Showing posts with label லங்காதீப. Show all posts
Showing posts with label லங்காதீப. Show all posts

Tuesday, August 19, 2008

தற்கொலைத் தாக்குதல் நடத்திய இப்ராஹிம் முபாரக் யார்?

கடந்த மே மாதம் 16 ஆம் திகதி கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் சம்புத்தாலோக விகாரை முன்பாக கலத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் அமர்ந்திருந்த பொலிஸ் வாகனத்தைக் குறிவைத்துத் தற்கொலைக் குண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த கரும்புலி தற்கொலைப் படையணியைப் பற்றிய பல்வேறு வியப்புக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி தற்கொலைத் தாக்குதலில் தற்கொலைப்படையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் எம்.இசட்.ஈ.பி. 3875 இலக்கமுடைய ஹீரோ ஹொண்டா வகையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளாகும். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பொலிஸ் தரப்பில் 12 பேர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து குண்டு வெடிப்பு ஸ்தலத்தில் தற்கொலைப் படையாளியின் அடையாள அட்டை எனக் கருதப்பட்ட தேசிய அடையாள அட்டையை பொலிஸார் கண்டுபிடித்தனர். அந்த அடையாள அட்டையின் இலக்கம் 820244796ங என்பதாகும்.

இந்த அடையாள அட்டையில் புலனாய்வுப் பிரிவினரதும் பொலிஸ் பிரிவினரதும் வியப்புக்குரியதாக இருந்தது அதில் குறிப்பிட்டிருந்த பெயர் ஆகும். அது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இப்ராஹிம் லெப்வை முபாரக் என்பவருடைய அடையாள அட்டையாகும். அதில் அவர் பிறந்த இடம் திருகோணலை எனவும் முகவரி வைசால வீதி (வைத்தியசாலை வீதி) கிண்ணியா திருகோணமலை எனவும் குறிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த அடையாள அட்டைப் பற்றி விசாரணைகளிலிருந்து பெறப்பட்ட வியப்பான தகவல்கள் புலனாய்வுப் பிரிவு தரப்பில் வெளியாகியுள்ளன. இவற்றுக்கேற்ப மேற்படி அடையாள அட்டையில் இப்ராஹிம் லெப்வை முபாரக் எனக் குறிப்பிடப்பட்ட புலிகள் இயக்க நபரின் பெயர் வேலாயுதன் பிரியதர்சன் எனவும் அவர் புலிகள் இயக்கத்தால் சுதர்ஷன் என்று அழைக்கப்பட்டு வந்தாரெனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய பிறந்த இடம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகாமம் பொன்கேணி பிரதேசமாகும். அங்கு தாய் சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த சுதர்சன் 16 வயதில் 2001 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததைத் தொடர்ந்து அவ்வூர் பகுதியிலிருந்து அடிக்கடி தலைமறைவாகிய பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்றார். அரச படையினர் சாம்பூரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மேற்படி சுதர்சன் அந்தப் புலிகள் முகாமிலிருந்தார். அங்கு தவறுதலாக வேறொரு புலிகள் இயக்க உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். பின்னர் அவரைப் புலிகள் இயக்க பொலிஸ் படையில் சேர அழைக்கப்பட்டுச் சென்றாலும் புலிகள் இயக்க உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மான் சுதர்சனைக் கரும்புலிகள் பிரிவில் சேர்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீண்ட காலம் தலைமறைவாகிவிட்ட சுதர்சன் கடந்த லோட்டஸ் வீதி தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் இப்ராஹிம் லெப்வை முபாரக் என்ற பெயருடன் குறித்த மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிந்த பின்னர் மேற்படி கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளார்.

லங்காதீப விமர்சனம்: 10.08.2008.

Monday, August 18, 2008

பிரபாகரன் இருப்பதாக கருதப்படும் 3 முகாம்களும் படையினரின் சுற்றிவளைப்பில்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மட்டுமே தற்போது இயங்கிவரும் புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிக்கும் தீவிர இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரச படையினர், அண்மையில் அப்பிரதேசங்களுக்குள் பிரவேசித்து வெற்றிகரமாக முன்னேறி வருகின்றனர். குறிப்பாக, புலிகள் இயக்கத்தினரின் பல முக்கிய முகாம்களை இதுவரை கைப்பற்றியுள்ள படையினர், தற்போது வன்னியில் புலிகளின் பலக்கோட்டைகள் எனக் கருதப்படும் மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பிரதான மூன்று முகாம்களைச் சுற்றிவளைத்துள்ளனர். இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி அரச படையினர் மேற்படி பிரதான முகாம்களை உறுதியான முறையில் சுற்றிவளைத்திருப்பதாகவும் தொடர்ந்து தீவிர தாக்குதல்களைத் தொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் வடக்குப் பாதுகாப்புத் துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று முகாம்களே வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்களாக இருப்பதால் இவை அரச படையினரால் அழிக்கப்பட்டுவிட்டால் வன்னியில் புலிகளின் பலம் அழிக்கப்பட்டதற்குச் சமமாகும் என பாதுகாப்புத் துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றைவிட வன்னியில் வேறு இவற்றிலும் முக்கிய முகாம்கள் கிடையாது எனவும் புலிகளின் பிரதான படையணிகளின் பாதுகாப்பிலே மேற்படி மூன்று முகாம்களும் இருப்பதால் வன்னியைக் கைப்பற்றுவதற்கான மிக முக்கியமானதும் தீவிரமானதுமான மோதலாக இது இருக்கும் எனவும்,தற்போது அரச படையினர் அந்த பிரதான முகாம்களையும் சுற்றிவளைத்துத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்குள் அந்தப் பிரதான முகாம்கள் மூன்றும் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பு முற்று முழுதாகப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடைய உயர்மட்டத் தலைவர்களும் மேற்படி மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா முகாம்களிலேயே பதுங்கியிருப்பதாக, ஏற்கெனவே பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த முகாம்களை அரச படையினர் கைப்பற்றுவது வன்னியைக் கைப்பற்றும் முக்கிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் எனவும் இந்த முகாம்கள் அழிக்கப்படுவதுடன், புலிகள் இயக்கத்தின் பலம் வன்னியில் அழிக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி வன்னி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் படையணித்தலைவர்கள் தெரிவித்திருப்பதற்கேற்ப மேற்படி முகாம்கள் ஒரு சில நாட்களுக்குள் அழிக்கப்பட்டு அந்தப் பிரதேசங்கள் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என உறுதியாகத் கூறியுள்ளனர்.

மேலும், மேற்படி புலிகளின் பிரதான மூன்று முகாம்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத் தளபதியின் விசேட அறிவுறுத்தல்களின் கீழ் வன்னிப்பிரதேச கட்டளைத் தளபதியின் நேரடியான கண்காணிப்பில் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.

லங்காதீப விமர்சனம்: 17.08.2008

Wednesday, August 6, 2008

பிரிட்டிஷ் பிரதமர் மாளிகை முன்னால் புலிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐக்கிய இராட்சியத்தில் வாழும் ஸ்ரீலங்கா நாட்டவர்கள் குறிப்பாக லண்டன் மாநகரம் புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்துவரும் சிறிலங்கா நாட்டவர்கள் ஒன்றிணைந்து தற்போது அமைத்திருக்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' எனப்படும் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் டவுணிங் வீதி 10 ஆம் இலக்க நிலையத்தில் (Nணி 10,ஈணிதீணடிணஞ் ண்tணூஞுஞுt, ஃணிணஞீச்ண) அமைந்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமரின் மாளிகை முன்பாக புலிகள் இயக்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டனில் வாழும் சிறிலங்கா நாட்டவர்களான சிங்கள இனத்தவர்கள், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என அனைத்து இனத்தவர்களும் கலந்துகொண்டு புலிகளின் பயங்கரவாதத்துக்கும் பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் தரப்பில் புலிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் ஆதரவு நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேற்படி "பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் லண்டனில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி. கட்சிப் பிரிவின் சார்பிலும் பொருந்தொகையான உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டதாகவும் மேலும் குறிப்பிடும்படியான எண்ணிக்கையிலான லண்டன் பௌத்த குருமாரும் கலந்துகொண்டதாகவும் லண்டன் தகவல்கள் தெரிவித்துள்ளன.

லண்டன் டவுணிங் வீதியில் பெரும் சனநெருக்கடியை ஏற்படுத்திய இந்த பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் "பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பின் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவினர் புலிகள் இயக்கத்துக்கும், பயங்கவாதத்துக்கும் பிரிட்டனில் நிலவும் பயங்கரவாத ஆதரவு செயற்பாடுகளுக்கும் எதிரான அனைத்து தகவல்கள், கோரிக்கைகள் அடங்கிய, பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதப்பட்ட மகஜர்களை டவுனிங் வீதி 10 ஆம் இலக்க பிரிட்டிஷ் பிரதமரின் வாசஸ்தல அலுவலகத்தில் கையளித்தனர்.

