Showing posts with label வன்னி. Show all posts
Showing posts with label வன்னி. Show all posts

Wednesday, August 13, 2008

வவுனியாவில் 80 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன‌

Fire at Vavuniya IDP shelter; 80 houses gutted



A fire broke out within a temporary shelter village built for IDPs in Vavuniya, Punthottam. 80 houses were reduced to ashes and no one sustained injuries.

Monday, August 11, 2008

வன்னிப் பிரதேசச் சண்டைகளால் பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்வு; அடிப்படை வசதிகள் இன்றி அவலத்தில்! அவசர உதவிகள் தேவை என்று ஐ.நா. அமைப்புக்கள் சுட்டிக்காட்டு

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்கள் பேரவலத்தையும் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருக்கின்றனர் என ஐ.நா. தொண்டு அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
அந்த மக்கள் மேலும் அவலங்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உதவிகள் காலம் தாழ்த்தாது அவசரமாக அவர்களைச் சென்றடைவது மிகவும் அவசியமானது என்று அந்த அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டென் வெய்ஸ் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அலுவலகத்தின் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
12 ஆயிரம் குடும்பங்கள் மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சிக்கு அருகில் வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் இதுவரை இடம்பெயர்ந்த மக்களைச் சென்றடைய முடிந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அந்த மக்களுக்கான விநியோகங்கள் தொடர்வதை உறுதி செய் வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த 1,45000 பேர்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்
வன்னியில் நிலைமை மிகவும் நிச்சயமற் றதாகவுள்ளதாகவும் இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் விநியோகம் அவசியமாகவுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் காரணமாகப் புதிதாக இடம்பெயர்ந்தவர்கள் உட்பட ஒரு லட்சத்து 45 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் விடுத லைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி யில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோதல் இடம்பெறும் கிளிநொச்சி தென்மேற்கு மற்றும் முல் லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவு மக்கள் சிக்குண்டு உள்ளனர் எனவும் இவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரிய வில்லையெனவும் கோர்டென் வெய்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான கருத்தை வலியுறுத்தியுள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் தோமஸ் இராயப்பு ஜோசப் விடுதலைப் புலிகளினது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் மேலும் துயரத்தை அனுப விப்பதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுக ளினதும், ஏனைய மனிதாபிமான அமைப் புகளினதும் உதவிகள் அந்த மக்களைச் சென்றடைவது அவசியம் என்று கூறினார்.
அடுத்த சில மாதங்களில் மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் அந்த மக்களின் நிலை மேலும் மோசமடையலாம் என்றும் அவர் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அலவலக செய்திச் சேவைக்குத் தெரிவித் துள்ளார்.

