Showing posts with label ஆனந்தசங்கரி. Show all posts
Showing posts with label ஆனந்தசங்கரி. Show all posts

Sunday, October 26, 2008

“இன்று இலங்கை தமிழ் மக்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்மை மீட்டுத் தருவோம் எனக் கூறிய விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்களை மீட்டெடுப்பதே.

டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு

மதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு,

தமிழ்நாடு இலங்கையின் இனப்பிரச்சினையில் அக்கறைகொள்ள ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி தருகின்ற போதும் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது அக்கறை கொள்ளாமை ஏமாற்றத்தை தருகின்றது. தம்மை பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகள் அவர்களை ஓர் மனித கேடயமாக பாவிக்கின்றனர். இலங்கை தமிழ் மக்கள் ஞாபகத்துக்கெட்டாத புராதானகாலம் தொட்டு பெரும்பான்மை சிங்கள மக்களுடன் வாழ்ந்தும், தொடர்ந்தும் வாழ வேண்டிய நிலையில் தமிழ் நாடு காட்டும் உற்சாகம் பெரும்பான்மை மக்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய போக்கை உருவாக்குவது போல் தோன்றுவதாக குழப்பமும் பயமும் அடைகின்றனர். தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சச்சரவு ஏதும் இருக்க முடியாதென மகாத்மா காந்தி அவர்கள் எச்சரித்திருந்தார்கள். அதிலும் மேலாக இலங்கையும் தமிழ்நாடும் தமக்கிடையில் நல்லுறவை வளர்க்க வேண்டியது மிக அவசியமாகும்.

உங்கள் தமிழ்நாட்டு ‘கியூ’ பிரிவைச் சேர்ந்த பொலிசாரும் இந்திய கடற்படையினரும் இணைந்து பல தொன் எடையுள்ள கைக்குண்டு, கிளேமோர் குண்டு;, நிலக்கண்ணிவெடி ஆகிய ஆயுதங்கள் தயாரிக்க உபயோகிக்கப்படும் வெடிமருந்து, உருக்கு அலுமீனிய கட்டிகள், போல் பியரிங் ஆகியவற்றை தமிழ் நாட்டில் கைப்பற்றியமையை இலங்கை மக்களாகிய நாம் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். இத்தகைய பொருட்களை கைப்பற்றிய பெருமை உங்கள் தமிழ் நாட்டுப் பொலிசாருக்கும் இந்திய கடற்படையினருக்குமே உரியதாகும். இப் பொருட்கள் கைப்பற்றப்படாது போயிருந்தால் நம் இரு நாடுகளுக்கும் எத்தகைய கதி ஏற்பட்டிருக்கும் என்பதை இறைவன்தான் அறிவார். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால் எமது நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதும் நாம் அறியாததல்ல. இதன் காரணமாகவே நான் இவ்விரு நாடுகளும் நல்லுறவை பேணி நடக்க வேண்டுமென வற்புறுத்தி வருகின்றேன். மதிப்புக்குரிய ராஜீவ்காந்தி அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால் மீண்டும் இத்தகையதோர் சம்பவம் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தயவு செய்து தமிழ் நாட்டில் ஒர் யாழ்ப்பாணம் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சர்வகட்சி மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுமாறு மத்திய அரசை வேண்டியது நன்றே ஆனால் அதுவல்ல நமது உடனடிப் பிரச்சினை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கட்டாயப்படுத்தி விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை தடுத்து வைத்துள்ளமையால் அந்த மக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மத்திய அரசுக்கு இருவார கெடு விடுத்தமை இலங்கையில் சில கடும் போக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள புரளி இந்தியாவுடன் நட்புறவு நீடிக்க வேண்டுமென எண்ணும் அரசுக்கு சங்கடத்தை உண்டு பண்ணியுள்ளது.

தற்போது பிரச்சாரத்தின் முன்னணியில் செயற்படுபவர்களில் எவரேனும் இலங்கையில் நடப்பவை எதைப்பற்றியும் தெரியாதவர்கள் என்பதை தாங்கள் ஒத்துக் கொள்வீர்கள். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்களிடமிருந்தே சில தகவல்களை பெறுகிறார்கள். ஆனால் அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்குமே எதுவும் தெரியாது. அவர்கள் எவரேனும் உண்மை நிலையை அறிய என்றும் முயற்சிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தால் மோசடி மூலம் தெரிவாகி புலிகளின் பினாமிகளாகவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கேற்ப நடப்பது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் விடுதலைப்புலிகளின் கட்டளைக்கேற்பவே செயற்படுகின்றனர். இலங்கைக்கு விஜயம் செய்து உண்மையை அறிய அவர்கள் எவரும் அக்கறை கொள்ளவில்லை. இலங்கையின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் நடைபெறும் கிளேமோர் குண்டு வெடிப்பு, நிலக்கண்ணி வெடி, கைக்குண்டுத் தாக்குதல்களால் இலங்கை வாழ் மக்கள் தொடர்ச்சியாக பயத்துடனும் பீதியுடனுமே வாழ்கின்றனர். எத்தனையோ அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லீம் உயிர்களை அவர்கள் எடுத்துள்ளனர். இக் காரணத்தால் போலும் எவரும் தமிழ் நாட்டிலிருந்து உண்மை உணர்த்தும் குழு எதிலும் இலங்கை வரவில்லை. மக்களை இப்பயங்கரத்திலிருந்து விடுவிக்கவே நாம் முயற்சிக்கிறோம்.

தங்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1976ம் ஆண்டு எமது முதற் சந்திப்பு ஞாபகமாக இருக்குமென நம்புகிறேன். நாம் ஏன் சந்தித்தோம் என்பது இப்போது அவசியமில்லை. அப்போது நான் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னுடன் பல ஆண்டுகள் கூடி வாழ்ந்த மக்கள் இன்று சகல உரிமைகளும் பறிக்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு அடக்கி ஆளப்படுவது எனக்கு எத்தகைய உணர்வைத் தரும் என்பதை கற்பனை பண்ணி பாருங்கள். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீராமல் உண்ண, உறங்க முடியவில்லை என கூறுகிறீர்கள். அப்படியானால் என்னால் எப்படி ஐயா சமாதானமாக இருக்க முடியும்?

இங்கே தினம், தினம் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் முகவர்களது பொய் பிரச்சாரத்தால் அப்பாவி மக்கள் திரைக்கலைஞர்கள் தமிழ்நாடு பல்கலைகழக மாணவர்கள் ஆகியோர் விடுதலைப் புலிகளை சுத்த வீரர்களாக கருதுகிறார்கள். விளைவுகளை பொருட்படுத்தாது தமிழ் நாட்டில் ஓர் யாழ்ப்பாணத்தை உருவாக்க விரும்பினால் தமிழ் நாட்டை ஆண்டவனே காப்பாற்ற வேண்டும். விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கிளேமோர் தாக்குதல் போன்ற அச்சுறுத்தலை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படுத்துவது நியாயமாகுமா? விடுதலைப் புலி தலைவர்கள் பிற நாடுகளில் தம் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்றனர். அவ்வாறே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினர் கூட பிற நாட்டில். ஆனால் ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள் மட்டும் தற்கொலை குண்டுதாரிகளாகவும். போர் வீரர்களாக போர் முனையிலும் பலிக்கடாக்களாக அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை தமிழ்நாட்டில் வைத்து கொன்றுள்ளனர். பல தலைமுறைகளாக எம்முடன் வாழ்ந்த தமிழ் மொழியே பேசும் இஸ்லாமிய சகோதரர்களை அவர்களின் சகல உடைமைகளையும் பறித்துவிட்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றினர். அவர்கள் இன்றும் 17 ஆண்டுகளாக தென்னிலங்கையில் சிங்கள சகோதரர்கள் மத்தியில் அகதி முகாம்களில் பல துன்பங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். எமது கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் தொலைந்து விட்டது. எமது பிள்ளைகளின் கல்வி குட்டிச்சுவராகி விட்டது. அண்மைய பத்திரிகை செய்தி ஒன்றின்படி கிழக்கு மாகாணத்தில் வாழும் 6000 பிள்ளைகளுக்கு அரிசுவடியே தெரியாதாம்.

என்னால் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அவர்களுக்கும் எழுதிய கடிதங்களின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன். : 16-01-2006 இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்

“இன்று இலங்கை தமிழ் மக்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்மை மீட்டுத் தருவோம் எனக் கூறிய விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்களை மீட்டெடுப்பதே. மிகவும் துரதிஷ்டமான நிலை என்னவெனில் வடக்கிலும் தெற்கிலும் உள்ள உண்மையான நிலைமையை பற்றி அறியாமலும் பிரச்சினை என்னவென சரியாக தெரியாமலும் சில தமிழ் நாட்டு தலைவர்கள் பாராளுமன்றத்தில் தமக்குள்ள பலததை வைத்து இந்த அரசை பணியவைக்க முயற்சிக்கின்றனர். அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அரசியற் கட்சிகள் தமது மறைமுகமான மிரட்டலை விட்டுவிட்டு உண்மையான நிலைமையை அறிந்து ஓர் நல்ல தீர்வை பெற உதவ வேண்டும். அன்றேல் நல்லதோர் தீர்வை அடைய இலங்கை அரசுக்கு உதவும் வகையில் இந்திய அரசிடமே பொறுப்பை கையளிக்க வேண்டும்.

