Showing posts with label Tamil Tigers. Show all posts
Showing posts with label Tamil Tigers. Show all posts

Tuesday, August 19, 2008

வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்

வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.

Toronto non-profit raised millions for Tamil Tigers

Stewart Bell, National Post
Published: Monday, August 18, 2008


TORONTO -- A Toronto non-profit group wired more than $3-million to overseas bank accounts, some of them linked to the Tamil Tigers, before it was shut down by the government in June for alleged terrorist financing, says an RCMP report released yesterday.

The report, marked "Secret" but unsealed by order of a Federal Court judge, provides the first detailed look at the banking activities of the World Tamil Movement (WTM), a Toronto-based group accused of bankrolling Sri Lanka's Tamil Tigers guerrillas.

Most of the money, $1.9-million, went to an account at the Bumiputra Commerce Bank in Kuala Lumpur, Malaysia, that the RCMP report says "is utilized as a vehicle to forward money to the LTTE [Liberation Tigers of Tamil Eelam] from Canada."

The 83-page financial report is the fruit of two years of analysis of banking records seized by Canadian anti-terrorism police who are investigating a financial network run by supporters of the Tamil Tigers that allegedly raised money in Canada to buy arms for the guerrillas.

"The bank records seized ... demonstrate that the World Tamil Movement has developed an elaborate machine like entity that moves throughout the Greater Toronto Area collecting funds with extreme proficiency," the police report says.

Stockwell Day, the Public Safety Minister, announced on June 16 that his government had added the WTM to Ottawa's official list of terrorist groups, alongside the likes of Al-Qaeda, Hamas and Hezbollah. The WTM is the first Canadian community group to be listed.

The WTM has denied any involvement in terrorist fundraising and vowed to challenge the government's decision, and at a large outdoor rally in Toronto on July 5, Tamils waved Tamil Tigers flags and endorsed a statement condemning Ottawa's decision to ban the WTM.

The Minister has accused the WTM of transferring money to LTTE bank accounts in Sri Lanka, but the RCMP's Feb. 1, 2008, financial report paints a more detailed picture of a complex network made up of 20 Canadian bank accounts.

Five banks held the accounts: Toronto Dominion, Bank of Nova Scotia, Royal Bank, CIBC and the National Bank of Canada. The Canadian account holders wired money regularly to accounts in Malaysia, Singapore, the United Kingdom and Tamil Tigers-controlled areas of Sri Lanka.

RCMP Corporal Deanna Hill, the author of the police report, wrote that the WTM's financial set-up was "congruent with the money laundering techniques often employed by organized crime groups.

"I also believe that the number of accounts alone demonstrate that the World Tamil Movement has utilized the Canadian banking system to raise funds in a manner that is best suited to financing the terrorist activities of the LTTE."

The Tamil Tigers have been fighting for 25 years for an independent homeland for Sri Lanka's ethnic Tamil minority, which has faced discrimination under the island's Sinhalese majority.

In addition to fighting a conventional guerrilla war, however, the Tigers also employ terrorist tactics, such as suicide bombings and political assassinations, which has landed them on international terrorist lists, Canada's included.

The RCMP began investigating the Tamil Tigers' Canadian fundraising network in 2002, focusing on the WTM's large head office in Toronto and its smaller branch offices in Montreal and Vancouver. Police raided the Toronto and Montreal offices in 2006.

Police seized letters from the Tamil Tigers leadership thanking Canada for its donations, explaining how the money had been used to purchase weapons, and asking for more. But much of the police evidence appears to have come from a study of bank accounts held by the WTM and its officers.

The Project Osaluki financial report claims the WTM's most lucrative fundraising method was a pre-authorized payment program, in which the group persuaded hundreds of its supporters to sign forms allowing money to be withdrawn from their bank accounts each month.

The WTM took in up to $763,000 a year using the payment scheme. On a single day in 2005, the WTM withdrew $63,528 from 1,582 bank accounts. "It is obvious from the amounts collected with this method that the pre-authorized payment scheme is effective, timely and spares valued resources," says the RCMP report.

Most of the forms had been signed in Canada but police also interviewed witnesses who said they had signed them at Tamil Tigers checkpoints in Sri Lanka. "Upon their return to Canada, these persons were visited by representatives of the World Tamil Movement to exact the collection of the monthly stipend," Cpl. Hill wrote.

In addition, the WTM made money through bake sales, car washes, newspaper sales, merchandise sales and festivals, the report says. "To date, the total amount of Canadian dollars that have been forwarded to accounts internationally from accounts controlled by the World Tamil Movement in Canada is $3,101,803.33."


Nationalpost

Monday, August 18, 2008

புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுவது படைகளிலிருந்து இராணுவத்தை தப்பியோட வைக்கும்

விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார்.

வெலிக்கந்தை பகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்ததுடன், விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்களிருப்பது தனக்குத் தெரியுமெனவும் கூறியிருந்தார்.

கருணா கூறிய இந்தச் செய்தியை சிங்களப் பத்திரிகைகளும் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவும், புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தத் தகவல்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்குமானால் அவர்கள் இந்த நேரம் அதனைப் பயன்படுத்தியிருப்பார்களெனவும் கூறியுள்ளார்.

அத்துடன், களமுனையில் போரிடும் படையினரின் காதுகளில் இவ்வாறான தகவல்கள் எட்டினால் அவர்கள் பெரிதும் குழப்பமடைவதுடன், படைகளிலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடுமெனவும் கூறி இந்தத் தகவல்களை நிராகரித்துள்ளார்.

இதேநேரம், இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து அரசு கவலையடைந்துள்ளது.