இதுபற்றி மேற்படி லண்டனில் இயங்கும் "பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பின் தரப்பில் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கேற்ப சிறிலங்கா அரசு அங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்த முக்கிய சந்தர்ப்பத்தில் பிரிட்டனில் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தலைநகர் லண்டன் உட்பட அனைத்து முக்கிய பிரதேசங்களிலும் புலிகள் இயக்க பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பகிரங்கமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் அவ்வாறே லண்டனில் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஆதரவு ஊடகங்களும் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் பகிரங்கமாக பிரசாரங்களையும் விழாக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருவதாகவும் மேற்படி மகஜரில் ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே மேற்படியான புலிகள் இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் பிரிட்டனில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படும் நிலையில் பிரிட்டிஷ் அரச தரப்பும் பாதுகாப்புத்துறையும், உயர்மட்ட அதிகாரிகளும் அவற்றைத் தடுக்கும் வகையில் செயற்படாமலிருப்பது பற்றியும் மேற்படி மகஜர்களில் சுட்டிக்காட்டப்பட்டு ஆழ்ந்த கவலையும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் பிரிட்டனில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயற்பட்டுவரும் பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றப் பிரதிநிதிகளான விஜேந்திர ஷர்மா, மற்றும் கீத்வாஸ் போன்ற அரசியற் பிரமுகர்களின் புலிகள் இயக்க ஆதரவு நடவடிக்கைகள் பற்றியும் மேற்படி மகஜரில் "பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பு ஆதாரபூர்வமாகத் தெரிவித்துக் கவலை வெளியிட்டுள்ளது. எனவே பிரிட்டன் அரசால் புலிகள் இயக்கம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டதற்கேற்ப புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் செயற்படும் அனைத்துத் தரப்பினர் பற்றியும் விசாரணைகளை மேற்கொண்டு பிரிட்டனில் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு விழாக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேலும் பிரிட்டிஷ் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியற் பிரமுகர்களின் புலிகள் ஆதரவு நடவடிக்கைகள் என்பவற்றை உடனடியாகத் தடை செய்யும்படி மேற்படி மகஜரின் பிரிட்டிஷ் பிரதமரை இறுதியாகக் கோரியுள்ளது. மேற்படி "பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள் அமைப்பு'

லங்காதீப லண்டன் கடிதம் பகுதி (03/08/2008)

இறுதித் தாக்குதல்களுக்கு தயார் நிலையில் விடுதலைப் புலிகள்

கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத் திசையில் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்துள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மானின் நேரடிக் கண்காணிப்பிலேயே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகள் பிரிவு உறுப்பினர்களுக்காக விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டுஅம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத்தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட தாக்குதல் பயிற்சிகளை வழங்க புலிகள் இயக்கத்தின் மத்திய முகாம் நிலையங்கள் மேற்படி திருவையாறு பிரதேசத்தை அண்டியே அமைந்திருந்தன.
எவ்வாறாயினும் இந்தப் பிரதான முகாம்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்புத்துறைப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் அறிந்துகொண்டதைத் தொடர்ந்து கண்காணிப்பு விமானங்கள் மூலம் தீவிர அவதானிப்புச் செய்யப்பட்டுக் கடந்தவாரம் இந்தப் பிரதேசத்தில் முகாம் பகுதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையங்கள் மீது தீவிர குண்டுத்தாக்குதல்களை விமானப்படையினர் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் இதில் கரும்புலிகள் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. பயிற்சி முகாம்களிலிருந்த புலிகள் தரப்பில் ஏற்பட்ட உண்மையான உயிர்ச்சேதம் தெரியாவிட்டாலும் பிரதான கரும்புலிகள் பயிற்சி முகாம்களிலிருந்த கரும்புலி உறுப்பினர்கள் பலர் இத்தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திருவையாறு பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இரகசியமான முறையில் அமைந்திருந்த முக்கிய பயிற்சி முகாம்களில் இருந்த புலிகள் இயக்கத்தினர் ஏதோ வகையிலான விசேட பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்புப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அப்பகுதியில் இரகசியமாக அமைந்திருந்த "லெப்டினன் கேர்ணல் சூட்டி' பயிற்சிமுகாம் எனக்கூறப்படும் விசேட பயிற்சி முகாமில் அண்மையில் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினருக்கு விசேடமான தாக்குதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு கடந்த 26 ஆம் திகதியே அதாவது விமானப்படைத் தாக்குதல்களுக்கு முன்னரே இவ்வாறு விசேட பயிற்சிபெற்ற புலிகள் இயக்கத்தினர் வெளியேறிவிட்டனர் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் குறித்த "லெப்டினன் கேர்ணல் சூட்டி' முகாம்களில் அளிக்கப்பட்ட விசேடமான அந்தப் பயிற்சிகள் என்ன என்பதும் அந்தப் பயிற்சிகள் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டது என்பதுமே ஆகும். இதுபற்றி பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி பயிற்சி மத்திய நிலையமாகக் கருதப்படும் லெப்டினன் கேர்ணல் சூட்டி முகாமில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் திட்டமிட்டிருக்கும் பாரியதொரு தாக்குதல் நடவடிக்கைகளுக்காகவே குறித்த விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த விசேட அணியினரையே இறுதித் தாக்குதல்களுக்காகப் புலிகள் இயக்கம் தயார்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

லங்காதீப பாதுகாப்பு விமர்சனம் (03/08/2008)

Monday, July 21, 2008

புலிகளின் பொங்குதமிழ் விழாவில் பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரதிநிதிகள்

புலிகள் இயக்கத்தினராலும் ஆதரவாளர்களாலும் கடந்த ஜூலை 12 ஆம் திகதி லண்டனில் நடத்தப்பட்ட ""பொங்குதமிழ்' எனப்படும் விழாபற்றி பல்வேறு முக்கிய பிரிட்டிஷ் ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டுள்ளன. பெரும்பாலும் இது சம்பந்தமான மேற்படி ஊடக விமர்சனங்கள் லண்டனில் பயங்கரவாதத்துக்குச் சார்பாக நடத்தப்பட்ட பகிரங்க நிகழ்வு என்ற தொனியிலேயே அமைந்துள்ளதுடன் அவற்றை பிட்டிஷ் அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஸ்ரீலங்காவில் இயங்கும் பிரபாகரனின் புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானிக்கப்பட்டு சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி "பொங்கு தமிழ்' விழா லண்டனில் வாழும் புலிகள் இயக்கத்தினராலும் ஆதரவுப் பிரமுகர்களாலும் லண்டனின் மத்தியில் பகிரங்கமாக நடத்தப்பட்டதாகவும் இந்த விழாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் பிரபாகரன் படங்களையும் புலிகள் இயக்க வாசகங்களையும் கொண்ட பதாதைகள், கொடிகள், சுலோக அட்டைகளுடன் புலிகளின் ஆதரவாளர்கள் முன்னணி வகித்துச் சென்றுள்ளனரெனவும் இந்த விழாவும் ஊர்வலமும் கூட்டமும் புலிகள் இயக்கத்தின் பிரசார நிகழ்வுகளாக அமைந்துள்ளதாகத் தெளிவாகக் காணமுடிந்ததாகவும் ஆயினும் இவ்வாறு பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குப் பிரசாரம் செய்ய அனுமதிக்கும் அளவுக்கு பிரிட்டிஷ் அரச நிர்வாகம் பாராமுகமாக இருந்துள்ளதெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் இயக்கத்தின் இந்த "பொங்கு தமிழ்' விழாவில் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவித்திருக்கும் மேற்படி லண்டன் சர்வதேச ஊடகங்கள் இவ்வாறு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் விழாவில் கலந்து கொண்டதன் மூலம் குறித்த ஐந்து பிரிட்டிஷ் எம்.பி.க்களும் கலந்து கொண்டிருப்பது தமது அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் எதிரான செயல் எனக் குறிப்பிட்டுள்ளன.

