விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார்.
வெலிக்கந்தை பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார்.
கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவும், புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தத் தகவல்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்குமானால் அவர்கள் இந்த நேரம் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களெனவும் கூறியுள்ளார்.
அத்துடன், களமுனையில் போரிடும் படையினரின் காதுகளில் இவ்வாறான தகவல்கள் எட்டினால் அவர்கள் பெரிதும் குழப்பமடைவதுடன், படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடுமெனவும் கூறி இந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார்.
இதேநேரம், இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து அரசு கவலையடைந்துள்ளது.
Showing posts with label மஹிந்த ராஜபக்க்ஷ. Show all posts

Monday, August 18, 2008
Sunday, July 13, 2008
அரசின் பெயரை கெடுக்க மீனவர்களை தாக்குவது புலிகளாக இருக்கலாம்
விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் பெங்களூருக்கு சென்றார். அங்கிருந்து இந்திய விமானப் படையின் விமானத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதிக்கு சமீபமாக இருக்கும் ரெணிகுண்டா விமானநிலையத்திற்கு வருகைதந்து அங்கிருந்து காரில் திருப்பதிக்குச் சென்றார்.
அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், வெள்ளி இரவு வெங்கடாஜலபதியை வழிபட்டார். இலங்கையில் அமைதி திரும்ப அவர் சிறப்பு வழிபாட்டை நடத்தினார். ராஜபக்ஷவுடன் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் திருப்பதி வந்துள்ளது. ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்கள் ராஜபக்ஷவைச் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் ராஜபக்ஷ பேசுகையில், அமைதிப் பேச்சுக்கு இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால், விடுதலைப்புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்.
நாட்டில் அமைதி திரும்ப விடுதலைப்புலிகளுடன் பேச நாங்கள் எப்போதும் தயார்தான். தீர்வு அவர்கள் கையில்தான் உள்ளது. இதுவரை இலங்கையில் நடந்த சண்டைச் சம்பவங்களில் 25 ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு முடிவு வரவேண்டும் என்றால் விடுதலைப்புலிகள்தான் முன்வர வேண்டும்.
கடந்த இருபது ஆண்டுகளாக இனப்போரால் இலங்கையின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை நிறுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு உலகில் உள்ள எந்த நாடும் ஆதரவு தராது. எனவே இந்தியா விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் என நான் நினைக்கவில்லை.
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு எந்தத் தொந்தரவையும் தரவில்லை. இருப்பினும், இலங்கை அரசின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீனவர்களைத் தாக்குவது விடுதலைப்புலிகளாக இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன். விடுதலைப்புலிகள் பிரச்சினை எப்போது தீரும் என்ற கேள்விக்கு இப்போது பதிலளிப்பது கடினம். இருப்பினும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கையைத் தடுக்க இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
சார்க் அமைப்பின் மாநாடுகளில் விடுதலைப்புலிகள் பிரச்சினையை இலங்கை அரசு எழுப்பி வந்திருக்கிறது. கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் மாநாட்டிலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என்று தெரிவித்தார்.

Saturday, July 5, 2008
Mahinda secretly meets bunker editor in Rome

by a Specal Correspondent from Rome
(July 05, Rome) According to news reaching from sources close to K T Rajasingam a editor of the one of Web sites, the President of Sri Lanka Mahinda Rajapakse had a secret meeting with him when he visited Rome on 5th June 2008.
K.T .R was specially invited to meet the President in Rome. According to K T Rajasingam’s sources, numerous issues were discussed. The President had requested the clandestine editor to organise another breakaway from the LTTE like Karuna’s split. The sources also said the editor had advised the President how to handle the TMVP and to take stern action against renegade Karuna if and when he is deported to Sri Lanka by the British authorities.
The sources confirmed, K T Rajasingam was requested to meet the President in London but due to some hidden and unknown reasons he refused to go there but decided to meet him in Rome.