என்னால் 03-10-2008 இல் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில் :-

“நான் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் போதியளவு தியாகத்தை செய்து விட்டனர். அவர்கள் இதுவரை செய்த தியாகங்களும் கடைப்பிடித்த பொறுமையும் பட்ட கஷ்டங்களும் தம் பிள்ளைகளின் நன்மை கருதியே.. தற்போது விடுதலைப் புலிகள் வீட்டுக்கொரு பி;ள்ளையை தருமாறு அடம் பிடிப்பதால் அவர்கள் புலிகளின் கட்டளையை மீறி புரட்சி செய்ய தயாராக உள்ளனர். நட்புடன் செயல்படக்கூடிய ஒரு இராணுவம் தமது பணியில் எத்தகைய கஷ்டம் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாது மக்களின் உடைமைகளுக்கும் உயிருக்கும் பங்கம் ஏற்படாது தம்மை விடுவிப்பார்களேயானால் அந்த இராணுவத்துக்கு பூரண ஒத்துழைப்புத் தர தயாராக உள்ளனர்”

தங்களுக்கு திருவாளர்கள் வை.கோ, நெடுமாறன் ஆகியோருடன் நெருங்கிய நட்பிருந்தவேளை 08-10-2005 இல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் :-

“இலங்கை தமிழரின் நன்மை கருதி தமிழ்நாட்டு தலைவர்கள் தமது அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கோர் தீர்வு காண வேண்டும். நான் பல சிங்கள அரசியற் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவர்களில் அநேகர் இந்திய அரகாரப் பகிர்வை ஒத்ததோர் தீர்வை வரவேற்கின்றனர். இத்தகையதோர் தீர்விற்கு ஒரு எதிர்ப்பும் இருக்காது என நம்புகிறேன். இலங்கையில் தனிநாடு அமைவது பற்றி இந்தியா எத்தகைய கருத்துக் கொண்டுள்ளது என்பதை அறிந்தவனாகையால் இலங்கை தமிழராகிய நாம் இதற்கு மேலாக எதையும் எதிர்ப்பாக்க முடியாது. மாறி மாறி ஆட்சி புரிந்தவர்கள் பிரிவினையை அங்கீகரிக்கோம் என மிகத் தெளிவாக கூறி வந்துள்ளமையால் இலங்கை தமிழ் மக்கள் இந்திய அரசுடன் இந்த விடயத்தில் முரண்பட முடியாது. மேலும்,

“விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தாங்கள் பெரிய சேவை செய்ததாக கணிக்கப்படுவீர்கள். இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை கொண்ட ஓர் தீர்வை விரைவில் ஏற்படுத்;;த வேண்டிய அவசியத்தை திருவாளர்கள் வை.கோ, நெடுமாறன் ஆகியோரை ஏற்க வைக்கக்கூடிய ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அத்தகைய ஓர் தீர்வு சிங்கள, தமிழ், இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். தமிழ்நாட்டு தலைவர்களை ஏற்க வைத்த பின்பு தாங்கள் டெல்லி அரசு மூலமாக இலங்கை அரசுடன் இப் பிரச்சினையை எடுக்க வேண்டும். தாங்கள் இந்த வகையாக எடுக்கும் முயற்சி நிச்சயமாக வெற்றி தரும் என்பது மட்டுமல்ல சர்வதேச சமூகமும் இதை வரவேற்கும். இத்தைகய தீர்வை யாரும் நிராகரிக்கமாட்டார்கள். நீண்டகால பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண தமது பங்களிப்பும் உதவியது என தமிழ் நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சி அடைவர்.

ஐயா! நாம் கடந்த 2005ம ஆண்டு அக்டோபர் மாதம் தங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து இலகுவாக தீர்க்க இருந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள். விடுதலைப் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.ரி.ஐ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் தீர்வை ஏற்பதாக கூறியுள்ளனர். இவர்களின் இந்த நிலைப்பாடு இலகுவாக பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி வகுக்கும் தயது செய்து தாமதிக்காது உடன் செயற்படவும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

மதிப்புக்குரிய இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களுக்கு!

வீ. ஆனந்தசங்கரி

அன்புடையீர்!

தமிழ் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இராமேஸ்வரத்தில் நடாத்திய ஓர் பிரமாண்டமான கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்கியுள்ளீர்கள். அக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகளாவிய தமிழ் மக்களின் வீரமிக்க தலைவன் என பிரகடனப்படுத்தியுள்ளீர்கள. அவரின் வீரச் செயல்கள் அனேகவற்றில் ஒரு சில, ஓர் ஜனாதிபதியையும்;, ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் உருக்குலைந்த நிலையில் சடலமாக்கியமை, இன்னோர் ஜனாதிபதியினுடைய கொலை முயற்சியில் அவரின் ஒரு கண் பார்வையை இழக்கச் செய்தமை, குண்டு வெடிப்புகள், கிளேமோர் குண்டுத்தாக்குதலகள்;, கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பஸ் வணடிகளிலும், ரயில் வண்டிகளிலும் பறித்தமை, கிளேமோர் தாக்குதல் ஒன்றில், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கிராமத்திலிருந்து பட்டினத்திற்கு சென்ற பஸ் வண்டியில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டு; 65 பேர் படுகாயமுற்றமை, ஆயிரக்கணக்கான விதவைகளை, மனைவியை இழந்தவாகளை, அநாதைகளை உருவாக்கியதோடு பலரை அங்கவீனர்களாக்கி கண்பார்வையை இழக்கச் செய்தமை, 22,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும், யுத்த முனைக்கு அனுப்பியும் உயிர்ப்பலி கொடுத்தமை, கர்ப்பிணி பெண்களை இதற்கு பாவித்தமை, பல அறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் அரச அதிபர்கள், திறமைமிக்க வைத்திய காலாநிதிகள், பொறியிலாளர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை பலி கொண்டமை ஆகிய அத்தனைக்கும் முழு பொறுப்பேற்க வேண்டிய ஒரேயொரு நபர் பிரபாகரனே. வீரமிக்க உலகளாவிய தமிழராக தங்களால் கௌரவிக்கப்பட்டவரின் சாதனைகளை மேலும் குறி;ப்பிடின், வடஇலங்கையில் பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறித்தெடுத்துவிட்டு வெறும் 500 ரூபா பணத்துடன் வெளியேற்றப்பட்ட மக்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அகதி முகாம்களில் வாடி,வதங்க வைத்ததோடு எமது மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வடக்கு கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த மக்களை ஓட்டாண்டியாக்கி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்து எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சிதைத்த இப் பெரு மகனாரை சினிமா உலகம் வீரமிக்க தமிழர் தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளது. இயக்குனர் பாரதிராஜாவாகிய தாங்களும், இயக்குனர் சீமான் போன்ற சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் இப்போதும் பிரபாகரன் அவர்களை வீரம் நிறைந்த தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து இலங்கை வாழ் தமிழ் மக்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய கொடூர செயல்;களை வீரம் செறிந்த செயலாக தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் திரு. பிரபாகரனை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். முறைப்படி அவரை கௌரவிப்பின் ஸ்ரீபெரம்புத்தூரில் அமைந்துள்ள கௌரவ ராஜீவ்காந்தி அவர்களின் ஞாபகசின்னத்துக்கு அண்மையில் ஓர் சிலை எழுப்புவீர்களேயானால் அது இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்வாறு மக்களின் பெரு மதிப்பை பெற்ற மிகச் சிறந்த ஓர் பிரமுகரை வெட்கப்படக் கூடிய வகையில் ஓர் முட்டாள் பெண்மணியின் உதவியோடு மற்றும பலருடன் தன்னையும் ராஜீவ்காந்தி அவர்களையும் சதை பிண்டமாக்கிய இம் மாவீரனின் சாதனையை ஞாபகப்படுத்தும். இலங்கைத் தமிழர்கள்தான் அது கூட விடுதலைப் பெற்றுத் தருவோம் என்று கூறிவந்த விடுதலைப் புலிகளால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உண்மை நிலையை கண்டறிய மறுத்து இஷ்டம்; போல் செயல்படுவீர்களேயானால் விடுதலைப் புலிகளின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் தமிழ் நாட்டை நாம் வலிந்து கேட்பது என்னவெனில் இலங்கை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுக்கு புத்துயிர்; கொடுக்கின்ற முயற்சியல் ஈடுபடாது ஒதுங்கி இருக்குமாறு வேண்டுகிறேன். சிங்கள அரசு தமிழ் மக்களை இன அழிப்பு செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யாகும். அதற்கு மாறாக இன்று தமிழ் மக்களை அழிக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளே. யுத்தத்தால் தமிழ் மக்கள் சொல்லொணா கஸ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறை ஆட்சியில் அவர்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இப்போது படும் துன்பம் பெரிதல்ல. தமிழ் நாடு விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பலாத்காரமாக பிடித்திருக்கும் மக்களை விடுவிக்க செய்வதே பெரும் உதவியாக இருக்கும். தாங்கள் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல. சினிமாத் துறையில் ஈடுபட்டவர்கள் தற்போதைய முயற்சி வெறும் பயனற்றதென்றும் அதற்குப் பதிலாக நிலைமையை அறிவதற்காக ஒரு குழுவினர் இலங்கைக்கு சென்று உண்மையை அறிற்துவர வேண்டுமென வேண்டுவதே நியாயமானதாகும். திருமதி இந்திரா காந்தியை சீக்கியர்தான் கொலை செய்தவர் என்றபடியால் ஒரு சீக்கியர் முதலமைச்சராக வர முடியாது என்பது விதண்டாவாதமாகும். அதேபோலவே மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றியும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை பற்றியும் ஒப்பிட்டு பேசுவது விதண்டாவாதமாகும். ஒரு சிலர் தாம் நன்மை பெறுவதற்காக அல்லது தான் பிரபல்யமாவதற்காக முழு தமிழ் நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்குவது ஒரு தேச துரோக செயலாகும்.
நன்றி
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

Monday, August 11, 2008

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதைத் தவிர இவர்கள் சமூகத்திற்கு செய்த குற்றம் என்ன? இவ்வாறு துன்பப்படும் மக்களின் துன்பத்தை போக்கி நிம்மதி பெருமூச்சுவிட வைக்க முடியாவிட்டால் நாம் பௌத்த தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்று எவ்வாறு கூற முடியும்? எது நடப்பினும் யுத்தம் தொடர வேண்டுமென்று வாதாடுகின்றவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்கின்றார்கள். இனப்பிரச்சனை தீர்விற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களும் அவர்களே.

துரதிஷ்டவசமாக நம் நாட்டின் நிலைமை இதுதான். இந் நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளனாகிய நான் ஓர் உயிரைத்தன்னும் வீணாக இழக்க விரும்பவில்லை. நம் நாட்டில் சரியாக கணிப்பிடின் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற இந்த யுத்தத்தில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வடகிழக்கில் இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். முறையான உணவு, உடை, இருப்பிடம், சுகாதார வசதி அன்றி வாழ்வதோடு தமது சொத்துக்களை முற்றாக இழந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்களே. விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதுபோல் ஆகிவிட்டது. இன்று தாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என நன்கு அறிந்தும் உண்மை நிலையை நேர்மையாக மக்களுக்கு தெரிவித்து ஒருதலைபட்சமாக வேனும் யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி, ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். அதேபோன்று அரசும் செயற்பட்டு விமானத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படாத பட்சத்தில் அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அரசாங்கம் தம் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறுமேயானால் அரசாங்கம் தனது மதிப்பை இழந்து விடும்.

