Showing posts with label Air Attack. Show all posts
Showing posts with label Air Attack. Show all posts

Sunday, August 10, 2008

வடக்கே வாழும் மக்கள் மட்டுமல்ல வாயில்லா ஜீவன்கள் கூட துரதிஷ்டமானது


இலங்கை அரசபயங்கரவாதிகளின் போராட்டுத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் முடுக்கிவிட்டுள்ளது. அங்கு மக்கள் குடியிருப்புக்கள் மீது சனிக்கிழமை இடம்பெற்ற கண்மூடித்தனமான விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 12 வீடுகளும் சேதமடைந் துள்ளன. ஆசிரியரான சு. தயாபரன் (45 வயது), க.பசுங்கிளி (35 வயது) ஆகியோரே பலியான வர்களாவர். நேற்று முற்பகல் 9.50 மணியளவில் கிபீர் ரக விமானங்கள் இக்குண்டுத் தாக்குதலை நடத்தி யுள்ளன. இத் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் தயாபரனும் க. பசுங்கிளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளனர். இதேவேளை புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை 9.55 மணியளவில் புலிகளின் புலனாய்வு செயற்பாட்டுக் குழு அலுவலகம் மீது வான் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் என்று சொல்;லும் அரசு தனது பயங்கரவாத நிலையை மக்கள் பிரதேசத்தில் காட்டிவருகின்றது என்பது கவலைக்குரியவிடயம் இருந்தும் அப்பகுதிகளில் வாழும் வாயில்லாத சீவன்கள் மேல் குண்டுகள் போட்டுக் கொள்வது எந்தவகையில் நியாயம் இது ஐனநாயகமா? என்று தட்டிக் கேட்கும் அளவிற்கு ஒரு தமிழ் ஊடகம் இருவரைகாலத்திலும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் உருவாகவில்லை என்பது தமிழர்கள் செய்த துரதிஷ்டம் என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

Wednesday, August 6, 2008

முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் விமான தாக்குதல்

இலங்கை விமானப்படையின் ஜெட் ரக விமானங்கள் முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் படகுகளை இலக்கு வைத்து இன்று காலை 11 மணியளவில் விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இத் தாக்குதல் வெற்றியளித்துள்ளதாகவும் இதன் போது விடுதலைப்புலிகளின் இரு படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.