Showing posts with label Against LTTE. Show all posts
Showing posts with label Against LTTE. Show all posts

Tuesday, August 19, 2008

வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்

வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.

Sunday, August 10, 2008

இரவு நேரத்தில் காரில் சென்ற 6 இலங்கை அகதிகள் கைது

பொலிஸ் வாகன சோதனையில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து தமிழ் நாட்டில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை, கண்காணிப்பை பலப்படுத்துதல் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை நகர பொலிஸ் ஆணையர் சேகர் உத்தரவின் பேரில், பொலிஸார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டனர். அந்தக் காரில் 6 பேர் இருந்தனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 6 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வருபவரென்பதும் தகவல் விசாரணையில் வெளியானது. இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் கொலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்தக் காரில் அழைத்துக் கொண்டு வந்ததாக பொலிஸிடம் தெரிவித்தனர்.

ஒரே காரில் இரவு நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று பொலிஸார் கேட்ட போது, நண்பர்களாகிய நாங்கள், அடிக்கடி இப்படிக் காரில் ஜாலியாக சுற்றுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த விபரங்களில் திருப்தியடையாத பொலிஸார் சந்தேகப்பட்டு காரை தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு நம்பர் தகடு கிடைத்தது. அதில் வேறு ஒரு பதிவு எண் இருந்ததை கண்ட பொலிஸார் அது பற்றி கேட்டனர். தங்களது காரில் இருந்த நம்பர் தகடு பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய தகட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். காருக்குள் கிடந்த நம்பர் தகட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.

இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த பொலிஸார் விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி, யார் யாருடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதை சோதனையிட்டனர். இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா, ஆயுத விநியோகத்தில் சம்பந்தப்பட்டவர்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் எப்படி வெளியேறினார்கள் என்பது பற்றியும் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் "பரோட்டா' மாஸ்டராக வேலைசெய்த இலங்கையர் விடுதலைப் புலியா?

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்து கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கியிருந்த இலங்கை நபரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதானவர் விடுதலைப் புலிகளின் கூட்டாளியா என்று விசாரித்து வருகின்றனர்.

பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள விடுதிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும்படி பொலிஸ் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, அயனாவரம் சாமி பக்தன் தெருவில் பி.கே.எஸ்.மேன்சனில் வெளியாட்கள் யாராவது தங்கியுள்ளார்களா என்று தலைமைச் செயலகப் பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த சூரியகுமார் என்பவரிடம் விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் கடந்த நான்காண்டுகளாக தங்கியதால் முகவரி சரியாகத் தெரியாது என்று கூறியது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

தீவிரமாக விசாரித்ததில் "நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து முகவர் மூலம் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்குப் சென்றேன். அங்கு மூன்று மாதம் கழித்து மலேசியா சென்றேன். மலேசியா முகாமில் என்னை அடைத்து வைத்தனர். அங்கிருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு தப்பி போலிக் கடவுச்சீட்டு மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளேன். சென்ட்ரல் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல்களில் சிறிது நாட்கள் பணிபுரிந்தேன். பின்னர் பார்டர் தோட்டம் முருகவிலாஸ் ஹோட்டலில் ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன்' என்றார்.

சூரியகுமாரை பொலிஸார் கைதுசெய்து சென்னையில் தங்கியிருந்து சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்றும் விடுதலைப் புலிகளின் கூட்டாளியாக செயல்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, August 7, 2008

புலிகளை தோல்வியடையச் செய்தால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும்

புலிகளைத் தோல்வியடையச் செய்வதன் மூலமே இந்நாட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும் என்பதுடன் மக்களுக்கான உரிய ஜனநாயகத்தைப்பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க அரசு விரும்பினால் வெள்ளைவான் கலாசாரம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் கப்பங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும்.

புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நாம் கூறினால் மாத்திரம் போதாது அவர்களுக்கு உதவி செய்பவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போது பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் தருணம் வந்துவிட்டது. இதற்கமைய எமது படையினரும் வெற்றிகொண்டு, முன்னேறி வருகின்றனர். புலிகளை யுத்த ரீதியாகவே தோல்வியடையச் செய்யவேண்டும். மக்களுக்கான ஜனநாயகத்தை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்நாட்டை புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அகதிகள் என்ற பெயரில் புலிகள் ஊடுருவல்

இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினையால் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 22,350 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பெரும்பாலான அகதிகள் கூலித் தொழிலாளிகள் எனக் கூறுகின்ற போதிலும் படகொன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வரை செலுத்தி தமிழகம் வருகின்றனர். இவர்களால் எவ்வாறு இவ்வளவு பணத்தை செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு இது வரையில் பதிலில்லை. அதேவேளை தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளை அதிகாரிகள் காரணம் கேட்டு தடுத்து நிறுத்துவதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அண்மையில் முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாக உளவுப் பிரிவு பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இத்தகைய பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல அகதி முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு பொருட்களை கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஆயுதப் பயிற்சி பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என உளவுப் பிரிவினர் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர் இது இராமநாதபுரம் கடந்த சில நாட்களாக புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலர் இலங்கைக்கு பொருட்கள் கடத்தியது தொடர்பில் கைதான சம்பவத்தையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து உளவுப் பிரிவு பொலிஸார் அகதிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளின் பெயரில் மோசடிசெய்யும் மாற்று இயக்கத்தவர்களின் வஞ்ச செயளால் தலைகுனியும் தமிழ் சமூகம்

பிரித்தானியாவில் வங்கியட்டை மோசடியில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தனி நபர்களளும் மாற்று இயக்கத்தினரும் ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன் தண்டனையில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள புலிகளின் மேல் பழியைப்போட்டவர்கள் தான் அதிகமான தமிழர்கள் என்பது மக்கள் அறிந்த உண்மை . இதேசமயம் தம்மை புலிகள் தான் துர்ண்டினார்கள் என்று சொல்லி தப்பினவர்களும் உண்டு. இத்தகைய மோசடிகளில் மட்டுமல்ல மற்றைய மோசடிகளிலும் இத்தகைய கைவண்ணமும் விசமத்தனத்தை மேற்கொண்டவர்கள் மாற்று இயக்குத்தினரே என்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுந்துள்ளது இந்தக் குற்றுச்சாட்டு உண்மையானது இதற்கான ஆதாரங்கள் பல சுவிசர்லாந்திலே இருப்பதாகவும் தெரியவருகின்றது. புலிகளின் தூண்டுதலில் மோசடியில் தாம் ஈடுபட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெரியவந்தது. இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா??? என்ற சந்தேகம் தற்பொழுது வெளிநாட்டு புலணாய்வுத் துறை மத்தியில் வலுப்பெற்று இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இலங்கை இந்தியா போன்ற பகுதிகளில் பெருமளவு சொத்துக்களை வாங்கியுள்ளார்கள் இவர்கள் அனைவரும் மாற்று இயக்கத்தின் பிரதிநிதிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் லீசெஸ்ரர்சையர் பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் என்ற முஸ்லீம் நபர், வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தற்பொழுது பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் தானாக சென்று காவல்துறையினரிடம் சரணடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் செயற்பட்டதாகவும், அவர்களே கடனட்டை மோசடிக்கான உபகரணங்களை தனக்கு வழங்கியதாகவும் விசாரணையில் கூறியிருக்கின்றார். இந்த விசாரணைகள் தொடரும் தர்னத்தில் பிரித்தானியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தமிழ் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பலர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் குழுக்களாக மோதல்களில் ஈடுபடுவது, தமிழ் சிறார்களை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குதல் கடனட்டை மற்றும் மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோரத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ரூற்றிங்கில் பிரபா என்ற இளைஞனைப் படுகொலை செய்த சிறீலங்காவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞருமாக 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனையும்: ஏனையோருக்கு பல வருடங்கள் சிறைத்தண்டனையும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்டிருக்குpன்றது. பிரித்தானிய ஊடகங்களும் உண்மையைக் கண்டறிந்து செய்தி வெளியிடும் ஊடக தருமத்தை மறந்து நீதிமன்றங்களில் குற்றவாளிகள் கூறும் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு வருவதால் பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் இது பற்றி குறிப்பிட்ட ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 6, 2008