Sunday, August 10, 2008

இரவு நேரத்தில் காரில் சென்ற 6 இலங்கை அகதிகள் கைது

பொலிஸ் வாகன சோதனையில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து தமிழ் நாட்டில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை, கண்காணிப்பை பலப்படுத்துதல் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை நகர பொலிஸ் ஆணையர் சேகர் உத்தரவின் பேரில், பொலிஸார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டனர். அந்தக் காரில் 6 பேர் இருந்தனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 6 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வருபவரென்பதும் தகவல் விசாரணையில் வெளியானது. இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் கொலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்தக் காரில் அழைத்துக் கொண்டு வந்ததாக பொலிஸிடம் தெரிவித்தனர்.

ஒரே காரில் இரவு நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று பொலிஸார் கேட்ட போது, நண்பர்களாகிய நாங்கள், அடிக்கடி இப்படிக் காரில் ஜாலியாக சுற்றுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த விபரங்களில் திருப்தியடையாத பொலிஸார் சந்தேகப்பட்டு காரை தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு நம்பர் தகடு கிடைத்தது. அதில் வேறு ஒரு பதிவு எண் இருந்ததை கண்ட பொலிஸார் அது பற்றி கேட்டனர். தங்களது காரில் இருந்த நம்பர் தகடு பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய தகட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். காருக்குள் கிடந்த நம்பர் தகட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.

இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த பொலிஸார் விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி, யார் யாருடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதை சோதனையிட்டனர். இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா, ஆயுத விநியோகத்தில் சம்பந்தப்பட்டவர்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் எப்படி வெளியேறினார்கள் என்பது பற்றியும் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் "பரோட்டா' மாஸ்டராக வேலைசெய்த இலங்கையர் விடுதலைப் புலியா?

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்து கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கியிருந்த இலங்கை நபரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதானவர் விடுதலைப் புலிகளின் கூட்டாளியா என்று விசாரித்து வருகின்றனர்.

பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள விடுதிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும்படி பொலிஸ் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, அயனாவரம் சாமி பக்தன் தெருவில் பி.கே.எஸ்.மேன்சனில் வெளியாட்கள் யாராவது தங்கியுள்ளார்களா என்று தலைமைச் செயலகப் பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த சூரியகுமார் என்பவரிடம் விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் கடந்த நான்காண்டுகளாக தங்கியதால் முகவரி சரியாகத் தெரியாது என்று கூறியது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

தீவிரமாக விசாரித்ததில் "நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து முகவர் மூலம் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்குப் சென்றேன். அங்கு மூன்று மாதம் கழித்து மலேசியா சென்றேன். மலேசியா முகாமில் என்னை அடைத்து வைத்தனர். அங்கிருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு தப்பி போலிக் கடவுச்சீட்டு மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளேன். சென்ட்ரல் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல்களில் சிறிது நாட்கள் பணிபுரிந்தேன். பின்னர் பார்டர் தோட்டம் முருகவிலாஸ் ஹோட்டலில் ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன்' என்றார்.

சூரியகுமாரை பொலிஸார் கைதுசெய்து சென்னையில் தங்கியிருந்து சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்றும் விடுதலைப் புலிகளின் கூட்டாளியாக செயல்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கிறார் பிரிட்டனின் பாடகி எம்.ஐ.ஏ.

இலங்கை வம்சாவளியினரான "எம்.ஐ.ஏ' என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார்.
இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஒளிபரப்பில் எம்.ஐ.ஏ.ஆடைகள் மற்றும் புலிகளின் நடைமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தனது தந்தையை விடுதலைப்போராளியென எம்.ஐ.ஏ.குறிப்பிட்டதாகவும் டிலான் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை எம்.ஐ.ஏ. மறுத்துள்ளார். ஒருபோதும் எந்த வொரு பயங்கரவாத குழுக்களுக்கும் தான் ஆதரவளிக்கவில்லையென கூறியுள்ள எம்.ஐ.ஏ., டிலானின் முயற்சிகள் சுயமேம்பாட்டுக்காக வெட்கமற்ற முறையில் தனது நற்பெயரை நாசமாக்கும் செயற்பாடென சுட்டிக்காட்டியுள்ளார்.

?நான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில்லை, யுத்தம், குண்டு வீச்சுகளிலிருந்து வெளியேறிய இலங்கையைச்சேர்ந்த என்னுடைய சங்கீதமானது அகதிக் குடிமகனின் குரலாகும். வெளிப்படையாக கூறினால் உண்மையிலேயே சுயமேம்பாட்டை நாடும் யாரோ ஒருவருடன் பேச்சை ஆரம்பிக்க நான் முயற்சிசெய்யவில்லை. என்று எம்.ஐ.ஏ.கூறியுள்ளார்.

டிலானின் ஒளிநாடா வெளியானதிலிருந்து எம்.ஐ.ஏ.இன் தனித்துவ அடையாளம், மற்றும் உச்சஸ்தாயி பாடகியென்ற அவரின் பதிவுகள் முடிவுக்கு வந்துவிடும் நிலமை ஏற்பட்டது. "விடுதலைப்போராளியாக எம்.ஐ.ஏ. யின் புகழ்' சித்தரிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 7, 2008

சென்னையில் கைதான இருவரும் புலிகளால் பொருட் கொள்வனவுக்காக அனுப்பப்பட்டார்களாம்


சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் பிரிவில் பணியாற்றினேன். தற்போது போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஏராளமான பொருட்களுக்கு தேவையேற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஆயுத தளபாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று கள்ளத்தோணி மூலம் நான் இராமேஸ்வரத்தை வந்தடைந்தேன். பின்னர் அங்கிருந்து சென்னை கே.கே. நகரையடைந்தேன்.அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். பின்னர் உமாரமணன் என்பவர் சென்னை வந்து இருவரும் தனியான வீடொன்றில் தங்கி இருப்போம் எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் வீடு தேடினோம். எங்கள் மீது சந்தேகப்பட்டு எவரும் வீடு வாடகைக்கு விட வில்லை. எனவே அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை என்னுடைய மனைவி போல் நடிக்க வைத்து அந்த பெண்மணி கல்லூரியில் படிப்பதாக கூறி ஒருவாறாக திருமங்கலத்தில் வீடொன்று கிடைத்தது. இதனையடுத்து மனைவியாக நடித்த இளம் பெண்ணை அனுப்பி வைத்து விட்டோம்.