மேலும் புலிகளின் "பொங்குதமிழ்' விழாவில் கலந்து கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளில் பிரிட்டிஷ் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை மேற்படி லண்டன் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறு ஆளும் கட்சியாகிய லேபர் கட்சியைச் சேர்ந்த வீரேந்திர ஷர்மா, சிபான் மெக் டொனான், டொன்பட்லர் ஆகிய பிரபலமான பாராளுமன்றப் பிரதிநிதிகளும், கொன்சர்வேட்டிவ் கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதி அன்ரூ பெலிங், லிபரல் டெமோகிறரிக் கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதி எட்சேவி ஆகிய ஐவருமே பொங்குதமிழ் விழாவில் பகிரங்கமாகக் கலந்து கொண்டவர்கள் ஆகும்.

மேலும் லண்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவல்களில் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்ரீலங்கா நாட்டுத் தமிழர்கள் சுமார் மூன்று இலட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் எவ்வாறாயினும் மேற்படி பொங்கு தமிழ் விழாவில் புலிகள் இயக்கத்தினர், ஆதரவாளர்கள் உட்பட 8000 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர் எனவும் இது அங்கு வாழும் தமிழர்களின் 3%க்கும் குறைவான மக்களே எனவும் தெரிவித்துள்ளன.

லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 20.07.2008

மீண்டும் புலிகளுடன் சேரமாட்டேன்

முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப்போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப் படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்த ஊடகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கருணா சிறிலங்காவுக்கு நாடு திரும்பிய பின்னார் அந்த ஊடகத்துக்கோ ஊடகங்களுக்கோ புலிகள் இயக்கத்தில் மீண்டும் சேருவது பற்றிய தகவல்கள் பற்றி உறுதியாகத் தெரிவித்திருக்கும் கருத்தில் அவ்வாறு தான் மீண்டும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் கையாளாக மாறப்போவதில்லை எனக் கூறியதாக தெரியவந்துள்ளது.

கருணா ஐக்கிய இராச்சியத்தில் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், மற்றும் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரை பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். ஆயினும் கருணா பிரபாகரனோடு மீண்டும் சேரப்போவதாக ஒரு சில ஊடகங்களிலிருந்து சந்தேகத் தகவல்கள் வெளியாகிய பின்னரே கருணா மேற்படி தகவல்களை உறுதியாக மறுத்து மேற்படி கருத்துக்களை கூறியுள்ளார்.

லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 20/7/2008

Tuesday, July 8, 2008

அல் ஹைடா, ஹிஸ்புல்லாவை விட புலிகள் இயக்கம் பயங்கரமானதென்கிறது எவ்.பி.ஐ

சர்வதேசப் பிரசித்தி பெற்ற அமெரிக்க இரகசியப் பொலிஸ் புலனாய்வு அமைப்பாகிய எவ்.பி.ஐ.எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழு (Federal Bureau of Investigation (FBI)அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் ஏனைய பல நாடுகளிலும் அதன் இரகசியப் புலனாய்வு சேவையைச் செய்து வருகிறது. அண்மையில் எவ்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர் உலகில் பயங்கரவாதம் நிலவிவரும் பல நாடுகளிலும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றி மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளின் பின்னர் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களையும் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது. அரசியற் தலைவர்கள் பிரமுகர்களின் கொலைகள் மற்றும் புலிகள் அமைப்பின் கரும்புலிகள், தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைத் தாக்குதல்கள் பற்றி விசேடமாகத் தெரிவித்திருக்கும் எவ்.பி.ஐ. அமைப்பு உலகில் இயங்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளுடன் புலிகள் இயக்கத்தை ஒப்பீடு செய்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேசப் புகழ் பெற்ற இந்த எவ்.பி.ஐ. அமைப்பு தெரிவித்திருக்கும் மேற்படி தகவல்களுக்கேற்ப உலகில் இயங்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளில் முதன் முறையாக உலகத்துக்கு பெண் தற்கொலைப் படையினரை அறிமுகப்படுத்தியது புலிகள் இயக்கமே எனவும் இந்த வகையில் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளாகிய ஹிஸ்புல்லா, அல் ஹைடா, ஹமாஸ் அமைப்பு போன்ற பயங்கரவாதக் குழுவினரை விட உலகில் பிரபலம் பெற்றதாக புலிகள் அமைப்பு இருப்பதாகவும் அவ்வாறே உலகில் நாடுகளின் அரசுத் தலைவர்களைக் கொலை செய்யும் பயங்கரவாதச் செயற்பாட்டிலும் புலிகள் இயக்கம் ஏனைய மேற்படி அமைப்புகளை விடப் பிரபலம் பெற்றது எனவும் எவ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இவ்வாறு இதுவரை இரண்டு நாட்டுத் தலைவர்களை புலிகள் இயக்கம் படுகொலை செய்துள்ளதாகவும், மேற்படி சர்வதேச பிரபல பயங்கரவாத அமைப்பு எதுவும் இவ்வாறு நாடுகளின் அரசுத் தலைவர்களைக் கொல்லவில்லை என்றும் மேலும் இந்தப் படுகொலைத் தாக்குதல்களையும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது "கரும்புலிகள்' தற்கொலைப் பயங்கரவாதிகளைப் பயன்படுத்திச் செய்வித்தார் எனவும் எவ்.பி.ஐ. மேலும் கூறியுள்ளது. இந்தத் தகவல்களை முக்கிய வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

லங்காதீப வெளிநாட்டு செய்திப் பகுதி:6.7.2008

அமெரிக்காவில் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை

ஐக்கிய அமெரிக்க அரசு புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுச் சட்டபூர்வமாக அந்த அமைப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் தடை செய்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸார் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் புலிகள் இயக்கத்தினைத் தேடி தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பயனாக புலிகள் இயக்க உறுப்பினர்கள், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டோர் எனச் சந்தேகிக்கப்பட்ட பலரை இதுவரையில் அமெரிக்க பெடரல் பொலிஸார் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் புலிகள் அமைப்புகள் நிதி சேகரிப்பு மற்றும் புலிகள் இயக்கக் குழுவினருக்கு ஆதரவளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய தமிழரை பெடரல் பொலிஸார் கைது செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் மேற்படி நபரைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்காகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் பெடரல் பொலிஸ் பிரிவு வழக்குத் தொடுத்தது. தற்போது விசாரணைகளின் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் மேற்படி திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் நபருக்கு அவருடைய பல்வேறு பயங்கரவாதத் தொடர்புக் குற்றங்களுக்கு மாறாக மொத்தம் 57 மாத சிறைத் தண்டனையை அமெரிக்க சமஷ்டிப் பிரதேச பெண் நீதிபதியாகிய கெதரின் சீ.பிளேக் விதித்துள்ளார். இந்தச் சிறைத் தண்டனை மேற்படி நபர் செய்துள்ள பிரதான குற்றங்களாகிய அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் நிதி சேகரித்தது மற்றும் குறித்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் குழுவினருக்கு உதவி செய்தது ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதாக நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப : வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி

Tuesday, July 1, 2008

இறுதிப்போருக்காக பாரிய அழிவை ஏற்படுத்தும் புதிய ஆயுதம் தயாரிப்பு

வடக்கில் புலிகள் இயக்கத்தினரின் இறுதிக் களப்பிரதேசமாகிய வன்னிக்காடுகளைத் தற்போது அரசபடையினர் முற்றுமுழுதாகச் சுற்றிவளைத்திருப்பதாகவும் இவ்வாறு சுற்றிவர நிலைகொண்டிருக்கும் களமுனைகளிலிருந்து நாளுக்குநாள் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய வன்னிக் கேந்திர நிலையங்களை நோக்கிச் சிறிதுசிறிதாக அரசபடையினர் முன்னேறி வருவதாகவும் இதனால் வன்னிப்பிரதேசங்கள் படிப்படியாக அரசபடையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் நாகர்கோவில் பிரதேசங்களில் பாதுகாப்பு முன்னரண் களமுனைகளில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையேயான மோதல்கள் குறைந்திருந்தாலும் வெலிஓயா, வவுனியா, மன்னார் பிரதேசங்களில் அரசபடையணிகளுக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே பயங்கரமோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது அரச விமானப்படையினர் இராணுவத்தினருக்கு உதவியாக தீவிர விமானத்தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். இதன்விளைவாக அண்மையில் கடந்த 23 ஆம் திகதி மேற்படி ஒரு களமுனைப் பகுதியில் புலிகள் இயக்கத்தின் எஞ்சியிருக்கும் படைத்தலைவர்களில் முக்கிய தளபதியாகக் கருதப்படுபவரும் லெப்டினன்ட் கேணல் என்னும் பதவிப்பெயர் உடையவருமான சாரங்கன் அல்லது கரன் எனப்படும் தளபதியும் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணதாஸ் சிறீதரன் எனப்படும் இயற்பெயருடைய மேற்படி பிரதான தளபதி கொல்லப்பட்டது பற்றிய தகவலையும் புலிகள் இயக்கம் மறைத்துவிட்டது. மேற்படி தளபதி சாரங்கன் அல்லது கரன் உயிரிழந்தார் என்பதை மட்டும் தெரிவித்த புலிகள் இயக்கத்தின் ஊடகத்தரப்பு அவர் எவ்வாறு எங்கே உயிரிழந்தார் என்ற தகவல்களை முற்றாக மறைத்துவிட்டது.