Since the meeting with the President, K T Rajasingam has made some approaches with the LTTE sidelines in Germany and Paris. One source had bluntly told him to undertake a visit to the LTTE controlled Vanni to orchestrate another breakaway. The clandestine editor had apparently screamed at the LTTE sideline saying ‘Oh no! Oh no! They will kill me if I undertake a visit to Vanni’. K T Rajasingam had taken exception with person and had told him not give advice and make effort to help him find a LTTE man.
The Web Site is operated from a secret location in Sweden and the founder and editor K T Rajasingam is accused of engaging in various nefarious activities. The editor is said to be funded by the Sri Lankan government.
During his meeting with the President in Geneva 18 months ago the President is said to have agreed to fund K T Rajasingam to carryout pro-government propaganda and covert operations against those opposing the government.
Wednesday, June 25, 2008
நாளை புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் அவர்களுடன் கைகோர்த்துச் செயற்பட தயங்கமாட்டேன்
எம்.ஏ.எம்.நிலாம்
இந்த நாட்டில் வாழும் எந்தவொரு தரப்புடனும் யுத்தம் செய்யவேண்டுமென்று ஒருபோதும் எண்ணவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகவே சில நடவடிக்கைகளைக் கடுமையாக எடுக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் நாளை ஆயுதங்களைக் கீழே வைப்பார்களானால் நாட்டின் சமாதானத்துக்காக அவர்களுடன் கைகோர்த்துச் செயற்பட ஒருபோதும் தயங்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராகவிருக்கின்றேன். பயங்கரவாதச் சவாலுக்கு நான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. இந்த நாட்டை எவருக்கும் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யப்போவதில்லை. நாட்டையும் மக்களையும் பாதுகாத்தபடி எனது அரசாங்கம் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
சில ஊடகங்களும்,குழுக்களும் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்றவிதத்தில் செயற்பட்டுவருவதையிட்டு வேதனையும் கவலையும் அடைகின்றேன். நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்புக்காக சில கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குள் நான் தள்ளப்பட்டுள்ளேன்.
சட்டபூர்வமான விடயங்களைக் கூட சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக திரித்துக் கூறமுற்படுகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகச் செயற்படும் எத்தகைய முயற்சிகளையும் முறியடிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரோ, மாதுரை வாவே சோபித தேரோ, கலாநிதி பிரஷ்மனவத்தே சீவலி தேரோ, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அல்ஹாஜ் மௌலவி தியாஸ் முஹம்மத், மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான், மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, உலக மதத்தலைவர்கள் அமைப்பின் கியோஷி சுகினோ, பா.சண்முகரத்னசர்மா, பாபு சர்மா குருக்கள், பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டனர்.

Sunday, June 15, 2008
தலைகள் இரண்டும் தடுமாறும் தரம் கெட்ட அரசியல் நிலை
ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை எதுவும் அவர்களிடம் இல்லை எனபதை தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாக ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுத்தம் இன்று அகில இலங்கைக்கும் பரவி உள்ளது. யுத்தத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்த பீதி ஒரு புறம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மறுபக்கம், நாட்டு மக்கள் இந்த இரண்டிலும் சிக்கி தவிக்கிறார்கள். கௌரவமான அரசியல் தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்று மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கொள்கை இன்று காற்றோடு கலந்து காற்றில் பறக்க விடப்பட்டது. மற்றும் யுத்தம், ஆயுத இறக்குமதி, ஊழல் மோசடி ஆகியவற்றிற்கே இன்று முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற நிகழ்ச்சி நிரலுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற பீதியிலேயே நாட்டு மக்கள் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இன்று அதுகுறித்தான சிந்தனை இல்லாமல் செயற்படுகிறது. இதேசமயம் ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூவுகின்றார். புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவர்கள் பூண்டோடு ஒழித்துக்கட்டப்படுவார்கள் என பிரதமர் கங்கனம் கட்டி நிற்கின்றார். என்றால் தலமையே குழம்பிய பிரச்சாரமாக இருக்கின்றது.