மிக விரைவில் கிளிநொச்சியிலும் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைமை உருவாகும். ஏற்கனவே பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பலாத்காரமாக கிளிநொச்சிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்காக இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம், உணவு, சுகாதார வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். அதேவேளை விடுதலைப்புலிகள் தமது இரும்பு கதவை திறந்து மக்கள் தம் இஷ்டம்போல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும். குடாநாட்டில் இருந்து வன்னியில் பலாத்காரமாக குடியேற்றப்பட்டவர்கள் அனுமதி வழங்கப்பட்டால் தம் சொந்த வீடுகளுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதேபோன்று அரசும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் மக்கள் தமது பகுதியை வந்தடைய ஏதுவாக ஆதரித்து உதவ வேண்டும்.

ஆகவே யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் இக்கட்டான இக் கட்டத்தில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தொடர்ந்து பிறநாட்டில் சுற்றுலா செய்வதற்கும் ஏதுவாக அண்மையில் பாராளுமன்றத்தில் மூன்றுமாதகால விடுமுறை கேட்டுப் பெற்றமை கண்டிக்கப்பட வேண்டும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ


10-08-2008

Thursday, July 31, 2008

மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கடமை தங்களுக்குண்டு- த.வி.கூ தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு எழுதியகடித்தில்

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

27-07-2008



அன்புடையீர்,

நாடு தவறமுடியாத பொன்னான வாய்ப்பு

இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 பில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க் நாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச் சாதனைக்கு முன்கூட்டிளே எனது வாழ்த்துக்கள். இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்டதையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில்(24) ஓர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கப்பட்ட பொருத்தமான கௌரவமாகும்.

இன்றைய பாராளுமன்றத்தில் தங்களிலும் வயது கூடிய உறுப்பினர்கள் மூவர் மட்டும்தான் உள்ளனர் என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். தங்களின் தற்போதைய பதவி அண்மையில் தங்களின் சாதனை, முதிர்ச்சி ஆகிய மூன்றும் எத்தகைய முரண்பாட்டையும் மிஞ்சி இம் மாநாட்டில் கலந்து கொள்கின்ற தலைவர்களுக்கு அன்றி நாடு முழுவதற்கும்
தலைமை தாங்கி வழிகாட்டக்கூடிய அளவுக்கு தங்களை
உயர்த்தியுள்ளமையால் விரைவில் சமாதானத்தை அடையலாம் என நாடு கருதுகிறது.

நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும எம் மக்களுக்கு சார்க் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்புக் கடவுளால் தரப்பட்ட வரப்பிரசாதமும், ஆசீர்வாதமும் ஆகும். பேரூந்து, புகையிரதம் ஆகியவை ஒருபுறமிருக்க இலங்கையின் வீதிகளில் ஒருவர் சுதந்திரமாக நடமாடமுடியாது. ஆங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளம் பல்வேறு
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சார்க் உச்சி மாநாடு வேலைத்திட்டத்தில் ஒன்றாகும்.
ஆதிஷ்டவசமாக எமது ஏழு அயல் நாடுகளுடன் எமக்கு எதுவித கருத்து வேறுபாடு கிடையாது. ஜனாதிபதியாக கடமையாற்றும் தாங்கள் அங்கத்துவ நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருப்பது எமது மேலதிக அதிஷ்டமாகும். எமது நாடு எதிர்றோக்கும் பிரச்சினைகள் அத்தனையையும் தீர்ப்பதற்கு உதவ அங்கத்துவ நாடுகள் மகிழ்வுடன் செயற்பட தயாராக உள்ளன. மக்களின் நலன் பேணல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்,
பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் கௌரவமாக வாழ வாய்ப்பளித்தல் ஆகியவை சார்க் உச்சி மாநாட்டின் பல நோக்கங்களில் இவை சிலவாகும். இனப்பிரச்சனையாலும் தொடர்ந்து நடைபெறும் யுத்தத்தாலும் இத் துறைகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தத்தம் நாடுகளில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அங்கத்துவ நாடுகள் இம் மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளன. பயங்கரவாதமும், இனப்பிரச்சனையும் எமது நாட்டில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளமையால்
பயங்கரவாதம் சம்பந்தமாக விவாதிக்கும்வேளை இனப்பிரச்சினையையும் இணைத்து விவாதிப்பது தவிர்க்க முடியாததாகும்.

ஜனாதிபதி அவர்களே! நாட்டின் நிலைமையை கண்ணோக்கும் போது சந்தேகமின்றி சகல இன மக்களும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துள்ளனர். நாட்டின் தென்பகுதியில் வாழும், சிங்கள, முஸ்லீம் மக்களின் முன்னேற்றம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களின் முன்னேற்றம் முற்றாக அழிந்து விட்டது என்று கூறக்கூடிய அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெற்ற பல்வேறு இனக்கலவரங்கள் குறிப்பாக கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் குறிப்பாக 1983
ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கலவரம், தமிழ் வர்த்தகர் சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும், வெற்றிகரமாக குண்டர்களாலும், காடையர்களாலும் நடத்தப்பட்ட கொள்ளை, தீவைப்பு, கொலை ஆகியவை பெரும் அழிவை ஏற்படுத்தியது. இச் சம்பவம் பெரும் தொகையான தமிழ் மக்களை இந்தியாவி;ன் தமிழ் நாட்டுக்கு இடம் பெயர
வைத்தது. வட இலங்கையில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டபடியால் தமது வாகனங்கள், தங்க ஆபரணங்கள் உட்பட சகல அசையும்,
அசையா சொத்துக்கள் அத்தனையையும் கைவிட்டு வெளியேறினர்.அவர்களில் அனேகர் 15 ஆண்டுகளுக்கு மேல் தென்னிலங்கையில் அகதி முகாம்களில் வாடி வதங்கி இன்றும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து நடைபெறும் யுத்தத்தால் அடிக்கடி இடம் பெயர்ந்ததும் பெருமளவில் வெளியேறியதாலும் தம் சொத்துக்களை பெரும் பகுதியை இழந்துள்ளனர். தமக்கு எஞ்சிய சொத்துக்கள் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டிக் கொண்டு நாடோடிகள் போல் மழை காலத்தில் செய்வதறியாது பெரும் மர நிழல்களை
நம்பி வாழ்கின்றார்கள்.

யுத்தம் தொடர்ந்து நடைபெறும் வேளையில் விடுதலைப் புலிகள் பின் வாங்கும் வேளையிலும் கூட இடம் பெயர்வுகளை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு செல்லவிடாது தடுப்பதால் அவர்கள் அனைவரும் கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றனர். இது மக்களுக்கு மேலும் மேலும் பல கஷ்டத்தை கொடுப்பதோடு மக்களுக்கு பட்டினி நிலைமையை
ஏற்படுத்தும். இந்த நாட்டு ஜனாதிபதி என்ற கோதாவில் மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதோடு துன்புறும் மக்களின் துயர் துடைக்க வேண்டிய கடமைப்பாடும் உண்டு. தங்களைத் தவிர இது சம்பந்தமாக வேறு எவரிலும் பார்க்க கூடிய அக்கறை கொள்ள வேண்டியவன் நானே. ஏனெனில் 1970ம் ஆண்டு கிளிநொச்சியையும், 2000ம் ஆண்டு யாழ் மாவட்டத்தையும் பாராளுமன்றத்தில்
பிரதிநிதித்துவப்படுத்தியவன். கிளிநொச்சி தொகுதியின் ஒரு பகுதியாக இந்த முல்லைத்தீவு தொகுதியின் ஒரு பகுதியை நான் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளேன். இத் தாங்கொணா
துயரை மக்களால் மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும்தாமதிக்காது ஒரு தீர்வு உடனடியாக காணப்பட வேண்டும். சார்க் உச்சி மாநாடு என்ற போர்வையில் ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய வாய்ப்பு எமக்கு கிட்டாது. நீங்கள் நல்ல உறவு கொண்டுள்ள ஏழு நாடுகளின் தலைவர்களின் உதவியை நாடினால் தங்களை யாரும் குறை
கூற முடியாது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய குழுவினர் எமது பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள். நீண்டகாலமாக இனப்பிரச்சினையில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் இந்தியா பிரதான பங்காற்றுவது சகல நாட்டுத் தலைவர்கள்
அனைவரும் நிச்சயமாக வரவேற்பர். தாங்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தியில் சார்க் மாநாட்டு தலைவர்கள் மீது தங்களுக்கு பெரும் நம்பிக்கை இருப்பதால் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கக் கூடிய நல்லதோர் தீர்வை காணும் பொறுப்பு அவர்களிடமே விடுவதாக கூறலாம்.

இந்த நாட்டை நேசிக்கும் சகல மக்களும் எனது இந்த ஆலோசனையை எதிர்க்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். எனது ஆலோசனைகள் தங்களுக்கு ஏற்புடையதாயின் சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. மதத்
தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர்களின் ஆலோசனையை பெறலாம். இன்று வேறொரு கடிதத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் ஆயுதத்தை கைவிட்டு இனப்பிரச்சினை தீரும் வரை
உபயோகிக்க மாட்டேன் என்ற உறுதி மொழியை, நாட்டுப்பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண சம்மதிப்பதாகவும் சார்க் நாடுகளின் தலைமைகளின் மத்தியஸ்த்தையும், அவர்கள் சிபாரிசு செய்யும் தீர்வையும் ஏற்பதாகவும்
பிரகடனப்படுத்தும்படி கேட்டுள்ளேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

Wednesday, July 16, 2008

தலைவர் 75அகவையைப் பூர்த்தி செய்த நேரத்தில் ஒரு வேண்டுகோள்!

தமிழர் விடுதலைக் கூட்டணியும் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் அவசியம் செய்ய வேண்டிய இரண்டு விடயங்கள்.