இவ்வாறு நாளுக்கு நாள் வடக்கில் மேற்படி புலிகளின் கேந்திர வன்னிப்பிரதேசங்களில் அரசபடையினரின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு சிறிதுசிறிதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றி சாவதானமாக முன்னேறிவரும்நிலையில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் மேற்படி வன்னிப்பிரதேசங்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் கூறிவருகின்றனர். மேலும் இவ்வாறு தொடர்ந்து பிரதேசங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து அதைத் தடுப்பதற்காக அரசபடையினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளப் புதிய திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் வன்னித்தரப்பு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, அண்மைக்காலங்களில் அரசபடையினரின் தாக்குதல்களுக்கு புலிகள் முகம்கொடுக்க முடியாமல் பின்வாங்கிவருவதனால் புலிகளின் பிரதேசங்கள் அரசபடையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டிருப்பதை வெளிஉலகத்துக்கு மறைப்பதற்காகவும் வன்னியில் அனைத்துப் பிரதேசங்களும் தமது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது எனவும், வன்னியின் பிரதான நகரங்களாகிய கிளிநொச்சி,முல்லைத்தீவு உட்பட வன்னியின் கேந்திரப் பிரதேசங்கள் பதற்றமின்றி வழமைநிலையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது எனப் போலியாகக் காட்டுவதற்காகவும் சில பொதுநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவருகின்றனர். இந்தவகையில் அண்மையில் கிளிநொச்சியில் தமிழீழ வங்கியை புலிகள் இயக்கம் திறந்துவைத்துள்ளது.

யுத்தபீதி காரணமாக ஒதுங்கிப் பதுங்கி வாழும் வன்னிப்பிரதேச மக்கள் இந்த வங்கித் திறப்பு விழாவில் பெரும் எண்ணிக்கையில் சமுகமளிக்காவிட்டாலும் புலிகள் இயக்கத்தின் நிதிப்பிரிவுத் தலைவர்கள் உட்பட முன்னணித் தளபதிகள் அதில் பங்குபற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புலிகளின் தமிழீழ வங்கி கிளிநொச்சியில் திருவையாறுப் பகுதியிலுள்ள மகாவித்தியாலய நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்புவிழா முருகவேல் எனப்படும் புலிகள் இயக்கப் பிரமுகர் தலைமையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழீழ வங்கியில் ரூ.10,000 /= க்கு மேற்பட்ட பணத்தொகையை வைப்புச்செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்தத் திறப்புவிழா நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மாணவியருக்கு பணவைப்புக் கணக்குப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைமைத்துவம் வன்னிப்பிரதேசத்தில் படையினரின் தீவிர தாக்குதல்களும் உறுதியான படைநகர்வுகளும் நிகழ்ந்துவரும் நிலையில் பொதுநிகழ்ச்சிகளை நடத்தி வெளிஉலகத்தை ஏமாற்றும் உபாயத்தைக் கடைப்பிடித்துவரும் அதேவேளை படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கும் புதிய உபாயங்களைத் திட்டமிட்டுவருகிறது. இதற்கேற்ப அண்மையில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி படையினருக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் புதிய ஆயுதம் ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் பாதுகாப்புப் புலனாய்வுத்துறைத் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது. தற்போது இருதரப்பு மோதல்களும் தீவிரநிலையடைந்திருக்கும் வேளையில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினரின் இறுதிச் சமர் நிகழலாம் எனத் தெரியவருகிறது. இந்த இறுதிச்சமரில் பயன்படுத்துவதற்காகவே பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி மேற்படி புதிய அழிவாயுதத்தைத் தயாரித்திருப்பதாக கிடைத்துள்ள தகவல்களுக்கேற்ப இந்தப் புதிய ஆயுதங்கள் இரசாயன வெடிப்பை ஏற்படுத்தி படையினருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் எனவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லங்காதீப விமர்சனம்: 29/06/2008

Wednesday, June 25, 2008

முக்கிய படையணித் தலைவர்களை தொடர்ந்து இழந்துவரும் புலிகள் இயக்கம்!

கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் புலிகள் அமைப்பு முக்கிய படையணிகளை வழி நடத்தி வந்த பல தலைவர்களை இழந்துவிட்ட நிலையிலும் இதன் காரணமாக புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல் சக்தி வெகுவாகக் கீழடைந்துள்ள நிலையிலும் தற்போது புலிகள் அமைப்பின் பிரபல படையணி ஒன்றின் தலைவராக இருந்து முக்கிய களமுனைகளில் பங்குபற்றிய மற்றுமொரு தலைவரையும் இழந்துள்ளது. புலிகள் இயக்கத்தின் படையணிகளில் முக்கியமானதும் நீண்டகாலமாக பல்வேறு பிரதான போர்முனைகளில் பங்குபற்றியதுமான இம்ரான் பாண்டியன் எனப்படும் படையணியின் தலைவராகிய லெப்டினன் கேர்ணல் றெஜிதன் என்னும் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியே இவ்வாறு ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும் இவர் எங்கே எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற தகவல்களை புலிகள் இயக்கம் விபரமாக வெளியிடாமல் மறைத்தே வைத்துள்ளது.
போரிலோ அல்லது வேறு எந்தக் குண்டுவெடிப்புகள், தாக்குதல்கள் சம்பவங்களின்போது புலிகள் தரப்பில் கொல்லப்பட்ட உறுப்பினர் முக்கிய நபர் என்றால் அவருடைய மரணச்சடங்கில் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் தோன்றுவார்கள். ஆனால், ஏனைய சாதாரண புலிகள் இயக்க உறுப்பினர்களின் மரணச் சடங்குகள் பெரிய எடுப்பில் நடத்தப்படுவதில்லை. எனவே, இறந்த ஒரு புலிகள் அமைப்பின் நபர் இயக்கத்தில் முக்கிய தளபதியா அல்லது முக்கியஸ்தரா என்பதை அவருக்காக நடத்தப்படும் மரணச்சடங்குகளிலிருந்தே அறியலாம். இவ்வாறே முக்கிய தளபதியாகிய றெஜிதனின் மரணச் சடங்குகள் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் பெரிய ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சடங்கில் புலிகள் அமைப்பின் ஏனைய முக்கிய தலைவர்களும் தோன்றி றெஜிதனின் பூதவுடலுக்கு தமது இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.

இவர்களில் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவின் தலைவர் சூசை, இம்ரான் பாண்டியன் படையணியின் விசேட தலைவர் வேலவன், கேர்ணல் ஆதவன், கேர்ணல் தீபன் ஆகிய முக்கிய தலைவர்களும் அடங்குவர். புலிகள் இயக்கத்தில் தற்போது உயிருடனிருக்கும் ஆயுதப்படைத் தலைவர்களில் மேற்படி தலைவர்களே முன்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த றெஜிதன் மேற்குறிப்பிட்ட இம்ரான் பாண்டியன் படையணித் தலைவராக இருப்பதுடன் ஏனைய முக்கிய மூன்று படையணிகளின் தலைவராகவும் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தின் கனரக ஆயுதப் பிரிவு, விமான அழிப்புப் பிரிவு, கடல்வழியாக தரையில் ஊடுருவும் தாக்குதல் பிரிவு ஆகிய ஏனைய பிரதான தாக்குதல் படைப்பிரிவுகளினதும் தலைவராக றெஜிதன் செயற்பட்டு வந்துள்ளார். இந்த வகையில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களின்போது புலிகளின் விமான அழிப்புப் பிரிவின் தலைவராக இருந்த றெஜிதனே மேற்படி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

மேலும், றெஜிதன் கனரக ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட விசேட நிபுணராக இருந்தார் எனவும் கடந்த 20 வருடங்களாக புலிகள் இயக்கத் தலைவருடன் கூடுதல் நெருக்கத்துடன் பழகிவந்தார் எனவும் முக்கியமாக பல்வேறு யுத்தத் திட்டங்கள் சம்பந்தமாக பிரபாகரனும் றெஜிதனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்தில் நான்கு படைப்பிரிவுகளின் தலைவராக இருந்தவர் எனக் கூறப்படும் இம்ரான் பாண்டியன் படையணியின் தலைவர் றெஜிதன் கொல்லப்பட்டதைப் பற்றிய தகவல்களை புலிகள் இயக்கம் மறைத்துவிட்டாலும் பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கும் தகவல்களில் றெஜிதன் இராணுவத்தினரின் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாகவும் இந்தத் தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப:22/06/2008

