Showing posts with label இந்திய குழுவின் இலங்கை விஜயம். Show all posts
Showing posts with label இந்திய குழுவின் இலங்கை விஜயம். Show all posts

Saturday, July 5, 2008

இந்திய நிலைப்பாடு குறித்த சந்தேகங்களும் கேள்விகளும்

அமிர்தஸன் - தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் அம்.கே. நாரயணன் தலைமையிலான மூன்று பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன. அவ்வாறான சந்தேகங்களையும் கேள்விகளையும். இரண்டு வகைப்படுத்தலாம்.

ஒன்று நீதியான அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவிபுரியுமா? இரண்டாவது விடுதலை புலிகளை இராணுவ ரீதியில் பலவீனமடைய செய்வதற்குரிய வகையில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கப்போகின்றதா? இந்தியாவினுடைய நடைமுறை அரசியலை அவதானிக்கும்போது இந்த இரு கேள்விளும் முக்கியத்துவம் பெறுகின்றது. 1991 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு வகையான தலையிடா கொள்கையை பின்பற்றி வந்தது எனலாம். இந்தியாவினுடைய அரசியல் அதிகார சட்டமுறைமைகள் வெளியுறவு கொள்கைகள் என்பவற்றை அவதானிக்கும்போது இன விடுதலை போராட்ட இயக்கம் ஒன்றிற்காக அல்லது ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காக பேசுகின்ற அல்லது ஆதரவு வழங்கக்கூடிய பக்குவம்,இருக்கிறது.ஆனால் நடைமுறையில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலமையும் அங்கு உள்ளது.

அமரர் இந்திராகாந்தி பாக்கிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரித்துக்கொடுத்தார் என்பது வேறு. அல்லது 1980களில் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டது ஆகவே விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா ஊக்கம் கொடுத்தது என சிலர் நியாயப்படுத்தலாம். இந்தியாவின் அதிகாரமையங்களுக்கு உட்பட்ட அல்லது இந்திய பாதுகாப்பு துறையின் பிடிக்குள் இணைத்துக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்தான் அவை. தனது நலனை மையப்படுத்திய தூரநோக்குடைய சிந்தனைகளுடன் கூடிய செயற்பாட்டு திறன் கொண்ட சிறப்பு இந்திய அதிகாரமையத்துக்கு உண்டு.

இந்தியாவின் இந்த வரலாற்றை, அனுபவத்தை படிப்பினையாக கொண்டதுதான் தமிழத்தரப்பினுடைய சமகால அரசியல் அணுகுமுறைகள் எனலாம். இருந்தாலும் இனநெருக்கடி தீர்வு விடயத்தில் இந்தியாவினுடைய ஆசீர்வாதம் தேவையென சில மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். பிரியங்கா நளினியை சந்தித்தவுடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி விடுதலை செய்யப்படவுள்ளார் என்ற எதிர்வுகூறல்களும் நம்பிக்கைகளும் அநாவசியமற்ற முறையில் விதைக்கப்படுகின்றன.

நளினியை சந்தித்த பின்னர்தான் விடுலைப்புலிகள் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியா நீதியான முறையில் தமிழர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருபவர்கள் அல்லது இந்தியாவினுடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த தடை நீடிப்பு தொடர்பாக என்னத்தை உணர்ந்திருக்கின்றார்கள்? அல்லது தடை நீடிப்பு மூலமாக இந்தியா தமிழ்த்தரப்புக்கு எதை உணர்த்தியிருக்கின்றது? கடந்தகால படிப்பினைகள் அனுபவங்களிலிருந்து இதற்கான பதிலை எடுத்துக்கொள்ள முடியும்.

