுமேலாளர் "கேப்டன்' வெங்கடேஷ் ஆகியோரை தேடி மற்ற இரண்டு தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் பெங்களூரு விரைந்தனர்.



ஆந்திரா சென்ற தனிப்படையினர், விஜயவாடா மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவக்குமாரின் வீடுகளுக்கு சென்றனர். அவரது வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. ஆந்திரா போலீசார் உதவியுடன், அங்குள்ளவர்களிடம் தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையில் விஜயவாடா வீட்டை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும், மசூலிப்பட்டின வீட்டை கடந்த பத்து நாட்களுக்கு முன்பும் சிவக்குமார் காலி செய்தது தெரிய வந்தது. பட்டப்படிப்பு படித்த சிவக்குமார், கம்ப்யூட்டர் சம்பந்தமான எந்த படிப்பும் படிக்காமலேயே "நுனிநாக்கு' ஆங்கிலத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு, ஊர் ஊராக சென்று இதுபோன்று மோசடி செய்வதையே தொழிலாக கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாரின் கையில் சிவக்குமார் சிக்கவில்லை.



சிவக்குமாரின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும், அவரின் உறவினர்கள் சிலர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், சிவக்குமார் விரைவில் சிக்குவார் என்று கருதப்படுகிறது. இதே போல், தலைமறைவாக உள்ள சிவக்குமாரின் வலதுகரமாக செயல்பட்ட ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடேசன் என்பவரும் சிக்குவார் என தெரிகிறது. பெங்களூரு சென்ற தனிப்படையினர் வெறுங்கையுடன் தமிழகம் திரும்பியுள்ளனர்.சிவக்குமாரை பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திருமங்கலம் போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்ட மோசடி தொகையை நேற்றிரவு கணக்கிட்டனர். அதில், ரூ.50 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது.புகார்தாரர்களை நேரில் அழைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெற, வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் கம்ப்யூட்டர் வசதியுடன் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வருபவர் கூறுவதை வாக்குமூலமாக பத்து வரிகளில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. ஆயிரக்கணக்கில் புகார்தாரர்கள் உள்ளதால், அவர்களை மீண்டும் அழைத்து விசாரிக்க முடியாத காரணத்தால் இந்த ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.



புகார் கொடுக்க 3 ஆவணம் தேவை : சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற கனவில் பணத்தை செலுத்தி ஏமாந்தவர்கள், கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்க வருபவர்கள், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணம் செலுத்தியற்கான ரசீது, சாப்ட்வேர் நிறுவனம் வேலைக்கு சேரும் போது கொடுத்த கடிதம் மற்றும் அந்நிறுவனம் கொடுத்த அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.



தலைமறைவு நபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் : தங்க காசு மோசடியில் முக்கிய நபரான பெரோஸ் கான் மற்றும் பியூட்டி பார்லர் நடத்திய பெண் பத்மா ஆகியோரிடம் மோசடி பணம் கோடிக்கணக்கில் உள்ளது. அவர்களுடன் நிறுவனத்திற்கு விசுவாசமான சிலரும் தலைமறைவாகி விட்டனர். எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் முருகானந்தத்திடம், உதவி கமிஷனர் ராஜாராம், "தங்க காசு மோசடி வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களுக்கு பரிந்து பேசிய பியூட்டி பார்லர் நடத்தி வந்த பத்மா, தங்க காசு திட்டம் குறித்து விரிவான விளக்கங்களுடன் "சிடி' தயாரித்து வெளியிட்ட பெரோஸ் கான் ஆகியோரிடம் மக்கள் ஏமாந்த பணம் கோடிக்கணக்கில் உள்ளது' என கூறினார்.

Saturday, May 3, 2008

மாடியிலிருந்து வீசப்பட்ட சிசு பலி

6ஆவது மாடியிலிருந்து தாய் தனது ஒரு மாத சிசுவை கீழே வீசி கொலை செய்துள்ளார். கீழே வீசியெறிப்பட்ட குழந்தை இரண்டாவது மாடியின் கூரையின்மீது வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.


Sri Lankan mother throws infant to death

A Sri Lankan mother allegedly flung her month-old infant to death from the sixth floor of a children's hospital here, police said Saturday.

Police Inspector S. Wijesena said the mother is suspected to have thrown the baby to the second floor roof of the Colombo Lady Ridgeway Hospital where the body was found by policemen Friday.

Hospital sources said the infant and his mother had been ransferred from a hospital in Anuradhapura province.

