உலகமெங்குமிருக்கும் தமிழ் மக்கள் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தைப் பற்றிய கருத்தரங்கங்களையும் , ஒரு சிலர், இனக்கலவரத்தை நினைவு கொள்ளும் சாட்டில் கேளிக்கைகளையும் வைத்து ஓய்ந்து விட்டார்கள். இன்று, இலங்கையின் வடக்கில் தொடரும் போரால், அல்லற்படும் மக்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு எப்படி உதவிசெய்யலாம் என்று பல மனித உரிமைவாதிகள் திண்டாடுகிறார்கள். விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்களை வெளியே விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள். இராணுவம் , கிளிநொச்சியை நெருங்கினால், மக்கள் புலிகளின் மனிதக்கேடயமாக்ப்பாவிக்கப்படபோகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
இதில் அழியப்போவது எண்ணிக்கையற்ற பொதுமக்களே. இலங்கையில் உக்கிரமடையும் போர்பற்றியோ மக்களின் துயர் பற்றியோ உலக மனித உரிமைவாதிகள் என்ன சொன்னாலும், அங்கு இருக்கும் நடைமுறை வேறு. எப்படியும் , கிளிநொச்சிக்குள் அகப்பட்ட மக்களை வெளியேற்ற முடியுமான முன்னெடுப்புக்களைப் பலரும் எடுப்பது மிகவும் அத்தியாவசியமாகும். இது பற்றி, கொழும்பிலுள்ள தமிழ்த் தலைவர்களான, திரு, சித்தார்த்தன், திரு சிறிதரன், திரு ஆனந்தசங்கரி அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியபோது, அவர்களின் கருத்துப்படி, தொடரும் போரால் மன்னார்ப்பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் கிளிநொச்சியை நோக்கிப்போகிறார்கள். போரை முன்னெடுக்கும்போது, அங்கிருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடங்களோ வசதிகளோ இல்லை என்றார்கள்.
''. கொழும்பில் வாழும் தமிழ்த் தலைவர்கள் அத்தனைபேரும் சேர்ந்து, போர்ச்சூழலிருந்து வெளியேறும் மக்களுக்குப்பாதுகாப்பு, அடைக்கல வசதிகள் கொடுக்கும் விடயங்கள்பற்றி ஜானாதிபதியுடன் தொடர்பு கொண்டீர்களா,மக்களை வெளியேற்றிவிட்டுப்போரைத் தொடரும்படி அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் கேட்டீர்களா? இது பற்றி, நீங்கள் மூவரும் இணைந்து, உடனடியாக ஒரு வேண்டுகோளை ஜானாதிபதிக்கும், உலகநாடுகளுக்கும் வெளியிடவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.இதுபற்றி உடனடி நடவடிக்கைகள் எடுப்பதாச் சொன்னார்கள்.
திரு சித்தார்தன் அவர்கள்:(புளொட்) ''போர் தொடரும், மன்னார் வன்னிப்பகுதிகளுக்குத் தேவையான, நிவாரணப்பொருட்கள் செல்வதே கஷ்டமாகவிருக்கிறது. அரசாங்கம், இந்தக்கடமையைச் செய்தாலும் துரிதகெதியில் எதுவும் நடக்க எந்த வாய்ப்பும் இல்லை. மக்களுக்குத்தேவையான சாமான்கள் போய்ச்சேர எத்தனையோ தடைகள் இருக்கின்றன. உணவு, மருந்துபோன்ற சாமான்கள் விரைவில் அனுப்பும் வழிமுறைகள் முன்னெடுக்கப்படவேண்டும். மன்னாரில் நடக்கும் போரிலிருந்து தப்பியோடும் மக்கள் சாரி சாரியாகக் கிளிநொச்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். உடனடித்தாக்குதல் மட்டுமன்றி, தூரத்துப் பீரங்கி வெடிகளின் தாக்குதலுக்குப்பயந்தும் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கி விட்டார்கள். ஒரு ஷெல் அடித்தால் அதன் தாக்கம் 10-12 கி மி வரை இருக்கிறது. இப்போது தொடரும் போரில் இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தாலும், இராணுவத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவிட்டு ஒரு பிரமாண்டமானதாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்துவார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதால், மக்களிடையே பெரியபீதி காணப்படுகிறது. முல்லைத்தீவு , கிளிநொச்சி மக்கள் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். நிலைமைகள் மிகப்பரிதாபமாகவிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 300.000-400.000 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களிற் பலர் ஏற்கனவே மனிதக்கேடயங்கள். இவர்களின் எதிர்காலம் நிலையற்றதும், மிகவும் அபாயகரமானதாகவுமிருக்கிறது. சர்வதேச சமூகம் ஒன்றுகூடி இம்மக்களின் அன்றாட தேவைகள், பாதுகாப்பு, அடைக்கலம், மட்டுமன்றி வன்னியிலிருந்து வெளியேறவும் உதவவேண்டும். அகில உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ்ச்சமுதாயம் இந்தக் கொடுமையில் அகப்பட்ட மக்களுக்காக்குரல் கொடுக்கவேண்டும். நீங்கள் கேட்டபடி நாங்கள், உடனையாக ஒருவேண்டுகோளை ஜானாதிபதிக்கும் சர்வதேச சமூகத்தலைமைகளுக்கும் அனுப்பி வைக்கிறோம்''.
''எப்படியும் இந்தப்போர் முடிந்து மக்களுக்கு நல்லநிலை கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கிழக்கில் கிடைத்த வெற்றிபோல் இம்மக்களும் நிம்மதியாகவாழ்வேண்டும். ஒருகாலத்தில் ஆயுதாரிகளாகவிருந்து, இன்று மக்களுக்காக உழைக்க வந்தவர்களிடம் அரச ஆட்சிபோனால் நேர்மையுடன் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அதைக்கிழக்கில்ச் சரிவரச்செய்ய இன ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேவை. ஆயுததாரிகளாகவிருந்து அரச நிர்வாகத்துக்கு வந்தவர்கள் நேர்மையாகத் தங்கள் உழைப்பை மக்களுக்கு அர்ப்பணிப்பவர்கள். அது இங்கு நடக்கும் யாதார்த்தம். ஆனால், இன்று புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளிலும் புலி அதரவாளர்கள் நல்ல வடிவாகப் பல ஊழல்களை இராணுவத்துடன் செய்து செய்கிறார்கள். ஒரு இடத்திலுள்ள மக்களுக்கொடுக்க,300 பொருட்கள் தேவை என்றால் 400 என்று, மக்களுக்கு பொருட்களை வினியோகிக்கும் புலி ஆதரவாளர்கள்(GS) கேட்பார்கள். 300ஐயும் மக்களுக்குகொடுத்துவிட்டி மிகுதி 100ஐயும் தங்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள். இப்படியான அநியாயங்களால் மக்களுக்குக்கிடைக் கூடியநன்மைகள் எவ்வளவோ லஞ்சதாரிகளிடம் போய்ச்சேருகிறது. எப்படியும், தற்போதைய நிலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களுக்கு எங்களால் னதைச்செய்வோம்.அரச நிர்வாகத்துக்கு வரும் சாதாராண அரச ஊழியர்களிடம் லஞ்ச உணர்வு கூடவுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் பணப்பைகைகளை லஞ்சத்தில் நிறைக்கவே பார்ப்பார்கள். அந்த நிலை மாறித் தமிழ் மக்களின் நலனுக்கு உழைப்பவர்கள் சமுதாயதில் வளரவேண்டும். வடக்கில் மக்கள் இன்னும், தங்கள் பாதுகாப்புக்காக, இடத்துக்கு இடம் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.கிழக்கில் எப்போதோ அகதியான மக்கள் பலருக்கு இன்னும், மீழ்குடியேற்றத்திட்டங்கள் முழுக்கவும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் சமுதாயம் சிதைந்த சமுதாயம். தொடர்ந்து போரும் இட மாற்றங்களும் நடந்து மக்களைத் துயர்படுத்துகிறது''.
திரு சிறிதரன் அவர்கள் (ஈ.பி.பி.ர்.எல்.எப் பத்மனாபா அணி): ''அரசு,தனது இராணுவ முன்னெடுப்பை எடுக்கும்போது மக்களைப் போர் நடக்காத இடங்களுக்கு அனுப்ப முயற்சிகளை எடுக்கவேண்டும். மன்னாரில் அடிபட்ட மக்கள் வேளாங்குளம், தேவன்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கிளிநொச்சிக்கு ஓடுகிறார்கள். ஏற்கனவே படு மோசமானநிலையிலிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை இந்தக் கொடுரத்தால் இன்னும் தாங்கமுடியாத சோகத்துக்குள் மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது. இது பற்றி நாங்கள் மூவரும் , நீங்கள் கேட்டபடி , எங்கள் வேண்டுகோள்களை அனுப்புவோம், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம். மக்களுக்கு விடுதலை தேவை. இன்று கிழக்கில் ஒரு தேர்தல் நடந்திருக்கிறது. அந்த நிர்வாகம் சரிவர நடக்க அரச நிறுவனங்கள் (iNSTITUTIONS) ஒத்துழைக்கவேண்டும். போரில் நீண்டநாள் அல்லற்பட்ட கிழக்கின் சமுதாய நிலை பல்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை நிவர்த்திசெய்ய விரைவான திட்டங்கள் செயற்படுத்தவேண்டும். இன்று, முதலமைச்சராக வந்திருக்கும், திரு சந்திரகாந்தன் என்ன படித்திருக்கிறார் என்பது பிரச்சினையல்ல, அவரின் செயற்பாடுகள்தான் முக்கியம் . இன்று,கிழக்கின் அதிகாரத்துக்கு வந்திருப்பவர்கள், மக்களைக்காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்கள். அவர்களிடம் நேர்மையிருக்கும் என்று எனது அபிப்பிராயம்.
கிழக்கில் 13 வது சரதுக்குரிய அதிகாரப்பரவல்கள் கொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் பல திட்டங்களைச்செயற் படுத்துகிறார்கள் என்று கேள்வி, அத்தனையையும் சீர்திருத்தமாகச்செய்ய ஒரு நல்ல நிர்வாகம் தேவை. யார் பதவிக்கு வந்தார் என்று கேள்வியல்ல, கொடுத்த கடமையைச்சரிவரச் செய்வதுதான் முக்கியம். அரச நிர்வாகத்துக்கு வரும் சாதாராண அரச ஊழியர்களிடம் லஞ்ச உணர்வு கூடவுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் பணப்பைகைகளை லஞ்சத்தில் நிறைக்கவே பார்ப்பார்கள். ஆனால், போராளிகளாயிருந்து வந்தவர்களிடம் அந்தப்பழக்கமில்லை.கிழக்குக்கு இன்று தேவையானது , இன ஒற்றுமையும், மக்களுக்கு வேலைசெய்யும் நல்ல மனிதர்களுமே. கிழக்கின் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், சமூகநலவாதியான திருமதி ஜெசிமா இஸ்மாயில் போன்றோரின் ஆளுமைபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியானவர்கள் சமுதாயத்தைக்கட்டியெழுப்ப உதவுவார்கள். புலிகள், படித்த சமுகத்தைக் கொலைசெய்து தள்ளிவிட்டதால், மக்களுக்களுக்குத் தன்னலம் இன்றிச் சேவைசெய்யும் மனிதர்கள் அரிதாகிவிட்டார்கள். இன்று, வடக்கில் தொடரும் போர் காரணமாக, மக்களுக்குத் தேவையான சேவைகள் எத்தனையோ இருக்கின்றன. நிரந்தர நிர்வாகமற்ற இடங்களில் மக்கள் சேவையை முன்னெடுப்பதும் கடினமாகவிருக்கிறது.''