அதைத் தொடர்ந்து ஒருநாள் ஒருவர் இரசாயணப் பொருட்கள் சிலவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அவை மாதிரிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பரிசோதனை செய்து அவை தரமான பொருட்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பெரிய அளவில் கொள்வனவு செய்து தருவதாகவும் கூறினார்கள். குறிப்பாக அமோனியம் நைட்ரேட்டை சென்னையில் உள்ள ஆய்வுகூடத்தில் சோதனை நடத்தி அதன் தரத்தை பரிசோதிக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள்.

பின்னர் எமது செலவுக்காக ரூ.1 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தில் வீட்டுமுற்பணமாக ரூ.20 ஆயிரம் மற்றும் எங்கள் செலவுகளுக்காக ரூ.23 ஆயிரம் இருந்தது. அதை பொலிஸார் பறிமுதல் செய்து விட்டனர்.6 மாதம் சென்னையில் தங்கி இருக்க எங்களுக்கு உத்தரவு இடப்பட்டது. அதன்பிறகு நாங்கள் இருவரும் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம். தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் சென்னையில் தங்கி இருக்கும்போது இங்குள்ள சகோதர மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்யக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

எங்கள் நோக்கம் இங்கிருந்து பொருட்களை கொண்டு செல்வதுதான். வேறு எந்த தவறான நோக்கத்தோடும் நாங்கள் இங்கு வரவில்லை.இவ்வாறு அமலன் தெரிவித்தார்.தற்போது அமலனின் மனைவியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண் குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் யாராவது நுழைந்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் கே.கே. நகர் அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

மட்டு. தொப்பிக்கல தரவையில் இராணுவ "ட்ரக்' மீது கிளைமோர்! 23 படையினர் உயிரிழப்பு என்கின்றனர் புலிகள்

மட்டக்களப்பு தொப்பிக்கல தரவைப் பகுதியில் பெரியவட்டுவான் என்ற இடத்தில் இராணுவத்தினர் பயணம் செய்த "ட்ரக்' ஒன்றின் மீது நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி யளவில் விடுதலைப் புலிகள் கிளை மோர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அந்தத் தாக்குதலில் 23 படையினர் உயிரிழந்தனர் என்றும் நான்கு பேர் காய மடைந்தனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 30 வரை யான படையினரை ஏற்றிச் சென்ற "ட்ரக்' இந்தத் தாக்குதலில் சிக்கி, தூக்கி வீசப் பட்டு சின்னாபின்னமாகிக் கிடந்தது என் றும் புலிகள் கூறுகின்றனர். காயமடைந்த படையினர் வெலிகந்த வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தக் கிளைமோர் தாக்கு தல் தொடர்பாகத் தகவல் வெளியிட்ட படைத்தரப்பு, ஆக ஒரேயொரு இராணுவ சிப்பாய் மாத்திரமே பலியானார் என்றும் மூவர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறு கிறது. மட்டக்களப்பு தொப்பிக்கல பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்குப் பின்னர் கடந்த சுமார் ஒருவருடகாலத்தில் அங்கு படையினர் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது.

புலிகளை தோல்வியடையச் செய்தால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும்

புலிகளைத் தோல்வியடையச் செய்வதன் மூலமே இந்நாட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும் என்பதுடன் மக்களுக்கான உரிய ஜனநாயகத்தைப்பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க அரசு விரும்பினால் வெள்ளைவான் கலாசாரம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் கப்பங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும்.

புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நாம் கூறினால் மாத்திரம் போதாது அவர்களுக்கு உதவி செய்பவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போது பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் தருணம் வந்துவிட்டது. இதற்கமைய எமது படையினரும் வெற்றிகொண்டு, முன்னேறி வருகின்றனர். புலிகளை யுத்த ரீதியாகவே தோல்வியடையச் செய்யவேண்டும். மக்களுக்கான ஜனநாயகத்தை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்நாட்டை புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் புலிகளை ஒடுக்க அரும் பாடுபடும் நாராயணனுக்கு ஏற்பட்ட சம்பவம் சாதாரண விடயமல்ல

தீவிர கரிசனையுடன் கண்டிக்கிறார் லக்ஷ்மன் செனவிரத்ன
ஜீவா சதாசிவம்

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்ற அதேவேளை இது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன, இந்நிலையில் பொலிஸ்மாஅதிபர் நித்திரையில் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான பிரேரணையில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சார்க் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். பயங்கரவாதம் இலங்கையில் மாத்திரம் அல்ல, உலகளாவிய ரீதியில் காணப்படும் விடயமாகும். எது எவ்வாறாயினும், இந்நாட்டு மக்களின் பணத்திலேயே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இடம்பெற்ற சம்பவமானது இலங்கைக்கு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சார்க்கின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து வியப்பாக உள்ளது.

இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெய்யான கூற்றின் மூலம் நாராயணன் பிரச்சினையின்றி ரக்ஸியில் சென்றிருப்பதாக கூறி வெளிப்படுத்தியுள்ளனர். அப்படியாயின் இந்தியப் பிரதமருக்கு அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லையா? அவரும் வாடகைக் காரில் வந்து கொழும்பில் இறங்கலாம் தானே?

