Showing posts with label கவிஞர் புலமைப்பித்தன். Show all posts
Showing posts with label கவிஞர் புலமைப்பித்தன். Show all posts

Monday, June 16, 2008

சீக்கியரின் தலைப்பாகையில் காட்டும் அக்கறையை ஈழத் தமிழரின் தலைபோகும் விடயத்தில் காட்டுவதில்லை

இந்தியப் பிரதமரை சாடுகிறார் கவிஞர் புலமைப்பித்தன்

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆயுள் தண்டனைக் கைதியை விட மோசமான நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி இருப்பதாகத் தெரிவித்த அ.தி.மு.க. முக்கியஸ்தரும் கவிஞருமான புலமைப்பித்தன், பிரான்ஸிலுள்ள சீக்கியர்களின் தலையிலுள்ள தலைப்பாகை குறித்து கவலைப்படும் இந்தியப் பிரதமர் தலைபோகும் நிலையிலுள்ள இலங்கைத் தமிழர் தொடர்பில் கவலை கொள்வதில்லையென்றும் குற்றம் சாட்டினார்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிக்கு இருக்கக்கூடிய அழுவதற்கான உரிமை கூட தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த போது கருணாநிதி எழுதிய இரங்கற்பாவிற்கு இந்திய ஆட்சியாளர்கள் மட்டத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு இதனையே வெளிக்காட்டுகின்றது.

பிரான்ஸில் உள்ள சீக்கியர்களின் தலையில் உள்ள தலைப்பாகை குறித்து கவலைப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தலைபோகும் நிலையிலுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை

இந்தியத் தமிழன் என்ற அடையாளத்தை நான் கொண்டுள்ள போதும் மானத்தாலும் குணத்தாலும் நான் ஒரு இலங்கைத் தமிழன். இலங்கையில் பிரபாகரன் தலைமையில் தனியரசு விரைவில் மலருமென்றார்.