''தற்போது, மன்னார்ப்பகுதி, வன்னிப்பகுதிகளில் போர் நடக்கும் இடங்களில் அகப்பட்ட மக்களுக்குகுரல் கொடுக்க யாருமில்லை.புலிகள் தங்களைக் காப்பாற்றத்தான் முனைகிறார்கள். இராணுவத்திடம் வடக்கில் அகப்பட்ட புலிகள் இப்போது, இராணுவத்தின் கவனத்தைத் திருப்புவதற்கு என்று சொல்லிக்கொண்டு, வடக்கிலிருந்து, கிழக்கு நோக்கியும் போயிருக்கிறார்களாம். ஆயித்திமலைப்பகுதியில் கிளைமோர் வைத்திருக்கிறார்கள்.கஞ்சிகுடியாறு பக்கத்தில் 100-200 புலிகள் போயிருப்பதாகக்கதைகள் அடிபடுகின்றன.லவுகலையில் அதிரடிப்படைக்கு அடிகொடுத்திருக்கிறார்கள் என்று சொகிறார்கள். எப்படியும் , தொடர்ந்தும் போரைத் தொடர்வதும் மக்களுக்குத் துயர் கொடுப்பதும் என்று புலிகள் கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அத்துடன் புலிகள், எப்படியும் தமிழ் இனத்தை அழிப்பது என்றே முடிவு கட்டிவிட்டார்கள்.வேலுப்பிள்ளையாரின் மகன் பிரபாகரன், தமிழ் மக்களை நாடோடியாக்கிவிட்டுப் பங்கருக்குள் பத்திரமாகவிருக்கிறார்.இங்கு மக்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிக் காடு, வயல்கள்கடந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்''
திரு ஆனந்தசங்கரி அவர்கள், (தமிழர் விடுதலைக்கூட்டணி) '' வடக்கில் தொடரும் போரால் மக்கள் படும் அவலம் பற்றி நான் பிரபாகரனுக்கு எழுதிவிட்டேன். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்கள், அடைக்கலம், என்பதுபற்றிய கோரிக்கையை மற்றத் தமிழ்த் தலைவர்களுடன்சேர்ந்து கொடுக்கவேண்டிய தலைமைகளுக்கு உடனடியாகக்கொடுப்போம்'' என்றார்
போரில் அல்லற்படும் மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப்பொருட்கள் எப்படிக் கொடுக்கப்படுகின்றன என்பது அறிய, இலங்கை சமூகசேவை அமைச்சரை திரு டக்லஸ் தேவானந்தாவைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரின் தொடர்பு கிடைக்கவில்லை.
இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்தச்சொல்லிப் புலி ஆதரவாளர்கள் பிரசாரங்கள் செய்கிறார்கள். புலிகள், சாதுர்யமாகப் பின்வாங்குவதாகவும், இராணுவத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுப்பிரதேசமான வன்னிக்குள் வரவிட்டு ஒரு பெரிய தாக்குதல் நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நூற்றுக்கணக்கான தற்கொலைதாரிகள்,' தங்கள் கடைசித் தாக்குதல்களுக்கு வடக்கு, கிழக்கு, கொழும்பு, சிங்களப்பகுதிகளுக்குள் அனுப்பபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சில புத்திசாலிகள், 'புலிகள் தலிபான்கள்மாதிரி, தோற்றதுபோற் காட்டிக்கொண்டு சாதுர்யப் பின்னடைவு செய்கிறார்கள்.மிகப்பயங்கர பலத்துடன் போருக்குத் திரும்பிவருவார்கள்' என்று நப்பாசையுடன் கதையளக்கிறார்கள். தலிபான்கள், தங்களின் தத்துவத்தின் அடிப்படையில் இணைந்தவர்கள். பல நாடுகளிருந்துபோய் ஆபுகானிஸ்தானிற் போர்புரிபவர்கள்.புலிகள் தங்களுக்குப் பணம் பறிக்க, இலங்கையில் ஒரு குழுவை நாட்டில் உண்டாக்கி, ஊரைவிட்டு ஓடிவந்து விட்டு உலகமெல்லாம் கோடி கோடியெனச் சேர்த்துவைத்துக்கொண்டு, இலங்கையிலிருந்து தப்பியோடமுடியாத ஒரு ஏழைச் சமுதாயத்தைப்பலி கொடுப்பவர்கள்.இதுவரையும், புலிகள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. போராட முன்வந்த தமிழ் இளைஞர்களை, மாற்றுகருத்துக்கள் என்ற காரணம் காட்டி வேட்டையாடி முடித்தார்கள். மாத்தையா போன்ற தங்கள் தலைவர்களையே போட்டுத்தள்ளினார்கள்.வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளைஞர்களைப்போர்க்களம் அனுப்பி மரணக்கட்டிடங்களைக்கட்டினார்கள். மக்கள் இருக்கும் இடங்களைப் பாலைவனங்களாக்கினார்கள். தங்கள் குழந்தைகளை வெளிநாடுகள் அனுப்பிப்படிக்க வைத்தார்கள் இலங்கையில் ஏழைத் தமிழ்க் குழந்தைகளை மூளைச்சலவை செய்து கொலைக்களம் அனுப்பினார்கள். மரியாதையாக வாழ்ந்த சமுதாயத்தை, கள்ளர்கள் காவாலிகள்,பயங்கரவாதிகள் என்று உலச சமுதாயம் முத்திரை குத்தவைத்தார்கள். வடக்கில் தமிழர்களுடன் ஒற்றுமையாய் வாழ்ந்தமுஸ்லிம் மக்களை அனாதைகளாக்த் துரத்தியடித்தார்கள். பிராந்தியப் பிரிவினைகளை உண்டாகினார்கள். இ¢ந்தியாவின் முன்னாட் பிரதமரைக் கொலைசெய்து இந்திய மக்களை எதிரியாகினார்கள். சமாதானம் செய்விக்க வந்தவர்களையும் அதிருப்திப்படுத்தினார்கள்.இன்று, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க உலகில் யாரும் முன்வராத நிலையை உண்டாக்கியிருக்கிறார்கள்.
இனி ஒருபோதும் புலிகள், பழையபடி எந்தப் பெரிய வெற்றியையும் அடையமாட்டார்கள், தமிழர்களுக்கு விடுதலை எடுத்துக்கொடுக்க மாட்டார்கள் என்று பெரும்பாலொருக்குத் தெரியும். இன்னும் கொஞ்சகாலம் தங்களுக்குப் பணம் பறிக்கப் பல தமிழ் உயிர்கள் பலியாகப் போகின்றன என்பதுதான் உண்மை. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களென்றால் மக்களை வெளியே அனுப்பட்டும். தாங்கள் மட்டும் எதிரியுடன் போரிட்டு வெற்றிவாகை சூடட்டும். அதை அவர்கள் செய்யமாட்டார்கள்.எவ்வளவு படித்த தமிழ்ச் சமுகம் இப்படி ஏமாற்றப்பட்டதும், சொல்லாத் துயர்களைத் தொடர்ந்து அனுபவிப்பதும் பெரிய துக்கமானவிடயமாகும்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Showing posts with label இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். Show all posts

Thursday, July 31, 2008
Thursday, June 26, 2008
முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் "அக்கா"
அண்மையில் கல்முனையில் நடைபெற்ற வல்லுறவுச் சம்பவமானது
மனிதமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி கிழக்கு
வாழ் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் தாயாரின் வாக்கு மூலமும் "டெய்லி மிரர்"
பத்திரிகையில் வெளியாகி அதன்பின் இணையங்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பு பிரசுரமாகியிருந்தது. கிழக்கிற்கு சூரிய உதயம் என வாழ்த்துச் சொல்லி வரவேற்று பிள்ளையான் என்ற துரோகக்கும்பலுக்கு ஆராத்தி பிடித்துக் கொண்டிருந்த பெண்ணியவாதி (பேய்க்காட்டுவாதி) இராஜேஸ்வரிக்கு மேளதாளங்களுக்கு நடுவில் வெளியான மேற்படி செய்தி இடியாகிப் போனது.
அக்கா அதிரடி ஆனந்த சங்கரியாகவும் அரசபுழுகன் ரம்புக்வெலவாகவும்
மாறிவிட்டா. எங்கே கொலைகள் நடக்கிறதோஅங்கெல்லாம் எந்தவித
மறுகேள்வியோ விசாரணையோ இன்றி புலியின் தலையில் போட்டுப் பாசிசம் பேசும் அக்கா இவ்விடயத்தில் அதிகமாய் கரிசனையெடுத்து அதிரடி அறிக்கை வடித்து தனது நெருக்கத்துக்குரிய பிள்ளையானையும் மகிந்த மாத்தையாவையும் குளிர்ச்சிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் மருத்துவத்தாதி வேலைக்கு வந்த இந்த ராஜேஸ்வரி இலங்கையில் நடைபெறும் யுத்தத்தின் கொடுமையை துயரை எதையுமே ஒரு துளியும் உணராத அனுபவிக்காத ஒருவர். நதிக்கரை கடற்கரையென்று
நாவல் சிறுகதைகள் என ஏதோ தன்னால் இயன்றதை எழுதி வந்தார். எழுத்தில் தனது கவனத்தை இவர் செலுத்தியிருந்தால் சிலவேளை ஒரு சிறந்த எழுத்தாளராக வளர்ச்சி பெற்றிருக்கலாம். அல்லது தனது தொழிலில்
கவனத்தை செலுத்தித் தனது திறனை தமிழினத்துக்குத் தந்திருந்தால் ஒரு
பெண்ணின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்களாகிய நாம் பெருமையடைந்திருப்போம்.
ஆனால் பெண்ணியவாதி மனிதவுரிமைவாதியென தனக்குத்தானே
பெயரிட்டுக்கொண்டு அதற்கு முரணாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெண்ணியமென்றால் விவாகரத்துப்பெறுவது, கணவனை பொரியல் சட்டியால் அடித்துக் கலைப்பது எனப்பொருள் கொண்ட அக்காவிடம் அதிகமாக
எதிர்பார்த்தது எங்கள் தவறுதான். பெண்கள் சந்திப்பு இலக்கியச் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் இடைக்கிடை தன்னையும் ஈடுபடுத்தி பொழுது
போக்குப்பெண்ணியம் பேசி வந்தார்.