தவறுகள் இடம் பெறுமாயின் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர அதனை சமாளிப்பதற்கென பொய்யான காரணங்களை கூறி எதனையும் மூடி மறைப்பதற்கு முற்படக்கூடாது.

தமிழ் நாட்டில் புலிகளை ஓரம் கட்டுவதற்கு அரும் பாடுபடும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு இவ்வாறு இடம்பெற்ற சம்பவமானது சாதாரண விடயமல்ல. இதேவேளை இந்நாட்டு மக்கள் மூன்று வேளை உணவை, உண்ண முடியாத நிலையில் சார்க்கின்போது ஒரு நாள் உணவுக்கு மாத்திரம் 10ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளமுடியாததொன்று,சார்க்கின் வெற்றி ஆண்டவனின் சாட்சி என்றே கூறவேண்டும்.

அத்தோடு இன்று பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லாதுள்ளனர். இந்நிலையில் பொலிஸ்மா அதிபரோ நித்திரையில் உள்ளார்.

தற்போது அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையிலேயே அநுராதபுரம், சப்ரகமுவ பகுதிகளில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆனால், இது தொடர்பாக பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதுள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக புகார் செய்வதற்கு வரும் மக்களை கண்டு பொலிஸார் வாயில் கதவுகளை மூடி விடுகின்றனர்.

வடக்கு யுத்தம், வடமத்திய மாகாணத்திற்கும் வந்துவிட்டது. இதனை வழி நடத்துபவர்களுக்கு அரசே முன்னின்று தலைமைதாங்கி செயற்படுகின்றது. இப்பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், வடமத்திய, சப்ரகமுவ தேர்தலை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க முடியாது. ஏனென்றால், மக்கள் பல்வேறு அடக்கு முறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது. நீதியான சுதந்திரமான தேர்தல் இல்லை. இவ்வாறு தாக்குதல்கள் அதிகரித்துவரும் போது இந்நாட்டின் நிலை என்ன ஆவது?

சிரச ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது கமரா பறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அமைச்சரால் நடந்ததென்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால், இது தொடர்பாக, அரசோ அல்லது ஜனாதிபதியோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதுள்ளனர். இவ்வாறே பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுகின்றன.

அத்தோடு, அரசின் அனுசரனைணயுடன் பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் பொலநறுவை பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதனால், மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் நீதியான தேர்தலை நடத்த முடியாது. இதேவேளை இப்பகுதி பொலிஸாரும் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதுள்ளது.நாம் அவசரகால சட்டத்துக்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைப்படித்து வரும் மெளனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த தேரர் மேலும் கூறியதாவது:

பிரபாகரனின் மெளனம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே நிறைய அனுபவங்கள் உண்டு. ஆகையால் இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.

இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறின.

ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகின்றோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.

இலங்கை இராணுவத்துக்குத் தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமெனவும் தேரர் மேலும் கூறினார்.

அகதிகள் என்ற பெயரில் புலிகள் ஊடுருவல்

இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினையால் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 22,350 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பெரும்பாலான அகதிகள் கூலித் தொழிலாளிகள் எனக் கூறுகின்ற போதிலும் படகொன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வரை செலுத்தி தமிழகம் வருகின்றனர். இவர்களால் எவ்வாறு இவ்வளவு பணத்தை செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு இது வரையில் பதிலில்லை. அதேவேளை தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளை அதிகாரிகள் காரணம் கேட்டு தடுத்து நிறுத்துவதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அண்மையில் முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாக உளவுப் பிரிவு பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இத்தகைய பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல அகதி முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு பொருட்களை கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஆயுதப் பயிற்சி பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என உளவுப் பிரிவினர் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர் இது இராமநாதபுரம் கடந்த சில நாட்களாக புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலர் இலங்கைக்கு பொருட்கள் கடத்தியது தொடர்பில் கைதான சம்பவத்தையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து உளவுப் பிரிவு பொலிஸார் அகதிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளின் பெயரில் மோசடிசெய்யும் மாற்று இயக்கத்தவர்களின் வஞ்ச செயளால் தலைகுனியும் தமிழ் சமூகம்

பிரித்தானியாவில் வங்கியட்டை மோசடியில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தனி நபர்களளும் மாற்று இயக்கத்தினரும் ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன் தண்டனையில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள புலிகளின் மேல் பழியைப்போட்டவர்கள் தான் அதிகமான தமிழர்கள் என்பது மக்கள் அறிந்த உண்மை . இதேசமயம் தம்மை புலிகள் தான் துர்ண்டினார்கள் என்று சொல்லி தப்பினவர்களும் உண்டு. இத்தகைய மோசடிகளில் மட்டுமல்ல மற்றைய மோசடிகளிலும் இத்தகைய கைவண்ணமும் விசமத்தனத்தை மேற்கொண்டவர்கள் மாற்று இயக்குத்தினரே என்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுந்துள்ளது இந்தக் குற்றுச்சாட்டு உண்மையானது இதற்கான ஆதாரங்கள் பல சுவிசர்லாந்திலே இருப்பதாகவும் தெரியவருகின்றது. புலிகளின் தூண்டுதலில் மோசடியில் தாம் ஈடுபட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெரியவந்தது. இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா??? என்ற சந்தேகம் தற்பொழுது வெளிநாட்டு புலணாய்வுத் துறை மத்தியில் வலுப்பெற்று இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இலங்கை இந்தியா போன்ற பகுதிகளில் பெருமளவு சொத்துக்களை வாங்கியுள்ளார்கள் இவர்கள் அனைவரும் மாற்று இயக்கத்தின் பிரதிநிதிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் லீசெஸ்ரர்சையர் பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் என்ற முஸ்லீம் நபர், வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தற்பொழுது பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் தானாக சென்று காவல்துறையினரிடம் சரணடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் செயற்பட்டதாகவும், அவர்களே கடனட்டை மோசடிக்கான உபகரணங்களை தனக்கு வழங்கியதாகவும் விசாரணையில் கூறியிருக்கின்றார். இந்த விசாரணைகள் தொடரும் தர்னத்தில் பிரித்தானியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தமிழ் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பலர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் குழுக்களாக மோதல்களில் ஈடுபடுவது, தமிழ் சிறார்களை போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குதல் கடனட்டை மற்றும் மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சமூக விரோரத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு ரூற்றிங்கில் பிரபா என்ற இளைஞனைப் படுகொலை செய்த சிறீலங்காவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞருமாக 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனையும்: ஏனையோருக்கு பல வருடங்கள் சிறைத்தண்டனையும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்டிருக்குpன்றது. பிரித்தானிய ஊடகங்களும் உண்மையைக் கண்டறிந்து செய்தி வெளியிடும் ஊடக தருமத்தை மறந்து நீதிமன்றங்களில் குற்றவாளிகள் கூறும் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு வருவதால் பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் இது பற்றி குறிப்பிட்ட ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Monday, August 4, 2008

