ஒன்றுபட்ட சக்தியாக நாம் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம் என்று விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சி கோட்ட போர் எழுச்சிக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எமது விடுதலைப் போராட்டம் மக்களின் ஆதரவோடு முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற ஒரு போராட்டம். இதற்காக அளப்பெரிய ஈகங்களையும் அர்ப்பணிப்புகளையும் விடுதலைப் போராளிகளும் மக்களும் செய்துள்ளனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்க எத்தனையோ இலங்கைப் படைத்துறைத் தளபதிகள் காலக்கெடு விதித்திருந்தனர். அதே போன்றுதான் இன்று சரத் பொன்சேகாவும் காலக்கெடு விதித்துள்ளார். எமது விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் பக்கபலமாக இருக்கின்றனர். இது போன்ற போர் எழுச்சிக் குழுக்கள் கடந்த காலங்களில் ஈட்டப்பட்ட பாரிய வெற்றிகளுக்கு வழி சமைத்துக் கொடுத்தன.
இந்தப் போர் எழுச்சிக்குழுக்களானவை களமுனைகளில் பின் தளப்பணிகளை மேற்கொள்ளல் தொடக்கம் விழுப்புண்பட்ட போராளிகளை பராமரித்தல், பின் தளப்பணிகளுக்கு செல்கின்ற குடும்பங்களைப் பராமரிக்கின்ற பணி என விடுதலைக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுக்க தேசிய போர் எழுச்சிக் குழுக்களே பக்கபலமாக இருக்கும்.
Showing posts with label பா.நடேசன். Show all posts

Wednesday, August 6, 2008
Saturday, August 2, 2008
அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி!
தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி வருமாறு...
''இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?''
''முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசு, தனது ராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்-களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என இலங்கை அரசு எண்ணு-கிறது. அண்மைக் காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!''
''ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்-டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்தநிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?''
''இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்த-மானதாகும். எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசாரரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களுடைய ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.''
''தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று சர்வேயில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையதளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?''
''உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகு விரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.''
''இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?''
''விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழு மக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!''
''சர்வதேசச் சமூகம் உங்களையும் இலங்கை அரசையும் எப்படிப் பார்க்கிறது?''
''சர்வதேசச் சமூகம் இலங்கை அரசு பற்றி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. சர்வதேசச் சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!''
''இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?''
''இலங்கை அரசின் ராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்றுரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர். சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய யுத்த சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து-கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை விவ-காரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.''
நன்றி-ஆனந்த விகடன் (பதிப்பு-அன்பு)

Saturday, July 12, 2008
புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரின் புதிய கண்டுபிடிப்பு!!!
ஈழ விடுதலைப் போராட்டம் பலவீனமடைவது இந்தியாவின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்
தமிழ் மக்களின் சட்டபூர்வ உணர்வுகளையும் விடுதலைப் போராட்டத்தையும் இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று நம்புகின்றோம். ஈழவிடுதலைப் போரா ட்டம் பலவீனமடைவது இந்தியாவின் நலனுக்கு நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்தும்.இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பலமடைய வழிவகுக்கும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் தவறான கூட்டாளியைத் தேர்வு செய்துள்ளது.
இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விபரம் வருமாறு:
கேள்வி: தற்போது நடந்து வரும் போரை சந்திக்க என்ன வியூகம் வகுத்துள்ளீர்கள்?
பதில்: நாங்கள் எப்போதுமே கள நிலவரத்தை பொறுத்து பல்வேறு வியூகம் வகுக்கின்றார்கள். எங்கள் மக்களின் உதவியுடன் விடுதலைப் போராட்டத்தில் எந்த முட்டுக்கட்டையையும் கடக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த போரில் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவது தவறு.
கேள்வி: பிரபாகரனை விரைவில் உயிருடன் பிடிப்போம் என்று இராணுவம் அறிவித்துள்ளதே?
பதில்: எங்கள் தலைவர் அவரது பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.
போர் நிறுத்தத்துக்கு தயார்
கேள்வி: மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருக்கிறீர்களா?
பதில்: நாங்கள் போர் நிறுத்தத்துக்கோ சமரச பேச்சுவார்த்தைக்கோ எதிரானவர்கள் அல்ல. இலங்கை அரசுதான் 6 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்தது. தமிழர் தாயகத்திலேயே தமிழர்கள் மீது போர் தொடுத்து வருகிறது.
பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம்.
பிரியங்கா சந்திப்பு
கேள்வி: வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா சந்தித்துள்ளாரே?
பதில்: அது ஒரு மனிதாபிமான செயல்.
கேள்வி: நளினி தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளாரே?
பதில்: இந்திய அரசு தரப்பில் முழுமையான மாற்றம் நிகழும் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் நம்புகிறது. தமிழ் மக்களின் சட்டபூர்வ உணர்வுகளையும் விடுதலைப் போராட்டத்தையும் இந்திய அரசு அங்கீகரிக்கும் என்று நம்புகிறோம். நளினியின் விடுதலை, அந்த ஒட்டுமொத்த மாற்றத்தின் தொடக்கமாக அமையும்.
ஏனென்றால் ஈழ போராட்டம் பலவீனம் அடைவது இந்தியாவின் நலனுக்கும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பலமடைய வழிவகுத்து விடும்.
தமிழக ஆதரவு
கேள்வி: இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளித்துள்ளதே?
பதில்: இந்திய அரசு தவறான கூட்டாளியை தேர்வு செய்துள்ளது. இலங்கை அரசு எப்போதும் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு முறை இந்தியாவை இலங்கை அரசு ஏமாற்றப் போகிறது?
கேள்வி: தமிழக கட்சிகளின் ஆதரவு பற்றி...
பதில்: அவர்களின் ஆதரவு, தமிழ் ஈழத்தில் உள்ள அவர்களது சகோதர சகோதரிகள் தங்களது விடுதலையையும் சட்டபூர்வ உரிமைகளையும் பெறுவதற்கான ஆதரவு ஆகும்.