Friday, May 2, 2008

புதுமை திருமணம்

வேலூரில் நடந்த ஒரு திருமணத்தில், திருமணம் முடிந்த பின்னர் மொய்
எழுதுவதற்குப் பதில் மணமக்கள் உள்பட திருமண வீட்டிற்கு வந்திருந்த
அனைவரும் ரத்ததானம் செய்த புதுமை நடந்துள்ளது. கல்யாணம் என்றால்
தாலி கட்டிய அடுத்த நிமிடமே ஆளுக்கு ஒரு பக்கமாக டேபிளைப் போட்டு
மஞ்சள் பை, பேனா சகிதம் மணமக்கள் வீட்டால் மொய் எழுத உட்காருவது
வழக்கம். அதிலும் சில பகுதிகளில் மைக் கட்டி, முத்துக்கருப்பு 300 ரூபாய்,
முனியாண்டி 500 ரூபாய் என்று அனவுன்ஸ் செய்வதும் வழக்கமாக உள்ளது.
ஆனால் வேலூரில் நடந்த ஒரு திருமணம் இவற்றிலிருந்து முற்றிலும்
மாறுபட்டு படு வித்தியாசமாக நடந்து அனைவரையும் அதிசயிக்க
வைத்துள்ளது. காரணம், இந்தக் கல்யாணத்தின் முடிவில் மொய் எழுதுவதற்குப் பதில் அனைவரும் ரத்ததானம் செய்துததான். வேலூரைச் சேர்ந்த டெல்லி பாபு மற்றும் சிவரஞ்சனி ஆகியோரின் திருமணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது.

கல்யாண அழைப்பிதழில் கண்டிப்பாக மொய் எழுதக் கூடாது என்று
போடுவதற்குப் பதில், கண்டிப்பாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்று
அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி நேற்று கல்யாணம்
நடந்தேறியது. எந்தவித ஆடம்பர, அமர்க்களங்கள் ஏதுமின்றி பத்தே நிமிடத்தில்
கல்யாணத்தை முடித்து விட்டனர். பின்னர் ரத்ததானம் தொடங்கியது. மணமகன் டெல்லி பாபு, மணமகள் சிவரஞ்சனி உள்பட மொத்தம் 35 பேர் ரத்ததானம் செய்தனர். மேலும் நேற்று சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், 35 பெண் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மணமக்கள் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது. மேலும் மணமகன் டெல்லி பாபு எழுதிய கவிதை நூலும் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்குத் தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெல்லிபாபுதான் இந்த ரத்ததான யோசனைக்கு மூல காரணம். ஆனால் அவருக்கு உத்வேகமாக இருந்தவர் சந்திரசேகரன். இவர் 1977ம் ஆண்டுகல்யாணம் செய்தபோது இப்படித்தான் ரத்ததானம் செய்தார். அவர்தான் தமிழகத்திலேயே திருமணத்தின்போது மொய்க்குப் பதில் ரத்ததானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள். சந்திரசேகரனின் செயலால் மிகவும் கவரப்பட்ட டெல்லி பாபு, தானும் அதுபோலவே செய்ய முடிவு செய்தே நேற்றைய திருமணத்தில் ரத்ததானத்தை நடத்தி அனைவரையும் வியக்க வைத்தார்.

மொய்யை நிராகரித்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பரப்பிய இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றுதான்.

Thursday, April 24, 2008

'பாஸ்' மார்க் போட விடைத்தாளில் 1,000 ரூபாய் நோட்டு இணைப்பு

"நான் இந்த தேர்வில் தேறாவிட்டால், எனக்கு வேலை போய்விடும். அதனால், மதிப்பெண் போட்டு தேற வைத்துவிடுங்கள்' * "ஐயா, மன்னிக்கவும், இத்துடன் 1000 ரூபாய் நோட்டு இணைத்துள்ளேன்; பார்த்து செய்யவும்'  இப்படி எல்லாம், பள்ளி இறுதித்தேர்வு விடைத்தாளில் எழுதியும், இணைத்தும் மாணவர்கள் அனுப்பியுள்ளனர். மும்பையில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். கடந்தாண்டை விட, "காப்பி' அடித்த மாணவர்கள் எண்ணிக்கை குறைவு தான். மொத்தம் 440 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.ஆனால், விசித்திரமான சில அனுபவங்கள், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. சில விடைத்தாள்களில் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், "ஐயா, என்னை இந்த முறை எப்படியாவது தேர்ச்சி பெறச் செய்து விடுங்கள்' என்று எழுதியிருந்தனர்.