விடுதலைப் புலிகள் பற்றிய அல்லது தமிழீழவிடுதலைப் போராட்டம் பற்றிய எந்தவித புரிதல்களும் இல்லாமல் லண்டன் வாழ்வோடு தன்னை வேர்பதித்துக் கொண்ட இந்தப்போலிப் பெண்ணியவாதி கணவனை அடித்துத் துரத்திவிட்டு பொழுது போக்குவதற்கு களம் தேடினார். இவ்வேளையில் புலத்தில் மாற்றுக்கருத்தென்று பம்மாத்துப் பண்ணும் சிலருடன் கூட்டை ஏற்படுத்திக்கொண்டு பாசிசம் படுகொலையென்று புலம்பத் தொடங்கினார். இலக்கியத்தில் இருந்த ஆர்வத்தை பாசிசம் என்ற தனக்கே அர்த்தம் புரியாத சொல்லை அடிக்கடி பாவித்து அறிக்கைகள் கண்டனங்கள் எழுத ஆரம்பித்தார்.
தன்னையொரு கிழக்குமாகாண நலன் விரும்பியாகவும் கிழக்குமாகாணத்தின்
விடிவில் அக்கறை கொண்டவராகவும் காட்டிக்கொண்டு தனது அரசியல்
விளையாட்டுக்களை ஆரம்பித்தார். சமயம் பார்த்துக் காத்திருந்த பிரதேசவாதிகள்
சிலர் இவரது தொடர்பை உள்வாங்கி புலியெதிர்ப்புச் செய்வித்துக் கொண்டு
வந்தார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து ஒரு பெரும் படையணியின்
தலைவன் தான் என்ற மிதப்பில் இருந்த கருணாவின் கோட்டைக்குள்
அக்காவின் காற்றுப்பட்டு கருணா குழுவைச் சேர்ந்த பலரை லண்டனுக்குள்
அழைத்துக் கொண்டார். கருணாவின் பிளவின் பின் அக்கா காட்டில்ஒரே
மழைதான்.
மேன்மைமிகு சனாதிபதி மகிந்தவையும் சந்தித்து ஏச்ஞ்ஙீகூழூக் போடும்
அளவுக்கு அரசதரப்புடன் அரசபணத்தில் தன்னை ஆளாக்கிக் கொண்டார்.
பிள்ளையான் அக்காவின் தாராள மனதைப் புரிந்து தனது கோட்டைக்குள்
அக்காவுக்கும் கொத்தளம் கொடுத்தான். பிள்ளையானுக்குப் பிடித்த
பிள்ளையானின் சகாக்களுக்குப் பிடித்ததெல்லாம் அக்காவுக்கும் பிடித்தது.
பிள்ளையான் முதலமைச்சராக அக்கா லண்டனிலிருந்து கிழக்கு மக்களின்
வாக்குக்களை பிள்ளையானுக்கு போடும்படி ஆலோசனை சொன்னது
மட்டுமன்றி கிழக்கின் சூரியன்பிள்ளையான் என ஒழுக்கம் கெட்ட
பிள்ளையானை உச்சத்தில் ஏற்றிக் குளிர்மையடைந்தார். இளம் பெண்களை
பிள்ளையான் குழுகடத்தவும் வல்லுறவு கொள்ளவும் பெண்ணியவாதியெனத்
தன்னை அடையாளம் காட்டியஅக்கா ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகினார்.
அங்கே புலிக்கொலை இங்கே புலிவதை என எவர் எவரோ செய்த
கொலைகளுக்கெல்லாம் புலிச்சாயம் அடித்து கண்டனங்கள் விட்டுக்
கொண்டிருந்த அக்காவின் தலையில் இடியாக அண்மையில் கல்முனச் சம்பவம்
வெளிவந்தது. இந்தப் போலி மனிதநேயவாதி மீது இவரை ஆதரித்தவர்களே
கேள்வி கேட்கும் அளவுக்கு விடயம் வெளிவந்துள்ளது.
புலி புலியென புலிக்காச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அக்கா அதிரடி ஆனந்த
சங்கரி,பொலிஸ் இன்ஸ்பெக்டர் மொகமட் ஐமேல், ஆனந்த விஜெயசுரிய என
தனது பொன்னான 25.ரோக்களையும் நேரத்தையும் செலவளித்து
தொலைபேசியெடுத்து கல்முனை விடயம் பற்றி கேட்ட போது அப்படியொரு
சம்பவமே நடக்கவில்லையெனவும் அறிக்கையொன்றை அவசரமாய்
வெளியிட்டுள்ளார்.
இதுவரை இவரது கண்டனங்களும் சாட்டுதலும் புலிபுலியென்ற போது
இப்படியொருபோதும் உண்மையா பொய்யா என்பதை அறிய ஒரு
சதத்தைத்தானும் செலவளிக்கவுமில்லை உண்மைகளை அறிய
முற்படவுமில்லை. அக்காவின் நெருக்கத்துக்குரிய பிள்ளையான் கும்பலினால்
நடாத்தப்பட்ட சம்பவத்தை அப்படியொன்றும் நடக்கவில்லையென்றும்,
தோற்றுப்போன கட்சியின் பத்திரிகையே டெய்லி மிரர்' எனவும் தனது
பிள்ளையானின்ஆட்சிமீது காழ்ப்புணர்வு கொண்டே நடக்காத பாலியற்
கொடுமையை நடந்ததாக டெய்லி மிரர் செய்தியாளர் ஜெமிலா நஜிபுதீன்' செய்தி
வெளியிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் ஜெமிலா
நஜிபுதீன் அவர்களைத் தேடும் பணியிலும் தனது அரசபரிவாரங்களை
இறக்கியுள்ளார்.
அக்காவின் தாராள மனதைப் புரிந்த பிள்ளையான் தனது கோட்டைக்குள்

பிள்ளையானின் சகாக்களுக்குப் பிடித்த தெல்லாம் அக்காவுக்கும்
பிடித்தது. பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் புரிந்த
அதிரடிக்கூட்டத்தினரை அக்காவின் அரசாங்கம் கண்டுபிடித்து அவர்கள்
இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியாயின் அந்த
அதிரடிக்கூட்டம் யாரக்கோய்? வல்லுறவுக் குற்றம் புரிந்தோருக்கு வெறும்
இடமாற்றம் தான் தண்டனையா? இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
கிடைக்கும் நீதி இதுதானா ? சங்கரித்தாத்தா அக்காவுக்கு செப்பியவை
கற்பழிப்பென்றால் கதறியடித்துக் கொண்டு ஓலமிடும் தமிழ்ப் பத்திரிகைகளில்
இது பற்றி ஏதும் பெரிய செய்திகள் வந்ததாகத் எனக்கு தெரியாது என்றார் திரு
ஆனந்தசங்கரி' ஐயா செத்தவைக்கே வாக்குப்போடச் சொல்லி காசும் கடிதமும்
போட்டவர். உயிரோடிருப்பவர்களுக்கும் செத்தவர்களுக்கும் வித்தியாசம்
தெரியாத மாறாட்டத்திலிருந்து மீள்வதும் பின்னர் உறங்குவதுமாக இருக்க
எப்பிடியக்கோய் அவருக்கு இந்தப்பிரச்சனைகளெல்லாம் தெரியவரும் ?சரி
உங்கள் வாதப்படி பார்ப்போம் நீங்கள் சொன்ன அதிகாரிகளும் ஆனந்தசங்கரியும்
மக்களுடன் சேர்ந்தா பணியாற்றுகிறார்கள் ?காவலாளிகளுக்கு நடவிலும்
குளிரூட்டப்பட்ட அறைகளில் உங்களைப்போல சுழல் கதிரைகளில் சுழன்றபடி
சோம்பிக் கிடப்பவர்கள்.
என்னக்கோய் சொன்னீங்கள்? உடல் வியாபாரம்தான் விபச்சாரமல்ல
உண்மைகளை மறைத்து விடயங்களை விற்பதும்
விபச்சாரம்தான்.புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் நடக்கும் கொலைகளுக்குப் பணம்
கொடுத்துக் கொண்டு கொலைகளை நியாயப்படுத்திக் கொண்டு பெண்களின்
பாலியல் தொடர்பான ஒரு வரி பத்திரிகையில் வந்துவிட்டால் தமிழ்க் கற்பு
பற்றி ஓலம் போடுவதற்கு முன்னால் நடந்த விடயங்களுக்குப் பின்னிருக்கும்
உண்மைகளை அறிந்து விட்டு எழுதுவது கவுரவம்'(ராஜேஸ்வரி) நீங்கள்
செய்வது என்னக்கோய் ? கவுரவமாஅப்படியென்றால் என்ன எனக்கேட்கும்
நீங்கள்நியாயப்படுத்தும் பொய்யை எந்த வகையில் சேர்க்க?
பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில் உங்கள் பிள்ளையானும் மகிந்த
மாத்தையாவும் கொடுக்கும் பரிசுகளை நாமும் அறிந்தபடிதானிருக்கிறோம்.
எத்தனை பத்திரிகையாளர்களை உங்கள் அரசு கொன்று போட்டது ஞாபகமா ?
கொலைகளை யாருமே ஞஉயாயப் படுத்தியதில்லை ஆனால் நீங்கள் நடந்த
உண்மையை மறைக்க எத்தனை தரம் விபச்சாரம் செய்கிறீர்கள்? பணம்
வாங்கிக் கொல்வதற்கு நீங்களும் உங்கள் பிள்ளையானும் இருக்க இங்கு
யாரும் பணம் கொடுக்கவில்லையக்கோய்?.
பத்திரிகையாளர் ஜமீலா எழுதிய சீதா குடும்பத்தைத்தேடி உங்கள் அனுமார்கள் இலங்கை முழுவதும் வலைவிரித்து அலைவதாகவும் சொன்னீர்கள். உங்கள் அனுமார்களுக்கு இன்னும் சீதாக்கள் தேவைப்படுவார்கள். அவர்கள் தேவைகள் தீரஉங்கள் பதவி கைகூட நிச்சயம்
அனுமார்கள்வடிவில் உங்கள் ஆசீர்வாதம் அவர்களுக்குக்கிடைக்கும்.
பத்திரிகையாளர் ஜமீலாவுக்குக் கூட சீதா குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடுமை
நிகழாது என்பது நிச்சயமில்லா நிலைமையில் இலங்கையின் சனநாயகமும்
உங்கள் கிழக்குச்சூரியனும் அவன் படைகளும் இருக்க சீதா குடும்பம்
மட்டுமல்ல இன்னும் நிறையவே வெளிவராத உண்மைகள் கிழக்கில்
நடைபெறுகின்றன.
அவை வெளியில் சொல்லப்படுகின்ற போது உங்கள் பிள்ளையான் நிலை ? உங்கள் நிலையும் தான் ?