Thursday, June 19, 2008
யுத்தத்தில் தங்களால் வெல்ல முடியும் என்கிறார் நடேசன்

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அல்லது செயற்படாமல் வைத்துவிட்டு பேச்சுக்கு வருமாறு இலங்கை அரசு முன்வைத்த வேண்டுகோளை விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன் அடி யோடு நிராகரித்துள்ளார்.அரச படையினருடனான யுத்தத்தில் இன்னும் தங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.
"ரொய்ட்டர்' செய்திச் சேவைக்கு வழங் கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்துறைப் பொறுப்பாளர் தமது பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
ஆயுதங்களை ஒப்படைப்பது பேச்சுக ளின் போது பேரம் பேசும் சக்தியைப் பல வீனப்படுத்தும்.
அதிகார சமநிலையையும் சம அந்தஸ் தையும் குழப்பும் எந்த அணுகுமுறையும், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெறக் கூடிய எந்தப் பேச்சுக்கும் எதிர்மறையான விளை வைத் தருவதாகவே அமையும்.அதிகார சமநிலையும் சம அந்தஸ்தும் அர்த்த பூர்வ மான பேச்சுகளுக்கு மிக முக்கியமானவை.
விடுதலைப் புலிகள் தற்போது தற்பாதுகாப்பு யுத்தத்திலேயே ஈடுபட்டுள்ளனர். எமது தமிழ் மக்களின் துணையுடன் நாம் இந்த யுத்தத்தில் வெல்வோம் என்ற நம்பிக் கை எமக்குண்டு.
விடுதலைப் புலிகளை மரபு ரீதியான யுத்தத்தில் அரசினால் தோற்கடிக்க முடி யாது என்றார்.
"மரபுவழி இராணுவம் வெற்றி பெறத் தவறினால் அது தோற்கின்றது. விடுதலை இராணுவம் தோற்காவிட்டால் அது வெற்றி பெறுகின்றது' என்ற நெப்போலியனின் கூற்றையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கும் பேச்சுக்கான தெளிவான கால எல்லையை அறிவிப்பதற்கும் இணங் கினால் தான் பேச்சுக்குத் தயார் என அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது தெரிந்ததே.
அதற்கே இப்போது அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ரொய்ட்டருக்கு வழங்கிய பேட்டியில் பதிலளித்திக்கிறார்.
Sunday, June 15, 2008
எட்டுக் கோடித் தமிழர்களும் குரல்கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும்
எட்டுக் கோடித் தமிழர்களும் குரல்கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் என, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கூறியுள்ளார். இன்று பொங்கு தமிழாக, டென்மார்க் மண்ணில் அணிதிரண்ட புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளை நோக்கி, தமிழீழ தாயகத்தில் இருந்து காணொளி நேரஞ்சல் வடிவில் உரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி, தமிழீழ தனியரசுக்கு அங்கீகாரம் பெற்று , விடுதலையை வென்றெடுப்பதற்கான பொறுப்பு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையே சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழ் மக்களும், தமிழீழ விடுதலைக்காக ஒருமித்துக் குரல்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு செவிசாய்த்து தமிழீழ தனியரசை உலகம் அங்கீகரிக்கும் என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை, தமிழ்நாட்டில் இருந்து இலண்டனுக்கு இந்திய மத்திய அரசாங்கம் நாடுகடத்திய பொழுது, அதனை ஆட்சேபித்து வீதிகளில் இறங்கி, தமிழகத்தின் ஆறு கோடி தமிழ் மக்களும் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக, அவரை மீண்டும் தமிழகத்திற்கு அழைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டதையும் பா.நடேசன் அவர்கள் நினைவூட்டியுள்ளார். மக்களின் எழுச்சி, எந்தவொரு உலக அரசினதும் மனச்சாட்சியை தொட்டுவிடும் என்பதை, இந்த நிகழ்வு தெளிவாக உணர்த்தி நிற்பதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் தோறும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், வரலாற்றையும் எடுத்து விளக்கி, தமிழீழ தனியரசுக்கான அங்கீகாரத்தை பெறும் வரலாற்றுப் பணியை, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஆற்ற வேண்டும் என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் வலியுறுத்தியுள்ளார். எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்றிணைந்து, ஒரே சக்தியாகப் போராடி, தமிழீழீவிடுதலைப் போராட்டத்திற்கு வெளிநாட்டு மக்களின் உதவியைப் பெறுவதற்கான அரசியல் பணிகளை, விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், பா.நடேசன் கோரியுள்ளார். மேலும், ஈழத்தீவின் வரலாற்றில் தமிழீழ தனியரசை தவிர வேறு எந்தத் தீர்வும் சாத்தியமில்லை என்பதை, உலக அரசுகளுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும், ஆணித்தரமாக புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் எடுத்துரைக்க வேண்டும் என்றும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அறைகூவல் விடுத்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)