Showing posts with label நம்பமுடியவில்லை. Show all posts
Showing posts with label நம்பமுடியவில்லை. Show all posts

Monday, August 18, 2008

லிப்ட் உதவியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஏரிக்கரையில் மீன் சாப்பிட்ட மகா குண்டு மனிதர்


உலகின் மகா குண்டு மனிதரான 310 கிலோ எடை கொண்ட மானுவேல் உரிபே, மிகவும் கனமான பொருட்களை தூக்க உதவும் லிப்ட் மற்றும் பிளாட்பாரம் டிரெய்லர் உதவியுடன், கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.மெக்சிகோவில் வசிப்பவர் மானுவேல் உரிபே. இவரின் எடை 560 கிலோவை தாண்டியதால், உலகின் மகா குண்டு மனிதராக அறிவிக்கப்பட்டார். இதனால், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததால், அவரின் உடல் எடை 250 கிலோ அளவுக்கு குறைந்தது. இருந்தாலும், படுக்கையை விட்டு எழுந்து அவரால் நடக்க முடியாது. எல்லாமே படுக்கையில் தான். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த உரிபே, 2007ம் ஆண்டு மார்ச் மாதம், வீட்டை விட்டு வெளியே சென்று வெளியுலகத்தைப் பார்த்தார். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அவரின் இரும்பு படுக்கையை ஆறு பேர் வெளியே தள்ளிச் சென்றனர். அதன்பின்னரே அவர் வெளியுலகத்தைப் பார்த்தார்.

கடந்த மார்ச் மாதமும் அவர் வீட்டை விட்டு வெளியேறி, வெளியுலகத்தைப் பார்க்க நினைத்தார். ஆனால், அவரின் படுக்கையை ஏற்றிச் சென்ற பிளாட்பார டிரக், ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதால், அவரால் பெரிய அளவில் எந்தப் பகுதியையும் சுற்றிவர முடியவில்லை. இதன்பின், ஐந்து மாதங்கள் கழித்து சமீபத்தில், முதல் முறையாக, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் உரிபே. கனத்த பொருட்களை தூக்க பயன்படுத்தப்படும் லிப்ட் மற்றும் பிளாட்பார டிரெய்லர் உதவியுடன், அவர் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டார். தனக்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையை விட்டு எழுந்திருக்காமலேயே, அவர் மெக்சிகோவின் மான்டெரே நகரில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று, அதன் அழகை ரசித்தார். ஏரிக்கரையில் விற்ற மீனையும் மற்றும் காய்கறிகளையும் வாங்கிச் சாப்பிட்டார். படகோட்டிகளுடன் ஜோக் அடித்துப் பேசினார்.

Friday, June 6, 2008

நல்ல அண்ணன் நல்ல தம்பி

தாய்வான் நாட்டில் உள்ள காவோஷியாங் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன்,புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக தெரிய வருகிறது.இந்த சிறுவன் தன் தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளை திருடி புகைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும்,புகைப் பிடிக்கும்போது என் தந்தை நல்ல குஸியாக இருப்பார்.இதை பார்த்து தான் நானும் புகை பிடிக்க தொடங்கினேன் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தந்தையிடம் இருந்து திருடியவன்,பின்பு அண்ணனிடம் சிகரெட்டுகளை கடன் வாங்கத் தொடங்கியதாகவும்,அண்ணனுக்கு வயது 9.அவனும் தந்தையிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும்,அண்ணனும்,தம்பியும் புகைப் பிடிப்பதை ஒருநாள் பார்த்த தந்தை,உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் மேலும் தெரிவரும் அதேவேளை,அங்கு அவர்களுக்கு புகைபிடிப்பதை கைவிடுவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Saturday, May 31, 2008

800 தடவைகள் மகளை கற்பழித்த இங்கிலாந்தை சேர்ந்த கொடூர தந்தை

இங்கிலாந்தை சேர்ந்த ஆணிமேரி வில்சன் இவருக்கு இப்போது 38 வயதாகிறது. இவர் 800 தடவை கற்பழிக்கப்பட்டு இருக்கிறார். இந்த படுபாதக செயலை செய்தவர். வேறு யாருமல்ல அந்த பெண்ணின் தந்தை தான்!! இதை மகளான ஆனிமேரியே தன் முகத்தை கைகளால் மறைத்து கொண்டு பொங்கி பொங்கி அழுதவாறு தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது.. எனது 11 வயதிலேயே அவர் என்னை பலவந்தப்படுத்த ஆரம்பித்தார். வாரம் ஒருமுறை என் கற்பை சூறையாடினார் நான் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கொடுமை நடந்துள்ளது குழந்தை பெற்றால் அரசிடம் இருந்து குழந்தை பராமரிப்புக்கான பணம் கிடைக்கும் 6 தடவை நான் கர்ப்பம் அடைந்தேன். 4 தடவை கரு கலைந்து விட்டது ஒருகுழந்தை 8மாதத்தில் இறந்து விட்டது இப்போதும் கர்ப்பமாகத் தான் இருக்கிறேன். அப்பாவின் கொடுமைக்கு பணிய மறுத்தால் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணிய வைப்பார். 800 தடவை இந்த கொடுமை நடந்துள்ளது. இவ்வாறு கொடூர தந்தையின் மகளான ஆனிமேரி வில்சன் தெரிவித்துள்ளார்.