சில விடைத்தாள்களில், மதச்சின்னம் போடப்பட்டிருந்தது; இன்னும் சில விடைத்தாள்களில், கடவுள் வழிபாட்டு தோத்திரங்கள், பாடல்கள் எழுதி விட்டுத்தான் பதில்கள் எழுதப்பட்டிருந்தன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"மதச்சின்னம் போன்ற சின்னங்கள் எதுவும் விடைத்தாளில் எழுதக்கூடாது. பதில்களை தவிர எதை எழுதியிருந்தாலும் நடவடிக்கை உண்டு. ரூபாய் நோட்டு இணைத்துஅனுப்பிய மாணவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.மும்பையில் கடந்த சில ஆண்டுகளாக "காப்பி' அடிப்பது மிகவும் அதிகமாக இருந்தது. கட்டுப்பாட்டை மீறிப் போனதால், கடந்த ஆண்டு கடும் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் "காப்பி' அடிப்பது குறைந்தது.

Monday, April 21, 2008

மருத்துவமனையில் உயிரோடு இருப்பவர் இறந்ததாக தகவல்


உயிரோடு இருப்பவர் இறந்ததாக தகவல் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரி காந்தி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மணவாளன். இவரது மகன் குட்டி (எ) புருஷோத்தமன் (28), ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். கடந்த 16ம் தேதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் குட்டிக்கு உதவியாக தங்கியிருந்த செந்தில் என்பவரிடம், "குட்டி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. 2 அல்லது 3 மணி நேரம்தான் தாங்குவார். வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுங்கள்" என்று நேற்று முன்தினம் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, ஆம்புலன்சுடன் பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.

குட்டியின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்திரியை எடுத்த போது, அவர் வலியால் துடித்துள் ளார். உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு, உடனடியாக பெற்றோரும் உறவினர்களும் டாக்டர்களை வரவழைத்தனர். அப்போது, அறுவை சிகிச்சைக்குப் பின் குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் கூறினர். அப்போதுதான், குட்டி இறந்ததாக தவறாக நினைத்தது எல்லோருக்கும் தெரிய வந்தது.
இதற்கிடையில், குட்டி இறந்து விட்டதாக கருதி இரங்கல் போஸ்டர் அடித்து அவரது நண்பர்கள் சுவர்களில் ஓட்டிவிட்டனர்.

அஞ்சலி செலுத்த சிலர் மாலை வாங்கிக் கொண்டு குட்டியின் வீட்டுக்கும் வந்தனர். குட்டி உயிருடன் இருப்பதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sunday, April 20, 2008

பெண்களின் பின்புறத்தை தடவியதற்காக 53 முறை 'கம்பி எண்ணிய' சபலப்பேர்வழி

திருட்டு, ஜேப்படி குற்றங்களுக்காக, பல முறை சிறைக்கு
சென்றவர்கள் உண்டு. இவரோ சுரங்க ரயில்களில் பெண்களின் பின்புறத்தை
தடவி ரசித்ததற்காக, 53 முறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். அந்த நபரைப்
பற்றிய சுவாரஸ்மான தகவல்கள் வருமாறு:

நியூயார்க் நகரை சேர்ந்தவர் பிரட்டி ஜான்சன் (வயது 49). சபலப் பேர் வழியான இவர், சுரங்க ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பின்புறத்தை நைசாகத் தடவி ரசிப்பார்; அதில், இன்பம் காண்பார். சுரங்க ரயில்களில், பெண்களிடம் ஆண்கள் சில்மிஷம்
செய்வது சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் என்றாலும், இவரோ
இதுபோன்ற குற்றங்களுக்காக 53 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே செய்த குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து
விட்டு, மார்ச் 25ம் தேதி தான் ஜான்சன் விடுதலையானார். மன்ஹாட்டன்
பகுதியில் மீண்டும் அதே தவறைச் செய்து இப்போது மாட்டிக் கொண்டுள்ளார்.
ஜான்சன் பழைய குற்றவாளி என்பதால், விடுதலையான அவரை போலீசார்
சாதாரண உடையில் கண்காணித்து வந்தனர். அப்போது மீண்டும் பழைய
தவறை செய்து மாட்டிக் கொண்டார். இம்முறை ஆயுள் தண்டனை போன்ற
கடும் தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம் என, போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தனர். ஜான்சனின் சில்மிஷ நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு
பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டுள்ளன. "சுரங்க ரயில் எலி' என
அவருக்கு பட்டம் சூட்டியுள்ளன.