- வன்னியத்தேவன்

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதம் ஒன்று, அரசியல் அரங்கில் சிறு சலசலப்பொன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர் அந்தக் கடிதத்தில், வடமாகாணத்திற்கு அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட செயலணிக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிற்கு ஆட்சேபனையும் கண்டனமும் தெரிவித்திருந்தார். திரு.வீ.ஆனந்தசங்கரியின் இந்த நிலைப்பாடு, புலிகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் மத்தியில் பெருத்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. திரு.வீ.ஆனந்தசங்கரி முன்வைத்த நியாயங்களில் சில உண்மைகள் இருப்பினும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அவரைவிட டக்ளஸ் தேவானந்தாவே பொருத்தம் எனக்கருதுகையில், திரு.வீ ஆனந்தசங்கரி சற்று விட்டுக்கொடுத்து ஒதுங்கியிருந்திருக்கலாம் என்பதே பலரின் அபிப்பிராயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக புலிகளையும் விட ஈ.பி.டி.பியே மோசமானவர்கள் என்ற திரு.வீ ஆனந்தசங்கரியின் கூற்று பலரை முகத்தைச்சுழிக்க வைத்துவிட்டது. சிலர் ‘இவருக்கு என்ன நடந்துவிட்டது?’என ஆவேசப்பட்டதையும் காணமுடிந்தது. மேலும் சிலர் திரு.வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக மிகமோசமான விமர்சனங்களையும் கூட முன்வைத்தனர். இவையெல்லாவற்றையும் இங்கு குறிப்பிடுவதின் நோக்கம், திரு.வீ.ஆனந்தசங்கரியை தாழ்த்துவதற்கோ அல்லது டக்ளஸை தூக்கிவைப்பதற்கோ அல்ல. திரு.வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அவருக்கு தெரிவிப்பதற்காகவே.

திரு.வீ.ஆனந்தசங்கரி ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி. அவர் தன்னுடைய அரசியல் வாழ்வை லங்கா சமசமாஜக் கட்சியில் ஆரம்பித்தாலும், பின்னர் நீண்டகாலம் தமிழ் அரசியல்வாதியாக இருந்ததுடன், இரு தடவைகள் (1970 ஆண்டுத் தேர்தலிலும் 1977 ஆண்டுத் தேர்தலிலும் கிளிநொச்சித் தொகுதியில் வெற்றி பெற்றார்) கிளிநொச்சித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதுமாத்திரமின்றி ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற ஏனைய கூட்டணி ஆட்கள் பதவிக்காக புலிகளின் வாலில் தொங்கியதுபோல, புலிகளின் வாலில் தொங்காதவர். வருங்காலத்தில் தமிழர்களின் உண்மையான வரலாறு எழுதப்படும்போது, திரு.வீ ஆனந்தசங்கரி மேற்கொண்ட சரியான நிலைப்பாட்டுக்காக அவரது பெயர் தமிழர் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையிலும், தமிழர் விடுதலைக் கூட்டணித தலைவர் என்ற வகையிலும் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு முன்னால் இரண்டு முக்கியமான பணிகள் காத்துக்கிடக்கின்றன.

ஒன்று, திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் தமிழ் ஜனநாயக சக்திகள் மத்தியில் இருக்கின்ற குழுவாத அரசியலில் சிக்காமல், ஒரு பரந்த கண்ணோட்டத்துடனும் தீர்க்கதரிசனமிக்க பார்வையுடனும் எல்லா தமிழ் ஜனநாயக சக்திகளுடனும் நட்புறவைப்பேணி, அவர்களை ஓரணியில் திரட்டி சக்திமிக்கதாக்குவது. ஏனெனில் புலிப் பாசிசவாதிகளுக்கெதிரான ஜனநாயக சக்திகள் பெருமளவில் இருந்தும், அவர்கள் மத்தியிலுள்ள தேவையற்ற முரண்பாடுகளால், அவர்கள் பலத்துடன் முன்னேறிச்செல்ல முடியாதிருக்கின்றது. அதன் வெளிப்பாடுகளை கிழக்குமாகாணசபைத் தேர்தலின்போது தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்பனவும் இடதுசாரிக் கட்சிகளும் ஓரணியில் நின்று போட்டியிட்டிருந்தால், கிழக்குமாகாணசபைத் தேர்தல் முடிவு வேறுவிதமாகவும், ஆரோக்கியமானதாகவும், கிழக்கு மாகாணத் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு நன்மையானதாகவும் இருந்திருக்கும். எனவே வருங்காலத்தில் இந்த நிலையை மாற்றுவதானால், திரு.வீ.ஆனந்தசங்கரி ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி என்ற வரையறையைத்தாண்டி, தமிழ் ஜனநாயக சக்திகளின் ஜக்கியத்துக்காக செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

இரண்டாவது விடயம், தமிழர் விடுதலைக் கூட்டணியின்; 1976 ஆண்டு வட்டுக்கோட்டை மாநாடுத் தமிழீழ தீர்மானத்தை தவறென பகிரங்கமாக ஒப்புக்கொள்வது. இது மிகமிக முக்கியமானது. இன்று புலிகளைத்தவிர மற்றைய எல்லாத்தமிழ்கட்சிகளும் தனித்தமிழ்நாடு என்ற கொள்கையைக் கைவிட்டுவிட்டன. அவர்கள் அதைக்கைவிட்டதற்கான காரணங்களும், சூழ்நிலைகளும் பல்வேறு வகைப்பட்டதாக இருப்பினும், அந்த அழிவுகரமான கொள்கையைக் கைவிட்டதை ஒரு வரலாற்றுத் திருப்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அந்த மதியூகமற்ற கொள்கையால் தமிழினம் இதுவரை அனுபவித்த துன்பங்கள் கணக்கிலடங்கா. இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், தமிழ் இளைஞர்களை இந்த அழிவுப்பாதையில் தள்ளிவிட்ட தனித்தமிழ்நாட்டு; முடிவை எடுத்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே. அவர்கள் தான் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி இந்தத் தவறான முடிவை எடுத்தனர். இலங்கைத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வேறு வழியின்றியோ அல்லது தமிழீழத்தை அடையலாம் என்ற நம்பிக்கையுடனேயோ அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை. தமது சுயநல அரசியலைப் பாதுகாக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்த அபாயகரமான முடிவை எடுத்தனர். ஏனெனில் தமிழர்களின் மூத்த அரசியல் கட்சி என வர்ணிக்கப்படும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியை உருவாக்கிய நாளிலிருந்தே, அவ்விரு கட்சிகளும் நாய் - பூனைச் சண்டையில் தான் காலத்தைக் கழித்தன. ஒருவர் காகம் கறுப்பு என்றால், மற்றவர் வெள்ளை என்பார்! அவ்வாறுதான் அவர்களது அந்தக்கால அரசியல் நடைபெற்று வந்தது. தேர்தல்களில் அவர்களை மாறிமாறி தெரிவுசெய்து அலுத்த தமிழ்மக்கள், இருகட்சிகளினதும் முக்கிய தலைவர்களை 1970 தேர்தலில் தோற்கடித்துப் பாடம் புகட்டினர். இது அவர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக அமைந்தது.

இனியும் தாம் பிரிந்து நின்றால் மக்கள் தம்மை முற்றுமுழுதாக நிராகரித்து விடுவார்கள் என்ற பயம் அவர்களை திடீரென விழித்துக்கொள்ள வைத்தது. எனெனில் இந்த இரு தமிழ்கட்சிகளும் 1965ல் அமைந்த டட்லி சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்த நேரத்தில், வடபகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை வடபகுதி புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் ஒனறு திரண்டு தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். அதன் காரணமாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமின்றி, அனைத்து தமிழ்மக்களிடமும் அவர்களுக்கு ஆதரவு பெருகியிருந்தது. தமிழ்த் தலைவர்கள் 1970 ஆண்டுத் தேர்தலில் தோற்றதிற்கு அதுவும் ஒரு காரணம். அதுவுமல்லாமல் 1972ம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக்க அரசு கொண்டுவந்த குடியரசு அரசியல் சாசனம் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்தை நீக்கியதை எதிர்த்தும், இனரீதியான மாணவர் தரப்படுத்தலை எதிர்த்தும், கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சார இயக்கமொன்றையும் ஆரம்பித்திருந்தனர். அதற்காக தமிழ் மக்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்தும் நோக்குடன் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’என்ற அமைப்பையும் வடபகுதி புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கியிருந்தனர். இவையெல்லாம் இரண்டு தமிழ் கட்சிகளின் தலைமைகளையும் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருந்தன. (அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த தமிழரசு, தமிழர் கூட்டணியின் பிரச்சார ஏடான ‘சுதந்திரன்’இதழ்களை எடுத்துப் பார்த்தால், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான எண்ணற்ற கட்டுரைகளைக் காணமுடியும்.) எனவே இரண்டு தமிழ் கட்சிகளின் தலைமைகள் இரண்டு முடிவுகளுக்கு வந்தார்கள். ஒன்று, தமிழ் பிற்போக்கு சக்திகள் எல்லாவற்றையும் ஓரணியில் திரட்டுவது. மற்றது, கம்யூனிஸ்ட்டுகளின் பிராந்திய சுயாட்சி கொள்கையை கீழே தள்ளும் வகையில் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையை பிரகடனம் செய்வது.

அதன் அடிப்படையில் தமிழரசு, தமிழ்காங்கிரஸ் கட்சிகளை மட்டுமின்றி வ.நவரத்தினம் தொடங்கிய ‘தமிழர் சுயாட்சி கழகம்’, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப்பிரவேசப் போராட்டத்தின்போது சாதிவெறியாட்டம் போட்ட வவுனியா முன்னாள் எம்.பி சி.சுந்தரலிங்கம் தொடங்கிய ‘அடங்காத்தமிழர் ஒற்றுமை முன்னணி’, மலையகத்தின் பிற்போக்கு கட்சியான ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்’என்பவற்றை இணைத்துக் கொண்டு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த புதிய கூட்டணியின் பிற்போக்குத்தன்மையைப் புரிந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தனது பங்கிற்கு அதனை ஆதரிக்கும் முகமாக, தனது கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கே.டபிள்யூ.தேவநாயகத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய வைத்தார். அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிதான் 1976ல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தமிழீழ தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் கூட்டணியின் மூன்று இணைத்தலைவர்களில் ஒருவரான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆரம்பத்திலேயே தமிழீழத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் கூட்டங்களில் பங்குபற்றாமல் ஒதுங்கிக் கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்னொரு இணைத்தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், தான் மரணிக்கும்வரை கூட்டணியின் ஒரு கூட்டத்திலாவது பங்குபற்றவில்லை. அவர் இறந்தபின்னர், அவரது உடலைத்தான் யாழ் பிரதான வீதியிலிருந்த கூட்டணிக் காரியாலயத்தில் கொண்டுவந்து வைத்து அஞசலி செலுத்தினர். தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் மு.திருச்செல்வம் கூட தமிழீழத் தீர்மானத்தை ஏற்கவில்லை. உண்மையில் தமிழீழம் அமைப்பது சாத்தியமில்லை என்பது கூட்டணியின் ஏனைய தலைவர்களுக்கும் நன்கு தெரிந்தே இருந்தது. ஆனால் தாம் அடுத்த பொதுத்தேர்தலில் பாதுகாப்பாக வெற்றிபெறுவதற்கும், கம்யூனிஸ்ட்டுகள் தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாமல் தடுப்பதற்காகவுமே, வலிந்து இந்தத் தீர்மானத்தை எடுத்தனர்.