Wednesday, May 28, 2008

எய்ட்ஸ் மருந்து சாப்பிட்டவர் பெண்ணாக மாறுகிறார்

எய்ட்ஸ் மருந்து சாப்பிட்டு வருபவர், பெண்ணாக மாறி வருகிறார்; அவருக்கு மார்பகம் உருவாகி, பெரிதாகி வருகிறது.மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரை சேர்ந்தவர் சனஜோபா; வயது 38. இவருக்கு எய்ட்ஸ் அறிகுறி இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் நிலை எய்ட்ஸ் தடுப்பு மருந்துகளை இவர் சாப்பிட்டு வந்தார். ஓராண்டு இந்த மருந்துகளை சாப்பிட்டுவந்த சனஜோபா உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவரின் மார்பு திடீரென பெரிதாக ஆரம்பித்தது; பெண் களை போல மார்பகம் வளர்ந்து வருகிறது.

இதையடுத்து, அவர் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆண்களுடன் பேசுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதையறிந்த டாக்டர்கள், இவரை வரவழைத்து பரிசோதித்துப்பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. "மருத்துவ வரலாற்றில்மிகவும் அரிதான வளர்ச்சி இது. டில்லியில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தான் இவரை பரிசோதித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்' என்று கூறினர்.எய்ட்ஸ் தடுப்பு மையத்தின் தலைவர் பிரியோகுமார் கூறுகையில்," எய்ட்ஸ் மருந்து சாப்பிடும் பெண்களுக்கு மார்பகம் பெரிதாக வாய்ப்பு அதிகம். ஆனால், ஆணுக்கு இப்படி மார்பகம் வளர்ந்துள்ளது இது தான் முதன் முறை' என்று தெரிவித்தார்.எய்ட்ஸ் மருந்தால் தான், இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Monday, May 26, 2008

மகளையே தாரமாக்கிய இன்னொரு கொடூரன்

பெற்ற மகளையே தாராமாக்கி, குடும்பம் நடத்தி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிய, அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 73 வயது கொடூரனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோசப் பிரட்சில் என்ற 73 வயது காமக்கொடூரன், தான் பெற்ற மகளையே, நிலவறையில், 24 ஆண்டாக தொடர்ந்து கற்பழித்து, மூன்று குழந்தைக்கு தாயாக்கிய விஷயம் வெளியான போது, உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இவனைப்போலவே, பெற்ற மகளை இரண்டு குழந்தைக்கு தாயாக்கிய இன்னொரு காமக்கொடூரனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்தவன் எலிடிரியோ சொரியா என்ற காமக்கொடூரன், தனது செந்த மகளையே தாராமாக்கி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கி உள்ளான். இவனுக்கும் வயது 73. ஜோசப்புக்கும், எலிடிரியோவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளது. இவனும் தனது மகளுக்கு 12 வயதாகும் போது, 1992ம் ஆண்டு, காமவசப்பட்டான். தனது மகளை மிரட்டி, உறவு கொண்டான். இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து, அவர்களை விட்டு, ஐந்து குழந்தைகளுடன் எலிடிரியோவின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இது எலிடிரியோவுக்கு வசதியாக போய் விட்டது. எந்த சங்கோஜமும் இல்லாமல், சொந்த மகளுடன், "குடும்பம்' நடத்தி வந்தான். 13 வயதில் எலிடிரியோவின் மகள் கர்ப்பமடைந்தாள். 1997ம் ஆண்டு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

ஜோசப்பை போல, மகளை அடைத்து வைத்து"அனுபவிக்கவில்லை' எலிடிரியோ. ஆனால், மகள் மூலம் பிறந்த குழந்தையை வைத்து மிரட்டியே, தனது இச்சையை தீர்த்து வந்தான். இந்த தகாத உறவில் வெறுப்படைந்து, பல முறை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் மகள். ஆனால், மகள் மூலம் பெற்ற குழந்தைகளை துப்பாக்கி முனையில் வைத்து, மிரட்டி, வீடு திரும்ப வைத்துள்ளான் எலிடிரியோ. 11 ஆண்டுகளாக இது தொடர்ந்து வந்தது. இதில் வெறுப்படைந்த மகள், போலீசாரிடம் புகார் செய்தார். இதன் பிறகு தான், மற்றவர்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. எலிடிரியோவை போலீசார் கைது செய்து, வழக்கு தொடர்ந்தனர். அவனுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக கரன்சி வெளியிட பிரிட்டன் நகரம் திட்டம்

பிரிட்டனில் உள்ள ஒரு நகரம், தங்கள் பரிமாற்றத்துக்கு தனி "Pound" கரன்சியை வெளியிட திட்டமிட்டுள்ளது. சசெக்ஸ் மாகாணத்தில் உள்ள லிவிஸ் என்ற நகரத்தில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள், வியாபாரிகள், நிதி ஆலோசகர்கள், அரசியல் தலைவர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர்.

உள்ளூரில் பொருட்களை வாங்க, பணப் பரிமாற்றம் செய்து கொள்ள மட்டும் இந்த கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்படும் போது, இந்த கரன்சியை கொடுத்து, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ பவுண்ட் கரன்சியை பெற்றுக்கொள்ளலாம். இப்படி செய்தால், விலைவாசியை கட்டுப்படுத்த முடியும். குறைவான விலையில் பொருட்களை விற்க முடியும். மக்களுக்கும் விலையேற்ற பாதிப்பு இருக்காது. இந்த திட்டத்துக்கு பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டினாலும், வியாபாரிகள், தொழிலதிபர்கள், நிதி ஆலோசகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டேவன் மாகாணத்தில் உள்ள டாட்னஸ் என்ற நகரில் , முதன் முதலில், உள்ளூர் கரன்சி அச்சடித்து தரப்பட்டது. பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ பவுண்ட் கரன்சியை தந்து, இந்த உள்ளூர் கரன்சியை மக்கள் பெற்றுக்கொள்கின்றனர். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு மட்டும் இந்த உள்ளூர் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர். வெற்றிகரமாக இந்தமுறை நடப்பதை அடுத்து, லிவிஸ் நகரத்தினரும் உள்ளூர் கரன்சி அச்சடித்து மக்களுக்கு வினியோகிக்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்," நாட்டுக்கு எதிரான கரன்சி அல்ல இது. உள்ளூரில் உள்ளவர்கள் தங்களுக்குள் பரிமாற்றிக்கொள்ள உதவும் கரன்சி தான். இதனால், வெளி பொருட்களுக்கு மவுசு குறையும். எங்கள் தயாரிப்பு பொருட்களை மக்கள் வாங்குவர். விலையும் அதிகமாகாது' என்று தெரிவித்தனர்.