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

மக்களுக்காகப் போராட மறுக்கும் ஜனநாயகம்
`ஜனநாயகம்' என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல என்று மறுப்பவன் எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம் நீதி
விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் `ஜனநாயகத்தின்' காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசும் பொருளாகக் கூட எடுப்பதில்லை.இந்த அரசியல் உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் புலியொழிப்பு என்பது அரசை பாதுகாப்பது தான் என்றான பின்பு எப்படித் தான் மக்களின் அவலத்தை கண்டுகொள்வார்கள். மக்களுக்காக போராடாதவரை மனித அவலமே அங்கு இல்லையென்பதும்
அதை மூடிமறைப்பதும் தான் இவர்களின் `மக்கள்' அரசியலாகின்றது.
புலியொழிப்புத் தான் அனைத்து அரசியல் நிகழ்ச்சியென்றான பின்பு அதை ஒழிப்பதாக கூறிக்கொள்பவனின் குற்றங்களை பாதுகாக்கின்ற பாசிச அரசியலே இன்று `ஜனநாயகத்தின்' பெயரில் கொக்கரிக்கின்றது. இப்படி கிரிமினல்களின் நடத்தைகளை புலியொழிப்பின் பெயரில் நியாயப்படுத்துவது
அரசியலாகின்றது. இந்த கிரிமினல் அரசியலை `கிழக்கில் உதித்த ஜனநாயக
சூரியன்' என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தான் கிழக்கில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை என்கின்றார். இதை சொல்லும் அரசியல் அருகதை, பேரினவாத அரசுக்காகவும் அரச கூலிக் கும்பலுக்காகவும்
மாரடிக்கும் ஒருவருக்கு என்றுமே கிடையாது.கடத்தல், கற்பழிப்பு, கப்பம், கொள்ளையை புலிகள் மட்டும் செய்வதாக கூறும் இந்த கிழக்கு பாசிஸ்ட்டுகள் ஆசிய மனித உரிமை அமைப்பு வெளியிட்ட செய்தியை மறுப்பது இயல்பானது. இது தொலைபேசி மூலம் தீர விசாரித்து கண்டறிந்த ஒரு உண்மையாம்!
கிழக்கில் அருகில் இருக்கின்ற வீட்டில் என்ன நடக்கின்றது என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத மனித அவலம் அங்கு உண்டு. சொந்தவீட்டில் கூட சுதந்திரமாக கதைக்க பயப்படுகின்ற குடும்ப சூழல். இப்படி நிலைமை
இருக்க, தொலைபேசி மூலம் விசாரித்து மறுக்கின்ற பாசிச நாடகங்கள்.
சரி இவர்கள் ஏன் மறுக்கின்றனர்? இதில் என்ன சமுதாய அக்கறை உண்டு?
இவர்கள் விசாரித்தவர்கள் எல்லாம் யார்? இவர்கள் முன்னணி பின்னணி அரசியல் என்ன? இவர்கள் வேறு எப்போது எல்லாம்,மக்களுக்காக குரல் கொடுத்தனர்? இப்படித்தான் இருக்கின்றது விசாரணைகளும் உண்மைகளும். இங்கு மனிதஅவலத்தை பேசுகின்ற அரசியல் நடத்தைகள் எங்கே உள்ளது. ஏதோ உண்மைக்காக குத்தி முனகும் இவர்கள், மக்களுக்காக என்ன அரசியலை வைக்கின்றனர்! எதைக்கோருகின்றனர்? எல்லாம் கடைந்தெடுத்த
புலுடாப் பேர்வழிகள்.`கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்' என்று
எழுதும் ராஜேஸ்வரி, அந்த பூமியில் நடந்த நடைபெறுகின்ற குற்றங்களை நீங்கள் விசாரித்தவர்கள் எப்போது எங்கே நீதியின் முன் கொண்டு வந்தனர்.?
"அப்படியான வன்முறைகள் நடந்தால் அந்த நிகழ்ச்சிகளை முன்னெடுத்து, அந்தக் கொடுமைகளைச் செய்தவர்களுக்குத் தண்டனையும், அப்படியான அநீதிகள் இனியும் நடக்காமல் அப்பகுதிக் கிராமத்து மக்களுக்
குப் பாதுகாப்பும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், பாலியற் கொடுமை செய்த`அதிரடிக்கூட்டத்தினர்' கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக பங்குனிமாத முற்பகுதியில் வேறு இடம் மாற்றப்பட்டார்கள்.'' என்கிறார் ராஜேஸ்வரி.
நகைப்புக்குரிய இந்தக் கண்டுபிடிப்பால் யாரை ஏமாற்றுகின்றீர்கள்? கிரிமினல் அரசியல்வாதியை `கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்' என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கிழக்கில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை என்று
முழுப் பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கின்றார்.
சரி புனைவுக்கு நீங்கள் வழங்கிய தண்டனை இடமாற்றம். இதுவே குற்றம் இளைத்தவனை தண்டித்ததாக கூறுகின்ற துணிச்சல், பாசிசவகைப்பட்டது. அந்த குற்றவாளிகள் எங்கே?
வடக்கு பெண்களை கற்பழிக்க, கிழக்கு பாசிஸ்ட்டுகளாகிய நீங்கள் தண்டித்து
அனுப்பிவைத்தீர்களோ! குற்றத்தின் மூலத்தை, அதன் அரசியல் அடிப்
படையை பாதுகாக்க விரும்புகின்ற கிழக்குபாசிச எடுபிடித்தனம் தான் இவை.
கிழக்கில் ஒவ்வொரு இளம் பெண்ணும் அச்சம், பீதிக்குள்ளாகி உளவியல் சிக்கலுக்குள் சிதைகின்றனர். தாய் தந்தைமார் தமது குழந்தையின் `கற்பை' இட்டு தவிக்கின்றனர். படைத் தேவைக்கு குழந்தைகளை கடத்துவது என்பதுக்கு அப்பால், பாலியல் தேவைக்கு பெண் குழந்தைகளை கடத்துவது கிழக்கில் புதிய அத்தியாயம். இது கணிசமாகவவுனியாவிலும் உள்ளது.கிழக்கு பாசிஸ்ட்டுகள் தமது கட்டுரையில்`பங்குனி மாத நடுப் பகுதிவரை அம்பாறைப் பகுதியில் சில ஏழைத்தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரின் அதிரடிப்படையால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகப் பல வதந்திகள் வந்தன.' என்கின்றார்கள்.
இதே கட்டுரை தான் இந்தக் குற்றத்துக்காக சிலர் இடமாற்றம் செய்யப்பட்டதாக
கூறுகின்றது. எப்படிப்பட்ட மோசடி. இதையும் `வதந்தி' என்பதும், ஆசியா மனிதவுரிமைஅமைப்பின் செய்தியை பொய் என்பதும் இப்படித் தான்.
இந்த பாசிஸ்ட் இதே கட்டுரையில் `அப்படியானவிடயங்களைத் தாங்களும் கேள்விப் படுவதாகவும் ஆனால் தங்களுக்குத் தெரிந்த பகுதிகளில் உள்ள பகுதிகளில் ஏதும் நடந்ததாகவோ நடப்பதாகவோத் தெரியாது என்
றார்கள்' இப்படி எழுதும் இவரின் சுத்துமாத்து,இதே சமூகநலன் விரும்பிகளுக்கும் ஆசியமனிதவுரிமை சங்கம் வெளியிட்ட விடயம்
தெரியாது இருப்பதை தனக்கு ஆதாரமாகவைக்கின்றார்.
அம்பாறை சம்பவத்தை தண்டித்ததாக புனைந்து எழுதும் இவர் அவை நடக்கவில்லை என்பது இவரின் `சமுகநலவாதிகள்'முடிவாகும்.
இதையே தான் ஆசிய மனித உரிமை அமைப்பு வெளியிட்ட சம்பவத்திலும் அவர்கள் கூறுகின்றனர். இங்கு `சமுக நலவாதிகள்' என்பது புனைவு தான். கட்டுரைக்கு வலுச்சேர்க்க சேர்த்துக்கொண்ட மற்றொரு ஊறுகாய் துண்டு தான்.
இப்படி புனைந்து புலம்பிய நீங்கள் `ஊரிலிருந்து சரியான விடயங்களை அறிய
முடியாததால்' என்று கூறிப் புலம்பும் அதே நேரம், பொலிசாரின் வாக்குமூலத்தில் சரணடைகின்றாய் ஏன்? இவை எல்லாம் எதற்காக?
கிழக்கில் அரசியல் ரீதியான பாலியல்வன்முறை நடைபெறுவதில்லை என்று நிறுவும் முயற்சி தான். `கிழக்கில் உதித்தது ஜனநாயக சூரியன்' தான் என்று மீண்டும் மீண்டும்சொல்லத் தான். இந்த பாசிசத்தை நியாயப்
படுத்துவதை விட வேறு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது.
பி.இராயகரன்
(தமிழ் அரங்கத்தில்)

Sunday, June 22, 2008
கிழக்கின் ஒற்றுமையிற்தான் கிழக்கின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.....21.06.08
தேர்தலில் வெற்றி பெறுவதைவிடத் தேர்தலிற் பெற்ற வெற்றிக்கு, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட்டு, முன்னேற்றத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுதான் மிக முக்கியம். அந்த வளர்ச்சிக்குப் படித்தவர்களின் பங்கு கணிசமாகவுள்ளது. 1987ல் 13வது சரத்தின்படி வடகிழக்கு இணைக்கப்பட்டு திரு வரதராஜப்பெருமாள் அவர்கள் முதன் மந்திரியாய் வந்தபோது, அவரையும் எதிர்த்து, 13வது சரத்தின் அடிப்படையிலமைந்த அரசியல் அமைப்பையும் தகர்த்து எறிந்தார்கள். இன்று, பழையபடி 13வது சரத்தின் அடிப்படையில் ஒரு பிரதேச அரசியல் அமைப்பு கிழக்கில் உண்டாகியிருக்கிறது. அந்த அமைப்பு வெற்றி பெறப் பல்லின வல்லுனர்களின் உதவியும் தேவை. ஆங்கிலம் படிக்காதவர்கள் பதவிக்கு வந்ததாகக்கிண்டல் பண்ணுதலோ, அரசியல் முன்னேற்றத் திட்டங்களுக்கு இடையூறுகள் கொடுப்பதோ ஜனநாயகச் செயல்களல்ல. மக்களால், மக்களுக்கு, மக்களே தேர்ந்தெடுத்த அரசியல் அமைப்பு வெற்றிபெற உதவுவது அரச உத்தியோகத்தர்களின் கடமையாகும். அதேபோல, பல்லினங்கள் வாழும் கிழக்கில் வரும் மோதல்களைக்கவனமாகக் கையாண்டு ஒரு சுமுக நிலையைக் கொண்டுவருவதும் சமூகத் தலைவர்களின் அரியபணியாகும். மக்கள் தொண்டு மகாவலிமையுடையது. பிரிவினைகளுக்குள் ஒற்றுமை காண்பது மனித மேம்பாட்டுக்கு இன்றியமையாத விடயமாகும்.