குறிப்பாக, 1970 ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்றிருந்த காலஞ்சென்ற திரு.அ.அமிர்தலிங்கம், காலஞ்சென்ற திரு மு.சிவசிதம்பரம் போன்றோருக்கு இத்தீர்மானம் அத்தியாவசியமாக இருந்தது. ஆனால் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக எடுத்த தீர்மானம், பின்னர் அந்தத் தீர்மானங்களை எடுத்தவர்களையே பலி எடுத்து, அதன் பாரதூரமான தவறான போக்கை நிரூபித்துவிட்டது. இருந்தும் அத்தவறான தீர்மானத்தை நம்பி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதால், தமிழர்களின் இரண்டு தலைமுறைகள் நாசமாகியதுடன் பெரும் அழிவும் ஏற்பட்டுவிட்டது. இன்று அது விடுதலைப்புலிகள் என்ற வடிவத்தில், பாசிசமாக உருவெடுத்து தமிழினத்தையே அழித்து வருகின்றது. தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய பல இயக்கங்கள் அத்தவறிலிருந்து மீண்டுவிட்டாலும், அந்த தவறான கருத்தோட்டம் இன்னும் தமிழர் வாழ்வில் கணிசமான ஆதிக்கத்தைச் செலுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த இடத்தில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்;, அதன் தலைவர் என்ற ரீதியில் திரு.வீ.ஆனந்தசங்கரிக்கும் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. ஏனெனில் அக்கட்சியும் அதன் தலைவரும் ஜக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என பேசி வருகின்ற போதிலும், அவர்கள் இன்றுவரை தாம் முன்னர் எடுத்த தமிழீழத் தீர்மானத்தை கைவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பகிரங்க அறிவிப்பினை அவர்கள் உடனடியாச் செய்வது அவசியமானது. இல்லாவிடின் பிறிதொரு சமயத்தில், திரு.வீ.ஆனந்தசங்கரிக்குப் பின்னர் யாராவது ஒருவர் தன்னைத் தமிழர் கூட்டணிக்காரர் என்று சொல்லிக் கொண்டு தமிழீழத் தீர்மானத்தைத் தூக்கிப்பிடிக்க முடியும். அத்துடன் தமிழீழத் தீர்மானம் ஏன் தவறானது, அது எவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதையும், தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வீ.ஆனந்தசங்கரிக்கும் உண்டு. இந்தப்பொறுப்பை அவர்கள் தட்டிக்கழித்துவிடமுடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாது, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது உறுப்பினர்களின் தேசிய மாநாடொன்றைக் கூட்டி, முறைப்படி வட்டுக்கோட்டைத் தமிழீழத் தீர்மானம் தவறு என்பதையும், அதைத்தாம் கைவிட்டுவிட்டோம் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களை தவறான வழியிலிருந்து மீட்டெடுக்க முடிவதுடன், சிங்களமக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஊட்டமுடியும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆனந்தசங்கரியும் அதைச்செய்வார்களா?

தேணி இணையம்

Sunday, June 15, 2008

கிளிநொச்சி தந்த அரசியல்வாதி!


சங்கத் தமிழ் வகுத்த ஐவகை நிலங்களில் மூவகை நிலங்களான மருதம். முல்லை, நெய்தல் கொண்டு விளங்கும் கிளிநொச்சி தோதல் தொகுதி 1960 ஆம் ஆண்டு சாவச்சேரி, பருத்தித்துறை ஆகிய இரண்டு தேர்தல் அதாகுதிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலப்பரப்புக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது. இத்தேர்தல் தொகுதி கண்ட முதலாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சோசலிஸக்க கொள்கையுடைய லங்கா சமசமாஸ கட்சி வேட்பாளாக இருபத்தேழு வயது நிரம்பிய ஓர் இளைஞன் கிளிநொச்சித் தொகுதி மக்களுக்கு அறிமகமாகிறார். புத்தம் புதியவர். அகில இலங்கை அரசியல் சார்பில் போட்டியிடகின்றார். மீண்டும் அதே ஆண்டு ஜுலை மாதம் பொதுத் தேர்தல் ஒன்று. அதிலும் அதே இளைஞன் அதே கட்சி சாhபில் தேர்தலில் குதிக்கின்றார். பெற்ற வாக்குகளில் அதிகரிப்பு. ஆனால் தோல்விதான் மிஞ்சுகின்றது.

1965 மார்ச் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நன்கு அறிமுகமானவராக களத்தில் அதே அரசியல் கட்சி சார்பில் போட்டியிடகின்றார். அனாலும் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நிலைக்கு இரண்டாம் இடத்தில் வாக்குகளின் எண்ணிக்கை அதகரித்து நிற்கிறது.

கரைச்சி கிராமசபை பட்டின சபையாக தரமுயர்கின்றது. முதலாவது தலைவராக மக்கள் மகுடம் சூட்டி 1968இல் அதே அரசியல் தொண்டனுக்கு வெற்றி திலகமிடகின்றனர். 1970ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசியல் சூறாவளியாக மாற்றிய பாராளுமன்ற பொதுத்தேர்தல் அது. லங்கா சமசமாஜ கட்சியின் மொழிக்கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அதிலிருந்து விலகி 1966இல் தன்னை இணைத்துக்கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்குகிறார். கடுமையான போட்டி இலங்கையின் தமிழரசுக் கட்சியின் கோட்டையான கிளிநொச்சித் தொகுதியில் அதன் ஐனரஞ்சக அரசியல் பேச்சாளரான அடலேறு ஆலாலசுந்தரம் அவர்களை எதிர்த்து நிற்கின்றார். வெற்றிக்கனியைப் பறித்துக் கொள்கின்றார். கிளிநொச்சித் தொகுதியின் மூன்றாவது பாரளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இளைஞன் தான் வீரசிங்கம் ஆனந்தசங்கரி.

இக்கால கட்டத்தில்தான் இவரைத்தேடி பிரதி நிதிமந்திரி பதவி வந்தது. அவர் அதனை விரும்பியிருந்தால் அப்பதவியை ஏற்று அதன் சுகபோகங்களை. அந்தஸ்தை அனுபவித்திருக்கலாம். அனால் தன் இனத்தின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.

1971ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் தந்தை செல்வா அவர்கள் சமர்ப்பித்து ஆறு அம்சக்கோரிக்கையை ஆதரித்து வாதிட்ட 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை அவர் சார்ந்த சக இரண்டு பாராளுமன்ற உறுப்பினாகள் அதரித்த வேளையிலும் கூட அதனை எதிர்த்து வாக்களித்து தமிழினத்தின் அரசியல் போராட்டத்துடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார். தந்தை செல்வா, தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் உருவாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார். இதன் மூலம் தனது சொந்தத் தொகுதியில் ஒரு முதல் தர அரசியல் எதிரியை அவரே உருவாக்கிக் கொண்டார்.

அக்கால கட்டத்தில் ஆட்சியிலிருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சராக விளங்கிய செல்லையா குமாரசூரியர் கிளிநொச்சித் தொகுதியை தத்தெடுத்துக் கொண்டு தனது எதிர் கால அரசியலுக்கு அடித்தளம் இடத்தொடங்கினார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்களுக்குரிய கொரவத்தினை வழங்காது “சிற்” முறையில் வேலை வாய்ப்புக்களையும் மற்றும் சலுகைகளையும் அக்கால அரசாங்கம் வழங்கத் தொடங்கியமையால் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியத்துவம் மக்களிடையே குறையத் தொடங்கியது. மக்கள் தம் தேவைகளுக்காக கட்சி அமைப்பாளாரார்களை மொய்க்கத் தொடங்கிய கால கட்டம் அது. அதிலும் கிளிநொச்சித் தொகுதியைப் பொறுத்தவரை அமைச்சரான செல்லையா குமாரசூரியரின் பிடி இறுகத் தொடங்கியது. அவரது அதிக்கம் சகல துறைகளிலும் வியாபித்து நின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் குடியரசு அரசியல் யாப்புற்கெதிராக சாத்வீகப் போராட்டங்களில் முன்னின்று உழைத்தார். தம் தொகுதி மக்களையும் அப்போராட்டங்களில் ஈடுபட்டு தமிழினத்தின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் தம்மை அர்பணிக்கவும் உற்சாகப்படுத்தினார். அதன் உச்சக் கட்டமாக 1975ஆம் ஆண்டு சட்ட மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது இவர் கைது செய்யப்பட்டு பயங்கர குற்றவாளியைப் போல் உடுத்த உடுப்புடனேயே தனி விமானத்தில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கைதிகள் அணியும் உடையுடன் கொழும்பில் சிறை வைக்கப்பட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் மத்தியில் பரப்பி 1977ஆம் அண்டு ஜுலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக கிளிநொச்சித் தொகுதியில் சக்தி வாய்ந்த ஒரு அமைச்சரையும் இலங்கையின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரையும் எதிர்த்து போட்டியிட்டு 11.600 மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார்.
1977 ஜுலை பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். இத்தேர்தல் மூலம் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமியிலான ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக் காக முற்றாகப் பயன்படுத்தினார்.