Tuesday, May 13, 2008

ஞாயிறு மதிய உணவிற்காக 442 கி.மீ பயணம் செய்யும் முதியவர்

பிரிட்டனைச் சேர்ந்த 74 வயதான டொனி லா என்பவர் ஞாயிறு மதிய உணவுக்காக வாரந்தோறும் 442 கிலோமீற்றர் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும் இத் தகவலுக்கு சொந்தக்காரரான டொனி ஞாயிறு காலை 6 மணிக்கு தனது காரில் வீட்டை விட்டு புறப்படுகிறார்.

லாங் இட்சிங்டன் என்ற சொந்த ஊரில் இருந்து 201 கி.மீ.தூரம் பயணம் செய்து போர்ட்ஸ் மவுத் என்ற நகரை வந்து அடைகிறார். அங்கு இருந்து மோட்டார் படகில் விக்ட் தீவுக்கு புறப்படுகிறார். அங்கிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள டியூக் ஆப்யோர்க் என்ற இடத்தை அடைகிறார். அங்குள்ள உணவு விடுதியில் அவருக்கு ஒரு மேசை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மது அருந்தி விட்டு, உணவு உட்கொள்கிறார். இந்த உணவு அவருக்கு விருப்பமானதாக இருக்கிறது. இந்த உணவுக்காக தான் அவர் 25 ஆண்டுகளாக இந்த விடுதிக்கு செல்கிறார்.

முதன்முதலாக 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விடுதிக்கு சென்றார். அதைத்தொடர்ந்து வாராவாரம் அந்த விடுதிக்கு அவர் செல்கிறார்.

சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து புறப்பட்டு போர்ட்ஸ் மவுத் நகருக்கு இரவு வந்து சேருகிறார். மறுநாள் புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் வீடு வந்து சேருகிறார்.

15 வயதில் தந்தையானார்

ராஜஸ்தானை சேர்ந்த 15 வயது சிறுவன், ஒரு குழந்தைக்கு தந்தை ஆகியுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நிகழ்வது வழக்கம். இதை தடுக்க, மாநில அரசு, சமீபகாலமாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கிராமப் பகுதிகளில், குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோல் நடந்த ஒரு திருமணத்தின் விளைவாக, 15 வயது சிறுவன் ஒருவன், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளான்.



அதுகுறித்த தகவல்கள் வருமாறு: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம், சனாவதா. இங்குள்ள ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கியாராம். பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நான்காண்டுகளுக்கு முன், (கியாராமுக்கு, 11 வயது நடந்து கொண்டிருந்தபோது) கியாராமின் பெற்றோர், அவனுக்கு திருமணம் செய்வது, என முடிவு செய்தனர். அதே கிராமத்தை சேர்ந்த, தேவி என்ற சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். (தேவி, கியாராமை விட, இரண்டு வயது பெரியவள்)கியாராமின், பள்ளித் தோழர்களும், திருமணத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், கியாராமின் மனைவி தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தான், அப்பாவான விஷயத்தை பற்றி, கியாராம், பள்ளியில் மூச்சுக் கூட விடவில்லை. குழந்தை பிறந்தது தெரிந்தால், கேலி செய்வார்களோ என்ற பயமே, இதற்கு காரணம். இருந்தாலும், சில நாட்களுக்கு முன், இந்த விஷயம் வெளியில் கசிந்து விட்டது. பள்ளியிலும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதுபற்றி, ஆசிரியர்கள், கியாராமிடம் விசாரித்தபோது, வழக்கம்போல் மவுனமாகவே இருந்தான்.



இதுபற்றி கியாராமின் தலைமை ஆசிரியர் கோவிந்த் ராம் கூறுகையில்,"இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும்,ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன். உலகத்திலேயே, மிக குறைந்த வயதில் அப்பாவான நபர், கியாராமாகத்தான் இருக்கும். கியாராம் மட்டுமல்ல. பள்ளியில் படிக்கும், 12க்கும் அதிகமான மாணவர்களுக்கு, ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதா, இல்லையா என்பது, ஊருக்குள் சென்று விசாரித்தால் தான் தெரியும்'என்றார். இதே பார்மர் மாவட்டத்தில், இன்னும் ஒரு அதிசயமும் அரங்கேறியுள்ளது. கடந்தாண்டு, இந்த மாவட்டத்தை சேர்ந்த பீர்மா ராம் ஜாட் என்ற முதியவர், தனது 88 வயதில், ஒரு குழந்தைக்கு தந்தையானார். உலகிலேயே, அதிகமான வயதில் தந்தையானவர் இவர் தான், என, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பீர்மா ராம், 88 வயதில் தந்தையானதற்கு, அவர் குடித்த ஒட்டகப் பால் தான் காரணம் என, அவரே ஒப்புக் கொண்டார். ஆனால், கியாராம், 15 வயதில் தந்தையானதற்கு, ஏதாவது விசித்திரமான காரணம் உள்ளதா என, இனிமேல் தான் தெரிய வரும்.