இன்றைக்குப்பல ஆண்டுகளுக்கு முன், தமிழ் இளைஞர்கள், எங்கள் சமூகத்தின் விடுதலைக்குப்போராட வீறிட்டெழுந்தபோது, ''இவர்கள் என்ன செய்து முடிக்கப்போகிறார்கள்? சிறுபிள்¨ளை வேளாண்மை செய்யப்போன கதையாகத்தான் முடியப்போகிறது. விளைச்சல் ஒருநாளும் கிடைக்காது''என்று மிகப்படித்த தமிழ் சமுதாயம் கிண்டல் செய்தது. எத்தனையோ துயரை எங்கள் இனம் அனுபவித்தது. அதிலும் கிழக்கு மக்கள் பட்டதுயர் எழுத்தில் அடங்காது. அவர்களால் படகில் ஏறி இந்தியாவுக்கும் ஓடமுடியாது. வெளிநாட்டுக்கு ஓட உதவி செய்வார் யாருமில்லை. அவர்கள் பல இயக்கங்களிற் சேர்ந்தார்கள். வடக்கின் தலை¨மைக்குத் தலைவணங்கித் தங்கள் ஊரைவிட்டு, உறவினரைப்பிரிந்து பல்லிடங்களில் இராணுவத்துடன் போராடினார்கள். பல வெற்றிகளை வாங்கிக் கொடுத்தார்கள். யாருடைய விடுதைக்குத் தங்கள் உயிர்களைத்தியாகம் செய்தார்களோ, அதே விடுதலையைக்காரணம் காட்டிக் கிழக்கு மக்கள் நூற்றுக்கணக்காகக் கொல்லப்பட்டார்கள். ஆரியகுளம் சந்தியில் டெலோ என்ற இயக்கத்தில் சேர்ந்த குற்றத்துக்காக,அன்று கொல்லப்பட்ட கிழக்கு இளைஞர்களின் இரத்தக்கறை இன்னும் படிந்திருக்கிறது. ஒருகாலத்தில் செய்யப்பட்ட கந்தன் கருணைக்கொலைகளின் (இபிர் எல் எfவில் சேர்ந்திருந்த கிழக்கின் குழந்தைகள்) கதறல்கள் இன்றும் எங்கேயோ ஒலித்துக்கொண்டிருக்கிறது. கருணா தலைமையில் கிழக்குப் போராளிகளிற் பலர் பிரிந்தபோது, பிரிந்து வந்த நூற்றுக்கணக்கான இளம்போராளிகளை,வெருகலாற்று மணற்படுக்கையில் கொடூரமாகக்கொன்று குவித்தார்கள்.1991ம் ஆண்டு, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய அன்றிரவு, கிழக்கைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இரவோடிவாகக் கொல்லப்பட்டார்கள். 2006ம் ஆண்டு, மூதுரிலிருந்து ஓடிவந்த தமிழ்பேசும் மக்களுக்குள். முஸ்லிம் மக்களை இனம் கண்டு, முஸ்லிம் இளைஞர்களைக்கடத்தியும் கொலையும் செய்தழித்தார்கள்.
இப்படிப்பல கொடுமைகளைக் கிழக்கு மக்களுக்குச் செய்தவர்கள் இன்று, ஒரு சில முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டு 'கிழக்கில் முஸ்லிம் அலகு' எடுத்துதருவதாக ஆசை காட்டிக் கிழக்கு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கிறார்கள். தமிழர் விடுதலைப்போராட்டத்தில் இதுவரை (1974-2008) கிட்டத்தட்ட 100.000 மக்கள் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் 21051இளைஞர்கள்-இளைஞிகள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான போராளிகள் பலவந்தமாகக் கடத்தப்பட்ட தமிழ் ஏழைகள். இவர்களின் இழப்பால் என்ன பயன் யாருக்கு வந்தது?
முஸ்லிம் மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். கிழக்கில் முஸ்லிம் அலகு கேட்டுப் ''பிரிவுப்'' பிரச்சினையைத் தூண்டி விட்டால் அதில் அழியப்போவது யார்? தமிழ் மக்களுக்குத் 'தமிழ் ஈழம் ' என்ற கோரிக்கையை முன்வைத்துவிட்டு ஆங்கிலம் பேசும் தமிழ்தலைமை ஊரை விட்டோடியது. அப்பாவி ஏழைகள் அழிந்தார்கள். முஸ்லிம் பிரச்சினையைத் தூண்டிவிட்டால் அதில் முகம் கொடுத்து அழியப் போவது யார்? இலங்கையில் ஆயுதம் தூக்கிய யாரும் இதுவரையும் எந்தவித முன்னேற்றமும் காணவில்லை.
1971ம் ஆண்டு, ஜேவிபி யின் ஆயுதப்புரட்சி வந்தபோது, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா, இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியின் உதவியுடன் கிட்டத்தட்ட 30.000 சிங்கள இளம் தலைமுறையினரை மூன்று மாதத்தில் கொன்று குவித்தனர். கிராமம் கிராமமாக அழித்துக்கொட்டினர். நூற்றுக்கணக்கான சிங்கள இளம் பெண்கள் பாலியற் கொடுமைக்காளானார்கள். 1989ல், இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்தை எதிர்த்த ஜேவிபியை திரும்பவும் அழித்தார்கள். புலிகளின் உதவியுடன் பிரேமதாசா கிட்டத்தட்ட 60.000 சிங்கள இளம் தலைமுறையை வேட்டையாடினார்கள். தற்போது, இலங்கை இராணுவம், தனக்கு எதிராக, ஆயுதம் தூக்குபவர்களுக்குப் பாடம் படிப்பிக்க உலக மட்டத்தின் பல பயிற்சிகளைப்பெற்றிருக்கிறது. இந்த சக்திகளுக்கு முன்னால், இன,சமய உணர்ச்சி வசப்படுத்தி இளைஞர்களை அழிவுப்பாதைக்கு அனுப்புவது தர்மமல்ல.
இலங்கையில் இதுவரை எத்தனையோ விடுதைப்போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஜே.வி.பியினரின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து இன்று அவர்கள் ஜனநாயகவாதிகளாக, அரசியலின் முக்கியசக்திகளாக இருக்கிறார்கள். ஈபிடிபியினர் இன்று வடக்கின் ஆளுமையைக்கையில் வத்திருக்கிறார்கள். அதேபோல், ஒருகாலத்தில், விடுதலைப்புலிகளும் ஜனநாயவழிக்கு வரலாம். உலகம் பரந்திருக்கும் அவர்களின் பொருளாதாரச் செல்வத்தால் தமிழ்ப்பகுதியைப் பத்துமடங்கு பெரிதான சிங்கபூராக மாற்றிக்காட்டலாம். அந்தநாள் விரைவில் வரும். அதற்கு முன், இன்று கிழக்கில் ஜனநாய முறையில் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களுக்கு பல முன்னேற்றங்களைக்கொண்டுவரும் பிரதேச அரசாமைப்புக்கு இடர் கொடுக்காமல் இருப்பது கிழக்கின் ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்குச் செய்யும் பணியாகவிருக்கும்.
கடந்த சிலநாட்களாகப் புலிகளின் தாக்குதலில், கல்முனைப்பகுதியில் இரு போலிசார் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.19.06.08, காலை 8,45 மணியளவில், சமாந்துறைப்பொலிஸ் ஸ்டேசனிலிருந்து கல்முனைக்கோர்ட்டுக்கு மோட்டர் சைக்கிள் வந்து கொண்டிருந்த (ஆயுதம் தாங்காத) இரு சாதாரண போலிஸ்காரர்கள் புலிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். இச்சம்பவம் கல்முனைக்கும் சாய்ந்தமருதுவுக்கும் இடையிலுள்ள தமிழ்ப் பகுதியில் நடந்திருக்கிறது. காரைதீவைச்சேர்ந்த ஒரு தமிழ் போலிசாரும் சம்பாந்துறையைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் போலிசாரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்கு வந்த, கிழக்குப் போலிஸ் மாஅதிபர் திரு லியனகே, விசாரணைக்கு வந்தபோது அங்கிருந்த மக்கள் ஒருதகவலும் சொல்ல முடியாத பயத்துடன் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய கிழக்கின் நிலை. இந்த, அபாய நிலை நீடித்தால், சமுதாய முன்னேற்றங்களை முன்னெடுப்பது சிரமமாயிருக்கும்.
நீண்ட போர் நடந்த பிரதேசத்தில் ஒரு சில மாதங்களுக்குள் சுமுக நிலை வரும் என்று எதிர்பார்ப்பது யாதார்த்தமல்ல, ஆனாலும், தங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை.
அண்மையில், இத்தாலி நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கனடாவில் அவர்களின் ஸ்தாபனம் ஒன்று கனடிய அரசால் மூடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் புலிகள், பழையபடி, தங்கள் படை பலத்திற்கு ஆள் சேர்க்கக் கிழக்கைக்குறி வைத்திருக்கிறார்கள். கிழக்கின் முன்னேற்றத்தில் அக்கறையற்ற சில காட்டிக்கொடுக்கும் ஒற்றுப்படை பழையபடி கிழக்கில் உள்ள பெண்களை விதவைகளாக்குவதிலும், குழந்தைகளைக்கொலைக்கு அனுப்புவதிலும் மக்களைப்பீதியில் வைத்திருக்கவும் முயற்சிக்கிறார்கள்.
போரின் கொடுமையால் துன்பப்பட்ட கிழக்கு மக்கள் வாழ்க்கையின் பொருளாதாரம், கல்வி, தொழில் வாய்ப்புக்கள் விருத்தி செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் , திரும்பவும் கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைவரும். கடந்த காலங்களில் போராட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட சிறுவர்கள், சுதந்திர, சிந்தனை, தமிழ் ஈழம், விடுதலைப் போராட்டம் என்பது போன்ற பாரிய பரிமாணங்களைப் புரிந்து கொண்டவர்கள் அல்லர். கிழக்கின் வறுமை மிகக்கொடியது. போர் தொடர்ந்த காலகட்டத்தில்,நிலத்தை நம்பி வாழந்த மக்கள், போரின் உக்கிரத்தால் விவசாயம் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்களில் இராணுவ முகாம்கள் போடப்பட்டன. கண்னி வெடிகள் புதைக்கப்பட்டன, பாதுகாப்பு உயர்வலையங்களாக்ப் பிரகடனப்படுத்தப்பட்டன.
விவசாயத்தை நம்பி வாழும் ஏழைச் சிறுவர்களும். மாணவர்களும் பலவந்தமாகக் கடத்தப்படார்கள். அந்தக் கொடுமைகள் தணிந்து கொண்டு வந்தாலும், எப்படியும் இனக்கலவரத்தை உண்டாக்கவும், சாதாண மக்களின் வாழ்க்கையை அல்லோலகல்லோல நிலைக்குள் தள்ளவும் , கிழக்கிலங்கைத் தேர்தலில் தோல்விகண்ட சிலர் முயற்சித்துக்கொண்டேயிருப்பார்கள். இவர்கள், 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாடம்' என்று நினைப்பவர்கள். எரியும் வீட்டில் எதையும் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள்.
இந்த நிலையை மக்கள்தான் மாற்றமுடியும்.