சோதியா படையணியின் அடுத்த தலைவி சரிதாவும் கொல்லப்பட்டார்

அண்மைக்காலமாக புலிகள் இயக்கத்தின் முக்கிய பெண் புலிகள் படையணியாகிய சோதியா படையணியின் முன்னணி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதன் தற்போதைய தலைவி லெப்டினன்ட் கேணல் சரிதா அல்லது நிலானி அல்லது தர்மாவும் கடந்த 6 ஆம் திகதி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அண்மையில் வெலிஓயா பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் ஆரம்பித்திருந்த பாரிய தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த 6 ஆம் திகதி வெலிஓயா எல்லைப் பிரதேசங்களுக்குள் ஊடுருவியுள்ள இராணுவத்தினருடன் புலிகள் இயக்கத்தினர் பெரும் மோதல்களில் ஈடுபட்டதாகவும் இந்தத் தாக்குதல்களை புலிகள் இயக்கத்தின் பலம்வாய்ந்த சோதியா பெண் புலிகள் படையணியும் மேற்கொண்டதாகவும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ள தகவல்களில் இராணுவத்தினருக்கும் சோதியா படையணி உட்பட புலிகளின் ஏனைய படையணிகளுக்குமிடையே கடந்த 6 ஆம் திகதி வெலிஓயா பிரதேசத்தின் எல்லைப்பகுதிக்குள் நடந்த மோதல்களில் சோதியா படையணித் தலைவி "சரிதா' கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

லங்காதீப :பாதுகாப்பு விமர்சனம்: 22.06.2008

Saturday, June 21, 2008

லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை

லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் நாலாயிரம் பவுண்ஸ் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது.
இதுபற்றி ஸ்தானிகர் அலுவலக கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா அலுவலகத்துக்கு அறிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் தினமும் லண்டன் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்துக்குட்பட்ட படிங்ரன் பகுதியிலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளைக்குச் சென்று அலுவலகத் தேவைகளுக்காக பணம் எடுத்து வருவதாகவும், வங்கி நெடுந்தூரம் இல்லாத காரணத்தால் இவ்வாறு வழமையாக அவர் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு நடந்தே வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சம்பவ தினமாகிய 17 ஆம் திகதி பி.ப. 2.30 மணியளவில் அவர் வங்கிக்குச் சென்று பணத்துடன் திரும்பிக் கொண்டிருந்தபோது அதனை அவதானித்த குறித்த கொள்ளையர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்து அவருடைய கோட்டின் பின்பக்கம் மை ஊற்றப்பட்டுக் கறைபடிந்திருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்களுடைய பேச்சுக்குக் கவனம் கொடுக்காது கணக்காளர் பெரேரா அலுவலகத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார் மீண்டும் அவரை நெருங்கிய கொள்ளையர்கள் அவருடைய கோட்டில் உள்ள மையை ஒற்றி எடுக்கும்படி ""ரிஸு' கடதாசியைக் கொடுத்தாராம்.

அதை மறுத்த கணக்காளர் அவருடைய கோட்டின் பின்பக்கம் மைக்கறை உண்மையில் உள்ளதா என்று அறிந்துகொள்வதற்காக கோட்டைக் கழற்றியுள்ளார். உடனே, மேற்படி கொள்ளையர்களில் ஒருவர் கோட்டை அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடினாராம். அந்த நபரைத் துரத்திக்கொண்டு கணக்காளரும் பின்னால் ஓடியுள்ளார். ஆயினும், அந்த நபர் வாகனம் ஒன்றில் ஏறித் தப்பியோடிவிட்டாராம். இவ்வாறு கொள்ளையர் பிடுங்கிச் சென்ற கோட்டுப் பையினுள்ளேயே மேற்படி வங்கியிலிருந்து எடுத்துவந்த சுமார் 4000 பவுண்ஸ் இருந்ததாகவும் இவ்வாறு பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் வெள்ளை இனத்தவர்களே எனவும் கணக்காளர் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ள தகவலில் கூறியுள்ளார்.

லங்காதீப: 19.06.2008

மேற்கு நாடுகளில் புலிகளை கைது செய்யும் பொலிஸ் நடவடிக்கைகள் தீவிரம்

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல்வேறு முன்னணி மேற்கு நாடுகளிலும் சிறிலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்பை மட்டுமன்றி அதற்கு ஆதரவாக நிதிசேகரிப்பு, பிரசாரம் போன்ற செயற்பாடுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டன. இதன் பின்னர் மேற்படி நாடுகளில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பொலிஸ் பிரிவினர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்ட பிரமுகர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளையும் தேடி பரந்த தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களைப் பெருந்தொகையில் கைது செய்ததுடன், அவர்களால் நடத்தப்பட்டு வந்த அமைப்புகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் செயற்பாட்டு மையங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ""சீல்' வைக்கப்பட்டன.
இவ்வாறு ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவு அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவற்றில் ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் பகிரங்கமாகவும் பரந்த வகையிலும் நடைபெற்று வந்துள்ளன. அத்துடன், அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டுமன்றி அந்த நாடுகளைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள், பிரமுகர்களும் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்குப் பெரும் ஆதரவளித்து வந்துள்ளனர். எவ்வாறாயினும் மேற்படி மேற்கு நாடுகளில் ஆட்சியிலுள்ள அரசாங்கங்கள் பயங்கரவாதப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக உறுதியான பொலிஸ் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த வரிசையில் கடந்தவாரம் இத்தாலியிலும் புலிகள் இயக்கத்தவர்கள், ஆதரவாளர்களுக்கு எதிரான கடும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை இத்தாலியப் பொலிஸார் மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்து வருபவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 33 சிறிலங்கா நாட்டுத் தமிழர்களை இத்தாலியப் பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். இத்தாலியில் தமிழர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் எனக் கருதப்பட்ட சில பிரதேசங்களில் கடந்த 18 ஆம் திகதி மேற்படி பயங்கரவாதத் தடுப்பு விசேட பொலிஸ் பிரிவினர் கடும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே பரவலாக அந்தப் பகுதிகளில் வைத்து குறித்த 33 தமிழர்களையும் இத்தாலியப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்தனர்.

இதற்கேற்ப இத்தாலியில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் பலமாக இருக்கும் நாபொலி எனப்படும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளின் போது கூடுதலான புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாபொலியில் 28 பேரும் சிசிலி மற்றும் பிரதேசங்களில் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாதாந்தம் அங்கு வாழும் தமிழர்களிடம் பயங்கரவாத புலிகள் இயக்கத்துக்காக பெருந்தொகையான யூரோ பணத்தை சேகரித்துள்ளனர் எனவும் இவ்வாறு நிதிசேகரிப்பு நடவடிக்கையில் அவர்களில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களைக் கைது செய்ததாகவும், இத்தாலியில் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கெதிரான விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவினர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட முக்கிய தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுக்கேற்ப இத்தாலியில் பலர்மோ என்னும் முக்கிய நகரத்திலேயே புலிகள் இயக்கத்தின் பிரதான நிதிசேகரிப்பு அலுவலகம் அமைந்திருந்ததாகவும் இதனைத் திடீரென்று சுற்றிவளைத்த விசேட நடவடிக்கைப் பிரிவினர் அங்கு நிதிசேகரிப்பு சம்பந்தப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தினரைக் கைதுசெய்தனர். இவ்வாறு இத்தாலியின் முக்கிய நகரங்களான நாபொலி, ஜெனோவா, டியெல்லா, அலர்மோ பொலொன்நோ, றெஜியோ, எமிலியா ஆகிய நகரங்களில் சுமார் 200 விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை தேடும் பெரும் எடுப்பிலான தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை கடந்த 18 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். மேலும், இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு முக்கிய இடம்கொடுத்து இத்தாலிய நாட்டு முன்னணித் தொலைக்காட்சி ஒன்றில் நேர்முக வர்ணனை போன்று நாள் முழுவதும் பிரபல செய்தி அறிவிப்பாளரின் விமர்சனங்களுடன் ஒளிபரப்பப்பட்டன. இதன்மூலம் குறித்த இத்தாலியத் தொலைக்காட்சி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கெதிரான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு பரந்த பிரசாரத்தை வழங்கியுள்ளது.