13க்கும் 14க்கும் திருமணம்

பிரிட்டனில் 13 வயது சிறுமிக்கும், 14 வயது பையனுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டின் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர் ரெனாடா(31). இவரது மகள் போஸ்னா. தனது மகள் போஸ்னாவுக்கும், இதே இனத்தைச் சேர்ந்த மணமகன் பெசோ(14)வுக்கும் கடந்த மாதம் 28ம் தேதி, ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் 150 விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார் ரெனாடா. பிரிட்டன் சட்டப்படி மணமக்களுக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.


இதுபற்றி ரெனாடாவிடம் கேட்டால், "பிரிட்டன் சட்டத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. எங்களது கலாசாரப்படி எனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளேன். நானும் 14 வயதில் திருமணம் செய்து கொண்டவள் தான். இளம் பிராயத்தில் திருமணம் செய்து கொண்டதால் நான் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. எனவே, தான் எனது மகள் திருமணத்தையும் சீக்கிரமாக முடித்திருக்கிறேன்' என்றார். திருமணம் முடிந்தாலும், 18 வயதாகும் வரை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என, மணமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் ரெனாடா.

Monday, May 12, 2008

இறந்த மூதாட்டியின் உடலுடன் இருமாதங்கள் வாழ்ந்த குடும்பம்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலுடன் இரு குழந்தைகளும் தாயும் வாழ்ந்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மக்தலீன் ஆல்வினா மிடில்ஸ்வொர்த் என்ற 90 வயது மூதாட்டி இறந்தபின்னர் அவரை பிரார்த்தனை மூலம் உயிர்ப்பிக்கலாமென நினைத்தே உடலை 2 மாதங்கள் வரை கூடவே வைத்திருந்தனர்.

இம் மூதாட்டியிடமிருந்து நீண்டநாட்களாக தகவல் ஏதும் இல்லை. அவருக்கு என்ன ஆயிற்று என வீட்டில் சென்று பார்க்கும்படி 120 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வேறொரு நகரில் வசிக்கும் அவரது சகோதரி அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் முகவரியைக் கண்டுபிடித்து மிடில்ஸ்வொர்த் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு லீவிஸ் என்ற பெண் இருந்திருக்கின்றார். மிடில்ஸ்வொர்த் விடுமுறையில் வெளியில் சென்றிருப்பதாகக் கூறி அதிகாரியைத் திருப்பியனுப்பிவிட லீவிஸ் முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் அவரைத் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த அதிகாரி அங்கு நறுமணம் கமழ பக்திப்பரவசம் மிக்க பாடல்கள் ஒலித்துக்கொண்ருந்ததைக் கேட்டிருக்கிறார். வீட்டில் இருந்த 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் 12 வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவனும் அதிகாரியைப் பார்த்ததும் அழத்தொடங்கினர்.

வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சோதனை செய்த அதிகாரி கடைசியாக கழிவறைக் கதவைத் திறந்ததும், ஏதோ சிதைந்த நிலையில் கிடந்த பொருளை பார்த்திருக்கிறார். இறுதியில் அதுதான் தான் தேடி வந்த மிடில்ஸ்வெர்த்தின் உடல் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். லீவிஸின் தாய் மிடில்ஸ்வொர்த் எனக் கூறப்படுகிறது.

லீவிஸிடம் நடத்திய விசாரணையில் மிடில்ஸ்வொர்த் 2 மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டதாகவும் . கடவுளிடம் மனமுருகப் பிரார்த்தித்தால் அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை கழிவறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மேல் தேவையென்றால் தமது குரு குஸேவிடம் கேட்குமாறும் அவர்தான் இறந்தவர் பிழைப்பார் என்ற கருத்தைக் கூறியதாகவும் லீவிஸ் தெரிவித்தார்.

இதையடுத்து குஸேவும் லீவிஸும் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் இருவரும் காப்பகத்தில் இருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.

Saturday, May 3, 2008

பனையிலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதைதான் இது

கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
முதலில் காரொன்றில் மோதுண்ட இந்தப் பெண்ணை அந்தக் காரின் பின்னால் வந்த பஸ் நசித்துச் சென்றதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்றுக் காலை 9 மணியளவில் வெள்ளவத்தை டெல்மன் ஆஸ்பத்திரி முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலி வீதியில் கடற்கரைப் பக்கமாக இருந்து எதிர்ப்புறம் செல்வதற்கு இந்தப் பெண் முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதுண்டு நடு வீதியில் தூக்கி வீசப்பட்டார்.

இவ்வேளையில் காரின் பின்னால் மிக வேகமாக வந்துகொண்டிருந்த பயணிகள் பஸ் இவர் மீது ஏறிச் சென்றுள்ளது.

இதனால் தலை முழுமையாக நசுங்குண்டு சிதைந்த நிலையில் அந்தப் பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இவரது சடலம் பின்னர் களுபோவில ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Friday, May 2, 2008

மாட்டின் வயிற்றிலிருந்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி

அரிசியுடன் சேர்த்து தங்கச் சங்கிலியை உட்கொண்ட மாடு ஒன்றின்
வயிற்றிலிருந்து ஒன்றரை மாதகால இடைவெளிக்குப் பின்னர் சத்திரசிகிசிச்சை மூலம் தங்கச் சங்கிலி எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று வடமராட்சியில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றித் தெரியவந்துள்ளதாவது, புலோலி வல்லிபுரக் குறிச்சியைச் சேர்ந்த க. வடிவேல் என்பவர் ஒரு மாட்டுப் பண்ணையாளர். இவரால் வளர்க்கப்பட்ட நாம்பன் மாடு ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து
பிளாஸ்ரிக் வாளி ஒன்றில் நிறைத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசியைச் சாப்பிட்டு விட்டது. அந்த அரிசி வாளிக்குள் அவரது குடும்பத்தினரால் ஒன்றரைப் பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலி ஒன்று பாதுகாப்புக்காக அரிசியுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தது.