புலிகளுக்கு 54 வீத ஆதரவுள்ள தமிழகத்தில் நடந்த 'மாபெரும்" பேரணி

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கைக்கு ஐம்பத்திநான்கு வீதமான தமிழக மக்கள் ஆதரவு என்ற ஆனந்தவிகடனின் கருத்துக்கணிப்பு வந்த அந்த சஞ்சிகையின் விற்பனை முடிந்துவிடாத நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு ஈழ ஆதரவு பேரணியில் கலந்துகொண்டவர்கள் தொகை வெறும் முன்னூறைத் தாண்டாது. அதிலும் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்கள் சுமார் நூறு பேர். சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய மத்திய அரசைக்கண்டித்து அனைத்துக்கட்சி, அனைத்து தமிழ்அமைப்புக்கள் சார்பில் இந்தப் போரணி நடாத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, கடந்த மாதம் 11 ஆம் நாள் சென்னையில் அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழ் அமைப்புக்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சென்னையில் இந்திய அரசைக் கண்டித்துப் ஆகஸ்ட் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் பேரணி நடைபெறவிருந்த நாளுக்கு முதல் நாள் சனி இரவு, பேரணி தொடங்குவதாக இருந்த சென்னை பெரியார் சிலைக்குப் பதிலாக சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என அறிவித்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, சுவரொட்டிகள் மூலமாக பரப்புரைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றத்தினை காவல்துறை அறிவித்தது அநியாயமானதுதான். அவசர அவசரமாக மீண்டும் அனைவருக்கும் செய்திகள் பரிமாறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியிலிருந்தே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியின் முன் பெருந்திரளாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கூடத் தொடங்கினர்.

செய்தி அறியாத பல தொண்டர்கள் பெரியார் சிலைக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.சரியாக பிற்பகல் 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு முழக்கங்கள் எழுப்ப, தொடர்ந்து தலைவர்களும் குழுமியிருந்த தொண்டர்களும் உணர்ச்சியோடு முழக்கம் எழுப்பினர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் புலிகளிடம் மாத சம்பளம்பெற்றுவருபவர்கள். அவர்கள் தமக்கு கிடைக்கின்ற சம்பளத்திற்காக வேலைசெய்வதால் இதுபோன்ற பேரணிகளில் கலந்துகொண்டே ஆகவேண்டும். மற்றயவர்கள் அப்பாவிகள். தமிழ் உணர்வாளர்கள். பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொண்ட இந்த தமிழர்களிடத்தில்தான் ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடாத்தியதோ தெரியவில்லை.

தேணி இணைய‌ம்

Sunday, August 3, 2008

ராமேஸ்வரம் அருகே விடுதலைப் புலி கைது

ராமேஸ்வரம்: மண்டபம் அருகே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் கைது செய்யப்பட்டார்.

மண்டபம் கடற்பகுதியில், நேற்று மாலை பைபர் கிளாஸ் படகு ஒன்று அனாதரமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படகை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், இன்று மண்டபத்தில் முரளிதரன் (39) என்பவரைக் கைது செய்தனர்.

இவர் மண்டபத்திற்கு வருவதற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பே கடலில் குதித்து நீந்தி மண்டபத்தை அடைந்துள்ளார் முரளிதரன். இவர் எதற்காக ரகசியமாக மண்டபம் வந்தார், ஆயுதம் வாங்க வந்தாரா அல்லது அகதியாக வந்தாரா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முரளிதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான தம்பி அண்ணா என்கிற டேணியலை கியூ பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக முரளிதரன் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 31, 2008

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தொலைபேசிகள் செயலிழந்தன

விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்பட்டு வந்த முக்கிய தொலைபேசிகள் யாவும் செயலிழந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய அலுவலகங்களுக்கும், அரச செயலகங்களுக்கும், முக்கிய வைத்தியசாலைகளுக்கும், மற்றும் முக்கிய அரச திணைக்களங்களுக்கும் தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தத் தொலைபேசி இணைப்புக்கள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சீராக செயற்படாமல் இருந்து வந்ததாகவும் பின்னர் நேற்று முதல் இவைகள் முற்றாக செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சார்க் மாநாடு கொழும்பில் நடைபெறுகின்ற இந்த வேளையில் உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டே இந்தத் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