தமிழ்த்தேசியத்திற்கு சாதகமாக தமிழகத்திலும் புதுடில்லியிலும் எழக்கூடிய ஆதரவு உணர்வுகளை மட்டுப்படுத்தக்கூடிய அல்லது அவ்வாறான சந்திப்புகள் மூலமாக தமிழர் விவகாரத்தில் நீதியாக செயற்படுவோம் என்பதை வெளிக்காட்டி அதன் ஊடாக உணர்வாளர்களை தங்கள் பக்கம் திசை திருப்புகின்ற, நம்பவைக்கின்ற ஏற்பாட்டு முயற்சியாகத்தான் அதனை பார்க்க முடியும். தனது மகள் கனிமொழியை பயன்படுத்தி ஈழத்தமிழருக்கு ஆதரவாக மிகக் கடுமையாக பேசவைத்து வைக்கோ, பழ.நெடுமாறன் ஆகியோருக்கு தமிழக மக்கள் வழங்கிய ஆதரவுகளை திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கு திசைதிருப்பிய கலைஞர் கருணாநிதியின் நடவடிக்கை போன்றதுதான் பிரியங்கா நளினி சந்திப்பு. அதனைவிட வேறு எதுவும் அந்த சந்திப்பில் இல்லை.

இந்தியாவினுடைய கடந்த கால அனுபவம் என்பது அல்லது இந்தியாவினுடைய நிலைப்பாடானது தமிழ்த்தரப்புக்கு எந்த வகையிலும் ஒருபோதும் சாத்தியமாகாது என்று தெரிந்தும் அவ்வாறு இந்தியாவினது ஆசீர்வாதத்தை வேண்டி நிற்பது அல்லது கற்பனைகளை வளர்த்துக் கொள்வதில் பயன் இல்லை. அதேவேளை இந்தியா நீதியான முறையில் செயற்பட வேண்டும் என கோருவதிலும் பல தர்ம சங்கடங்கள் உண்டு. குறிப்பாக இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கே அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஈழத்தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை இந்தியாவினால் எப்படி வழங்க முடியும்?

தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றபோதும் அதற்கு நேரடியான கண்டனங்களை தெரிவிக்க விரும்பாத இந்தியா ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து தனது உள்ளார்ந்தத்தை வெளிக்காட்டியுள்ளது. தனது எதிரிநாடுகள் என்று தெரிந்தும் சீனா, பாக்கிஸ்தானிடம் இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்வது குறித்து இந்தியா மௌனமாகவே இருக்கின்றது. விடுதலை புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச் செய்யவேண்டும் என்பது இந்திய பிராந்திய நலன்.

ஏவ்வாறாயினும் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்களை தனக்கு எதிராக திருப்பக்கூடிய சக்தி இலங்கை இராணுவத்திற்கு இல்லை என்று இந்திய பாதுகாப்பு துறைக்கு நன்கு தெரியும். ஆகவே புலிகளை இராணுவ ரீதியில் பலம் இழக்க செய்வதற்கு எந்த பேயிடம் இருந்தாவது இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்யட்டும் என்பது இந்தியாவினுடைய மற்றும் ஒரு நிலைப்பாடு. எனவே இந்தியாவினுடைய நீதியான தலையீட்டை கோருவது அல்லது ஆசீர்வாதத்தை எதிர்பர்ப்பது அரசியல் ரீதியாக ஏற்புடையதாகாது என்பதற்கு இவை உதாரணங்களாகும்.

தற்போதைய நிலையில் இருந்து புலிகள் இராணுவ ரீதியில் மேலும் பலமடையப்போகின்றார்கள் இராணுவ சமநிலை மேலோங்கலாம் என்ற எதிர்பார்ப்பு பல மட்டங்களிலும் நிலவுகின்றதுபோல் தெரிகின்றது. புலிகள் இன்னமும் நிலப்பரப்பை கைப்பற்றும் தாக்குதல் நடத்தவில்லை அவாகள் தற்பாதுகாப்பு தாகக்குதல்களையே நடத்துகின்றனர் என்று இராணுவ ஆய்வாளர்கள் அவ்வப்போது கூறிவருகின்;றனர். இது இலங்கை பாதுகாப்பு தரப்புக்கும் நன்கு புரிந்திருக்கலாம்.

இலங்கை அரசாங்கம் புலிகளிடம் தோற்றுப்போனால் பயங்கரவாதம் சர்வதேசத்தை வெற்றி கொண்டமைக்கு சமனாகி விடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் கூறியமையானது புலிகளுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் உதவிகளை கோருவதற்கு ஒப்பானது. குறிப்பாக இந்தியாவின் உதவியை கோருவதுதான் அந்த வேண்டுகோள். இந்தியாவின் முன்று உயர் அதிகாரிகளின் திடீர் விஜயமும் அதன் அடிப்படையில் அமைந்ததுதான் என்று யாரும் சந்தேகம் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

Sunday, June 22, 2008

Indians here because of Mullathivu?