வாளிக்குள் இருந்த அரிசியைச் சாப்பிட்ட மாடு அதற்குள் இருந்த தங்கச்
சங்கிலியையும் சேர்த்து சாப்பிட்டு விட்டது. இவ்விபரம் தெரிய வரவே என்ன செய்வது, ஏது செய்வது என்றறியாத பண்ணை யாளர் மாட்டை வீட்டு வளவில் கட்டிவைத்து உணவு, தண்ணீரை கொடுத்து வந்தார். இந்த மாடு தினமும் வெளியேற்றும் சாணத்தையும் வேளைக்கு வேளை பரிசோதனை செய்து பார்த்தார். அதற்குள் மாடு சாப்பிட்ட தங்கச் சங்கிலி வரவே
இல்லை.

இப்படி ஒன்றரை மாதங்கள் ஓடிக் கழிந்தன. என்ன செய்வது, ஏது செய்வது என தீவிரமாக ஆலோசித்த பண்ணையாளர் மாட்டினை பருத்தித்துறை கால்நடை வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று கால்நடை வைத்திய அதிகாரி சி. வசீகரனிடம் விபரத்தினை எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல்
இவ்வைத்தியசாலையில் வைத்து கால்நடை வைத்திய அதிகாரி, மாட்டினை
சத்திர சிகிச்சைக்குட்படுத்தி அதன் வயிற்றிலிருந்து ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து பண்ணையாளரிடம் ஒப்படைத்தார்.

Thursday, May 1, 2008

படித்தவர்கள் செய்யும் காரியமா இது?

பேய் பிடித்துள்ளதாக எண்ணி தாயை இரும்பு கம்பிகளால்
அடித்து கொன்று, உறவினர் பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற 3 மகன்களை
போலீசார் கைது செய்தனர்.டெல்லி காஜியாபாத் பகுதியை சேர்ந்த 55 வயது பெண்ணின் மகன்கள் ரோகித்,
ஆசிஷ், நவநீத். இதில் ரோகித் எம்.பி.ஏ. முடித்துள்ளார். பொறியியல் கல்லூரியில்
ஆஷிசும், 12ம் வகுப்பில் நவநீத்தும் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக
இவர்களது தாய் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்.
இதையடுத்து, அவரை ஒரு மந்திரவாதியிடம் கூட்டிச் சென்றனர். தாய்க்கு பேய்
பிடித்துள்ளது என்றும், அவரை கட்டிப்போட்டு, ஒரு பெண்ணை பலி கொடுத்தால் அவர் சரியாகிவிடுவார் என்று அவர்களிடம் மந்திரவாதி கூறியுள்ளார். இதை நம்பிய மூன்று பேரும், தாயை கட்டிப்போட முயற்சித்தனர்.

ஆனால், அவர் மறுக்கவே அவரை இரும்பு கம்பியால் மூன்று பேரும் தாக்கினர். வலி தாங்காமல் தாய் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மகன்கள், அவரை தொட்டு பார்த்தனர். தாய் இறந்து விட்டது தெரிந்தது.

நரபலி கொடுத்தால் தாய் மீண்டும் பிழைத்து வருவார் என்று எண்ணி பக்கத்து வீட்டில் இருந்த தங்களது உறவினர் பெண்ணை அடித்து இழுத்து வந்தனர். மூன்று பேரையும் அந்த பெண்ணின் கணவர் தடுத்தார். "எங்கள் தாய் மீண்டும் பிழைக்க இவரை பலி கொடுத்தாக வேண்டும்" என்று
ஆவேசமாகக் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், இது பற்றி போலீக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து 3 மகன்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லி காஜியாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, April 30, 2008

1,500 பெண்களுக்கு எய்ட்ஸ் பரப்பிய அமெரிக்க வெறியன்

முகமூடி அணிந்த ஒருவன், தான் எய்ட்ஸ் நோயாளி என்றும், அதை 1,500 பெண்களுக்கு பரப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். யூ டியூப் என்ற இணையதளத்தில் இவனது பேட்டி, வீடியோ காட்சிகளாக விரிகிறது. தன்னை எதற்கும் பயன்படாத"டிரேஷ்மேன்' என்று அழைத்துக்கொள்கிறான் இவன். தனக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியதைத் தொடர்ந்து, வெறித்தனமாக பெண் களை தேடித்தேடி பாதுகாப்பற்ற அந்தரங்க உறவு கொண்டுள்ளான். முதல் வீடியோவில் தனது கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு, தன்னால் எய்ட்ஸ் பரப்பப்பட்ட பெண்கள், அவர்களின் வயது, சிலரின் முகவரியையும் வாசிக்கிறான்.



"கற்பழிப்பவர்களை கொல்வதை விட மிக முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்லப்போகிறேன்' என்ற, மிரட்டல் குரலுடன் அவனது வீடியோ காட்சிகள் துவங்குகிறது."எனது கையில் இருக்கும் பட்டியலில் உள்ள பெண்கள் எல்லாருக்கும் எச்.ஐ.வி.,யை பரப்பியுள்ளேன். நான் படிக்கும் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், உங்களுக்கு நான் எய்ட்ஸ் நோயை பரப்பி உள்ளேன். உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' என்று, வீடியோ காட்சியில் அவன் குரல் ஒலிக்கிறது. தனக்கென்று இணையதள முகவரியையும் இவன் வைத்துள்ளான்.