கிளிநொச்சித் தொகுதி தனி மாவட்டமாக்கியதால் தனியானதொரு மாவட்டச் செயலகம் அமைக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அனைத்துத் திணைக்கள மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டு செயற்பட்டு செயற்டத் தொடங்கியதால் அது புதுப் பொலிவு பெறத் தொடங்கியது.

1983ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்ட பாராளுமன்ற பதவி துறப்பு தீர்மானத்தாலும் இனக்கலவர பாதிப்பு மற்றும் வேறுபல காரணங்களாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த பலர் இந்தியாவில் தஞ்சம் புகவேண்டிய சூழ்நிலை தோன்றியது. இருந்த போதிலும் ஆனந்தசங்கரி சிறிது காலமே இந்தியாவில் வாழ்ந்தார். மிகக் குறுகிய காலத்தில் கொழும்பு திரும்பி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்க முற்பட்டார். பழம் பெரும் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் ஒதுங்கியிருந்த வேளையில் தாமே துணிந்து செயலில் இறங்கி கட்சிப் பணிக்காக தம்மை முழுவதும் அர்பணித்தார்.1994ஆம் ஆண்டு பொதத் தேர்தலில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வகையில் கட்டியெழுப்பினார்.

சிரேஷ்ட துணைத்தலைவர் என்னும் பதவியை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு கட்சி தலைவராக பத்து ஆண்டுகள் செயலாற்றி கட்சியை வளர்த்தெடுத்தார். ஆயுதங்களின் துணையில்லாமல் ஐனநாயக வழியில் அஹிம்சை நெறியில் மக்கள் உள்ளங்களில் அரசியல் துணிவை ஏற்படுத்தி உள்ளுராட்சி மன்ற தோதலில் களம் இறஙங்கி யாழ்ப்பாணம் மாநகரசபைiயையும். வலிகாமம் வடக்கு பிரதேச சபையையும் கட்சியின் நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர்கள் இருவர் தொடர்ந்து கொடூரமாக கொல்லப்பட்ட வேளையிலும் துணிந்து நின்று செயற்பட்டு மாநகரசபையை தம் கட்சி உறப்பினர்களைக் கொண்டு செயற்பட வைத்தார்.

2000ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 17 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரதிநிதித்துவப் படுத்திய கிளிநொச்சித் தொகுதி மக்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத போதிலும் இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய மக்களால் தேர்தெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். மீண்டும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட ஆகக் கூடிய விருப்பு வாக்குகளாக 36000 வாக்ககளைப் பெற்று முதலாவது பாராளுமள்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார்

தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் மறைவைத் தொடர்ந்து பாரம்பரிய அரசியல் வரலாற்றுப் பின்னணியும், தமிழ் மக்களின் முக்கியமான ஜனநாயக அரசியல் சக்தியாக விளங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகக் கடந்த வருடம் ஜுலை மாதம் தேர்தெடுக்கப்பட்டார். ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை. தலைமைத்துவம் அவ்வாறனதே. அது உள்வாங்கப்படவதில்லை. வெளிப்படுத்துவப்படுவது. மகாத்மா காந்தியின் தலைமைத்துவம் பரித்தியாகத்தில் உருவானது. பகட்டுக்களாலும், சாகசத்தாலும், உருவானதல்ல.

தலைமைத்துவம் மக்களின் இதய அடித் தளத்திலிருந்து பூஜிக்கப்படுவது. நிலையான தலைமைத்துவம் அர்ப்ணிப்பினாலும் தீhக்க தரிசனமான வழிகாட்டுதலினாலும் உருவாவதே. அவரது தலைமைத்துவம் குறகிய காலத்துள் சிலரது விமர்சனத்திற்குரிய ஒன்றாக அமைந்து விட்டமை அவரது செயற்பாட்டின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.
“காய்த்த மரம் தான் கல்லடி படும்” என ஊர் வழக்கில் கூறுவார்கள்.
எது எப்படியிருந்த போதிலும் ஆனந்த சங்கரியின் அரசியல். பொதுவாழ்வு பல தடைகள் சோதனைகளின் மத்தியில் வளர்ந்தது. அங்கு ரோஜா மலர்க்கூட்டங்கள் இருக்கவில்லை. முள்புதர்களின் நடுவிலேயே அது தொடருகின்றது.

அவரது பொதுவாழ்வு ஐம்பது ஆண்டுகளை நோக்கிய திசையில் தொருகிறது. அவர் தமது எழுபத்தைந்தாவது பிறந்ததின விழாவினை இன்று 15அம் திகதி கொண்டாடுகின்றார்.

(ஆனந்தசங்கரியின் எழுபத்தைந்தாவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை வெளிவருகிறது)

பழையூர் ஏ. பீ. ஜோர்ஜ்

Sunday, June 8, 2008

வீ.ஆனந்தசங்கரி அழைப்பு

நாட்டை காப்பாற்ற சகல அரசியற் கட்சி தலைவர்களும் விழிப்படைய வேண்டுமென அழைப்பு

வீ.ஆனந்தசங்கரி

விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதல் 22 அப்பாவி மக்களின் உயிரை எடுத்து 60க்கு மேற்பட்டோர் படுகாயமடைய செய்தமையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. ஒரு வாரத்திற்குள் ஏற்பட்ட 3வது பெரிய சம்பவமும் ஒருமாதாத்திற்குள் ஏற்பட்ட 6 வது சம்பவமுமாகும். இச்சம்பவங்களில் மொத்தம் 112 பேர் பலியாகி 348 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படியான இன்னும் எத்தனை சம்பவங்கள் நடக்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். தம்மிடமிருந்து தமிழ் மக்கள் விடுதலையடைய வேண்டும் என்ற நிலையை உணராது தமிழீழத்தின் விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் ஒரு வெறிபிடித்த குழுவினரின் செயலே இதுவாகும். இம் மிருகங்கள் தாங்காளாக அடங்காவிட்டால் பிறராலேனும் அடக்கப்பட வேண்டியவை. அரச படைகளிடம் உள்ள பெரும் சக்தி மிக்க ஆயுத பலத்தாலும் இத்தகைய கொடூர செயல்களை கட்டுப்படுத்த முடியாது. இவர்களுடைய போர்முறை சம்பிரதாயமானதாக இல்லாமல் கோழைத்தனமான கெரில்லா முறை கையாளப்படுகின்றது. இந் நாட்டு மக்களை விடுதலைப்புலிகளின் கொடூரத்திலிருந்து பாதுகாக்கக் கூடியது சர்வதேச சமூகம் மட்டுமே. ஆனால் அதற்குரிய வழிவகைகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா உட்பட சர்வதேச சமூகம் எதுவும் செய்ய முடியாது அமைதியாக இருந்து நடப்பதை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு பயந்து அரசாங்கம் செயற்பட வேண்டியதில்லை சர்வதேச சமூகம் துணிந்து தலையிட்டு இத்தகைய மிருகத்தனமான செயல்களை நிறுத்த வேண்டும் என விடுதலைப்புலிகளுக்கு கூறவேண்டுமானால் ஒரு நியாயமான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கத்தை கேட்டிருந்தேன்.

எமது நாட்டின் துரதிஸ்டம் என்னவெனில் தமிழரின் விடுதலைக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போரிடுகின்றோம் என்று கூறும் ஒருசாராருக்கும் இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுகின்றோம் என்றும் தேசப்;பற்றாளர்கள் என்றும் கூறுகின்ற கடும்போக்குடைய தேசியவாதிகளுக்கும் இடையில் அகப்பட்டமையே.

தேசப்பற்று என்றால் நாட்டை மட்டும் நேசிப்பதல்ல நாட்டையும் அந்நாட்டில் வாழும் மக்களையும் நேசிப்பதே தேசப்பற்றாகும் என்பதை இவர்கள் உணரவில்லை. சுர்வதேச சமூகத்தால் சுட்டிக்காட்டப்படுகின்ற பிழைகளை ஏற்க மறுத்து சர்வதேச சமூகத்தின் மீது கடும் சினம்கொள்பவர்கள் இருக்கின்றபோது சர்வதேச சமூகத்தை நாம் எவ்வாறு குறை கூற முடியும்? அத்தகைய சந்தர்ப்பங்களில் இஷ்டம்போல அறிக்கை விடுவதை தவிர்த்து அப்பணியை அரசிடம் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல்வேறு நாடுகளுடன் எமக்குள்ள நல்லுறவை காப்பாற்ற முடியும். இது வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் பொருத்தமானதாகும். சும்பந்தப்படாதவர்கள் இத்தகைய சினத்தை ஊட்டுவதாலேயே சர்வதேச சமூகம் சிலவேளைகளில் அமைதியாக இருப்பதற்கு காரணமாகும். விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களையும் செயற்பாடுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டும் பல நாடுகள் இருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கை அனேகருக்கு எரிச்சலை உண்டுபண்ணக் கூடிய ஒன்று என்பதை அனைவரும் அறிவர். விடுதலைப்புலிகளின் அதிகாரத்தை மீறி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழ் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை எதிர்ப்பதை இக்கடும்போக்கு கொண்ட தேசியவாதிகள் பாராட்டக்கடமைப்பட்டவர்கள். ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்கக்கூடிய ஓரு நியாயமான தீர்வு தமக்கு திருப்தியை தரும் என அத்தலைவர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர். ஆனால் அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் எதிர்காலத்தில் நினைத்தபடி நீக்கக்கூடிய ஒற்றையாட்சியை அவர்கள் விரும்பவில்லை. சோல்பரி அரசியல் சட்டத்திற்கு ஏற்பட்ட கதி புதிய அரசியற் சட்டத்திற்கு ஏற்படக்கூடாது என்று விரும்புகின்றனர். புதிய அரசியல் சாசனம் எதிர்காலத்தில் கிளர்ச்சி ஏற்பட இடமளிக்காத வகையில்; நிரந்தரமானதும், இறுதியானதுமான தீர்வாக அமைவதோடு நாட்டில் வாழும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இலங்கையர் என அடையாளப்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும். சமாதானத்துடனும் அமையுதியுடனும் சகல உரிமைகளையும் சமமாக அனுபவிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் வேண்டும். மேற்கொண்டு உயிரழிவு உடமையழிவு இல்லாமல் சமாதானத்தை கொண்டுவருவதற்கு இதுவே சிறந்த வழியாகும். நாம் எவ்வளவோ இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை.