வன்னிப்பிரதேசத்தில் முழுமையான போர்ச் சூழல் நிலவுகின்ற ஒரு நெருக்கடியான வேளையில், இந்தத் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டு, வன்னிப் பிரதேசம் நாட்டின ஏனைய பிரதேசங்களில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான அவசர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது, அங்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து, அங்குள்ள முக்கிய அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் மேல் மட்டத்தினருடனும், பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடனும் அவசரமானதும் முக்கியமானதுமான தொடர்புகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளை மேற்கொள்வது மற்றும் நோயாளர்களை மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் வவுனியா மற்றும் பிரதேசங்களுடன் தொடர்புகளை மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது,

Monday, June 23, 2008

புலிகள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல

விடுதலைப் புலிகள் தமிழர்கள் என்பதாலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதனாலும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி செயற்படக்கூடாதென கம்பளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரட்ண தெரிவித்தார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புசல்லாவ, நாவலப்பிட்டி, கலஹா, கம்பளை, குருந்துவத்தை பொலிஸ் பகுதிகளின் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கூட்டமொன்று அண்மையில் கம்பளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;

பயங்கரவாதிகளுக்கு இன, மத, மொழி பேதம் கிடையாது. இலங்கையில் சகல சமூகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். 1971 இல் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர் என்பதற்காக அன்று நாம் முழுச் சிங்கள சமூகத்தையும் பயங்கரவாதிகளாக அல்லது கிளர்ச்சியாளர்களாகக் கருதவில்லை.

வடக்கில் இடம்பெறும் மோதல்களில் தோல்வியடையும் பயங்கரவாதிகள் தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன்மூலம் படையினரின் கவனத்தை திசை திருப்ப முனைகின்றனர். எனவே, பொலிஸாரும் இராணுவத்தினரும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

அரச மற்றும் தனியார் நிறுவன நிர்வாகங்கள் தத்தமது நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பாதுகாப்பு கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். இதற்கு உதவுமுகமாக பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கம்பளை பொலிஸ் பிரிவிலுள்ள 38 தோட்டங்களில் விழிப்புக் குழுக்களை உருவாக்கி தோட்ட தலைவர்களை விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். இதேவேளை, கிராமசேவகர் மட்டத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவும் தேசிய பாதுகாப்புக்கு கைகொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

Sunday, June 22, 2008

கனடாவில் உலகதமிழர் இயக்கம் புரிந்த காடைத்தனங்கள்

கனடாவில் தடை செய்தவர்களே! தடைசெய்யப்பட்டுவிட்டார்கள்

ரொரன்ரோவில் இருந்து ஞானச்சந்திரன் ஞானவேல்; விக்னேஸ்; இராஐரட்னம்

கனேடிய அரசினால் உலகத்தமிழர் இயக்கம்; தடை செய்யப்பட்டதிற்கான முழுப்பொறுப்பையும் உலகத்தமிழர் இயக்கமே பொறுப்பு ஏற்கவேண்டும். சுருங்ககூறினால் தங்கள் தலையிலேயே தாங்கள் மண்ணை அள்ளிபோட்டு இருக்கிறார்கள். இவர்களினால் கடந்தகாலங்களில் கனேடியத்தமிழர்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட தடைகளும் அடாவடித் தனங்களும் வன்முறைகளும்தான் இவர்களின் தடைக்கு மூலகாரணமாகும்.

1989ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு தமது சர்வதிகார ஆதிக்கத்தை கனடாவிலும் காட்ட ஆரம்பித்தனா.; தாயகம் என்ற பத்திரிகை பலரின் அபிமானத்தை பெற்ற பத்திரிகையாகவும் உள்ளதை உள்ளபடி எழுதியும் வந்தது உண்மையை எழுதியபடியால் உலகத்தமிழர் இயக்கத்திற்கு இது பிடிக்கவில்லை. தமிழ்வர்த்தக நிலையங்களுக்கு சென்ற உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள்; இப்பத்திரிகை தம்மால் தடை செய்யப்பட்டிருக்கிறது இதனை விற்ககூடாது என எச்சரிக்கை செய்தனர். ஆனால் சில வர்த்தகர்கள் அதனையும் மீறி விற்பனை செய்தனர். இதனால் கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது பத்திரிகையை விநியோகம் செய்தவர்கள் உலகத்தமிழர் இயக்க உறுப்பினரான முன்னாள் வைத்தீஸ்வரா கல்லுரியில் கல்வி பயின்ற உமாமகேஸ்வரன் குழுவினரால் தாக்கப்பட்டனர். அதன் பின் தாயகம் பத்திரிகை வெளிவராமல் போய்விட்டது இந்த கனேடிய ஜனநாயகநாட்டில் ஒரு பத்திரிகை தான் விரும்பியதை எழுதும் உரிமை மறுக்கப்பட்டு தாயகம் பத்திரிகை உலகத்தமிழர் இயக்கத்தினால் தடைசெய்யப்பட்டது

வானொலி அறிவிப்பாளரும் இயக்குனருமான இளையபாரதி முன்பு சங்கமம் என்ற பெயரில் வானொலி ஒன்றை நடாத்தி வந்தார். உலகத்தமிழர் இயக்கத்தினர் தமிழ்திரைப்படங்களை இறக்குமதி செய்து காண்பித்து வந்தனர். தமது திரைப்பட விளம்பரத்தை அன்று அவசரமாக ஒலிபரப்பவேண்டும் என உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் இளையபாரதியிடம் கேட்டபோது இன்று நேரம்காணாது நாளை ஒலிபரப்புகிறேன் என்றார் இளையபாரதி. ஆனால் இவர்கள் விடவில்லை நிலைமை பெரியதர்க்கமாகமாறியது பின்னர் அன்று இரவு கைத்துப்பாக்கியுடன உலகத்தமிழர் இயக்க அரியாலைஅசோகன் உட்பட சென்ற மூன்றுபேர்; அவரின் வீட்டுக்குச் சென்று இளையபாரதியை அழைத்திருக்கிறார்கள். அவர் வெளியில் வரவில்லை வீட்டுக்கதவிற்கு துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றார்கள். போயும் போயும் ஓரு விளம்பர விடயத்திற்காக துப்பாக்கி தூக்கியவர்கள்; என்றால் அந்தநேரத்தில் உலகத்தமிழர் இயக்கத்தின் அடாவடித்தனம் எப்படி இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