"கேங்ஸ்டா' என்ற பெயரில் உள்ள முகவரியில் ஏராளமான ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், "டிராஷ்மேன்' குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன.இவன் எதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறான் என்பது தெரியவில்லை. ஒழுக்கம் கெட்ட பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையா அல்லது பெண் சமுதாயத்துக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்ற நோக்கமாக என்பதும் புரியவில்லை. உடனடியாக இவனுக்கு மனநல சிகிச்சை அவசியம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Tuesday, April 29, 2008

காமக் குரூரன் செய்தியை ஜீரணிக்கத் துவங்கியுள்ளனர் ஆஸ்திரிய மக்கள்


மகளை 24 வருடங்கள் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய குரூரமான செய்தியை ஆஸ்திரிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பத் துவங்கியுள்ளனர்.


குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோசஃப்

73 வயதான ஜோசஃப், தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைத்துவைத்து, அந்த பெண் மூலம் ஏழு குழந்தைகளை பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் செய்தி அந்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இவ் அறையானது தூங்குவதற்கான, சமைப்பதற்கான வசதிகளுடன் கழிவகற்றல் வசதியினையும் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வறையிலிருந்து ஜோசெப் எப் என்னும் பெயருடைய சந்தேக நபரின் மகளான எலிசபெத் எப் என்பவரும் அவருடனிருந்த மூன்று குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

மற்றைய 3 குழந்தைகளும் சந்தேக நபருடன் வளர்ந்து வந்ததாகவும் ஏழாவது குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 42 வயதான எலிசபெத்தும் அவரது 6 குழந்தைகளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதி பல அறைகளை கொண்டிருந்ததாகவும் இதற்கான வாசல் மிகச் சிறியதாக காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எலிசபெத் தற்போது மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவரும் அதேவேளை, இவரது மூத்த மகள் கேஸ்ரின் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1984 இல் தன்னை தேட வேண்டாமென ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு எலிசபெத் காணாமல் போனதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், போதைவஸ்துகளைக் கொடுத்து தனது தந்தையாரே தன்னை நிலவறையில் அடைத்து வைத்ததாக எலிசபெத் தெரிவித்துள்ளார்.

இவரது மூத்த மகளான கேஸ்ரின் நோய் வாய்ப்பாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நோய் தொடர்பான விபரங்களை அறிவதற்காக தாயாரை அழைத்து வருமாறு மருத்துவர்கள் கோரியதையடுத்தே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டில் நிலவறையில் மனிதர்கள் அடைத்து வைக்கப்படும் செய்திகள் வெளியாவது, சமீபத்தில் இது மூன்றாவது முறை.

நடாஷா காம்புஷ்ச் என்கிற இளம்பெண், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிலிருந்து வெளியே வந்திருந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், தனது மூன்று பெண்களை ஏழு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்துவைத்திருந்த செய்தி 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

Saturday, April 26, 2008

இணயத்தள பாலியல் காட்சிகள் சிறுவர்களை எப்படி மாற்றுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்

மூன்று சிறுவர்கள் சேர்ந்து சிறுமியை கற்பழித்தனர்

மூன்று சிறுவர்கள் வயது (8 முதல் 12 வரை) கூட்டாகச்சேர்ந்து 7 வயது சிறுமியை கற்பழித்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது. இவர்கள் இதுபற்றி பொலிஸாரிடம் தெரிவிக்கையில் internet cafe ஒன்றில் கொம்பியூட்டர் கேம்ஸ் விளையாட சென்றபோது அங்கு இணையதளத்தில் கண்ட sex graphic காட்சிகளால் உணர்ச்சிவசப்பட்டு இந்த சிறுமியை கற்பழித்தோம் என்று கூறியுள்ளனர்

Children copy gang rape from internet

26.04.2008

Bangkok - Three boys are being interviewed by the Thai police after allegedly gang raping a 7-year-old girl, a report said Saturday.

The boys, who range in age from 8 to 12, reportedly claimed they were inspired by graphic sex scenes observed online at a local internet cafe where they had gone to play computer games.

The parents of the girl at Thawee Watthana housing estate in the Thai capital said the rape took place 10 days ago. A doctor confirmed that sexual intercourse had taken place.

Police Major Phuwadol Niamsri told the Nation online that the boys had admitted they performed sex acts on the girl after watching pornography that older boys had enjoyed in the internet shop.

Police not only arrested the children, but also brought their parents in for questioning. A number of charges are being considered including gang rape and taking a minor for lewd conduct.


http://news.monstersandcritics.com/asiapacific/news/article_1402003.php/Children_copy_gang_rape_from_internet