தீவிர போக்குடைய தேசியவாதிகள் இன்னுமோர் முக்கிய விடயத்தை கவனத்தில எடுக்க தவறிவிட்டனர். நாட்டு மக்கள் அனைவரும் பௌத்த சமயத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டிருப்பது தீவிர நிலைப்பாடு கொண்டவர்களின் போக்கை மாற்றுவதற்கு ஊக்குவிப்பாக இருத்தல் வேண்டும். ஆகவே கடும்போக்காளர்கள் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்து சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை அங்கீகரித்து சிறுபான்மை மக்கள் சம உரிமையுடன் வாழ உரிய நிலைப்பட்டை எடுக்க வேண்டும்.


நாட்டுமக்கள் அனைவரும் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலிக்க வேண்டிய அளவிற்கு இனப்பிர்சசினை மோசமடைந்துள்ளது. சிறுபான்மை மக்களும் சர்வதேச சமூகத்தினரும் ஏற்கக் கூடிய நியாயமான தீர்வை சகல அரசியற் கட்சிகளும் ஏனைய குழுக்களும் முன்வைக்க வேண்டும். அப்படியானால் தான் சர்வதேச சமூகம் வன்முறையை கைவிட்டு தமது சிபார்சை ஏற்கும் படி விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அவசியம் ஏற்படின் அவர்கள் விடுதலைப் புலிகள் மீது பல்வேறு தடைகளை அமுல்படுத்தி தத்தமது நாட்டில் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நிதிசேகரிப்பதையும், ஆயுத கொள்வனவையும் தடுக்க முடியும். அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒஸ்லோ பிரகடனத்திற்கமைய அல்லது சமஷ்டி ஒற்றையாட்சி என்ற வார்த்தைகள் கசப்பானதாயிருந்தால் அதற்குப் பதிலாக இந்திய முறையிலான தீர்வுக்கு ஒப்புதலளிக்க வேண்டும்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமாகிய மாட்சிமைதாங்கிய மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சிதலைவருமாகிய கௌரவ ரணில் விக்கிரமசிங்கா அவர்களையும் தாமதிக்காது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உடன் முன்முயற்சி எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சமூகத்தினருடைய பங்களிப்பை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக தப்பான வியாக்கியானமளிக்கப்படக் கூடாது. இவ்விரு தலைவர்களும் எடுக்கின்ற முயற்சியால் வரக்கூடிய தீர்வை சர்வதேச சமூகம் தமக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் நியாயமான தீர்;வென சிறுபான்மையினருக்கு சிபார்சு செய்வேண்டும் என கோருகின்றேன்.

தினம் தினம் இவாறு இறக்கும் அப்பாவி மக்களில் அனேகரின் உழைப்பிலேயே அவர்களின் ஏழைக்குடும்பங்கள் தங்கிவாழ்கின்றன. யுத்தத்தை முடித்து சமாதானத்தை கொண்டுவந்து எமது மக்கள் பய பீதியின்றி இஸ்டம்போல் நடமாடக்கூடிய நிலையை உருவாக்கவேண்டிய புனித கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் சம்பவங்கள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிங்கள மக்கள் கையாண்ட பெரும் பொறுமையை நன்றியோடு பாராட்டுகின்றேன். விடுதலைப்புலிகள் தமது ஈனச்செயல்களை அண்மையில் கூட்டியிருப்பதன் உள்நோக்கம் அனைவருக்கும் விளங்கும். சிங்கள மக்களை எத்தகைய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பொறுமையை கடைப்பிடிக்குமாறு வேண்டுகின்றேன். புயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை அதிகாரிகளுக்கு காட்டிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு சிங்கள தமிழ முஸ்லிம் ஆகிய ஒவ்வொருவருக்கும் .உண்டு.

பல்வேறு ஆத்திரமூட்டும் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் எவ்வாறு பொறுமையை கடைப்பிடிக்கின்றனர் என்பதை மட்டக்களப்பில் வாழும் தமிழ் இஸ்ஸாமிய சகோதரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு வாழ் மக்களை சமாதானமாகவும் அமைதியாகவும் பயபீதியின்றி நடமாடவும் அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

CALL TO ALL POLITICAL LEADERS TO WAKEUP TO SAVE THE COUNTRY.

V. Anandasangaree,

The Tamil United Liberation Front very strongly condemns the LTTE for causing the death of 22 innocent civilians and also for causing grievous injuries to over sixty others by targeting a crowded bus – with a claymore mine. This is the third major incident in a week and the sixth in one month, taking a toll of 112 lives and injuring over 348 innocent people. How many more such incidents will take place God only knows? This is obviously the work of a fanatical group claiming to be waging a war to liberate the Tamils, little realising that the Tamils themselves need to be liberated from them. If these brutes do not tame themselves they will have to be tamed by others. This type of atrocious activities cannot be met with all the fire power the Government Forces have. It is not a conventional war that the LTTE is fighting. They are now cowardly engaged in gorilla warfare. Only the International Community can now rescue the country from the atrocities of the LTTE, but it is the Government’s responsibility to pave the way for it.

Under the present circumstances the International Community, India in particular can’t do anything other than silently and helplessly watching all what is happening. Only last week I appealed to the Government to come out with a reasonable proposal, acceptable to the International Community not out of fear for the LTTE , but to enable the International Community to step in and to tell the LTTE to stop all their brutal killings of the innocent civilians.

The unfortunate situation in our country is that the country is caught up in between a group that claims to be waging a war against the Government for the liberation of the Tamils and another group of ultra-nationalist claiming themselves as great patriots, trying to save the country from the former, little realising that a Patriot is not one who merely loves his country alone but one who not only loves his country but also its people as well. How can we expect the International Community to intervene when we are not prepared to accept our faults and jump at them when certain mistakes are pointed out by them. On such occasion it should be left to the Government to deal with them rather than others coming out with condemning statements. Only by doing so good-will can be maintained with all foreign countries. This applies to foreign agencies as well. The annoyance is often caused by unconcerned parties and the silence maintained by the Diplomatic Community at times is understandable. The International Community has done a lot to keep the LTTE operating in their respective countries, under strict check and constant vigilance.

Everyone knows that the main demand of the LTTE is division of the country and that demand is serious enough for anyone to worry about. The ultra-nationalist, in particular, should appreciate the Tamil Leadership for openly opposing separation, defying the LTTE and at grave risk to their lives. They have declared that they will be satisfied with a reasonable and an acceptable solution within a United Sri Lanka but not within a Unitary State under which there is no guarantee that whatever provisions made in a Unitary Constitution will remain in the Statute book for ever. The fate of the Soulbury Constitution should not be-fall on the proposed new constitution, leaving room for further agitation in the future. Whatever solution arrived at should be the last and final one that will strongly unite all sections of the people of Sri Lanka to a common identity as Sri Lankans, to live in peace and amity, enjoying all rights equally with others. This is the only way to bring back peace and save the country from further destructions of life and property. We have lost enough and cannot afford to lose anything more.

Another important factor that the ultra-nationalist have failed to take into consideration and should take as an Incentive to soften their stance, is the acceptance of Buddhism virtually by all Sri Lankans, as the state religion of Sri Lanka. The ultra-nationalist should therefore be magnanimous enough to give-in to the aspirations of the minorities who want to live in a United Sri Lanka as equals along with the others.

The ethnic problem has become so acute that everyone should do a complete re-thinking of their stand. This is the time for all political parties and various groups to shed their differences and to agree on a reasonable proposal that will satisfy the minorities and the International Community which if satisfied will certainly compel the LTTE to shun violence and to accept the solution recommended by them. They can, if necessary, impose several sanctions and curtail their activities in various countries including collection of funds and purchase of arms. The political parties should now get together and agree to a solution based either on the Oslo Declaration or by adopting the Indian Model if the terms “Federal” and “Unitary” are allergic to any section of the people.

I strongly urge His Excellency the President Mahinda Rajapakse, Leader of the SLFP and the Leader of the Opposition and President of the UNP Hon. Ranil Wickremesinghe to take the initiative without any delay to find a solution for the ethnic problem. The participation of the International Community cannot be construed as their interfering in the internal affairs of Sri Lanka. I am asking them only if satisfied, to recommend to the minorities as reasonable any solution that will emerge out of the initiative taken by these two leaders.

Everyone should realise that most of the people who die everyday are innocent bread-winners of poor families. Each one of us has a sacred duty to help to end the war and bring back much needed peace, for our people to live without fear and tension and to move about freely and fearlessly.

I thank the Sinhalese Civilians in the south and appreciate the tolerance hitherto shown by them inspite of the various provocations deliberately given by the LTTE. The reasons for enhancing their vicious activities recently are obvious and I strongly urge the Sinhalese to continue to show extreme tolerance and not to get provoked under any circumstances. I call upon all, be they Sinhalese, Tamils or Muslims to help the authorities to trace the people engaged in terrorist activities.

The Tamils and the Muslims of the Batticaloa District should learn from the Sinhalese in the South as to how they are showing extreme tolerance inspite of the numerous daily provocations given to them by the LTTE.

I appeal to all the residents in Batticaloa to maintain Peace and harmony and allow the others to live peacefully free from constant fear and tension.

V. Anandasangaree,

President – TULF.

Thursday, May 15, 2008

மகேஸ்வரி படுகொலைக்கு புலிகள் மீது சங்கரி கண்டனம்


ஈ.பி.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனத் தெரிவித்து அதனை வன்மையாக கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு:

இது விடுதலைக்காக போராடுவதாக கூறுகின்ற பயங்கரவாத இயக்கத்தின் ஒரு மோசடித்தனமான செயலாகும்.

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் ஒரு சட்டத்தரணியும் , ஈ.பி.டி.பியின் முழுநேர செயற்பாட்டாளருமாவர். நான் அறிந்த வகையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் சமூக சேவகியாக செயற்பட்டவர். தான் கற்ற சட்டத்துறையைக் கைவிட்டு அதிகப்படியான நேரத்தை இந்தியாவிலும், இலங்கையிலும் அகதிகள் மத்தியிலும் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டவர்கள் மத்தியிலும் அவர்களின் நன்மைக்காக உழைத்தவர். நான் நன்கு அறிந்த வகையில் அவரை ஓர் நேர்மையான,அமைதியான தன் நாட்டையும் அம்மக்களையும் நேசிக்கும் ஒரு பெண்மணியாக கருதுகிறேன். உடல் நலம் குன்றியிருந்த தனது தாயரை தன் சொந்த ஊரான கரவெட்டிக்குப் பார்க்க சென்றிருந்தபோது இப்படுகொலை நடந்துள்ளது.
மகேஸ்வரி வீரமிக்க ஒரு பெண்மணியாக ஏற்கப்பட வேண்டியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களில் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் போன்று தன்னை எதிர்நோக்கிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது அரசியலில் ஈடுபட்ட ஒரேயொரு பெண்மணி ஆவர்.