கிழக்கில் நடந்த தேர்தலும் மக்கள் கொடுத்த வாக்குகளும் ஒரு சரித்திர மாற்றத்தைக் கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுக்கவும் கொண்டுவரக் கூடியவிடயமாகும். ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, அது இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு என்பதைக்கிழக்கு மக்கள் கட்டாயம் உணரவேண்டும். முவ்வின மக்களும் வாழும் பகுதியில் ஒருசாரார், பலமுள்ளவர்களாகவும் அடுத்தவர்கள் அடக்கப்படவேண்டியவர்கள் என்று நினைப்பதும் தார்மீகமல்ல.
சுனாமியில் அழிவு வந்தபோது பொங்கிய கடலுக்கு சாதி ,மத, இனவேறுபாடு தெரியவில்லை. எல்லோரையும்தான் அள்ளிக்கொண்டுபோனது. அந்தத் துயரில் அல்லற்பட்ட கிழக்குக்கு உணவு கொண்டோடி வந்தபோது உணவுகொண்டுவந்தவர்கள் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு பார்த்துவரவில்லை. மனிதநேயம் முன்னின்றது. மக்களின் அன்பு வெளிப்பட்டது. அடுத்தவனுக்கு உணவில்லை என்றால் இந்த அகிலத்தை அழித்து விடுவோம் என்று முழங்கிய பாரதி மாதிரி, சுனாமியில் துவண்டுபோன சகோதர்களுக்குப் பாணும் சம்பலும் கொண்டுவந்தவர்கள் அம்பாரைச் சிங்களச்சகோதரிகள், மீன்குழம்பும் சோறும் பார்சலாக்கட்டிக்கொண்டு ஓடி வந்தவர்கள் சம்பாந்துறை முஸ்லிம் சகோதரிகள். அயல் நாட்டுக்காசு யுதம் வாங்கக்கொடுபடுகிறது. உள்நாட்டன்பு ஒரு நேரச்சோறு போடுகிறது. சுனாமி வந்து ஒரு சில நாட்களின் பின் ஊருக்குப்போயிருந்தேன். அப்போது. சுனாமியில் இறந்த பிணங்கள், அழுகி நாற்றமெடுத்தபோது , அவற்றை அப்புறப்படுத்திகொண்டிருந்தவர்கள் முஸ்லிம், தமிழ். சிங்கள இளஞர்கள். இறந்த பிணங்கள் கடல் உப்பு நீரில் ஊதிப்போய் அடையாளம் தெரியாத பிணக்குவியல்களாகக் கிடந்தன. காரைதீவு, கோமாரி, சாய்ந்தமருது, திருக்கோவில் போன்றபகுதிகள் பிணக்காடாயிருந்தது. அங்கே, பிணவாடை தாங்காது, முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு பிணங்களை அகற்றிக்கொண்டிருந்தவர்கள் முவ்வினங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.
சுனாமி அகதிகளின் முகாம்களுக்குப்போனபோது அங்கு அகதிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள் அப்பகுதி இராணுவவீரர்கள். அப்போது, அகதி முகாம்களில் தங்கள் குடும்பத்தை இழந்த துயரில் பலர் துவண்டுபோய்க்கிடந்தார்கள். சிலர் , அழுவதற்கும் திராணியற்று வெற்றுப்பார்வைகளுடன் வெறித்துப்பர்த்துக்கொண்டிருந்தார்கள். உலகில் என்ன நடந்தாலும் உயிருடன் இருப்போர்களுக்கு உணவு தயாரிக்கச் சிலர் பாடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள் அதிரடிப்படை வீரர்கள். தமிழர்களுக்கும் அவர்களுக்கும் மொழித் தடையிருந்தது, ஆனாலும் பார்வைகளில் அன்பு, பணிவிடைகளில் மனிதாபிமானம் பிரதிபலித்தது. அன்புக்கு மொழி தேவையில்லை. வாய்மொழியை விட, செய்வழிகள் சிறந்தவை. பெரிய பானைகளில் அன்னம் பொங்கிக்கொண்டிருந்தது. அடுப்புக்கு விறகு போட்டுக்கொண்டிருந்த, ஒரு இராணுவ இளைஞன் தன் குடும்பத்துக்கு உதவுவதுபோல் உதவிக்கொண்டிருந்தான். ''இவர்களின் உயிரைக்காப்பாற்றி இவ்வளவு அன்புடன் வேலை செய்கிறீர்களே, ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு எதிராக உங்கள் ஆயுதங்களைத் திருப்ப நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டபோது, ''நாங்கள் உத்தரவுக்குப்பணியும் உத்தியோகத்தில் இருப்பவர்கள்'' என்ற மறுமொழி வந்தது.
மக்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் திரும்பாமல் இருப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. தங்கள் சமூகத்தை யார் வந்து பிழவு செய்ய முனைந்தாலும் நாட்டுப்பற்றுள்ள மக்கள் திடமான ஒற்றுமையுடன் நின்று மக்களின் உயிர்களைப்பாதுகாக்க வேண்டும். போருக்குப்பணம் கொடுத்து , தாங்கள் பிறந்தநாட்டைப் பிணக் காடாகப்பண்ணுவது அறிவல்ல, படித்தவர்களின் வேலையல்ல. பண்புள்ளவர்களின் செயலல்ல.
எனது இரு மைத்துனிகளின் உயிரையும் (திருக்கோவில், கோமாரிப்பகுதிகள்) காப்பாற்றியவர்கள் சிங்கள இராணுவத்தினர். ஒரு மைத்துனியைக்காப்பாற்றிய இராணுவ அதிகாரி தன்னுயிரைச் சுனாமியில் இழந்து விட்டார். இப்படி, மரணத்தில் ஒன்றுபட்டவர்கள் எங்கள் மக்கள்.
புலம் பெயர்ந்த தமிழருக்கு ஒரு வேண்டுகோள்:
கிழக்கு மக்கள் பலர் எத்தப்படித்தவர்கள் அல்லர் அவர்களால் வெளிநாட்டுக்கு ஓடும் வசதியும் கிடையாது. நிம்மதியான வாழ்வுக்கும் வளத்துக்கும் தேர்தலில் வாக்குப்போட்டு ஒரு ஜனநாயவழியில் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கத் துடிக்கிறார்கள். மிகவும் வறுமையான மக்கள், வாழத் துடிக்கிறார்கள். ஏழ்மையில் போராளிகளானவர்கள், இன்று தங்கள் எதிர்காலத்தைத் தங்களால் முடிந்தவரை நிம்மதியாக வைக்க ஏங்குகிறார்கள். இலங்கையிற் தொடரும் போருக்குப் பணம் கொடுக்கும் புலம் பெயர்ந்த, படித்த, பெரிய மக்களை, இந்த ஏழைகளின் சார்பில் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், '' இவர்களும் உங்களைப்போல் தமிழ் மொழி பேசுபவர்கள், பணத்தால், பிரதேசத்தால் ஒன்று படாவிட்டாலும் ஒரு அழகிய மொழியின் தொடர்பால் ஒன்று பட்டவர்கள். ''இவர்கள் பட்ட துயர் போதும், தயவு செய்து வாழவிடுங்கள், இவர்களுக்குகாகக் குரல் கொடுக்க அகில உலகம் பரந்த பிரச்சார ஊடகங்கள் இல்லை. இவர்கள்தான் மிகக்கூடிய தொகை மாவீரகளைப்படைத்தவர்கள். ஆனால் இன்று அவர்களின் பெயர்கள் கூடப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை. அது போகட்டும், இன்று இருப்பவர்களை வாழவிடுங்கள். தொடரும் போரை நிறுத்துங்கள். இன்னும் இருபதல்ல எத்தனை வருடங்கள் உயிர்ப்பலி கொடுத்தாலும் ஈழம் கிடைக்காது. நாங்கள் வெளிநாடுகளில் வசதியாகவாழ்கிறோம், இவர்களோ ஒரு கஞ்சிக்கு ஏங்குபவர்கள். போராடி அலுத்துவிட்டவர்கள். அழிந்ததுபோதும் என்று வாக்குப்போடுத் தங்களுக்கு ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அது அவர்களின் முடிவு. அவர்கள் தெரிவு செய்தவர்களை உங்களுக்குப்பிடிக்காமல் இருக்கலாம். பானையில் இருந்தாற்தான் அகப்பையில் வரும், படியில் அழும்போது பாயாசம்தான் தேவை என்று அடம் பிடிப்பது முட்டாள்த்தனம். ஜனநாயக வழியில் ஒரு அமைப்பு வந்திருக்கிறது, பழிவாங்கும் நினைவுகளை நீக்கிவிட்டு இந்த ஏழைகளைத் தயவி செய்து வாழவிடுங்கள்.
''ஈழம் கிடைப்பது என்பது, கிழக்கில் தங்கியிருக்கவில்லை. உங்கள் சிந்தனைகளை நல்ல வழியில் திருப்புங்கள். கிழக்கு மக்களுப்பல கல்லூரிகள் கிடையாது, ஒரு சில பாடசாலைகள் உண்டு. உங்கள் குழந்தைகள் புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்படிப்புப்படிக்கும் போது இக்குழந்தைகள் சாதாரண ஓ' லெவல் படித்து ஏதோ ஒரு வேலையிற் தொக்கிக்கொள்ள வழி விடுங்கள். புலம் பெயர்ந்த நாடுகளி¢ல் இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் கொண்டாட்டம் வைக்கக் கோடி பணம் செலவழித்துக் குதுகலிக்கிறீர்கள். கிழக்கு மக்களி¢ற் பெரும்பாலோர், ஒரு நேர உணவுக்குப் போராடி கும்மிருட்டில் தவிக்கிறார்கள். இவர்களும் தமிழ் பேசுகிறார்கள் என்ற குற்றத்திற்காக இவர்களி¢ன் பிரதேசத்தில் உங்கள் யுதங்களைப் பாவிப்பது தார்மீகமா? புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அத்தனை மனித உரிமை வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, அதேவழியில் ஜனநாயகப் பாதையில் வாக்களித்த, உங்கள் மொழி பேசும் மக்களைக்காட்டு மிராண்டிகளாக நடத்துவது என்ன விதமான தர்மம்? வேலைக்குப்போகும் போலிசாரைக்கொலை செய்வதால் ஈழம் கிடைத்து விடுமா''.