Friday, April 25, 2008

ஒரு கப் கோப்பியின் விலை ரூ. 4,000


காட்டுப் பூனை மலத்திலிருந்து தயாரிக்கப்படும், கோப்பிக்கு, பிரிட்டனில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கப் கோப்பியின் விலை, நான் காயிரம் ரூபாய் என்றாலும், ஏராளமானோர் அதை, ஆர்வத்துடன் குடிக்கின்றனர்.பிரிட்டனில் சமீபகாலமாக கபே ரரோ (Caffé Raro)என அழைக்கப்படும் கோப்பிக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. லண்டன் நகரில் உள்ள பீட்சடர் ஜோன்ஸ் என்ற கடையில், இந்த கோப்பி கிடைக்கிறது. இந்த கோப்பி,காட்டுப் பூனையின் மலத்திலிருந்து, தயாரிக்கப்படுகிறது. இத்தாலியைச் சேர்ந்த டி லொங்கி (De Longhi) என்ற நிறுவனம் தான், (Caffé Raro) கோப்பியை தயாரிக்கிறது. உலகின் மிகச் சிறந்த ஜமைக்கன் புளூ மவுண்டன் (Jamaican Blue Mountain) மற்றும் கொபி லுவாக்(Kopi Luwak) என்ற, இரண்டு கோப்பி கலவைகளில் இருந்து, இது தயாரிக்கப்படுகிறது. இதில், குலி லுவாக் கோப்பி கலவை, காட்டுப் பூனையின் மலத்திலிருந்து தயாராவது. இதற்கான கோப்பிக் கொட்டைகளை தயார் செய்வது, அத்தனை சாதாரணமான வேலை அல்ல. இந்தோனேசியாவின் காட்டுப் பகுதிகளில் இருந்து, பூனைகள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றை ஒரு இடத்தில் அடைத்து வைத்து, அவற்றுக்கு கோப்பிக் கொட்டைகளை உணவாக தருகின்றனர். பின், பூனைகளின் மலத்திலிருந்து, குலி லுவாக் கோப்பி தாயாரிக்கப்படுகிறது. இதுபற்றி டெலி லொங்கி நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஆண்டுக்கு, 200 கிலோ கோப்பி பொடி மட்டுமே தயாரிக்க முடியும். அதனால் தான், இதற்கு இத்தனை கிராக்கி' என்றார்.

$100 Per Cup De’Longhi Caffe Raro Coffee

The world’s most expensive cup of coffee

If you like you’re coffee smooth, silky and expensive, you might want to get yourself a cup of De’Longhi Caffe Raro which retails for £50 ($100) per cup.

This blend combines two of the world’s rarest coffee beans, Kopi Luwak and Jamaican Blue Mountain to give a truly luxurious cup of coffee.

David Cooper creator of De’Longhi’s Caffé Raro, World Barista Championship Judge and Board Director of the World Barista Championships is quoted as saying:


“De’Longhi’s Caffé Rarois an extremely exciting coffee and a first for the UK – if not the world! These two incredibly rare coffees have never been blended before and the result is a very rich and full tasting espresso. These coffees have been slowly hand roasted for around 12 minutes to ensure that we maximise the potential of each coffee. The final roast colour is quite dark to ensure that the espresso is perfect for a smooth latte or cappuccino,”

For the uninitiated it’s worth pointing out that the Kopi Luwak coffee bean is widely regarded as the most expensive individual coffee bean on the market. Produced in Indonesia, this rare bean is digested by the Palm cat, a process which creates an earthy flavour celebrated by coffee aficionados. With only 200 kilos produced each year demand for the bean is strong and prices remain high.

Ummm nice???

This luxury blend will be on sale for the first time in Peter Jones, the landmark Chelsea department store and through the De’Longhi website throughout April, with limited availability. All proceeds from the sale of the coffee will be donated to Macmillan Cancer Support to help people whose lives have been affected by cancer.

Wednesday, April 23, 2008

ரயிலில் டிக்கெட் எடுக்க காசில்லாமல் சிக்கிய டோனி பிளேயர்!

கடந்த ஆண்டு வரை பிரிட்டனின் பிரதமராக இருந்தவர், அதற்குப் பிறகும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர், இத்தனை பெருமைக்குரிய டோனி பிளேயர் ரயிலில் டிக்கெட் எடுக்கப் பணமில்லாமல் சிக்கினார் என்றால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான். பிரிட்டனில் சில ரயில்களில் பயணம் செய்யும்போதே டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. அந்த வசதி உள்ள ரயில்களில் ஒன்று ஹீத்ரோ எக்ஸ்பிரஸ்.

இந்த ரயிலில் முதல்வகுப்பில் பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான இன்னாள் தூதருமான டோனி பிளேர் பயணம் செய் தார். டிக்கெட் வழங்கும் அலுவலர் டிக்கெட் வாங்குமாறு கேட்டபோது, தனது பர்சை எடுத்துத் துளாவினார் பிளேர்.
அவர் முகம் வெளுத்துவிட்டது. காரணம், டிக்கெட்டுக்கு தேவையான 24.5 பவுண்டு இல்லை. இதனால் பிளேருக்கு அவமானமாகிப் போய்விட்டது. வீட்டில் எவ்வளவு பணமிருந்தாலும் கையில் டிக்கெட் வாங்கக்கூட காசில்லாததால் கீழே இறங்க வேண்டிய நிலைக்கு வந்தார். அந்த நேரத்தில் அருகிலிருந்த மற்றொரு பயணி பிளேருக்கு பணம் கொடுத்து மானத்தைக் காப்பாற்றினார்.

இந்தச் செய்தியை டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டது. ஆனாலும், "பிளேரிடம் பணம் இருந்ததா இல்லையா என்பது தங்களுக்கு தெரியாது எனவும், சக பயணி ஒருவர் அவருக்கான கட்டணித்தை செலுத்தினார் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும்' என்றார் ஹீத்ரோ எக்ஸ்பிரஸின் செய்தித் தொடர்பாளர். ஒருமுறை ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய் ததற்காக பிளேரின் மனைவி செர்ரி அபராதம் செலுத்தினார்.

அந்த மாதிரியான செய்தியில் இப்போதுது பிளேயரின் பெயரு ம் இடம்பெற்று விட்டது.

Sunday, April 20, 2008

தேர்வில் காப்பியடித்த எம்.எல்.ஏ.

