தென்பகுதியில் குண்டுவெடிப்புகள் தொடருமானால் சிங்கள மக்கள் மத்தியிலான ஆத்திரத்தினை எவராலும் தடுக்க முடியாது போகும். இதனால் வன்முறைகள் தலைதூக்கும் அபாயம் உள்ளது. எனவே, அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்னர் குண்டு வெடிப்புக்களை தடுப்பதற்கு பொதுமக்களை பாதுகாப்பதற்கான சர்வகட்சி மகா சபை அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
குண்டு வெடிப்புக்களை தடுப்பதற்கான சர்வகட்சி மகா சபை அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையினை அரசாங்கத்திடமும் சர்வகட்சிகளிடமும் முன்வைக்கவுள்ளோம். எமது யோசனைகளை ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க நாம் தயாராகவுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். கொள்ளுப்பிட்டி சீவியூவ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: தென்பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வெடித்து மக்கள் உயிரிழப்பார்களானால் சிங்கள மக்கள் ஆத்திரமடைந்து அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தும் நிலை உருவாகும். அதன்போது எவராலும் இதனை தடுத்த நிறுத்த முடியாது போகும்.
எனவே, அதற்கு முன்பு குண்டு வெடிப்புக்களை தடுத்து நிறுத்த மக்களை பாதுகாப்பதற்கான சர்வகட்சி மகாசபையை ஏற்படுத்த வேண்டும். அந்த யோசனையையே இன்று முன்வைக்கின்றோம்.
எமது யோசனைகள் ஜனாதிபதி மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மூன்று காரணங்களை முன்வைத்தே விடுதலைப் புலிகள் சிவில் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான அழுத்தத்தை கொடுக்கச் செய்வது, படையினரை தென்பகுதிக்கு கொண்டு வரவைப்பது, கலவரத்தினை ஏற்படுத்துவது ஆகியவை காரணங்களாகும்.
ஏ9 பாதைக்கு மாற்றுப்பாதையை தெரிவு செய்துள்ள படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் பின்னடைவையும் தோல்விகளையும் கண்டு வரும் விடுதலைப் புலிகள் தென்பகுதியில் குண்டுகளை வெடிக்க வைத்து சிவிலியன்களை கொலை செய்கின்றனர்.
இதன் மூலம் சிங்கள மக்களை ஆத்திரமடையச் செய்து அப்பாவித் தமிழ் மக்கள் மீதரன தாக்குதல்களை தூண்டி சர்வதேச தலையீடுகளை அதிகரிக்கச் செய்து படை நடவடிக்கைகளை தடுப்பதே நோக்கமாகும்.
இதில் ஒன்றேனும் வெற்றி பெறுமானால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடக்கப்படும். இதற்கு இடமளிக்க முடியாது. எனவே மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொய்யான அரசியல் தீர்வுக்காக சர்வகட்சி குழுவை தேசிய பாதுகாப்பையும், மக்களையும் பாதுகாப்பதற்காக சர்வகட்சி மகாசபையை அமைக்க ண்டுமென்ற யோசனையை ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் அனைத்து கட்சிகளிடமும் முன்வைக்கின்றோம். எமது யோசனைகள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
Showing posts with label JVP. Show all posts
Showing posts with label JVP. Show all posts
Tuesday, June 10, 2008
Sunday, June 8, 2008
ராஜபக்ஷவின் ஆட்சியிலிருப்பதைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழருக்கு சந்தோசமான வாழ்வு
மகிந்த ராஜபக்ஷவின் அரசின் கீழ் இருப்பதைவிட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாகவும் வசதியாகவும் வாழ்ந்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலுக்கான தடை தொடர்ந்தால் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு அதிகரிப்பதை எவராலும் தடுத்து விட முடியாதெனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜயந்த விஜேசேகர மேலும் கூறியதாவது;
திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள மீன் பிடித்தடையால் மூவினமக்களும் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். சிங்களவர்களுக்கு ஓரளவுக்கு அனுமதி வழங்கும் கடற்படை தமிழ் மக்களுக்கு அனுமதியை முற்றாக மறுப்பதால் அவர்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிங்களவர்களின் வீடுகளுக்கு வந்து தமிழ் மக்கள் அரிசி கேட்கின்றனர். மீன் கேட்கின்றனர். வறுமையின் கொடுமையால் அவர்கள் நகைகளை, வீட்டுத்தளபாடங்களை விற்கின்றனர். பலர் அனைத்தையும் விற்றுவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடுகின்றனர். அதிலும் பலர் நடுக்கடலில் உயிரிழக்கும் பரிதாபமும் ஏற்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் 24 மணிநேரமும் மீன் பிடிக்கலாம். மக்களின் கஷ்டங்கள் தீருமென்றெல்லாம் அந்த மக்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியிலிருப்பதைவிட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அந்த மக்கள் மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தார்கள்.
தேர்தலுக்கு முன்னர் அதிகாலை 2 மணிமுதல் மீன்பிடிக்க அனுமதி வழங்கிய அரசு, தேர்தல் முடிந்தவுடன் அந்த அனுமதியை ரத்துச் செய்தது ஏன்? கொழும்பிலிருந்த செல்லும் கட்டளைகளைத்தான் கடற்படையினர் நடைமுறைப்படுத்துகின்றனர்.
இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுகின்றது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது. கிழக்கில் உதயம் ஏற்பட்டு விட்டதாக அரசு கூறுகின்றது. ஆனால் மக்கள் பட்டினியால் வீடுகளை, வீட்டுத்தளபாடங்களை நகைகளை, சட்டி பானைகளை விற்று சாப்பிடும் நிலைக்கு வந்துள்ளனர். இதுதான் இந்த அரசின் கிழக்கின் உதயமா?
சம்பூரில் ஒருதமிழர் கூட இல்லை. அப்பகுதியை அரசு அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கியுள்ளது. அங்குள்ள தமிழர்கள் இன்று அகதியாக அலைகின்றனர். பாதுகாப்பு வலயம் தேவைதான். அதற்காக மக்களை விரட்ட முடியாது.
அரசின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் அங்குள்ள மக்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் ஆதரிப்பார்கள். இதணை எவருமே தடுத்துவிட முடியாது. எனவே இந்த மீன் பிடித்தடைதொடர்பில் அரசு உடனடி நடவடிக்கையெடுத்து வறுமையோடு போராடும் மக்களை காப்பாற்ற முன் வர வேண்டும்.

Subscribe to:
Posts (Atom)