அத்துடன், மேற்படி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்காக நிதிசேகரிப்பதில் ஈடுபட்டிருந்து கைது செய்யப்பட்டவர்கள் இத்தாலியில் தொழிலுக்கென வந்துசேர்ந்த சிறிலங்கா நாட்டுத் தமிழர்களே எனவும் இவர்கள் அங்கு பல்வேறு வேலைத் தளங்களில் தொழில் செய்துவரும் அதேவேளை, இவ்வாறு புலிகள் இயக்கத்துக்காக நிதிசேகரிக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளிலும் நெடுங்காலமாக ஈடுபட்டுவந்துள்ளனர் என இத்தாலிய ஊடகத்தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து இத்தாலியின் ஏனைய சந்தேகத்துக்கிடமான பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வேறும் சில விசேட பொலிஸ் குழுக்களையும் இத்தாலிய பொலிஸ் திணைக்களம் அமைத்து சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து மேற்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக சட்டபூர்வமாகத் தடை செய்ததுடன் அதற்கு ஆதரவான செயற்பாடுகளையும் தடைசெய்தன. இதன் தொடர்ச்சியாகவே இத்தாலிய அரசும் புலிகள் இயக்கத்தை அந்த நாட்டில் தடை செய்திருந்தது. தற்போது கடந்தவாரம் இத்தாலிய அரசு புலிகள் இயக்கப் பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கைகளை வெகுவாக இறுக்கியுள்ளதை மேற்படி சம்பவங்கள் தெரிவித்துள்ளதாக இத்தாலி ஊடகங்கள் கூறியுள்ளன.

லங்காதீப: 19.06.2008

Thursday, June 19, 2008

"வண்போர் பேஸ்" முகாமை நெருங்கும் படையினர்

வெலிமடவில் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் ஊடுருவி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிவரும் அரச படையினர், அவர்களின் பாதுகாப்பு முன்னரண் பகுதியில் பதுங்கு குழிகளுக்கு அப்பால் சுமார் எட்டு கிலோ மீற்றர் வரை துரித கதியில் முன்னேறிவிட்டனர். தற்போது அரச படையினர் நிலைகொண்டிருக்கும் பிரதேசங்கள் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டச் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரப் பிரதேசமாகும். புலிகள் இயக்கத்தினரால் ""புதிய பூமி' என்று அழைக்கப்படும் இந்தப் பிரதேசம் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட உயர்மட்டத் தலைவர்கள் இக்கட்டான கால கட்டங்களில் பதுங்கியிருக்கக்கூடிய நிலக்கீழ் நிலைய வசதிகளும் பாதுகாப்பும் உடையதெனவும் இவ்வாறு நீண்டகாலம் பிரபாகரன் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து உயிர் தப்புவதற்காக இந்தப் புதிய பூமிப் பிரதேசத்திலேயே மறைந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ""வண்போர் பேஸ்' 14 முகாம்களை தொடர்ச்சியாக உள்ளடக்கியுள்ள பெரிய கூட்டு முகாம் தொடர் எனவும் இதனாலேயே இது ""வண்போர் பேஸ்' என அழைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், பிரபாகரனால் முதன் முதல் அமைக்கப்பட்ட முகாம் தொடர் இதுவே எனவும் தற்போது இந்த ""வண்போர் பேஸ்' கூட்டு முகாம்கள் அமைந்திருக்கும் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகள் வரை அரச படையினர் முன்னேறிவிட்டதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் வன்னிப் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் தாக்குதல்களைப் பொறுத்தவரை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ""வண்போர் பேஸ்' கூட்டு முகாம் சுமார் 21 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1987 ஆம் ஆண்டுப் பகுதியில் பிரபாகரனின் நேரடியான கண்காணிப்பில் உருவாக்கப்பட்டதாகும். இந்த முகாம் தொடர்கள் வடக்கு எல்லைகளாக கிண்ணியூற்று, கொய்யாக்குளம், ஒட்டுசுட்டான் பிரதேசங்களைக் கொண்டதாகும். அவ்வாறே மேற்கு எல்லையில் மாங்குளம், கனகராயன்குளம் பிரதேசங்களையும் அதற்கு அப்பால் அலம்பில், கொக்கிளாய் பிரதேசங்களையும் தெற்கில் வெலிஓயா பிரதேசத்தையும் ""வண்போர் பேஸ்' முகாம் பிரதேசம் கொண்டுள்ளது. அரச படையினர் முன்னேறி தற்போது இந்த முகாமின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.

வண்போர் பேஸ் முகாம் தொகுதிக்குள் அடங்கியுள்ள 14 முகாம்களும் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த தலைவர்களின் பெயர்களில் அமைந்துள்ளன. இவ்வாறு நாகம் பேஸ், ஜீவன் பேஸ், கெஸ்ட்ரோ பேஸ், ஈசன் பேஸ், சுகந்தன் பேஸ், சதீஷ் பேஸ், குமரன் பேஸ், மயூரன் பேஸ், ஒகஸ்ரின் பேஸ் என இறந்த புலிகள் இயக்க முன்னணித் தலைவர்களின் பெயர்களில் அமைந்துள்ள 11 முகாம்களே மேற்படி ""வண்போர் பேஸ்' கூட்டு முகாம் தொடரில் உள்ள பிரதான முகாம்கள் ஆகும்.

1987 மே மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை அரச படையினர் வடமராட்சிப் பிரதேசங்களில் தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடிவந்த பிரபாகரன் ""வண்போர் பேஸ்' முகாமிலேயே பாதுகாப்பாகப் பதுங்கி வாழ்ந்தார். ஏனைய முகாம்கள் சுற்றிவர அமைந்திருக்க மத்திய பகுதியிலுள்ளதும் அடர்ந்த காட்டுக்குள் அமைந்ததுமான பிரதான வண்போர் பேஸ் முகாமில் பிரபாகரன் உயர் பாதுகாப்புடன் இருந்துள்ளார். 1987 இல் அரச படையினரின் வடமராட்சி நடவடிக்கையின் பின்னர் 1987 ஆம் ஆண்டிலேயே இந்திய இராணுவத்தினர் ஸ்ரீலங்காவுக்குள் பிரவேசித்த காலகட்டத்திலும் பின்னர் புலிகள் இயக்கத்தினருக்கும் இந்திய இராணுவத்தினருக்குமிடையே பெரும் மோதல் வெடித்த சந்தர்ப்பத்திலும் பிரபாகரன் குறித்த ""வண்போர் பேஸ்' முகாமிலேயே இருந்துள்ளார். அண்மையில் இருதயப் பாதிப்பால் உயிரிழந்ததாக புலிகள் இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்க சிரேஷ்ட தலைவர் பால்ராஜ் மேற்படி காலகட்டங்களில் பிரபாகரனுக்குப் பாதுகாப்பாக குறித்த ""வண்போர் பேஸ்' முகாமிலேயே இருந்தார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபாகரனுக்கும் பால்ராஜுக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருந்துள்ளமை இதிலிருந்து தெரியவருகிறது.

1995 இல் அரசபடையினர் பாரிய ""றிச்டவரச' இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றிய பின்னர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி மீண்டும் ""வண்போர் பேஸ்' முகாமுக்குச் செல்லாமல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ""வண் நைன் பேஸ்' முகாமுக்கே சென்று தங்கியிருந்தார். எவ்வாறாயினும், தற்போது ""வண்போர் பேஸ்' முகாம் தொடர்களால் வழங்கப்படும் பாதுகாப்புடனேயே அப்பிரதேசங்களில் எங்கோ பதுங்கி வாழ்வதாகத் தெரியவந்துள்ளது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ள இந்த வண்போர் பேஸ் முகாம் பிரதேசத்திலேயே தற்போது புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட ஏனைய தலைவர்கள் உயர் பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் அரச படையினர் அடர்ந்த காடுகளின் ஊடாகத் தற்போது முன்னேறி வருகின்றனர். இவ்வாறு அரச படையினர் முன்னைய நிலைகளிலிருந்து எட்டுக் கிலோ மீற்றர் தூரம் மேற்படி வண் போர் பேஸ் முகாமை நோக்கி காடுகளினூடாக முன்னேறியுள்ளனர். இந்த வகையில் வெகுவிரைவில் அரச படையினர் கட்டுப்பாட்டுக்குள் ""வண்போர் பேஸ்' முகாம் பிரதேசங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்காதீப: 15.06.2008

இலங்கை வரும் இந்திய பிரதமர் பிள்ளையானைச் சந்திப்பாரா?