சட்ட கல்வித் தேர்வில் காப்பியடித்த எம்.எல்.ஏ., கையும் களவுமாக
பிடிபட்டார். இடுக்கி மாவட்டம் பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜுமோள். திருவனந்தபுரம்
பல்கலையில், பகுதி நேர சட்டப்படிப்பு (எல்.எல்.பி.,) படித்து வருகிறார்.
இரண்டாவது செமஸ்டர் தேர்வு திருவனந்தபுரம், "லா அகடமியில்' நடந்தது.
இதில், "லேண்ட் லா" தேர்வு எழுதிய எம்.எல்.ஏ., பிஜுமோள், காப்பியடித்த
போது, கண்காணிப்பாளரிடம் சிக்கினார். இவர், எம்.எல்.ஏ.,வாக இருப்பதால்,
மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் எச்சரித்த கண்காணிப்பாளர், தேர்வு
ஹாலை விட்டு வெளியேற்றினார். ஏற்கனவே, இவர் அரை மணி நேரம்
தாமதமாக தேர்வு எழுத வந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க கேரள
மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Saturday, April 19, 2008

மாடல் அழகி பரபரப்பு தகவல்



"மனதுக்குப் பிடித்தவருடன் வாழ உரிமை உள்ளது. முதல் கணவர் விபத்தில் இறந்து விட்டார். இரண்டாவது கணவரை விவாகரத்து செய்து விட்டேன். மூன்றாவது கணவர் சுகுமார் ஜார்ஜ்' என, சென்னை தொழில் அதிபரை ஏமாற்றிய விவகாரத்தில் சிக்கிய ஐதராபாத் மாடல் அழகி சிமிகுமார் கூறினார்.



சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சுகுமார் ஜார்ஜ் கொடுத்த மோசடி புகாரில் கைதாகி, ஜாமீனில் வெளியில் வந்த சிமிகுமார், கோர்ட் உத்தரவுப்படி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.நேற்று காலை, சிமிகுமார் வக்கீலுடன் போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திட்டார். நிபந்தனை ஜாமீனில் இருந்து விலக்கு அளிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிமிகுமார் அளித்த பேட்டி வருமாறு: எனது தந்தை, ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.எனது சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே, அழகி பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. பள்ளி கல்லூரி படிப்பின் போது, மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய, லீத் சூர்த் என்பவரை திருமணம் செய்தேன்; அவர் விபத்தில் இறந்து விட்டார். எனக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். சில ஆண்டுகள் கழித்து, ராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய ரவிக்குமார் மேனனை திருமணம் செய்தேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன்."மிசஸ் ஐதராபாத்' அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, மாடலிங் துறையில் அதிக வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தேன். அதில், அதிக வருமானம் கிடைத்தது.

சுகுமார் ஜார்ஜ், இன்டர்நெட் "சாட்டிங்' மூலம் பழக்கமானார். முதலில் நண்பர்களாகப் பழகினோம். பின்னர், எனது வாழ்க்கையில் பலவித கஷ்டங்கள் ஏற்பட துவங்கின.சுகுமார் ஜார்ஜ் திருமணமானவர். மனைவியைப் பிரிந்து சென்னையில் வசித்து வந்தார். இருவரும் விரும்பி தான், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த என்னை, "யாரிடமும் பேசக் கூடாது' என, சுகுமார் ஜார்ஜ் தடை விதித்தார்.சுதந்திரமாக வாழ்ந்த எனக்கு, இதை ஏற்க முடியவில்லை. அவரை விட்டு விலகவும் முடியாமல், சேர்ந்து வாழவும் முடியாமல் தவித்தேன். எங்களது திருமணம் ஐதராபாத்தில் நடந்தது. ஓட்டலில் தங்கிய எனக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அதனால் தான், செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லை என பொய் கூறி, அவரிடம் இருந்து விலகி சென்றேன். சுகுமார் ஜார்ஜ் சென்னைக்கு வந்து விட்டார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐதராபாத் வாடகை வீட்டில் சில நாட்கள் என்னுடன் அவர் வாழ்ந்தார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் அவர் மீது, ஐதராபாத் போலீசில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.எனக்கு, சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றினார். சட்டப்படி, எனது மூன்றாவது கணவர் சுகுமார் ஜார்ஜ். எங்களது மீதான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவரது சொத்தில் எனக்கு உரிமையுள்ளது.



போலீசில் புகார் கொடுத்து ஐதராபாத் கோர்ட்டிற்கு இழுத்ததால், ஆத்திரம் அடைந்து, சென்னை போலீசில் புகார் கொடுத்து, என்னை அலைக்கழித்து, அசிங்கப்படுத்தி வருகிறார். என் மீது தொடரப்பட்ட திருட்டு மற்றும் மோசடி வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார். என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மாடலிங் துறையில் உள்ள புகழை சீரழிக்கும் வகையில் எனது மாஜி கணவர் பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை; அவரை சும்மா விட மாட்டேன்.எனக்கு பிடித்தவருடன் வாழ எனக்கு உரிமையுள்ளது. ஒரு பெண் மூன்று ஆண்களை, ஒரே நேரத்தில், திருமணம் செய்தால் தான் தவறு. விவாகரத்து பெற்ற பெண், விரும்பிய ஆணை திருமணம் செய்வதில் தவறில்லை. எனது பிரச்னை குறித்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக கவர்னருக்கு புகார் மனு அளித்துள்ளேன். இவ்வாறு சிமிகுமார் கூறினார்.

தொடர்புபட்ட செய்தி: இன்டர்நெட் பழக்கம் விபரீதத்தில் முடிந்தது