திருமதி சரோஜினி யோகேஸ்வரன் போன்று செல்வி மகேஸ்வரியும் நிராயுதபாணியாக பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாத வேளையில் வீட்டில் வைத்தே சுடப்பட்டுள்ளார். சரித்திரத்தில் அவர் ஒரு வீராங்கணையாக இடம்பெற வேண்டியவர். அவர் ஓர் அப்பாவியும் ஒரு சிறந்த சமூக சேவகியுமாவர்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது தனது மக்களுக்கு சேவை செய்வதற்காக துணிந்து வெளிப்பட்டு செயலாற்றியவரின் சேவை தமிழ் மக்களுக்கு இச் சம்பவத்தால் மறுக்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியான இப் பெண்மணியை அநாகரிகமான முறையில் படுகொலை செய்தமை வெட்கித் தலைகுனிய வைக்கும் நடவடிக்கையாகும்.
எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் பெற்றோருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அவருடன் பல ஆண்டுகாலம் உழைத்த ஈ.பி.டி.பி.தோழர்களும் அவரை நேசித்து அவர் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.
உண்மைக்காக உழைக்கும் அத்தனை பேரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான உலக பிரசித்திப் பெற்ற ஈவிரக்கமற்ற கொடூரமான மனித உயிர்களின் பெறுமதி தெரியாத பயங்கரவாதிகளின் செயலை கண்டிக்க வேண்டும் என்று உள்ளது.

Wednesday, May 7, 2008

விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இனப்பிரச்சனை தீருமா?

பல் நாட்டுத் தூதுவர்களுக்கு த.வி.கூ தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களால் அனுப்பப்பட்ட மகஜர்

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி தமிழ் நாடு சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருசாராரையும் பேச வைக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை கோர வேண்டும் என கேட்டுக்கொண்டது. பல்வேறு நாடுகளும் உலகளாவிய பொது ஸ்தாபனங்களும் இலங்கையின் கள நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாது யுத்தத்தை நிறுத்த வெண்டுமெனவும் விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டுமெனவும் வற்புறுத்தி வருகின்றன. யுத்தம் நிறுத்தப்படத்தான் வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை விடுதலைப் புலிகளுடன் மட்டுமானதாக இருக்கக்கூடாது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின் நாட்டு நிலைமை முற்றாக மாறிவிட்டது. அந்தநேரம் வடகிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் கூட பெருமளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. விடுதலைப் புலிகள் மிகக் கூடுதலாகவும், அரச படைகள் சிறிதளவும் மொத்தமாக பல்லாயிரக்கணக்கான யுத்த நிறுத்த மீறல்கள் நடந்தமையினால் ஒப்பந்தம் ரத்தாக்கப்பட்டு யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு ஏனைய பகுதிகளிலும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் அவ்வாறு கூறிவந்தாலும் அவர்களை தமிழ் மக்கள் ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள வில்லை. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற 22 பாராளுமன்ற தொகுதிகளை விடுதலைப் புலிகள் மோசடி மூலம் தமிழரசுக்கட்சியினூடாக (இலங்கை தமிழரசுக்கட்சி) பெற்றுக்கொண்டு வடகிழக்கு வாழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது விடுதலைப் புலிகளையே பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். சமஷ்டி கட்சிகூட இயங்காமல் இருந்தவேளையிலேயே இவர்கள் அதன் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு நீண்ட நாட்களின் பின்னே அக் கட்சியை இயங்க வைத்தனர். தேர்தல் காலத்தில் நான்கு தேர்தல் கண்காணிப்புக்குழு தமது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இவர்களின் தெரிவை பற்றி அனைத்துக் குழுக்களும் பாதகமான அறிக்கையை முன்வைத்ததோடு இரு குழுக்கள் வடகிழக்கு தேர்தலை ரத்துசெய்து புதிய தேர்தலை நடத்துமாறு சிபாரிசு செய்தனர். ஆகவே எத்தகைய பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகின்ற தார்மீக உரிமை அவர்களுக்கு இல்லை. தங்கள் நிலைமையை அவர்கள் உணர்ந்து ஏப்ரல் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் எதுவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக இழந்த நிலையில் விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பற்றி பேசுகின்ற உரிiமையை இழந்து விட்டனர். வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இன்றும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஏனைய மூன்று மாவட்டங்களாகிய யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியவற்றின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் அப்பகுதிகளையும் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் சனத்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் மிக அமைதியாக வாழ்கின்றனர். இன்னுமொரு பகுதியினர் ஐரோப்பா, ஸ்கண்டிநேவியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மிகப் பொருளாதார ரீதியாக வசதியாக வாழ்ந்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை ஊட்;டிக்கொண்டு நலமாக வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும், புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்கின்ற ஏழை மக்களின் பிள்ளைகளை தமது போர் வீரர்களாக சேர்த்து பயிற்சி கொடுக்கவும் பெருந்தொகையாக பண உதவி செய்கின்றனர். இப் பிள்ளைகள் பெருமளவில் யுத்த முனையில் தினமும் மடிந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தை குறி;ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாது நட்புடன் செயல்பட்டு விடுவிக்கக்கூடிய இராணுவத்தை அனுப்பும்படி கோரிக்கை விடுத்திருந்தேன்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்;டில் அடிமைகள்போல் இன்றும் வாழ்கின்ற மக்களே தமிழ் மக்களில் மிகவும் துர்ப்பாக்கியவான்களாவர். அவர்கள் எந்தவித உரிமைகளையும் அனுபவிப்பதில்லை. தாமாக சிந்தித்து செயலாற்ற முடியாது. தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களிக்க முடியாது. விடுதலைப் புலிகள் கடத்தி செல்வதை தடுப்பதற்காக மேல் வகுப்புக்களில் படிக்கும் தமது பிள்ளைகளை மறைத்து வைத்து வாழ்கின்றனர். குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். கடுமையான வரிகளை செலுத்துகின்றனர். ஆட்கடத்தல், சித்திரவதை முகாம்கள், இருட்டறை போன்ற தண்டனைகளையும் அனுபவிக்கின்றனர். குறைந்தபட்சம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் சட்டசபை உறுப்பினர்களையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்று அங்கு மக்கள் படுகின்ற கஷ்டங்கள், அனுபவக்கின்ற கொடுமைகளையும் நேரடியாக பார்க்கும்படி கோரியிருந்தேன்.

இப்பொழுதுள்ள பிரச்சனை அரசாங்கம் யாருடன் பேச வேண்டும் என்பதே. அரசு விடுதலைப் புலிகளுடன்தான் பேச வேண்டும் என்று கூறுவது நியாயமானதா? இன்றைய சூழ்நிலையை தமக்கு சாதகமாக பாவித்து இடையிலுள்ள சிலர் பல்வேறு மாற்றுத் திட்டங்களை முன்வைக்க முயல்கின்றனர். பிரச்சினை தீர்வுக்கு அவை உதவமாட்டாது. ஓற்றையாட்சியின் கீழ் காணப்படும் தீர்வு சிறுபான்மை தமிழினத்தின் அபிலாசைகளுக்கு ஏற்புடையதல்ல. எத்தகைய தீர்வும் நியாயமானதாகவும், சமத்துவமானதாகவும் அமைய வேண்டும். கடந்த சில வருடங்களாக இந்திய முறையிலானவொரு தீர்வை முன்வைத்து ஆதரவு தேடி வந்துள்ளேன். எல்லாவற்றுக்கு மேலாக இந்திய முறையிலான தீர்விலுள்ள நன்மை யாதெனில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழ் நாட்டில் முட்டுக்கட்டை கொடுக்கின்ற புலி சார்பான சில சக்திகளை மௌனிக்க வைக்க முடியும்.

யுத்தமுனையில் ஆயிரக்கணக்கானவர்கள் மரணிக்கின்றார்கள். அவ்வாறு மரணிப்பவர்களின் உறவினர்கள், அன்புக்குரியவர்கள் தான் வேதனையை அனுபவிக்கின்றார்களேயொழிய யுத்தத்தை முன்னெடுப்பவர்கள் அல்ல. மனித உரிமை மீறல்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் ஒருவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பதை பலரும் அறிவர். புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பவைகள் முழுதும் மறைக்கப்படுகின்றன. பொது மக்கள் உறுதியாக நின்று ஒத்துழைப்பு கொடுப்பார்களேயானால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலே மனித உரிமை மீறல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் புலிகள் பகுதியில் அதற்கு சாத்தியமில்லை.

சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா அக்கறையின்றி இருக்க முடியாது. அரசுக்கு எல்லா வழியாலும் சர்வதேச சமூகத்துக்கு ஏற்புடையதாகிய ஓர் நியாயமான தீர்வை முன் வைக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் திருப்தியடையும் பட்சத்தில் அதை ஏற்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் வற்புறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சர்வதேச சமூகத்தின் சிபாரிசை ஏற்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய 13வது திருத்தம் அரை நூற்றாண்டு காலமாக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்த நிலையில், நிரந்தர தீர்வாக அமையாது. இருப்பினும் இறுதித் தீர்வை காணும் வரைக்கும் 13வது திருத்தத்தை ஒரு தற்காலிக தீர்வாக ஏற்றுக்கொள்ளலாம்.

மாட்சிமை தங்கிய தூதுவர் அவர்களே! இலங்கையில் தற்போது நிலவும் நிலமையை தங்கள் அரசுக்கு விளக்கிக்கூறி சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓர் நியாயமான தீர்வுக்கு உடன்பட வைக்க போதிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் தாங்க முடியாத எல்லை மீறி மக்கள் துன்பப்படுகின்றார்கள். இது சம்பந்தமாக தங்களுடன் நேரில் பேசுவதற்கு உரிய நாள், நேரம் குறித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