தெற்காசிய நாடுகளின் ""சார்க்' மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ""சார்க்' அமைப்பின் தரப்பிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தரப்பிலும் மேற்கொண்டு வரப்படும் நிலையில் இவ்வாறு ""சார்க்' மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்காவுக்கு வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தற்போது மாகாணசபை ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவரப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் செல்வாரா என்பது பற்றியும் அவ்வாறு செல்ல நேர்ந்தால் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சந்தித்துப் பேசுவாரா என்பது பற்றியும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இந்தவகையில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு ""சார்க்' மாநாட்டுக்காக ஸ்ரீலங்காவரும் இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் பெற்றுத் தருமாறு கிழக்கு மாகாணசபை தரப்பில் கேட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இதுவரையில் இந்திய அரசு தரப்பிலிருந்து மேற்படியாக இந்தியப் பிரதமர் ஸ்ரீலங்கா வந்து ""சார்க்' மாநாட்டில் கலந்து கொண்டபின்னர் கிழக்கு மாகாணம் செல்வது பற்றியோ கிழக்கு முதலமைச்சர் பிள்ளையானைச் சந்தித்துப் பேசுவது பற்றியோ எந்தவிதமான தகவலோ அறிவிப்போ வெளியாகவில்லை.

ஆயினும், இந்தியச் செய்திவட்டாரங்களில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப கடந்த காலங்களில் பிரபாகரனின் புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கிவந்த பிள்ளையானுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பை ஏற்படுத்தவோ பேச்சுவார்த்தை நடத்தவோ சாத்தியம் இல்லை என்ற ரீதியிலான கருத்துகளே இந்திய அரச தரப்பில் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.

லங்காதீப: 15.06.2008

Wednesday, June 11, 2008

இன்னும் சில நாட்களில் கருணா ஸ்ரீலங்காவில்

புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்துசென்று தனிக்குழுவாக இயங்கிவந்த வரும் பின்னர் அக்குழுவின் தலைமைத்துவம் பிள்ளையானிடம் சென்றதையடுத்து லண்டன் சென்றவருமான கருணா இன்னும் சில நாட்களுக்குள் ஸ்ரீலங்கா வந்து சேருவார் என லண்டன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா லண்டனில் வந்து இறங்கியபொழுது விமான நிலைய அதிகாரிகளால் அவருடைய கடவுச்சீட்டு மற்றும் பத்திரங்களை சோதனையிடப்பட்ட வேளையில் அவர் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை லண்டன் விமான நிலையப் பொலிஸ் பிரிவினர் கைதுசெய்திருந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் கடவுச்சீட்டு மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டின் பேரில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் கருணாவின் கடவுச்சீட்டு மோசடி நிரூபிக்கப்பட்டதையடுத்து, கருணாவுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.

எவ்வாறாயினும் சில மாதங்களின் பின்னர் சிறையில் நன்னடத்தை அடிப்படையில் கருணாவை விடுதலை செய்யும்படி கருணா தரப்பிலிருந்து நீதிமன்றத்துக்கு செய்யப்பட்ட விண்ணப்பங்களையடுத்து அதனை ஏற்றுக்கொண்டு விடுதலை செய்யும்படி கட்டளை வழங்கிய நீதிமன்றம் அவர் விடுதலை செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கருணா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது கருணாவை ஸ்ரீலங்காவுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் அரசு தரப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் அவர் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்படுவார் எனவும் லண்டன் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லங்காதீப வெளிநாட்டுச் செய்திப்பகுதி: 08.06.2008

7 ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் புலிகள் மீது கடும் கண்டனம்

ஆசிய மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த முன்னணிப் பத்திரிகைகள் தரப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கேற்ப ஆசியாவின் ஏழு முக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக ஸ்ரீலங்கா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவர்களின் பூரண ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வேண்டிய ஆதரவையும் உதவிகளையும் தமது நாடுகள் வழங்குமெனவும் உறுதியளித்துள்ளனர்.
அண்மையில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், மியன்மார் (பர்மா), மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ் ஆகிய முன்னணி ஆசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம சிங்கப்பூரில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை நிகழ்வுகளின்போதே குறித்த நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகளின் ஸ்ரீலங்காவுக்கான உறுதியான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆசிய மற்றும் மத்தியகிழக்கு ஊடகங்கள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு சிங்கப்பூரில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தின் மனிதத்தன்மையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக மேற்படி முக்கிய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டுமன்றி உலகின் ஏனைய முக்கிய உலக நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் இந்த வகையில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம புலிகள் இயக்கத்துக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் இராஜதந்திர ரீதியில் வெற்றிபெற்றுள்ளார் எனவும் மேலும் குறித்த வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லங்காதீப வெளிநாட்டு செய்திச்சேவை பகுதி: 08.06.2008

புலிகளின் குண்டு வெடிப்புக்களுடன் உயர்பதவியிலுள்ளவர்களுக்கு சம்பந்தம்

புலிகள் இயக்க பயங்கரவாதிகள் மேற்கொண்டு வரும் குண்டுத்தாக்குதல்களுடன் அரச திணைக்களங்களில் பணியாற்றும் பொறியியலாளர்கள் போன்ற உயர்பதவி வகிப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 4 ஆம் திகதி வெள்ளவத்தைக்கும் தெகிவளைக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே இவ்வாறு பொறியியலாளர்களாகப் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்களும் புலிகளின் குண்டுவெடிப்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேற்படி வெள்ளவத்தைதெகிவளை புகையிரதப்பாதைக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சதீசன் பாலசுப்பிரமணியம் எனப்படும் நபரையும் குண்டு வெடிப்புக்கு உதவி வழங்கியவர்கள் எனக் கருதப்படும் தமிழ் இனத்தைச் சேர்ந்த இரண்டு தேசிய பொறியியலாளர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இவர்களில் சதீசன் பாலசுப்பிரமணியம் எனப்படுபவர் குறித்த குண்டு வெடிப்பின் பின்னர் மனைவியுடன் கிளிநொச்சிக்குத் தப்பியோடிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே வவுனியா ஈரப்பெரிய குளம் பாதுகாப்பு தடைமுகாம் பகுதியில் வைத்து 4ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார் என சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரும் மனைவியும் பின்னர் விசாரணைகளுக்காக கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர் கொழும்பு உலக வர்த்தக மத்திய நிலையத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் வத்தளையில் வசித்து வந்த இந்த நபருக்கும் தெகிவளை புகையிரதப்பாதை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அந்தக் கிளைமோர் குண்டு வெடிப்பை நடத்திவிட்டு தப்பியோடுகையில் அவரைப்பிடிக்க முச்சக்கரவண்டி சாரதியொருவர் முயற்சித்த பொழுது அவர் கைப்பை ஒன்றை விட்டுச் சென்றார் எனவும் அதிலிருந்த நாட்குறிப்பு புத்தகத்திலுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே மேற்படி இரண்டு பொறியியலாளர்களும் வெள்ளவத்தையில் அவர்களின் வசிப்பிடத்தில் வைத்துச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மேற்படி இரண்டு பொறியியலாளர்களும் ராஜகிரிய பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் என்பது தெரியவந்துள்ளதாகவும் இவர்களுக்கும் புலிகள் இயக்க பிரபல நபராகிய குறித்த சதீசன் பாலசுப்பிரமணியத்துக்கும் இடையில் நீண்டகாலம் தொடர்புகள் இருந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து மேலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கச் சந்தேக நபர் பாலசுப்பிரமணியம் கடந்த காலங்களில் பலதடவை சிங்கப்பூர் சென்று வந்துள்ளார் என்பது விசாரணைகளின்போது தெரிந்துள்ளதாகவும், கிடைத்த தகவல்களிலிருந்து இவர் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காதீப: 06/06/2008