கிழக்கு மக்களுக்கு:
கிழக்கு மக்கள், இன்று நடக்கும் யதார்த்த நிலையைப்புரிந்து கொள்ள வேண்டும். முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை அவர்கள்தான் முன்னின்று நடத்தவேண்டும். மிக முக்கியமானது இன ஒற்றுமை. மசூதியும், விகாரையும், கோவிலும் ஒரே குரலில் சமாதானம் இன ஒற்றுமை பற்றிக் குரல் கொடுக்கவேண்டும் . விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் ஒன்றாகச் சேர்த்து விடப்பட்டிருக்கிறோம். உடைந்து போன, தொய்ந்துபோன சமுதாயத்தைத் தூக்கி விடுவது உங்கள் கையிற்தானுண்டு .இ¢வ்வளவு காலமும் யாரோ ஒருத்தரின் தலைமைக்குத் தலையாடியதுபோது. இனிவரும் எதிர்காலத்தை நீங்களே நிர்ணயிங்கள். விதவைகளுக்கு வாழும் வழிகள் கொடுக்கத் தொழில் வசதிகள் செய்து கொடுபடவேண்டும். இளமையிற் கல்வியைத் தொலைத்த இளைஞர்களுக்குத் தேவையான புனத்தாருணக் கல்விமுறை கொண்டுவரவேண்டும். மழுங்கிப்போய்க்கிடக்கும் தொழில் வசதிகள்(மாட்டுப்பண்னைகள்,சிறு கைத்தொழில்கள், சிறுவிவசாயம்) என்பன சீர்படுத்தப்படவேண்டும். போரின் உக்கிரத்தால் அகதிகளாய் ஓடிப்போன மக்கள் மீழ் குடியிருப்புக்கள் செய்யப்படவேண்டும். சட்டங்களும் பாதுகாப்பும் ஒவ்வொரு சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் இன்றியமையாதது, எனவே, புல்லுரிவிகள் களையெடுக்கப்படவேண்டும். ஊடுருவிகள் அடையாளம் காணப்படவேண்டும். ஒற்றுமையும் புரிந்துணரலும் மிக முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்களி¢ன் ஒத்துழைப்பு மிக முக்கியம். இன்று, வந்திருக்கும் புதிய ஜனநாயக சூழநிலையால், பல நாடுகளி¢ன் உதவியுடன் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம். அவற்றின் நிலை பற்றிக் கலந்தாலோசனைகள் நடத்தப்படவேண்டும். படிப்பு, கைத்தொழில்கள், புனத்தாருணவேலைகள் முன்னெடுத்தல் மிகவும் முக்கிய விடயங்களிற் சிலவாகும். இவற்றிற்கெல்லாம், ஒட்டு மொத்த தமிழினத்தின் ஆதரவு தேவை. நடந்தவை, துன்பகரமானவை, நடப்பது நல்லவையும் பிரயோசனமானவைகளாகவுமிருக்க நல்ல மனிதர்களின் உதவிதேவை. அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது.
இதுவரை நாங்கள் எங்கள் தமிழ்ப்பகுதிகளில் விதைத்தவை பல பிணங்கள், அதுவும் தமிழ்ப்பிணங்கள். தயவு செய்து அவற்றை இனியும் தொடரவேண்டாம். முல்லையும், மருதமும் நெய்தலும் எங்கள் வளம். நெல்லும், சோழமும், கனிகளும், பூக்களும் சோலைகளாகட்டும். நல்ல மனங்களின் அன்பு அவற்றிகுப் பசளைகளாகட்டும். நம்பிக்கையே வாழ்வு, நாளைக்கு நல்லது நடக்கும் என்று ஒரு அடி எடுத்து வைப்போம் அதன்பின் ''விடிவு, மலர்ச்சி, மறுவாழ்வு'' என்ற மலையேறி ஒரு வெற்றிக் கொடிநடலாம்.
தேணி இணையம்

Saturday, June 21, 2008
'ஊடகத்தை ஊனமாக்குவது அடக்குமுறையின் அகங்காரமா அல்லது ஜனநாயகமா?
ஆதிக்க பலம் இருந்தால் எதையும் செய்யலாம் என்று பழையகால மன்னர்கள் தங்களுக்கு விரும்பியதைச் செய்தார்கள். அது பற்றி மாற்றுக் கருத்துக் கேள்வி கேட்டவர்களைத் தேசத் துரோகிகள் என்று தூக்கில் இட்டார்கள். ஆங்கிலேயர் இந்தியாவைக் கொள்ளையடிக்கத் தன் ஆதிக்கத்தைப் பரப்பியபோது அதை எதிர்த்துக் கேள்வி கேட்ட கட்டபொம்மனைப் புளிய மரத்தில் தூக்கிலிட்டார்கள். அதேமாதிரி, இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில், அறிவுத்திறமையால், மக்களின் அங்கிகாரத்தால் அதிகாரத்துக்கு வராமல் ஆயுதத்தால் தங்களைத் தமிழ் மக்களின் ஏகபோகத் தலைவர்களாக உயர்த்திக்கொண்ட புலிகளும் தங்களுக்குப்பிடிக்காத விடயங்களைப் பேசியவர்களைப் பகிரங்கமாக விளக்குக் கம்பங்களிற் தூக்கிட்டார்கள். அவற்றையும், புலிகளாற் செய்யப்பட்ட எண்னிலங்கா பல கொலைகளையும் ( கந்தன் கருணைக்கொலைகள், டெலோ போராளிகளை நாற்சந்தியில் உயிருடன் கொழுத்தி நடத்திய கொலைகள்) எதிர்த்து எழுதப் பயப்பட்ட தமிழ்ச் சிந்தனையாளர்கள், வெளிநாடு வந்ததும், பல சிறு பத்திரிககைகளைத் தொடங்கினார்கள்.
மாற்றுக்கருத்துக்கொண்டோரின் படைப்புக்கள் மூலம்.புலிகளின் உண்மையுருவைச் சாதாரண மக்கள் படிக்கத் தொடங்கினார்கள். புலிகளுக்குப் பிடிக்காத கவிதை எழுதியதற்காக செல்வி கொலைசெய்யப்பட்டார். அதன் பின் ஒரு குறுகிய காலத்தில் ஆயிரமாயிமாயிரம் புலி எதிர்ப்புப் படைப்புக்கள் பல பத்திரிகைகளில் வரத் தொடங்கின.ஆரம்பகாலத்தில் கனடாவில் ''தாயகமும்,'' ஹொலாண்டில் ''அ, , இ'' பத்திரிகை போன்றவை செய்த 'மாற்றுக் கருத்துக்களுக்கான ஜனநாயக'' எழுத்துச்சேவை அளப்பரியது அதன்பின் பாரிசிலிருந்து ''அம்மா'' பத்திரிகை வரத் தொடங்கியது இப்படி ஏராளமான பத்திரிகைகள் வந்தன. புதிய சிந்தனைப் படைப்புக்கள் வெளிவர உதவி செய்தன. புலிகள் மட்டுமல்லாமல் மற்ற இயக்கங்களும் செய்த படுகொலைகளை எதிர்த்து நான் எழுதிய பல படைப்புக்கள் இந்தப்பத்திரிகைகளில் வெளிவந்தன.
அதன் பின் மாற்றுக் கருத்துள்ளவர்களைச் சாடவென்று புலிகளின் இணையத்தளங்கள் என்ற பெயரில் சிலர், தங்கள் மலவாயிலைத்திறந்து மாற்றுக் கருத்துள்ளவர்களைத் தனிப்பட்ட விதத்தில் தாக்கினார்கள். தாக்கப்பட்டவர்களில் ஜெயதேவன் குடும்பம், ராமராஜ், சிவலிங்கம் குடும்பம் என்று பல குடும்பங்கள் இந்தக் கேவலமான பத்திரிகைகளால் தீண்டாத வார்த்தைகள் திட்டித் தீர்க்கப்பட்டார்கள். கருத்தைக்கருத்தால் விவாதிக்க முடியாமல் காவாலித்தனமாக எழுதி எழுதுபவர்களை மட்டம் தட்டலாம் என்று நினைத்தார்கள்.
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் இன்று பலதரப்பட்ட, மனநோயாளிகள் தங்களுக்குப்பிடிக்காதவர்களைத்திட்டப்'' பத்திரிகைவாதிகள்'' என்ற முகமூடியிற் பவனி வருகிறார்கள். இவர்களுக்கு பத்திரிகா தர்மம் என்று ஒன்றிருப்பது தெரியாது. யாரையும் பற்றி எதையும் எழுதலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களைப்போற் சிலர் இப்போது, புனைபெயர்களில் மறைந்து நின்று பேடித்தனமாக, 'கருத்துக்கள்' என்ற போர்வையில் எழுத்தாளர்கள் பற்றிப்பல விதங்களில் உளறிக்கொட்டுகிறார்கள்.
மனிதன் எழுதத் தெரிந்த காலத்திலிருந்து தனது ஆக்கத்தின் மூலம் மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறான். தனக்குத் தெரிந்தவற்றை எழுத்தில் பதிது அதைச் சரித்திரமாகவும் படைத்திருக்கிறான். அவன் எழுதியதும் படைத்ததும், அந்தப்படைப்பைப் படிக்கும் ஒட்டு மொத்தமான சமுதாயத்தின் அங்கிகாரத்தைப் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், எழுத்துக்குச் சுதந்திரம் இருந்தது. அந்தச் சுதந்திரத்தைத் தவறுதலாகப்பயன் படுத்துவது தர்மமல்ல. பத்திகையாளன் சிலவேளைகலில் ஒரு சமுதாயத்தின் வைத்தியன் மாதிரி வேலை செய்கிறான். கேவலமான அரசியவாதிகள் சிலரால் தங்களுக்குப்பிடிக்காதவர்களுக்கெதிராக ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, சமுதாயப்பிளவுகள் உண்டாகும்போது, ஒரு உண்மையான பத்திரிகையாளன், தனது அறிவு, திறமை, கடமையுணர்வு, சமுதாயப்பொறுப்பு என்பவற்றை முன்வைத்து உண்மைகளைப் பாரபடசமின்றி எழுதுகிறான்.
கடந்த மாதம், கல்முனையில் இருதமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டார்கள் என்று , கிழக்கிலங்கைத் தேர்தலில் தோல்வி கண்டவர்களின் பத்திரிகை பிரசாரம் செய்தபோது, லண்டன் வாழ் சில மனித உரிமைவாதிகள் இந்தச் செய்தியின் உண்மையறியத் தங்களுக்குத் தெரிந்த இலங்கைப்பத்திரிகைவாதிகளை அணுகி விசாரணைகளை மேற்கொண்டார்கள். அதே நேரம் லண்டன் பத்திரிகையான ''தேசமும்'' தன்னாலான விசாரணையை முன்னெடுத்தது, உண்மையை வெளிக்கொண்டு வந்தது. யார் சொல்லும் பிரசாரத்தையும் நம்பாமல், தங்களது விசாரணைகள் மூலம் உண்மையைக்கொண்டு வருவதுதான் பத்திரிகா தர்மம்.
1970ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் என்பவர், தனது எதிரிகளின் விடயங்களை வேவு பார்க்க எப்படித் தன் அதிகாரத்தைத் துற் பிரயோகம் செய்தார் என்பதை அறியச் சில பத்திரிகையாளர்கள் முன்வந்தார்கள். அமெரிக்க அதிகாரத்தின் தூண்களான சி. ஐ. ஏயும் எத்தனையோ கடும் பயமுறுத்தல் நடவடிக்கைகள் எடுத்தும், பத்திரிகையாளர்களான கார்ல் பென்ஸரயன்,ஹரி றோசன்பீல்ட், ஹவார்ட் சிமோன்ஸ், பொப் வோட்வர்ட் என்பவர்கள் தயங்காமற் தங்கள் விசாரணைகளைச் செய்து உண்மைகளைக்கொண்டு வந்தார்கள். ஜனாதிபதி நிக்சனின் பதவி பறிபோனது. அதுபோலவே மேற்கு நாடுகளில் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் ''இரட்டைவாழ்க்கை'' பற்றிய நிகழ்ச்சிகளையும், மக்களூக்குத் துன்பம் தரும் சட்டங்களையும் எதிர்த்து எழுதுகிறார்கள்.
