குருநாகல் குளத்து சுற்று வட்டத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற தங்குமிட விடுதிகளுக்குச் செல்பவர்களில் அதிகமானவர்களாக 14,15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களாகவே இருப்பதாக வடமேல் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு வடமேல் மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட வடமேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
"" குருநாகல் குளத்து சுற்று வட்டப் பிரதேசத்திற்கு வரும் சிறுவர்கள் தவறான வழி நடத்தைகளில் ஈடுபடுவதாக அதிகமானவர்கள் என்னிடம் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளை விசாரணை செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவ்வாறானவை எதுவும் நடக்கவில்லை என்று என்னிடம் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு பொலிஸ் அதிகாரிகளின் உதவியும் முழுமையாகக் கிடைக்கின்றது.
இந்தப் பிரதேசத்திற்கு இளம் இளைஞர்கள் வருவதற்கு கூடுதலாக அனுமதியற்ற தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் இருப்பதினாலாகும்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்த அனுமதியற்ற விடுதிகளுக்கு வருகின்றவர்கள் போலியான அடையாள அட்டை செய்து கொண்டு அவர்களுடைய வயதைக் கூட்டிக் காட்டுகின்றனர். 14,15 வயதுடைய இந்தச் சிறுவர்கள் செல்வதெல்லாம் அனுமதியற்ற இடங்கள் எனத் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையின் படி அட்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து அனுமதிப் பத்திரமற்ற அனைத்து இடங்களும் அகற்றப்படும் என அவர்மேலும் தெரிவித்தார்.
Showing posts with label Sex. Show all posts

Thursday, August 7, 2008
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி
எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் வேலை நிறுத்தம்
தேயிலைக் கொழுந்து பறிக்கும் இளம் பெண் தொழிலாளி ஒருவர் மீது தேயிலைச் செடியினுள் வைத்து பாலியல் வல்லுறவு மேற்கொள்ள இளைஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
இச் சம்பவம் நேற்று புதன்கிழமை காலை பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
வழமைபோல பெண் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள தேயிலைச் செடிகளுக்குள் மறைந்திருந்த கிராமப்புற இளைஞர் ஒருவர் தனிமையான இடத்தில் தொழில் செய்த இப்பெண் மீது குற்றம் புரிய முயன்றுள்ளார்.
இதனையடுத்து அப்பெண் எழுப்பிய கூக்குரலால் அவ்விடத்துக்கு ஏனைய தொழிலாளர்கள் ஓடி வந்ததும், இவ்விளைஞன் தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தொழிலாளர்கள் அவ்விளைஞனை பிடிக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமய கே.இரட்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இச் சம்பவத்தைக் கண்டித்தும், தமது தொழிலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் எனவும், சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியும் நேற்று இத்தோட்டத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்ஷல்கள் சிலர் மாணவி மீது வல்லுறவு? கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மோதலில் மூவர் படுகாயம்
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் அண்மையில் மாணவியொருவர் பல்கலைக்கழக மார்ஷல்கள் (ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரி) சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் கூறி நேற்று புதன்கிழமை மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பில் "சார்க்' மாநாடு நடைபெற்ற காலப்பகுதியிலேயே பல்கலைக்கழகத்தினுள் இரு மார்ஷல்களால் இந்த மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் கடந்த சில தினங்களாக மாணவர்கள் மத்தியில் பரவிய நிலையில், இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் விசாரணைகளும் நடைபெற்றுள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் அதிருப்தியேற்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணை குறித்து மாணவர்கள் கருத்து வேறுபாடும் கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக மாணவர்கள் விசாரணைக்குழுவிடம் கருத்து தெரிவிக்க முற்பட்ட போது அதனை விசாரணைக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், இந்தப் பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு மார்ஷல்களுக்கும் ஆதரவாகச் செயற்பட முனைந்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று புதன்கிழமை காலை பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழு அலுவலகம் முன்பாகத் திரண்ட பெருமளவு மாணவர்கள் இந்தச் சம்பவம் மற்றும் பக்கச்சார்பான விசாரணைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
இவ்வேளையில் அங்கு வந்த விரிவுரையாளர்களுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்குமிடையே வாய்த்தர்க்க மேற்பட்டு அது கைகலப்பாக மாறி பின்னர் மோதலில் முடிவடைந்தது.
இதனால், விரிவுரையாளர் ஒருவரும் இரு மாணவர்களும் காயமடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கு பொலிஸாரும் கலகமடக்கும் பொலிஸாரும் விரைந்ததுடன், பொலிஸார் பல்கலைக்கழகத்தினுள் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதேநேரம், ""காமுகர்களிடமிருந்து பல்கலைக்கழக மாணவிகளைக் காப்பாற்றுங்கள்' என்ற சுலோகங்களுடனான பதாகைகளும் பல்கலைக்கழக வெளிப்புறச் சுவர்களிலும் வேலிகளிலும் தொங்கவிடப்பட்டிருந்தன.
இந்த அசம்பாவிதங்களால் நேற்று பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவியது.

3 வயது பெண்குழந்தை மீது பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 11 வருட கடுங்காவல் சிறை
மூன்று வயது பெண்குழந்தையை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கண்ட எதிரிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பதினொரு வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கந்தளாய்க் கோவில் கிராமத்தில் 2003 ஆம் ஆண்டு இக்குற்றம் இழைக்கப்பட்டதாக எதிரி மீது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியமளித்தார். சாட்சியமளித்த சிறுமிக்கு ஏழுவயது என்று தெரிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி கேட்டபோது தனக்கு என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என்று சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் சாட்சியமளித்த போது ""சம்பவதினம் இரவு 12 மணி இருக்கும். வீதியால் வந்து கொண்டிருந்த சுவாமியின் ஊர்வலத்தைப்பார்க்க வீதிக்கு வந்தேன். வீட்டினுள் எனது நான்கு வயது மகனும் மூன்று வயது மகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். சுவாமி தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிய போது வீட்டினுள் இருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டது. வீட்டினுள் சென்றபோது எதிரி வீட்டினுள் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த காட்டுப்பக்கமாக ஓடியதைக் கண்டேன். மகளைப் பார்த்த போது அவளின் மலவாசல் பக்கம் ஒரு கிழிவுக்காயம் காணப்பட்டது. குழந்தை வலியால் அலறியது என்று சாட்சியமளித்தார். வைத்திய அறிக்கையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மலவாசல் பக்கம் கிழிசல்காயம் இருந்ததாகத் தெரிவித்தது.
விசாரணை முடிவில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எதிரியை குற்றவாளியாகக் கண்டார். சந்தர்ப்ப சூழ்நிலை, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் ஆகியன எதிரி மீதான குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நீருபித்துள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
எதிரிக்கு பத்து வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நட்டஈடாக வழங்கும்படியும் எதிரிக்கு உத்தரவிடப்பட்டது. அபராதமும் நட்டஈடும் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருடகடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி எதிரிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அரச வழக்கறிஞர் செல்வி சுகந்தி கந்தசாமி வழக்கை நெறிப்படுத்தினார்.

Subscribe to:
Posts (Atom)