புலிகளுக்கு எதிரான வேட்டை தமிழகத்தில் – பலர்கைது - கூறுகிறது கியூப் பிரிவு

சென்னையில் விடுதலைப்புலிகளின் முகவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு கடத்த முயன்ற தொலைதொடர்பு கருவிகளை காவற்துறையினர் அவரிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகிறன. இதனால் விடுதலைப்புலிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லாதவாறு தடுக்கும் பணியில் கியூ பிரிவு காவற்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கடத்தல் முகவர்களை கியூ பிரிவினர் கைதுசெய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து டீசல் மற்றும் அலுமினிய கட்டிகள் போன்ற பொருட்கள் விடுதலைப்புலிகளுக்கு அதிகமாக கடத்தி செலலப்படுகின்றன. இவ்வாறு பொருட்களை கடத்திச் செல்வதற்கு விடுதலைப்புலிகளே சில நேரம் தமிழகத்திற்கு நேரடியாக உள் நுழைவதாகவும் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துளளனர். கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் முக்கிய நபரான தம்பி அண்ணா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக புதிய வியூகம் வகுக்க அவர் சென்னை வந்த போது கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நூற்றுக்கணக்கான கடத்தல் முகவர்களை தேடி அவர்களை கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடத்தல் முகவர்கள் தங்கி இருப்பதாக கியு_ பிரிவினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதிகளை கண்காணிக்கும்படி தமிழக காவற்துறை ஆணையர். கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். இதனையடுத்து கியூ பிரிவினர் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளை மாறு வேடத்தில் கண்காணித்தனர். மடிப்பாக்கத்தில் உள்ள இலத்திரனியல் கடை ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான தொலை தொடர்பு தகவல் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, செல்போன் மூலம் மோட்டார்களை இயக்கும் ஸ்டார்ட்டர் கருவியும், 50 கிலோ மீட்டர் தூரம் பேசக்கூடிய சக்திவாய்ந்த டெலிபோன் இணைப்பு கருவிகள் 10 (பவர் ஸ்டேசன், நானோ ஸ்டேசன்), இன்டர்நெட் போன் அடாப்டர் 9 போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பொருட்கள் பிரான்சில் இருந்து கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்கி இலங்கைக்கு கடத்தி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் முகவரான 31 வயதான செல்வம் என்ற செல்வக்குமாரையும் கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. அவரது கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவரிடம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் ஜீவன் என்ற இனியன் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இலங்கையில் கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த தனக்கு விடுதலைப்புலி இயக்கத்தோடு எனக்கு தொடர்பு இல்லை எனினும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களோடு பழக்கம் இருந்தது எனவும் செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் உளவு பிரிவைச் சேர்ந்த இனியன் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்; தமது ஊரைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் தனக்கு நண்பராக விளங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பேசிய இனியவன் விடுதலைப்புலிகளுக்காக தொலைதொடர்பு தகவல் சாதனங்கள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதை சென்னை மடிப்பாக்கத்தில் இலத்திரனியல் கடை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்கி இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் இனியவன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் செல்வம் கூறியுள்ளார். கிளிநொச்சியில் தனது பெற்றோர் உள்ளதாகவும் சில காரணங்களுக்காக தான் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேலையை செய்து முடித்தால் தனக்கு பெரிய அளவில் பணம் தருவதாகவும் இனியவன் கூறி இருந்தாகவும் எனினும் பொருட்களை அனுப்புவதற்கு முன்னர் காவற்துறையினர் தன்னை கைது செய்து விட்டனர் என செல்வம் என்ற செல்வக்குமார் காவற்துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 5, 2008

இரணைதீவில் உள்ள விடுதலை புலிகளின் முகாம் ஒன்றை இராணுவத்தினர் அளித்துள்ளனர்.

இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையின் துரித நடவடிக்கைப் ப அணியினரும், விசேட படகு அணியினரும் அந்தத் தீவுக்குச் சென்று, அங்கு அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை அழித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை, மன்னார், வவுனியா, வெலிஓயா, யாழ்ப்பாணம் முகமாலை ஆகிய களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் நேற்று மாத்திரம் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவல் ஏன்?: தீவிரமாக கண்காணிக்க உளவு போலீசார் முடிவு

இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் கியூ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்து வரும் உச்சக்கட்டப் போரினால், வாழ வழியில்லாத நிலையில் ஏராளமான அகதிகள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். 2006ம் ஆண்டு முதல் இதுவரை 22 ஆயிரத்து 350 அகதிகள் வந்துள்ளனர். இவர்களில் அகதிகள் போர்வையில் வந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த 42 பேரை விசாரணை மூலம் கியூ பிரிவு போலீசார் கண்டறிந்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளனர்.

அகதிகள் தமிழகம் வரும்போது கட்டணமாக அதிகபட்சமாகத் தலா ரூ.25 ஆயிரம் வரை இலங்கைப் படகோட்டிகளுக்குக் கொடுக்கின்றனர். ஒரு படகில் கூடுதலாக 15 அகதிகள் வரை வந்து கரையிறங்குகின்றனர். இலங்கையில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறும் இவர்கள், படகுக் கட்டணமாக ரூ. பல ஆயிரங்களைச் சேமித்தது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதே போன்று, தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் அகதிகளை, அதிகாரிகள் காரணம் கேட்டுத் தடுத்து நிறுத்துவதும் இல்லை.

தமிழக முகாம்களில் அகதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற புலிகள் இலங்கைக்குப் பொருட்களை சர்வ சாதாரணமாகக் கடத்திச் செல்கின்றனர். பிடிபடும் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் அகதிகள் என்பது தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவினர் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்ட அகதி நவீன் என்பவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்தி வருவதற்காக தமிழகத்துக்கு அகதியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்புடைய அகதிகள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள், தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது உளவுப் பிரிவுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இலங்கை ராணுவம் தாக்கினால் எப்படித் தற்காத்துக் கொள்வது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படித் தப்புவது போன்ற பயிற்சிகளை புலிகள் அளித்துள்ளதாக கூறப்பட்டபோதும். இதில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளாகத் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களா? என்ற குழப்பம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுப் பிரிவினர், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Sunday, August 3, 2008

ராமேஸ்வரம் அருகே விடுதலைப் புலி கைது

ராமேஸ்வரம்: மண்டபம் அருகே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் கைது செய்யப்பட்டார்.

மண்டபம் கடற்பகுதியில், நேற்று மாலை பைபர் கிளாஸ் படகு ஒன்று அனாதரமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படகை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், இன்று மண்டபத்தில் முரளிதரன் (39) என்பவரைக் கைது செய்தனர்.

இவர் மண்டபத்திற்கு வருவதற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பே கடலில் குதித்து நீந்தி மண்டபத்தை அடைந்துள்ளார் முரளிதரன். இவர் எதற்காக ரகசியமாக மண்டபம் வந்தார், ஆயுதம் வாங்க வந்தாரா அல்லது அகதியாக வந்தாரா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முரளிதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான தம்பி அண்ணா என்கிற டேணியலை கியூ பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக முரளிதரன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் மன்னிப்பளிக்க முடியாது

மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன ஜனநாயகத்தை வலுப்படுத்த நடவடிக்கை அவசியம்

- அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர்

கடத்தல், காணாமல் போதல், சட்டவிரோத கைதுகள் உட்பட தொடர்ந்து செல்லும் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளன. இலங்கை அரசாங்கம் சகல மக்களினது மனித உரிமைகளை மதிப்பதோடு ஜனநாயகத்தை வலுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவளிக்கும். தமிழீழ விடுதரகப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

சகல இன மக்களினதும் நியாயமான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை காண்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் றிச்சர்ட் பௌச்சர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் அவதானிப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் மாநாடு தொடர்பான தமது அவதானிப்புகளை நேற்று முற்பகல் கொழும்பு டிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த றிச்சர்ட் பௌச்சர் மேலும் கூறியதாவது, சகல வடிவிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டித்துள்ள தெற்காசிய நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு உறுதி பூண்டுள்ளன.

உணவுப் பாதுகாப்பு, சக்தி, காலநிலை மாற்றம், சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு பிராந்திய நாடுகள் இணங்கியுள்ளமை சிறந்த அம்சமாகும்.