ஜனாதிபதி மேலேவைப்பது என்றால் புலிகள் கீழே வைக்கவேண்டுமென்று கோரிக்கையில் அரசியல் நகர்வு
சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்றால் புலிகள் அதற்கு முன்னர் தமது ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென்று அப்பொழுது ராஜபக்ஷ தனது சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்து மேலே பேச்சுக்கு இடமிளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வெளிவரும் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய விசேட பேட்டி: பயங்கர வாதத்தை அணுகும் விடயத்தில் இருவேறுபட்ட நிலைப்பாட்டினை கொண்டிருக்க முடியாது. நல்ல பயங்கரவாதிகள், கெட்டபயங்கரவாதிகள் என்று இருவகையினர் இருக்கின்றனர் என்ற விடயத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லோருமே பயங்கரவாதிகள்தான். புலிகளுக்காக லண்டனில் இருந்து மட்டுமல்லாமல் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகிறது. இதுவொரு தொண்டுப்பணிகளுக்கான பங்களிப்பல்ல. வலுக்கட்டாயமாகவே வசூலிக்கப்படும் அப்பணம் துப்பாக்கி கள் வாங்குவதற்காக அனுப்பப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரை சூழவுள்ளவர்களும் இரத்தத்தாகம் கொண்ட கொலையாளிகள். அவர்களை அணுகுவது மிகவும் கஷ்டமான விடயமாகும். விடுதலைப் புலிகள் பலவீனமடைகின்ற போதெல்லாம் போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச?கத்தை அவர்கள் கோருவது வழமையான நிகழ்வாகிவிட்டது. இக்காலப் பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டு, ஆயுதங்களை பெற்று மீண்டும் போருக்கு தயாராவதே அவர்களின் திட்டம். ஆனால், இம்முறை சமாதான பேச்சுக்களை மேற்கொள்ள அவர்கள் விரும்பினால் அதற்கு முன்னர் கட்டாயமாக ஆயுதங்களை களையவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பேச்சுவார்த்தை ஒன்றிற்கு செல்ல முடியாது என்றர்.
Saturday, June 14, 2008
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறுகிறார் ஜனாதிபதி
ஆயுதங்களைக் கைவிட்டாலே விடுதலைப் புலிகளுடன் பேச்சு இந்த நிபந்தனையை ஏற்றாலும் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் எதுவும் செய்யமாட்டேன்
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே, அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். அவர்கள் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு விரும்பினால் முதலில் ஆயு தங்களைக் கைவிடவேண்டும்.
இவ்வாறு லண்டனில் வைத்து "த ரைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறியிருக்கிறார்.
அது மட்டுமன்றி புலிகள் தனது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டாலும் கூட, புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் எதையும்செய்யப்போவதில்லை என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துவிட்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து "த ரைம்ஸ்" பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.
அவர் அப்போது கூறியவை வருமாறு:
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இலங்கையின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றின் மத்தியிலும் கூட நாம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்கப் போவதில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த அமைப்பு முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.
விடுதலைப் புலிகள் தாங்கள் பலவீனமாக உள்ள சமயத்தில் சர்வதேச சமூகத்தை யுத்தநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோருவார்கள். இக்காலப் பகுதியில் அவர்கள் மீண்டும் போரிடுவதற்காகத் தம்மைப் பலப்படுத்துவார்கள்.
இம்முறை அவர்கள் பேச்சுகளில் ஈடுபட விரும்பினால் முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை
விடுதலைப் புலிகள் இந்த முன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவருடன் நான் சமாதான ஒப்பந்தம் எதனையும் செய்துகொள்ளமாட்டேன். ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
"இந்த மனிதரும், அவரைச் சுற்றியுள்ள மூன்று நான்கு அடியாட்களும் இரத்த வெறி பிடித்தவர்கள். அவர்கள் உணர்வில்லாதவர்கள்" என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Wednesday, June 11, 2008
எங்கும் ராஜபக்க்ஷ எதிலும் ராஜபக்க்ஷ
இலங்கையில் அண்மைக்காலமாக எல்லாமே ராஜபக்க்ஷ மயமாகிக் கொண்டிருக்கிறது.