IS IT AS IT WAS IN 1987
TO APPEASE TAMILNADU


Sources said that the visit of the high level Indian delegation to Sri Lanka was not for reasons of SAARC and security as previously reported, but due to rapid developments in the Sri Lankan warfront, though no official confirmation was available of this fact.
The Indian National Security Adviser M. K. Narayan, the Defence Secretary Vijay Singh and the Foreign Secretary Shivshankar Menon reached Colombo Friday morning for talks with the government.
The visit comes just days after the Sri Lankan Army chief talked of a military solution, saying also that “the Sri Lankan Army will capture LTTE leader Prabhakaran alive.’’ In other words, the rapid troops thrust into the LTTE heartland Mullaithivu has caused the Indian delegation to rush to Sri Lanka to avert a rout of the LTTE, sources said.
The officials met Sri Lankan Defence Secretary and are also meeting an important pro-LTTE leader. The delegation was scheduled to meet the Sri Lankan president yesterday, but there was no word of the outcome of this meeting. Delegates also met TULF MP Mr R. Sambandan yesterday.
Analysts were abuzz with deja vu comparisons with 1987, when the Indian government engineered parripu drops over Jaffna in the face of imminent success for Sri Lankan troops in the Vadamarachchi campaign.
Meanwhile, the visiting delegation we are reliably informed, is not here at the behest of the Indian Ministry of External Affairs but at the behest of a higher Indian authority, a fact that added to the speculation about the nature of the Indian visit.
There has also been widespread speculation and some reportage of a move by the Indian delegation to moot a new political solution that would address Tamil grievances.
Other analysts said that the Indian delegation may be in Sri Lanka “purely to assuage Tamil feelings which always run high in the state of Tamilnadu when there are favourable developments for the army in the Sri Lankan war front.”

கொழும்பு வந்துள்ள இந்திய உயரதிகாரிகள் குழுவினர் தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் சந்திப்பு

நேற்றுமுன்தினம் கொழும்பு வருகை தந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன், இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத், பிரதி தூதுவர் மாணிக்கம், இந்தியாவின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதி திருமூர்த்தி ஆகியோரடங்கிய குழுவினரை தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் நேற்று முற்பகல் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, வடக்கு-கிழக்கு நிலைமைகள், யுத்த நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது தமிழ்த்தரப்பு அரசியல் தலைமைகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே நிலைமைகளை மோசமடையச் செய்துள்ளதென்பதை இந்திய உயரதிகாரிகள் குழு சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 21, 2008

வடக்கு - கிழக்கை தமிழரின் "பிராந்தியமாக" ஏற்றுக்கொள்வதாக இந்தியக்குழு தெரிவிப்பு

இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்பு இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவில் இருந்து சென்றுள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.

பிற்பகல் 12:00 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், தமிழர்களுக்கு எதிராக வடக்கு - கிழக்கிலும் அதற்கு வெளியிலும் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் கடத்தல், ஆட்கொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

வன்னியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் குறித்தும் அங்கு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். அரசினால் அங்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை, மருந்துகள் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் குறிப்பிட்டார்.

பெரும் மோசடிகளுடன் நடைபெற்ற கிழக்குத் தேர்தல் பற்றி விரிவாக எடுத்துக்கூறிய சம்பந்தன், 18 ஆண்டுகளாக இணைந்திருந்த தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கை தற்போதைய அரச தலைவர் மகிந்த பிரித்துள்ளார் என்றும் இது தொடர்பாக வெளிவந்த நீதிமன்ற தீர்ப்புக்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இவை தொடர்பில் பதிலளித்த இந்திய தூதுக்குழுவினர், இணைந்த வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிராந்தியம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறினர்.

வடக்கில் தற்போது நடைபெறும் போர் குறித்து சம்பந்தன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தமது நாட்டில் இருந்து இன்னொரு அமைதிப்படை சிறிலங்காவுக்கு வராது என்று பதிலளித்துள்ளனர்.