இலங்கையில் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா பூரண ஆதரவளிக்கும். விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வலையமைப்பை தடுப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இயங்கி புலிகளின் ஆயுத விநியோகத்துக்கு உதவி வந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடை செய்தமை இவற்றுள் முக்கியமானதாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் மன்னிப்பளிக்க முடியாது.

இலங்கையில் தொடர்ந்து செல்லும் கடத்தல்கள், காண்மல் போதல், சட்டவிரோத கைதுகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளன.

மனித உரிமை மீறல்களை பாதுகாப்பதற்கும் துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும் சிறுவர்கள் படையணிகளில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

அரசாங்கம் நாட்டிலுள்ள சகல மக்களினதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதேவேளை இனப்பிரச்சினைக்கு சகல இன மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையிலான அரசியல் தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனாமி புனருத்தாரண வேலைத் திட்டங்களுக்காக 135 மில்லியன்களை அமெரிக்கா வழங்கியது. எமது நிதியில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி அபிவிருத்தி நிவாரணப் பணிகள் ஏறக்குறையை பூர்த்தியடைந்துள்ளன.

இலங்கை மக்களின் பொருளாதார, சமூக, அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது உதவிகளை வழங்கும். உள்நாட்டுப் போர் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய பணிகளையும் அமெரிக்கா ஆற்றி வருகின்றது.

US supports crackdown on LTTE

Visiting top US State Department official Richard Boucher says US will support crackdown on LTTE in Sri Lanka. He said Sri Lanka must also address human rights issues as well.

Sunday, June 22, 2008

புலிகளுக்கு எதிராக கனடாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட படங்கள்








Mass Demonstration held in Toronto against LTTE

(June 22, Toronto) Hundreds of Sri Lankan Canadians gathered in Toronto today to say thanks to Canadian Government’s decision to ban World Tamil Movement (WTM), a front organization of LTTE in Canada. This demonstration reflects the anger Sri Lanka Canadians had for a long time towards illegal fund raising activities of LTTE in Canada. According to a report issued by Human Rights Watch, LTTE front organizations such as WTM use intimidation and threats to collect money from Sri Lankan Canadians for its war in Sri Lanka. Organizers say the demonstration was a huge success, which organized by the “Forum of Sri Lankan Canadians Against Terrorism” (FSCAT) a group consists with associations of different ethnic, political and religious groups with Sri Lankan origin. Such as United National Association of Canada (SLUNA), Tamil Democratic Cultural Association of Canada, JVP (Committee in Canada), Sri Lanka Freedom Party (Canada Branch), Patriotic national Movement (Canada Branch), National Freedom Front (Canada Branch) and GTA Sri Lankan students.

In its press release FSCAT said “We Sri Lankan Canadian who belong to different ethnicities and religions are gathered here today (June 21) in support of Canadian Govt’s decision to list, “WTM” as a terrorist entity. This is truly a decision entire Sri Lankan community admire with great appreciation with regards to the Govt. of Canada. Specially in reference to stopping the flow of Canadian Dollars to fund international terrorism”

One of the major reasons for the success of the event was “participation of large number of Sri Lankan Tamils join hands with Sinhala and Muslims in Toronto without any fear” Sam Rajendran the president of Tamil Democratic Cultural Association said. “This is what we want that is how we used to live in Sri Lanka”. He further said. “We are going to take this solidarity further; number one enemy of Tamil people in Sri Lanka is LTTE. It is the time Tamils to understand that; that is why we are coming out to show them that we are not afraid of intimidation anymore”. Lenin Benadict another Sri Lankan Tamil who is the spokes person for FSCAT said.

In it press release FSCAT further highlighted that “We would also like to mention that just banning, “WTM” does not completely end the fundraising capability of the LTTE as there are still large scale LTTE activities going on undetected by Canadian Authorities.”

Also keep in mind that there many NGOs collecting money using different causes and charity events. Son In order to completely halt LTTE fundraising capability, all these business and NGO’s should be thoroughly examined. We request security agencies to further co-operate with Sri Lankan Canadians who come forward to pinpoint these LTTE operation we call Canada. We once again thank Canada for taking such a justifiable action and a stance against International Terrorism and let’s keep it that way.”