2005ம் ஆண்டு, பிரித்தானியப்போலிசார், ஜீன் சார்ல்ஸ் மென்சஸ் என்ற தென்னமெரிக்க மனிதனை, முஸ்லிம் தீவிரவாதி என்று சந்தேகித்து ஸ்டொக்வெல் பாதாள புகையிரத நிலையத்தில் சுட்டார்கள். அந்தக்கொலையை எதிர்த்துக்குரல் கொடுப்பவர்களிற் பலர் பிரிட்டிஷ் பத்திரிகையாளர்களே. இப்படிப்பல விடயங்களை மேற்கோள்காட்டி ஏன் பத்திரிகைகள் தங்கள் வேலையைச்சரியாகச் செய்யப்படுபடுகிறது, செய்யவேண்டும் என்று வாதாடலாம்.
அண்மையில் ஐரோப்பாவில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில். தங்களை ஜனநாயகவாதிகள் என்று சொல்லும் ஒரு கூட்டம் , லண்டனிலிருந்து வரும் ஒரு பத்திரிகை பற்றிக் காரசாரமான கருத்துக்களை வைத்ததாகச் சிலசெய்திகள் வெளிவந்தன.அத்துடன் ''யாரும் அந்தப்பத்திரிகையைப் படிக்கக்கூடாது'' என்றும் சொல்லப்பட்டதாத் தெரிகிறது. பழைய புலிகளின் புதிய அடக்குமுறையா இது? யார் எதை வாசிக்கவேண்டும் என்பது அவரவர்களின் விருப்பம். அதை அடக்குவது எந்த ஜனநாயக் கோட்பாட்டில் அடங்கும்? ''எனக்கு அந்தப்பத்திரிகையில் வரும் கருத்துப்பிடிக்கவில்லை, அதனால் நான் அந்தப்பத்திரிகையைப்படிப்பத்தில்லை'' என்பது கவுரவம். 'அந்தப்பத்திரிகையை யாரும் படிக்கக்கூடாது''என்பது அடக்கு முறை.
வெட்கப்படத் தெரியாதவர்கள்!
ஒரு பத்திரிகையாளன் தனது படைப்பு வெளிவந்ததும் அந்தப்படைப்புக்கு எப்படியான தாக்கம் இருக்கும் என்று யோசித்தே எழுதுவான். வார்த்தைகளை இங்கிதமாகப்பவிப்பான். ,இன்று, புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் பல தரப்பட்டோரின் கருத்துக்களைக் கொண்டுவர உதவுவது ஒரு சில பத்திரிகைகளே. எழுதுபவர்களும் சிலரே. பெரும்பாலான எழுத்தாளர்கள், புலிகளின் வசை வன்மொழிகளுக்குபயந்து மெளனமாகிவிட்டார்கள். இப்பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இன்று பல 'புனை பெயர்' வேடதாரிகளால் மிகவும் மோசமான விதத்தில் தாக்கப்படுகிறார்கள்.இந்தப்புனைபெயர் வேடதாரிகள் தங்களின் வெட்கமற்ற வார்த்தைகளாற் தாக்குகிறார்கள்.
''இனிய உளவாக இன்னாது கூறல், கனியிருக்கக் காய் கவர்ந்தற்கே'' என்றார் வள்ளுவர். இதன் கருத்து இவர்களுக்குப்புரியுமோ தெரியாது.
ஒரேவிடயத்தைப்பல தடவைகளிற் சொல்வதால் தாங்கள் சொல்வது நியாயப்படுத்தப்படும் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். முதுகிற் குத்தவும் , மாற்றுக்கருத்துள்ளோருக்கு ஏதோ ஒரு 'முத்திரை' குத்தவும் மிகவும் வேகமாகத் தங்கள் இணயத்தளத்தைப் பாவிக்கிறார்கள்.இப்படி எழுதுவதால் மற்றவர்களைக் கொலைக்குக் கொடுக்கத்தயங்கமாட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் அதிலும் மற்றவர்களைக்கூடத்தெரியும் என்ற மமதையுடன் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
பயப்படாமல் நேர்மையுடன் ஒரு விடயத்தைச்சொல்வது மதிக்கப்படவேண்டியது, ஆனால், மற்றவர்களைப் பயப்பட வைப்பதற்கு எழுதுவது மனித உரிமை மீறலான விடயமாகும். மிகவும் ஆற்றலுள்ள வீரன் என்றால் ஏன் மறைந்திருந்து எறியவேண்டும்? உண்மைப்பெயர்களுடன் வந்து தர்க்கம் செய்யலாம். நேரம் செலவளித்துத் தங்கள் கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள், தங்களைப்பற்றி புனை பெயர்களில் எழுதித் தாக்குபவர்கள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையுமில்லை.
இந்த 'ஜனநாயக வாதிகள்(!!)' வாதாடும் விடயம் குதர்க்கவாதமாக இருப்பது தர்மசங்கடமாகவிருக்கிறது.
உதாரணமாக, கொலைசெய்யப்பட்ட மஹேஸ்வரிக்கு ஒரு இரங்கள் கூட்டம் வைப்பதைத் தடுக்க பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள். அதாவது தங்களின் உத்தரவின்றி யாரும் எதையும் செய்யக்கூடாது, தங்களுக்குத் துதிபாடாத யாரும் பத்திகைகளில் எழுதக்கூடாது என்று நினைப்பதும் நடப்பதும் ஜனநாயகமா? புலிகள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கொலைசெய்தால் அது தமிழரின் விடுதலைப்போரில் தவிர்க்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. களையெடுக்கப்பட்டுவிட்டது என்று அவர்கள் பத்திரிகைகள் சொல்கின்றன.
அப்படியே இன்று 'புனை' பெயர்களில் எழுத்தாளர்களைக் கேவலமாகச்சாடி எழுதுபவர்களும் ஒரு காட்டுமிராண்டிக்கூட்டமே. முதுகெலும்பற்ற அறிஞர்கள் இவர்கள். இன்று, தங்கள் சொந்தப் பெயர்களில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்களால் முடிந்தவரை, தங்களுக்குத் தெரிந்த விடயத்தை, அதாவது ,ஒரு அரசியற் கட்டுரையோ அல்லது சினிமா விமர்சனமோ எவையாயிருந்தாலும் முடிந்தவரை பொதுமக்களுக்காகவே (தைரியத்துடன் )எழுதுகிறார்கள். அது பிடிக்காவிட்டால் கருத்துக்களை வைக்கலாம் னால் காறித் துப்பவேண்டாம். இது எப்படியிருக்கிறது என்றால், ஒரு கழுதைக்கு முன்னால் முத்தைக் குவித்து வைத்தாலும் அது தன் புத்தியைத்தான் காட்டும் அதாவது காலால் எட்டி உதைக்கும் என்பதைப்போலிருக்கிறது..
அத்துடன் இவர்களின் வார்த்தைகளுக்கும் புலிகளின் பத்திரிகைகளில் வரும் வசன நடைக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது, இங்கிதமற்ற ஆக்கங்களாகவிருக்கிறது. தங்களுக்குப்பிடிக்காத எதையும் யாரும் சொல்லக்கூடாது என்பது 1960ம் ஆண்டுகளிள் சீனாவில் நடந்த கலாச்சாரப்புரட்சியை ஞாபகப்படுத்துகிறது. அவர்களும் முதலாளித்துவ அடையாளங்களான பியானோ, வயலின், என்ற இசைக்கருவிகளை உடைத்தார்கள். டென்னிஸ் விளையாடக்கூடாது என்று தடை போட்டார்கள். இன்று மேற்கத்தியக்கலாச்சாரம் சீனாவில் தாராளமாக்கப்படுகிறது. கொகோகோலாவும் மக்டோனால்ட்ஸ்சும் கண்ட இடமெல்லாம் காட்சிதருகிறது.
தங்களுக்குப்பிடிக்காத மாதிரி உடை உடுப்போரைத் தலிபான்கள் தாக்கினார்கள். ஆபுகானிஸ்தானிலிருந்த பழமைச்சரித்திரமுள்ள புத்தர்சிலையை உடைத்தார்கள். ஐரோப்பாவில் ஒரு காலத்தில் தங்களின் சமயக்கருத்தைக் கேட்காத விஞ்ஞானிகளை எரித்துப்பொசுக்கினார்கள் கத்தோலிக்கர், இந்தியாவில் ஒரு காலத்தில் தங்கள் கருத்துக்களை எதிர்த்தவர்களைக்கழுவேற்றினார்கள் பிராமணர்கள், ஜேர்மனியில் தங்களைவிடக் குறந்தவர்கள் என்று யூதர்களைக் கொலைசெய்தான் ஹிட்லர். பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்டுவது, ஓரம் கட்டுவது என்பது பாசிசத்தின் ஒரு அம்சம். பாசிசத்தை எதிர்க்கத் தனி மனிதர்களால் முடியாது. ஒட்டுமொத்தமான ஒரு அமைப்பாற்தான் முடியும். ஜனநாயப்பாதையாற்தான் அதை அடையலாம். அதைத் தவிர்த்துவிட்டு, தனி மனித 'அழிப்புக்க்களைச்' செய்வதும் தங்களைப்போன்ற தனிமனிதர்களைத் தூக்கிவைக்கும் ஒரு சிறு கூட்டத்தைப் பெரிதாக நினைப்பதும் ஜனநாயக வழியல்ல.
வாதம் என்பது ஆரோக்கியமான விதத்தில் இருக்கவேண்டும். உருப்படியாக எதையும் முன்வைக்காமல், மாற்று அரசியல் முறை, மாற்று பொருளாதார விளக்கம், மாற்று விதமான சமுதாய வளர்ச்சிக்கான ஆலோசனைகள் என்பவற்றை முன்வைக்காமல். வாதம் செய்வதையே, எதிலும் பிழை பிடிப்பதையே பிழைப்பாகக்கொண்டால் சமுதாயத்திலிருந்து விரைவில் தூக்கியெறியப்படும் நிலை வரும்.
நீண்ட கால வன்முறைப் போரால் மிகவும் நொந்துபோன தமிழ்ச்சமுதாயத்துக்குத் தேவை, தன்னலமற்று, தங்களைவிடப் பணிந்த நிலையில் துன்பப்படும் மக்களுக்குத் தேவையான விடிவுக்கு வழி சொல்லும் நல்ல மனிதர்களே. குதர்க்கவாதிகளல்ல!
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Subscribe to:
Posts (Atom)