Saturday, April 19, 2008

இந்த 445, 455 நம்பர்களால் வந்த விணை

ஒரே நேரத்தில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இரு கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகள் யாருடையது என்பதில் சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவம னையில் குழப்பம் - பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிசேரியன் மூலம் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தையும், மற்றொரு பெண் ணுக்கு பெண் குழந்தையும் பிறந்து, இரண்டு தாயின் டோக்கன்களும் மாறியதால் குழந்தைகள் மாறி குழப் பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு குழந்தைகளின் உறவினர்க ளும் ஆண் குழந்தை தங்களுடையது தான் எனக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தொடரும் பிரச்னை: இரண்டு குழந்தைகளின் ரத்தப் பிரிவுகளும் பி பாசிட்டிவ்-ஆக இருப்பதால், தமிழக அரசின் தடய அறிவியல் துறையின் உதவியுடன் மரபணு (டி.என்.ஏ.) பரி சோதனை செய்து 10 தினங்களுக்குள் குழந்தைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த மெக்கானிக் இளங்கோவன் மனைவி காமாட்சி பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு சிசேரியன் மூலம் வியாழக் கிழமை மாலை 4.59 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தையல்காரர் அன்சாரியின் மனைவி ஃபர்கத் பேகம். இவர் பிரசவத்துக்காக, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். ஃபர்கத் பேகத் துக்கு சிசேரியன் மூலம் வியாழக்கி ழமை மாலை 5.18 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுவும் ஒலி பெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

டோக்கன்கள் மாறியதால்...: பிரசவமானவுடன், தாய் - குழந்தை இருவருக்கும் டோக்கன் கட்டப்படும்.
காமாட்சி - குழந்தைக்கு "455' என்ற டோக்கனும், பேகம் - குழந்தைக்கு "445' என்ற டோக்கனும் கட்டப்பட்டது. காமாட்சி, பேகம் ஆகியோருக்கு டோக்கன் கட்டியபோது எண்கள் மாறிப் போனதால், அவர்களை வார்டுக்கு மாற்றும்போது குழந்தைகள் மாறி குழப்பம் ஏற்பட்டது என்றார் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் டாக்டர் மைதிலி பாஸ்கரன்.

மருத்துவ ஆவணங்கள் சொல்வது என்ன? ""எனினும் காமாட்சி, பேகம் இருவரும் வார்டுக்கு மாற்றப் பட்டவுடன், குழந்தைகளைப் பரிசோதனை செய்யச் சென்ற பிரசவம் செய்த டாக்டர்கள் டோக்கன் மாறி - குழந் தைகள் மாறி விட்டதைக் கண்டுபி டித்து விட்டனர். மேலும் பேகத் துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்றும் காமாட்சிக்கு பிரச வத்தில் பெண் குழந்தை பிறந்தது என் றும் ஆபரேஷன் தியேட்டர் ஆவணம், பிரசவ வார்டு ஆவணம் உள்பட ஆறு இடங்களில் உள்ள ஆவணப் பதிவுகள் மூலம் டாக்டர்கள் உறுதி செய்தனர். ஆனால், இதைப் பெற் றோர் ஏற்க மறுத்து, தங்களுக்குப் பிறந்துள்ளது ஆண் குழந்தைதான் என்று கூறி வருகின்றனர்'' என்றார் டாக்டர் மைதிலி பாஸ்கரன்.

Friday, April 18, 2008

பெண்களை மட்டும் துரத்தி கடிக்கும் கருங்குரங்கு

நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் பெண்களை மட்டுமே துரத்தி, துரத்தி கடிக்கிறது ஒரு கருங்குரங்கு. இதனால், அப்பகுதியில் நடமாட பெண்கள் பயப்படுகின்றனர். தேவாலா பகுதியிலுள்ள, வாழவயல் பகுதிக்கு செல்லும் சாலையில் கருங்குரங்கு ஒன்று பல மாதங்களாக முகாமிட்டுள்ளது. தேவாலா வனச்சரகத்திற்கு எதிரே முகாமிட்டுள்ள இந்த கருங்குரங்கு, பகல் முழுவதும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. மாலை வேளையில், வனச்சரகத்துக்கு எதிரில் சாலையோரத்தில் மறைந்து உட்கார்ந்து கொள்கிறது.