Lanka Becomes 'Sri Rajapakisthan'
Today there was total confusion in Sri Rajapaksistan (formerly Sri Lanka) when thousands and thousands of people changed their name to Rajapaksa to get appointed as a Member of Parliament or even to get a job.
“Aiyo! It is total confusion,” said a man called Rajapaksa, “Everyone is changing their name to Rajapaksa! This is mad! The telephone directory is now full of Rajapaksas. Even Abdul Gafoor of the Thambi Kade now goes by the name of Abdul Gafoor Rajapaksa and the Thosai Kade is run by Nagalingam Rajapaksa!”
Hospitals authorities were reporting that all newborn babies are being named Rajapaksa by their parents (also called Rajapaksa) and several babies have now got mixed up. Dr. Rajapaksa of the De Soyza Maternity Hospital said “Of the deliveries this morning all except one baby were named Rajapaksa. One was named Askapajar, which I believe is Rajapaksa spelt backwards. Even at this moment, Midwife Rajapaksa is delivering a baby already named Rajapaksa by its parents!”
Even the Police and the courts are having trouble with most victims and offenders having the name of Rajapaksa said Police Inspector Rajapaksa of the Pettah Police. A High Court trial (State v Rajapaksa, Rajapaksa and Rajapaksa) came to a standstill today when the victim, the suspects, the Advocates and even the Judge were called Rajapaksa. Even most of the jurors were called Rajapakse. Emerging reports indicate that the Mahanayaka Theros and the Bishops and Archbishop have changed their name to Rajapaksa. Even Pope Rajapaksa.... (That’s enough Rajapaksa! - Ed. Rajapaksa)
Announcements
Deaths Rajapaksa, Raja.
The death is announced of Raja Rajapaksa, beloved Husband of Rajani Rajapaksa, loving father of Rajapaksa (Bank of Rajapaksa), Dr. Rajapaksa (Rajapaksapura Hospital) and Rajapaksa (MD Rajapaksa Industries) Loving grandfather of Rajapaksa and Rajapaksa. Cortege leaves Residence at 4.30pm today to the Rajapaksa Crematorium
Births
Rajapaksa, Rajapaksa.
Mr and Mrs Rajapaksa of Battaramulla are pleased to announce the birth of their baby son Rajapaksa Rajapaksa. Both mother and son are doing well.
Marriages
Rajapaksa and Rajapaksa.
The families of Rajapaksa Rajapaksa (of Rajapaksa Corporation) and Rajapaksa Rajapaksa (of the Rajapaksa Communications) are pleased to Announce the marriage of their daughter (or is it the son ?) to their son (or is it daughter?) at the Rajapaksa Hotel......(That’s enough Rajapaksas! - Ed)
Change of Name
I, Warnakulasuriya Muhandiramge Francis Fernando of Paiyagala will henceforth be known as Rajapaksa Mudiyanselage Rajapaksa Rajapaksa. (43782)
I, Ranil Wickremasinghe of Cinnamon Watta C7 will henceforth be known as Ranil Rajapaksasinghe (96410)

Sunday, June 8, 2008
வடக்கு மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்
சர்வதேச அழுத்தங்களுக்காக போர் நிறுத்தப்படமாட்டாது! அரசியல் நோக்கங்களுக்காகவும் அது நடக்காது உறுதிபடச் சொல்கிறார் ஜனாதிபதி மஹிந்த
சர்வதேச நாடுகள் எந்தவிதமான அழுத்தங்களை விதித்தாலும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தும் போர் நிறுத்தப்படமாட்டாது. அதேபோன்று திட்டமிட்ட சில அரசியல் நோக்கங்களை மனதில் வைத்தும் போர் நிறுத்தப்பட மாட்டாது.
இவ்வாறு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பேசுகையிலேயே ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.