வன்னியில் பூதாகரமாகும் மனிதாபிமானப் பிரச்சினை

வன்னி மீதான தனது கொடூரப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது இலங்கை இராணுவம். விமானக் குண்டு வீச்சுகளும், பீரங்கி, ஷெல், மோட்டார் தாக்குதல் களும் அகோரமாகியிருக்கின்றன.
மக்கள் குடியிருப்புகள் கண்மண் தெரியாமல் தாக்கப்படுவதால், ஏற்கனவே வன்னிக்குள் இடம்பெயர்ந் திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், மீண்டும் தமது எச்ச சொச்ச உடைமைகளுடன் ஏதிலிகளாக அலையும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அகதி அவல வாழ்வே அவர்களுக்கு நிரந்தரமாகிவிட்டது.
தீவிரமடையும் வன்னிக் களமுனை யுத்தத்தை அடுத்து இடம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்க ளுக்குத் தற்காலிக இருப்பிடங்களையும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களையும் வழங்குவதற்கு ஐ.நா.முகவர் அமைப்புகள் துரிதமாகத் தயாராகி வருகின் றன எனக் கொழும்புக்கான ஐ.நா. தூதரகப் பேச்சாளர் � கார்டன் வைஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் இரண்டு லட்சம் பேர் நாட்டிற்குள் இடம் பெயர்ந்த புதிய அகதிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படும் நிலைமை வரும் என்று ஐ.நா.முகவர் அமைப்புகள் பூர்வாங்க உத்தேச மதிப்பீட்டைச் செய்திருக்கின்றன.
இவ்வாறு இடம்பெயர்வோரின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும்
யுத்தத் தீவிரக் கெடுபிடியிலிருந்து தப்பிப் பிழைப் பதற்காக இடம்பெயருகின்ற மக்களின் சுதந்திர நடமாட் டத்துக்கு அனுமதிக்கும்படியும்
அப்படி இடம்பெயர்வோர் தங்கியிருக்கும் பிரதேசங் களை அண்டி இராணுவ இலக்குகள் அமையாமல் பார்த் துக் கொள்ளுமாறும்
அகதிகளுக்கான ஐ.நா.தூதரகத்தின் பேச்சாளர் றொன் றெட்மண்ட் கோரியிருக்கின்றார்.
இடம்பெயரும் அகதிகளின் அவசிய, அவசர மனிதா பிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் தங்களுக்கு உள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவர் விரிவாக விளக்கியிருக்கின்றார்.
உணவு விநியோகம், பாதுகாப்பான தங்குமிட வசதி கள், குடிதண்ணீர், சுகாதார நலனுக்கான உபகரணங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்குத் தேவையான எரிபொருள் என்பவற்றுக்கான தட்டுப்பாடு அபாயகர மான கட்டத்தை அடைந்துவிட்டது என்றும், கையிருப்பு மிகமிகக் குறைந்து விட்டதாகவும் கூட அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இந்த அத்தியாவசியப் பொருள்களைத் தடையேது மின்றி ஐ.நா.முகவர் அமைப்புகள் (வன்னிக்கு) எடுத்துச் செல்ல அனுமதிக்கும்படியும்
பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள இடங்களுக்கு ஐ.நா. முகவர் அமைப்புகளின் தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்கு தடையின்றிச் செல்வதற்கு இடமளித்து அந்த மக்களுக்குரிய அத்தியாவசிய, அவ சர மனிதாபிமானத் தேவைகளை விரைந்து நிறைவு செய்வதற்கு வசதியாக ஒத்துழைக்கும்படியும் அவர் சம் பந்தப்பட்ட தரப்புகளை (அரசையும் புலிகளையும்) மன்றாட்டமாகக் கோரியிருக்கின்றார்.
ஆனால் நிலங்களைப் பிடித்து ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை தமிழர் தேசம் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இலங்கை அரசு, அந்த மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்களின் அவல நிலைமை குறித்து சிந்திக்கப் போவ தில்லை. "இறைமையை உறுதிப்படுத்தல்' என்ற பெயரி லான அதன் ஆக்கிரமிப்பும், அடிமைப்படுத்தல் தீவிர முமே அதற்கு முக்கியமானவை.
பொதுமக்களின் மருத்துவமனைகள் மற்றும் மனி தாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள அவற் றைக் கண்காணிக்கின்ற அரச உத்தியோகத்தர்களின் பணிமனைகள் போன்றவற்றை "வேண்டுமென்றே' இலக்குவைத்து அதன் மூலம் ஜெனிவாப் பிரகடனங் களை மீறுகின்ற இலங்கை அரசுக்கு
தன்னுடைய தேச மக்கள் எனத் தானே உரிமை கொண்டாடி, ஆதிக்கம் செலுத்தும் ஓரின மக்கள் கூட்டத்தின் மீது தனது ஹெலிக்கொப்டர்கள், விமானங்கள் மூலம் வான்குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் மற்றும் பீரங்கி, ஷெல், மோட்டார் தாக்குதல்களையும் கண்மண் தெரியாமல் நடத்தும் இன்றைய இலங்கை அரசுக்கு
யுத்தப் பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்புத் தொடர்பான நியம ஏற்பாடுகளும், பொறுப்புகளும் புரியப் போவதில்லை. அல்லது அவற்றை அது கவனத்தில் எடுக்கப்போவதில்லை.
ஏற்கனவே, மனிதாபிமானப் பிரச்சினைகள் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கையில் அங்குள்ள சர்வதேச தொண்டர் அமைப்புகளுக்கான எரிபொருள் விநியோக அனுமதியை வெட்டிக் குறைக்கத் தொடங்கி விட்டது அரசு.
ஆகவே அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் மேற் படி கோரிக்கையும் வேண்டுகோளும் இலங்கை ஆட்சி அதிகாரத்தின் காதில் விழப்போவதில்லை. அவை புறக்கணிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
அத்தகைய சூழலில், இடம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு உயிரைத் தக்கவைக்கும் போராட்டம் மிக மோசமானதும் ஆபத்தானதுமான கட்டத்தைத் தொடும்.
அப்போது சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது?
சர்வதேசத்தின் பிரதிபலிப்பை தமிழ் மக்கள் மட்டு மன்றி முழு உலகமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

வன்னியை மீட்ட வெற்றிச் செய்திக்காக காத்திருக்கையில் சில அமைச்சர்கள் எதிராக செயற்பாடு

வன்னிப்பகுதியை புலிகளிடமிருந்து படையினர் மீட்டு விட்டனரென்ற வெற்றிச் செய்திக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கையில் சில அமைச்சர்கள் அதற்கெதிராக செயற்படுவதாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன் கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பிரிவினை வாதத்தை யுத்த ரீதியாக மட்டும் தோற்கடிப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. கருத்தியில் ரீதியாகவும் நாம் தோற்கடிக்க வேண்டும்.

இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள யுத்தம் தொடர்பாக நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். படையினரின் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றனர். ஆனால், சில அமைச்சர்கள் கூட பயங்கரவாதத்தை போஷிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வழங்கப் போவதாகக் கூறுகின்றனர். ஒரு அமைச்சர், பிரபாகரனுக்கு வடக்கை கொடுக்கப் போவதாகவும் பொலிஸ், காணி அதிகாரத்தைக் கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றார்.

அரசு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல் படுத்தப் பார்க்கின்றது. இதற்கான பெரும் அழுத்தத்தை இந்திய அரசும் கொடுத்து வருகின்றது. இதனை அரசின் நடவடிக்கைகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.

இலங்கை விடயத்தில் இந்தியா தலையிட்ட பல வரலாறுகள் உண்டு. அந்த வரலாறுகளையே இன்றும் இந்தியா தொடர்கிறது. புலிகள் என்ற விதையை வளர்த்து விட்டதே இந்த இந்தியா தான்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தி புலிகளுக்கான கோட்பாடொன்றை இந்தியா கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கை ஒரு மிக மோசமான மோசடி உடன்படிக்கை. புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுக்களை நடத்தி வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்படுத்த முன்னின்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தான் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு இரு தடவைகள் வந்திருந்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஒரு தடவை வந்தார். அதற்கு முன்னர் ஒரு தடவை வந்தார். பாதுகாப்பு விடயங்களை ஆராயவென எமது அரசு கூறியது. ஆனால், அவர்கள் வந்தது அதற்காகவல்ல.

பலாலி விமானத்தள ஓடு பாதையை புனரமைக்க இந்தியா முன் வந்தது. ஆனால், அதற்கு மூன்று நிபந்தனைகளை முன் வைத்தது. ஒன்று, பலாலி விமான ஓடு பாதைத் தளத்தை இம்முறை மட்டுமல்ல தொடர்ந்தும் இந்தியாவே புனரமைக்க வேண்டும். இரண்டாவது, பலாலி விமானத் தளத்தை மூன்றாம் நாட்டுக்குப் பயன்படுத்தக் கொடுப்பதானால் இந்தியாவின் அனுமதி கோரப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்தியா தான் நினைத்த நேரத்தில் பலாலி விமானத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.

இவ்வாறு இலங்கை விடயத்தில் இந்தியா எதைச் செய்தாலும் அது இலங்கையின் இறைமையை பாதிக்கக்கூடியதாகவேயுள்ளது. அதனால் தான் நாம் இந்தியாவின் அனுகுமுறை தொடர்பில் அச்சமடைகின்றோம்.

சீனன் குடா பௌத்த விகாரையிலுள்ள பௌத்த பிக்குவை சுட்டுக்கொன்ற இந்திய சிப்பாய்களுக்குப் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நினைவுத்தூபி அமைக்கப்படுவதையிட்டு நாம் மிகவும் வேதனைப் படுகின்றோம்.

பாதுகாப்புத் தரப்பில் செய்யப்படும் வீண் விரயங்கள் முக்கியமானவை. இவை தொடர்பில் ஊடகங்கள் தகவல்களை வெளியிடும் போது அதனை அடக்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கிளர்ந்தெழுகின்றனர். அரசு திருடர்களைப் பாதுகாக்க முற்படுகின்றது.

பி.பீ. ஜயசுந்தர மீது அரசு நடவடிக்கையெடுக்குமென நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அவரை ஒலிம்பிக் போட்டிக்கு ஜனாதிபதி அழைத்துச் செல்கின்றார். நீதிமன்றம் தண்டனைவிதித்த ஒருவருடன் பீஜிங் போனால் மக்கள் என்ன நினைப்பார்கள்?

நாம் அவசரகால சட்டத்துக்கு ஆதரவு வழங்குவது புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே. மாணவர்கள், பிக்குகளின் போராட்டங்களை அடக்கவோ ஊடகங்களை மிரட்டவோ அல்ல. அரசியல் தேவைகளுக்காக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

நேரடியாக சில இடங்களில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களில் இவற்றை நன்கு அவதானிக்க முடிகின்றது.

தேர்தல்களில் வெற்றி பெற மறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களே தமது ஆளுகைக்குள் வரும் திணைக்களங்கள். நிறுவனங்களுக்கு பணிப்புரைகளை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் நாம் நீடித்துக் கொள்ளும் இந்த அவசரகாலச் சட்டத்தை புலிகளை ஒடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் நேர்மையான உரிமைகளை மறுக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் மக்கள் அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவதை யாராலும் தடுக்க முடியாது.

வன்னி களமுனைகளில் இடம் பெற்ற மோதல்களில் 28 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இராணுவம்.

வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.