பத்திரிகையாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் மஞ்சரி என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். இவர் புலிகள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றுக்காக இவர் மனைவியுடன் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்புகையில் உலகத்தமிழர் இயக்க உறுப்பினரான வல்வெட்டித்துறை ரஞ்சன் குழுவினரால் மனைவி முன்னாலேயே வீதியில் வைத்து மிருகத்தனமாக தாக்கப்பட்டார். பின்பு மஞ்சரி பத்திரிகையும் தடைசெய்யப்பட்டுவிட்டது கனேடிய ஜனநாயகநாட்டில் ஒரு பத்திரிகை தான் விரும்பியதை எழுதும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தமிழ் பத்திரிகையும் உலகத்தமிழர் இயக்கத்தினால்; தடைசெய்யப்பட்டது

ஸ்காபுரோவில் உள்ள சில தமிழர்கள் மிகவும் கஸ்டப்பட்டு பெரிய கட்டிடம் ஒன்றை வாடகைக்கு பெற்று கனடா கந்தசாமி கோவிலை ஆரம்பித்தார்கள். கோவில் நல்ல வருமானத்துடன் இயங்கிக்கொண்டிருந்தது கோவில் வருமானம் உலகத்தமிழர் இயக்கத்தின் கழுகுக் கண்ணில்பட்டது நேரடியாகவே உலகத்தமிழர் இயக்கத்தினால் கோவில் பறிக்கப்பட்டு; குருக்களும் நிர்வாகமும் வெளியேற்றப்பட்டு உலகத்தமிழர் இயக்க தொகுதிப்பொறுப்பாளர் கரனின் உறவினர்களால் கோவில் நிர்வகிக்கப்பட்டது தற்போது அந்த உறுப்பினர் பெற்றோல் நிலையத்திற்கும் வர்த்தகநிலையத்திற்கும் சொந்தக்காரர் ;.உறவினர்களும் திடீர்; பணக்காரர் ஆகிவிட்டார்கள் கரன் இப்போது விலகிவிட்டார். கோவில் பறிக்கப்பட்ட நேரத்தில் பல கனேடியத்தமிழர்களின் கண்டனத்திற்கு உலகத்தமிழர் இயக்கம் ஆளானது என்பதை தமிழ்வானொலி ஒன்றில் கலந்துகொண்ட நேயர்களின் மனக்குமுறல்களில் இருந்து அறிய முடிந்தது. வெளியேற்றப்பட்ட குருக்கள் வானொலியில் அழுதுகொண்டே கூறினார் ஏன் என்னை வெளியேற்றினீர்கள்? கட்டாயம் உலகத்தமிழர் இயக்கம் எனக்கு காரணம் சொல்லவேண்டும் என்று பகிரங்கமாக நியாயம் கேட்டார். அதன்பிறகு வந்த நேயர் ஓருவயதுபோன அம்மா கூறினார். பிராமணர் அழுதால் கூடாது. இவர்களை பாவம் சும்மா விட்டுவைக்காது என்றார். இப்படியாக பறிப்பதும் தடைசெய்வதும் உலகத்தமிழர் இயக்கத்தின் கடந்தகால செயல்பாடாக இருந்தது தடைசெய்தவர்களே இன்று தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டுமானால் இங்குள்ள உலகத்தமிழர் இயக்கத்தினருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஓரு இலக்க அட்டை கொடுப்பார்கள் அதை புலிகளிடம் அங்கு காட்டினால்தான் அங்கு சென்று உறவினர்களை பார்வையிட அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு சென்ற கனேடியத்தமிழர்களின் பாஸ்போட்டை பறித்து தடுத்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கனடாவுக்கு வந்து உலகத்தமிழர் இயக்க அலுவலுகத்தில் பணம் கட்டி விடுதலையானவர்களும் இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒன்றேஆர்;.சி.எம்.பி அதிகாரி கோப்ரல் ஷேர்லி டேவர்மன் அவர்களால் பெடரல் நீதிமன்றத்தில் கூறியது போல. கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக்கிளைதான் உலகத்தமிழர் இயக்கம் என்பதை ஆதாரத்துடன் எவ்வித சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கின்றது

ரொரன்ரோ மொன்றியலில் உள்ள உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழர்களிடமும் தமிழ் வர்த்தகர்களிடமும் வற்புறுத்தி பணம் வசூலித்தது தமிழ் ஊடகங்களை தடைசெய்தது ஊடகவியலாளரை தாக்கியது வானொலி அறிவிப்பாளர் சுடப்பட்டது போன்ற வன்முறையில் ஈடுபட்டதை மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பும் கனேடிய ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் பலதமிழர்கள் கடன்பட்டு வியாபார நிலையங்களை உணவுநிலையங்களை நடாத்திக் கொண்டிருக்கும்போது இந்த உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்;கள் விடுதலைக்கு என தமிழர்களிடம் சேர்த்த ஒசிப்பணத்தில் தாம் வியாபார நிலையங்களை திறந்து கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்காக விலைகளை குறைத்து விற்று ஏனைய தமிழ் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்