போர் வீரரின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் அங்கு பிர தம விருந்தினர் உரை நிகழ்த்தினார். ஜனா திபதி தமது பேச்சில் மேலும் கூறியவை வருமாறு:
ஆயுதங்களால் மட்டும் போரை மேற் கொள்ள முடியாது. படையினர் போரில் வெற்றி பெறுவதற்கு தலைமைத்துவம் மீது நம்பிக்கை இருப்பதும் அவசியம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இனிவரும் காலத்தில் படையினர் பின்னடைவைச் சந்திக்கப் போவதில்லை.
ஸ்ரீலங்காவின் வீரர்களை உலகம் கௌர விக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. உலகம் பயங்கரவாதத்தை இலங்கை மண் ணில் இருந்து ஒழிப்பதற்கு தங்கள் உயி ரைப் பணயம் வைத்துப் போராடும் எமது யுத்த வீரர்களின் தியாகத்தை அகில உல கமும் நினைவு கூரும் காலம் விரைவில் வரும்.படைவீரர்களின் மனோநிலையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பெரும் சேவைகளைச் செய்துவருகிறது. பயங்கர வாதிகளுக்கு எதிரான இராணுவநடவடிக் கையை நிறுத்தி விடுமாறு கடுமையான சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படும் இந்த வேளையில் அரசாங்கம் படையி னரை கௌரவிப்பதை வரலாறு எடுத்துக் கூறும்.
சர்வதேச ஆதிக்கம் காரணமாகவும் சமா தான ஆர்வலர்களின் எதிர்ப்புக்காரண மாகவும் முன்னர் பதவியில் இருந்த சில அரசாங்கங்கள் இராணுவ நடவடிக் கையை கைவிட வேண்டிய நிர்ப்பந்தங்கள் சந் தர்ப்பங்கள் ஏற்பட்டன.
எவ்வாறாயினும் இந்த அராசாங்கம் படையினருக்கு எதுவித பின்னடைவும் ஏற்பட அனுமதியாது. பொதுமக்களை, நாட்டில் அமைதியை பேணுமாறு கோரி வரும் இந்தவேளையில் அரசாங்கம், அரசி யல் நோக்கங்களுக்காக இராணுவ நடவ டிக்கையை நிறுத்திவிடமாட்டாது.தற்போதைய நெருக்கடியான காலகட் டத்தில் முப்படையினருக்கும் பொலிஸா ருக்கும் பொதுமக்களின் ஆதரவு அசியம். அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் பூரண ஆதரவைத் தரவேண்டும். அரசியல் வாதி கள் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு களுக்குப் பதில் அளித்துவிட முடியும்.
ஆனால் படைவீரர்களால் பதில் கூற முடியாது. போராடும் படைவீரர்களால் அவர் களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க முடியாது. இதனால் படை யினரின் மனோநிலை மிகவும் பாதிக்கப் படும். ஆயுதங்களினால் மாத்திரம் பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது.எனவே படையினரின் மனோநிலையை பல்வேறு வழிகளில் ஊக்குவிப்பதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இராணுவ நடவடிக்கைகளை தடுக்கும் யுக்தியுடன் பயங்கர வாதிகள் மிருகத்தனமான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புகிறார்கள்
கிழக்கு மாகாண மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை தாங்களும் அனுபவிக்க வேண்டும் என்று வடபகுதி மக்கள் விருமபுகிறார்கள். மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவது தனது தலையாய கடமையா கும் என்று அரசாங்கம் கருதுகிறது.
யுத்த வீரர்களுக்கு மக்கள் செய்யும் மரியாதை
இந்த நிலையில் தென்னிலங்கை மக்கள் மிக அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். யுத்த வீரர்களுக்கு மக்கள் செய்யும் மரியாதை இதுவே!
திரைநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த நிணைவுச் சின்னம் நாட்டில் ஜனநாயகத் தையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாப் பதற்கு படையினர் ஆற்றிவரும் சேவையை என்றும் நினைவுறுத்தும்என்று கூறினார் ஜனாதிபதி.
"ரணவிரு"சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனான்டோ பிரதமமந்திரி மற்றும் அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Posts (Atom)