இந்த வழியாக, பெண்கள் யாராவது தனியாக சென்றால் தாவிச்சென்று கடித்து குதறுகிறது. பெண்கள் தப்பித்து ஓடினாலும் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால், இப்பகுதியில் பெண்கள் தனியாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களை கண்டால், ஒன்றும் செய்யாத இந்த கருங்குரங்கு பெண்களை மட்டுமே துரத்தி கடித்து வருகிறது. கடந்த, சில மாதங்களில் 15க்கும் மேற்பட்ட பெண்களை இந்த குரங்கு கடித்துள்ளது.வனச்சரகத்திற்கு எதிரிலேயே, இந்த கருங்குரங்கு அட்டகாசம் செய்து வருகிறது. ஆனால், வனச்சரக அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் உள்ளன.

ஆணழகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளி

மணிப்பூர் மாநிலத்தில் எச்.ஐ.வி. பாதித்த ஒருவர் ஆணழகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர். 37 வயதாகும் இவர் அங்கு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவருடைய தைரியமும், மனோவலிமையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, மணிப்பூர் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் பிராண்ட் அம்பாசடராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எய்ட்ஸ் நோய் குறித்து தான் அச்சப்படவில்லை என்றும், இதேபோல், இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Thursday, April 17, 2008

ஆணாக மாறுகிறார் மனைவி, கணவன் ஷாக்


திருமணமாகி குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், 25 வயது இளம் மனைவி, ஆணாக மாறிக்கொண்டிருக்கிறார். இதனால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள நரோடா பகுதியில் வசிப்பவர் ஜாஷு ரதோட்; கணவன் ரதோட், கூலி வேலை செய்கிறார்.



ஜாஷு ரதோட் எடை கடந்த சில ஆண்டாக அதிகரிக்க ஆரம்பித்தது. தோல் பகுதிகள் ஆண்களை போல தடிமனாக மாறியது, நிறமும் மாறியது. கேசம் வளர ஆரம்பித்தது. இப்போது ஆணாகவே மாறி விட்டார்.இப்போது, ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்தனர். இவருக்கு "அக்ரோமெகாலை' என்ற சுரப்பிக் கோளாறு நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது:இந்த சுரப்பிக் கோளாறு நோய், ஐந்து லட்சம் பேரில் மூன்று பேருக்கு தான் வரும். உடலில் உள்ள "பிட்யூட்ரி' சுரப்பியில் கோளாறு ஏற்படும். இது பாதித்தவர் ஆணாக இருந்தால், அவருக்கு பெண்ணுக்கு உரிய சுரப்பிகள் ஏற்படும். பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தால், ஆணுக்குரிய சுரப்பிகள் ஏற்படும்.

கைவிலங்கிடப்பட்ட கொள்ளையன் பொலிஸ் வாகனத்துடன் மாயம்

அவுஸ்திரேலியாவில் சம்பவம்

கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், கை விலங்குடன் பொலிஸாரின் வாகனமொன்றை கடத்திச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலிய பிரிஸ்பன் நகரில் இடம் பெற்றது.
மார்க் ரொபேர் நொலான் (29 வயது) என்ற இந்த நபரை கைது செய்த பொலிஸார், அவரை விலங்கிட்டு தமது வாகனத்தின் பின் பகுதியில் அடைத்துவிட்டு மேலும் சில ஆதாரங்களைத் தேடி புறப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி நபர் வாகனத்தின் பின் ஆசனத்திலிருந்து ஒருவாறாக சாரதி ஆசனத்துக்கு தாவிக் குதித்து, கை விலங்குடனேயே காரைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது பொலிஸ் வாகனத்துடன் மாயமாகிய மார்க் ரொபேர் நொலானைத் தேடி குயீன்ஸ்லான்ட் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

Wednesday, April 16, 2008

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை

பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை 10 மணியளவில், கல்கிரியாகம பொலிஸ் பிரிவிலுள்ள உதுறுவேர் என்னும் கிராமத்திலுள்ள வீடொன்றில் நிகழ்ந்துள்ளது.

கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள உயர் வகுப்பு மாணவியான 18 வயது யுவதிக்கும் இளைஞரொருவருக்கும் இடையே இருந்து வந்த காதல் தொடர்பை கைவிடுமாறு சம்பவ தினம் காலை காலஞ்சென்றவர் தனது ஒரே தங்கையிடம் கூறியதாகவும் தொடர்ந்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் தகராறு தீர்த்து வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

சற்று நேரத்தின் பின்னர் காலஞ்சென்றவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பின்புறமாகப் பாண் வெட்டும் கத்தியுடன் சென்ற அவரது தங்கை, அண்ணனின் கழுத்துக் குரல்வளைப் பகுதியில் குத்தி இழுத்துவிட்டதாகவும் குரல்வளைப் பகுதியில் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் அண்ணன் உயிரிழந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தங்கையின் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் சுரங்கா ஏக்கநாயக்க (வயது - 24) என்ற டிப்ளோமா பட்டதாரியாவார். ஆறு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் சந்தேக நபரான யுவதி மாத்திரமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

New born baby found dead in washing machine

Lankan housemaid to be arrested in Kuwait



In a sensational story splashed in Kuwaiti newspapers, a new born baby was found killed in a washing machine allegedly by her Sri Lankan mother who works as a housemaid in Kuwait, the Foreign Employment Bureau said yesterday.

FEB Deputy General Manager L.K. Ruhunage told the Daily Mirror the tragedy which took place on March 31 had come to light when the woman’s employer admitted her to hospital because the housemaid had complained of heavy bleeding.

The doctors’ examination revealed the shocking news that the bleeding occurred after the woman’s body had been subjected to some form of confinement such as pregnancy, Mr. Ruhunage said.

However the employer informed the hospital that she had not seen any signs of pregnancy on her employee. This aroused suspicion and a police team was despatched to the house for investigation.

“After a forty minute investigation, the police had discovered an infant’s body, wrapped in thick bandage inside a washing machine in the house,”, Mr. Ruhunage said.

He said the story and pictures relating to the tragedy had been splashed in the Kuwaiti newspaper ‘Alanba’, which displayed a police officer holding the dead infant.

The 38 year old woman who is now receiving treatment at a hospital will be taken into police custody after she is discharged. The Sri Lankan Embassy in Kuwait has been instructed to assist the woman in matters relating to legal aid, translation and documentation.

Meanwhile the Sri Lankan Foreign Employment Bureau is on the search for the family and relatives of the suspect who had migrated to Kuwait last year.

சிறுமிக்கு விவாகரத்து கிடைத்துள்ளது

8வயது சிறுமி அவருடைய 22 வயதான கணவருக்கும் அவருடைய தந்தையாருக்கும் எதிராக யேமன் தலைநகர் ஸனாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அந்த சிறுமிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பினால் மிகவும் சந்தோசமடைந்த அந்த சிறுமி கூறுகையில் " எனிமேல் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் விடுதலை அடைந்து விட்டேன். எனி என்னால் பாடசாலைக்கு செல்லமுடியும். என் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடமுடியும்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் "சுமார் 2½ மாதங்களுக்கு முன்னர் எனது தந்தையார் ஒரு 22வயது இளைஞனுக்கு என்னை மணமுடித்து கொடுப்பதாக அந்த இளைஞனுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார். அப்போது எனக்கு என் தந்தை கூறியது யாதெனில் "நான் 18 வயது வரை என் பெற்றோர்களுடன் இருக்கலாம். அதன் பின்னர் தான் நான் எனது கணவருடன் போய் சேர்ந்து வாழவேண்டும்" என்று தெரிவித்தார். நானும் எனது தந்தையாரின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு ஒரு வாரத்தின் பின்னர் என் தந்தையார் என்னை அந்த இளைஞனுடன் போய் சேர்ந்து வாழும்படி என்னை கட்டாயப்படுத்தி என்னை அந்த இளைஞனின் வீட்டிற்க்கு அனுப்பிவைத்தார். நானும் தந்தையாருக்கு பயந்து அங்கு போய் வாழ முடிவுசெய்து அங்கு சென்றேன். அங்கு சென்ற நாள் முதல் என்னை எனது கணவன் சித்திரவதை செய்து என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். அந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவே நான் விவாகரத்துகேட்டு விண்ணப்பித்தேன்" என்று கூறினார்.

இதனால் என் தந்தையார் என்மீது மிகவும் வெறுப்பாக உள்ளபடியால் நான் எனது தாய் வழி மாமாவின் வீட்டில் போய் இருப்பேன் என்ரு தெரிவித்தார்.

இவருக்காக வாதாடிய வக்கீல் தெரிவிக்கையில் "இப்படியான சம்பவங்கள் இங்கே அதிகமாக நடக்கின்றன. ஆனால் இதைப்போல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன" என்று தெரிவித்தார்.