கனடாகந்தசாமிகோவிலை பலாத்காரமாக பறித்தெடுத்தார்கள் விடுதலையை சாட்டாக வைத்து தமிழர்களின் அனைத்துதுறைகளிலும் சர்வதிகாரமான முறையில் தலையிடுவதால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கனடாவில் வேறுவழியின்றி பொலிசாரிடம் முறையிட்டும் உள்ளனர். உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்களிற்கு எதிரான முறைப்பாடுகளை கனேடிய பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்ட விசாரணைகளின் ஆதாரத்தை வைத்துத்தான் கனேடிய மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்று அவ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது

இப்போது விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பதுபோல கனேடியத்தமிழர்களை ஏமாற்றும் ஓரு நடவடிக்கையாக தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்; என்று தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்கிறாhகள.; முன்பும் உலகத்தமிழர் இயக்க தலைவரான சுரேஸ் மாணிக்கவாசம் பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்டபோது சட்டத்தரணிக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் டொலருக்கு மேல் தமது பணத்தில் அல்ல தமிழ் மக்களிடம் சேர்த்த பணத்தில் அநியாயமாக செலவழித்து வாதாடினார்கள் கண்ட பலன் என்ன? ஒன்றும் இல்லை. சுரேஸ் மாணிக்கவாசகமே பொலிசாரின் சாட்சியாக மாறிவிட்டார்.

இந்த தடையானது உலகத்தமிழர் இயக்கத்தினரின் செயல்பாடுகளை கனேடிய அதிகாரிகளால் பல வருடங்களாக கண்காணிப்பு செய்யப்பட்டு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் முடிவின்படி அதுவும் கனடாவில் ஓருதொண்டர் அமைப்பு முதல் முறையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு சட்டங்களை ஆராய்ந்துதான் உலகத்தமிழர் இயக்கத்தின் மீதான தடையை கொண்டுவந்திருப்பார்கள். மீண்டும் இலட்சக்கணக்கான டொலர்களை அநியாயமாக செலவழிக்க போகிறார்கள் நியாயம் உலகத்தமிழர் இயக்கத்தின் பக்கம் இல்லை என்பது கனடா வாழ்தமிழர்கள் அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்த உண்மையாகும்.

தேணி இணையம்

Wednesday, June 18, 2008

Some Malaysians Linked To LTTE?

PUTRAJAYA, June 18 (Bernama) -- Malaysia will extend its fullest cooperation to Sri Lanka if an allegation that some Malaysians worked hand-in-glove with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) terrorists to launch bomb attacks in Colombo is true.

"We are still waiting (for the Sri Lankan government to confirm the allegation). As the minister (Home Minister Datuk Seri Syed Hamid Albar) said Tuesday, if there is anything, the Sri Lankan government should contact us.

"We are ever willing to give our fullest cooperation on the matter," said Deputy Home Minister Datuk Chor Chee Heung.

He was speaking to reporters after opening the Security Scanners exhibition at the Marriot Hotel here Wednesday.

While the Sri Lankan authorities had yet to react on the matter, Chor said the allegation was through a news report.

"We don't even know if the allegation is true. If they contact us, then we would do our utmost to help.

"But so far, it is just an allegation in a news report, and the best thing would be for them (Sri Lanka) to contact us," added Chor.

According to a Sri Lankan news report, six suspects under interrogation by Sri Lankan troops revealed they were awaiting instructions from some Malaysians, via the telephone, to launch the attack.

The suspects, believed to be members of the terrorist organisation LTTE, were arrested on Saturday in Wattala, Sri Lanka where authorities seized 2.7kg high- powered C4 explosives.

On Tuesday, Syed Hamid had said that Kuala Lumpur would not hesitate to act against Malaysians linked to the LTTE.

He said his ministry would contact the Sri Lankan government to clarify the allegation.

-- BERNAMA

Tuesday, June 17, 2008

புலிகள் ஆயுதங்களை கீழே போட மறுப்பு

Sri Lanka rebels reject laying down arms for talks

By Shihar Aneez and Ranga Sirilal

COLOMBO (Reuters) - Sri Lanka's Tamil rebels have rejected a request to lay down or decommission their weapons before peace talks, saying they can still win the war against government forces.

The government said last week it would only reconsider re-starting a peace process if the rebels agreed to lay down or decommission their weapons and issued a clear timetable for negotiations.

But Balasingham Nadesan, the rebels' political head, said laying down arms could weaken their bargaining power at any talks.

"Any approach that disturbs the balance of power and parity of status (between the government and rebels) are counter-productive to the peace process," Nadesan said in an email interview with Reuters.

"The balance of power and the parity of status are very crucial for any meaningful negotiations."

The government request came after the rebels said last week they wanted to meet Norwegian peace brokers to resume a stalled peace process.

The government formally ended a tattered truce with the rebels in January, ramping up the civil war in which more than 70,000 people have died since 1983.

The government said the rebels use visits by peace envoys as propaganda. Nordic ceasefire monitors quit the country this year after the collapse of the six-year-old Norwegian-brokered truce.

The military says the rebels are facing heavy losses in the north, while the rebels, who are fighting for an independent homeland for minority Tamils in the north and east, deny they have been weakened by the surge in fighting.

"The LTTE armed forces are presently only engaging in defensive warfare.... We have full confidence that we will win this war with the help of our Tamil people," said Nadesan.

He said the government could not defeat the rebels in a conventional war.

"I like to remind you a famous quote in this regard, 'The conventional army loses if it does not win, but a Liberation movement wins if it does not lose'," said Nadesan.

Analysts say the Sri Lankan army has the upper hand in the latest phase of the long-running war given superior air power, strength of numbers and swathes of terrain captured in the island's east. But they still see no clear winner on the horizon.

Military figures show about 5,000 people, most of them rebels, have been killed this year alone, while scores of civilians have died in attacks on buses and trains blamed on the rebels.