Friday, June 6, 2008

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து இரசாயனப் பொருட்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கென கப்பல் கொள்கலனில் எடுத்துவரப்பட்ட இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இரகசிய புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கொள்கலனில் 350 பெரிய போத்தல்களில் இரசாயனப் பொருட்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் சம்பந்தமாக சீன இனத்தவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கப்பல் இறக்குமதி பிரிவைச் சேர்ந்த எழுதுவினைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் இதுபற்றிச் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரசாயன பொருட்கள் அடங்கிய போத்தல்கள் இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை பத்திரிகைத் தரப்புக்குக் கூறியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மேலும் பெறப்பட்டிருக்கும் தகவல்களில் குறித்த இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன் கொழும்பு மஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் தமிழர் ஒருவரின் பெயரிலேயே எடுத்துவரப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்கலன் சோதனை நடவடிக்கைகளின் போது அதற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேற்படி இரசாயனப் பொருட்கள் அடங்கிய 350 போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டவுடன் முதலில் அந்த கொள்கலன் பொருட்களுக்குச் சொந்தமான குறித்த மஹவத்த தமிழரே கைது செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து அவரிடம் இரகசிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போதே குறித்த சீன நபர், தமிழ் நபர் மற்றும் இறங்குதுறை அலுவலக எழுதுவினைஞர் ஆகிய மூவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஹவத்தவில் வசித்துவந்த அந்தத் தமிழர் சிலாபம் தேயிலை உற்பத்திக் கைத்தொழில் நிறுவனம் ஒன்றில் தொழிலாளர் தரத்தில் பணிபுரிகிறார் எனவும் இவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலேயே மேற்படி கொள்கலன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் முக்கிய விடயம் யாதெனில், மேற்படி கொள்கலனில் விளையாட்டுப் பொருட்கள் எடுத்துவரப்படுவதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயினும் இந்த விளையாட்டுப் பொருட்களிடையே மேற்படி இரசாயனப் பொருட்கள் அடங்கிய 350 போத்தல்களும் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கொள்கலன் சோதனையின் போதே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போத்தல்களில் அடங்கியுள்ள இரசாயனப் பொருள் இரசாயன ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது அது "?தைனியல் குளோறைட்' எனப்படும் இரசாயனப் பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பொருட்கள் எடுத்து வரப்படுவதாகப் பதிவு செய்யப்பட்ட போதிலும் அந்த கொள்கலனுக்குள் விளையாட்டுப் பொருட்களின் அடியில் மிக சூட்சுமமாக குறித்த இரசாயனப் பொருட்கள் சோதனை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதுபற்றித் துறைமுக அதிகாரிகள் இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவுக்கு அறிவித்துள்ளதுடன் கொள்கலன் பொருட்களையும் ஒப்படைத்தனர். இவ்வாறு துறைமுக அதிகாரிகள் கொள்கலனுக்குரிய மஹவத்த தமிழரின் பெயர், முகவரி, விபரங்களை அறிவித்ததுடன், குறித்த முகவரிக்குச் சென்று அவரை இரகசியப் புலனாய்வுப் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கொடுத்த தகவல்களின் அடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட இரகசியப் பொலிஸார் மேற்படி சீன நபர், தமிழ் நபர், துறைமுக எழுதுவினைஞர் மூவரையும் பிடித்துள்ளனர். இதில் சீன நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அவர் நீண்ட காலமாகவே ஸ்ரீலங்காவிலேயே வசித்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விசாரணைகளில் இந்த இரசாயனப் பொருட் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட மேலும் பலரின் விபரங்களும் கிடைத்துள்ளதாகவும் இதற்கேற்ப மேற்படி "தைனியல் குளோறைட்' எனப்படும் இரசாயனப் பொருட்கள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் தேவைக்காகவே எடுத்துவரப்பட்டுள்ளதாகவே கருதுவதாக இரகசியப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடும் சந்தேகம் தெரிவித்திருக்கும் இரகசியப் பொலிஸ் உதியோகத்தர்கள் மேற்படி கைது செய்யப்பட்ட கொள்கலன் பொருட்களின் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்ட மஹவத்த தமிழரையும் மற்றும் இறக்குமதி அலுவலக எழுதுவினைஞர் உட்பட மூன்று நபர்களையும் தடுத்து வைத்துத் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்காதீப : 04.06.2008

Thursday, June 5, 2008

புலிகளின் படையணிகளுக்கு திறமையான தலைவர்கள் இல்லாத நிலை உருவாகிறது

அண்மையில் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவர்களில் முக்கியமானவராகிய பால்ராஜ் உயிரிழந்தார். இவர் இருதயநோய் காரணமாக உயிரிழந்ததாக புலிகள் இயக்கம் அறிவித்திருந்தது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் பால்ராஜின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த இரகசிய நிலையத்திற்கு ஏனைய சிரேஷ்ட தலைவர்களுடன் வந்து பால்ராஜுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தார். இதிலிருந்து இயக்கத்தின் செயற்பாடுகளில் பால்ராஜ் வகித்துவந்த முக்கியத்துவத்தை உணரலாம். இவ்வாறு கடந்தகாலங்களில் அதன் முக்கிய தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதி புதன்கிழமை மற்றுமொரு முக்கிய தலைமைத்துவத்தை இழந்தது. அன்று புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகள் படையணியில் முக்கிய அணியாகிய ""சோதியா' பெண்புலிகள் படையணியின் பிரதித் தலைவி லெப்டினன் கேர்ணல் செல்வி உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகளில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் கலந்துகொண்டு செல்வியின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். எவ்வாறாயினும் புலிகள் இயக்கத்தின் ஊடகங்கள் சோதியா படையணியின் பிரதித் தலைவி உயிரிழந்ததற்கான காரணத்தை உத்தியோகபூர்வமாக கூறாமல் அவர் உயிரிழந்தார் என்ற தகவலைத் தெரிவித்திருந்தது. ஆயினும், இராணுவ புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் மே 25 ஆம் திகதி மன்னார் பாலம்பிட்டி பிரதேசத்தில் அரச படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மேற்படி புலிகள் இயக்கத்தின் சோதியா பெண்புலிகள் படையணியின் தலைவி செல்வி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

புலிகள் இயக்கம் தரப்பில் செல்வியைப் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவர் 1995 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் எனவும் அரச படையினருக்கு எதிரான முக்கிய தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர் எனவும் மேலும் புதிதாக இயக்கத்தில் சேர்க்கப்படும் பெண்கள் படையணியினருக்கு யுத்தப் பயிற்சிகளை வழங்கிய முக்கிய ஆயுதப்பயிற்சியாளராகச் செயற்பட்டுவந்தார் எனவும் கூறியுள்ளது. மேலும், இவர் புலிகளின் குரல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வந்துள்ளார். அத்துடன், செல்வியின் மரணம் புலிகள் இயக்கத்துக்கு படையணி நடவடிக்கைகள் மற்றும் யுத்தச் செயற்பாடுகளைப் பொறுத்தவரை பெரும் இழப்பு எனப் புலிகள் இயக்கமே துக்கம் தெரிவித்துள்ளது.

சோதியா படையணியின் விசேட தலைவியாகிய கேர்ணல் துர்க்கா மற்றும் ஏனைய சிரேஷ்ட பெண்கள் படையணித் தலைவிகளின் தலைமையில் மேற்படி செல்வியின் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் பங்கெடுத்ததிலிருந்து புலிகள் இயக்கத்தில் செல்வியின் முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக உள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்தின் யுத்தத் தாக்குதல்களில் செல்வி முக்கிய தலைவியாக செயற்பட்டதால் மட்டும் பிரபாகரனின் மனைவி அங்கு பிரசன்னமாயிருக்கவில்லையெனவும் அவ்வாறு பெண் போராளிகள் தலைவிகளுடன் அவர் தோன்றியதன் மூலம் புலிகள் இயக்கத்தில் சேருவதற்கான உந்தலை தமிழ் யுவதிகளிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் செல்வியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டார் எனவும் இராணுவப் புலனாய்வுத்தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரபாகரனின் மனைவி வன்னியை விட்டு வெளியேறிவிட்டார் என்று அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு அவர் வெளியேறவில்லை. இன்னும் வன்னியில் தான் இருக்கிறார் என்று வன்னியிலுள்ள பெண் புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் காட்டுவதற்காகவே பிரபாகரன் மனைவி மதிவதனி உயிரிழந்த செல்விக்கு இறுதி மரியாதை செய்யும் சாக்கில் அங்கு ஏனைய புலிகள் இயக்க சிரேஷ்ட தலைவிகளுடன் தோன்றினார் எனவும் மேலும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது உயிருடனுள்ள புலிகள் இயக்கத் தலைவிகளைக் காட்டிலும் களமுனைகளில் திறமை வாய்ந்த தலைவியாகக் கருதப்படும் கேணல் செல்வி ""விழி நிமித்திய வீரம்' என்ற பெயரில் சோதியா படையணியால் வெளியிடப்பட்ட இறுவெட்டில் நான்கு பாடல்களையும் எழுதியுள்ளார். இவ்வாறு புலிகள் இயக்கத்தில் கடந்தகாலங்களில் கேர்ணல், லெப்டினன் கேர்ணல், என்னும் உயர் பதவி வகிக்கும் பெண் புலிகள் படையணிகளின் தலைவிகள் பலர் உயிரிழந்துவிட்டனர். அவ்வாறே அண்மைக்காலங்களில் புலிகள் இயக்கத்தின் படையணித் தலைவர்கள் பலரும் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் மிகவும் குறுகிய காலத்தில் புலிகள் இயக்கத்தின் படையணிகளுக்கு ஏற்ற தலைமைத்துவம் இல்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லங்காதீப விமர்சனம்:01.06.2008