Thursday, July 3, 2008

மரணப்படுக்கையில் ஒசாமா பின்லேடன்


அல் கொய்தா போராளி குழுவின் தலைவர் ஒசாமா பின்லேடன், சிறுநீரக நோயொ ன்றால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் உள்ளதாகவும் அவர் அந்நோய் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உயிர் வாழ வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் இருவர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேற்படி புலனாய்வு முகவர்கள் பின் லேடன் பயன்படுத்தும் சில மருந்துகளின் பெயர்களையும் ஒருவாறு சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.""தற்போது பின்லேடன் உள்ளெடுத்து வரும் மருந்துகளின் பிரகாரம், அவர் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் 6 முதல் 18 மாதங்கள் வரையே வாழ முடியும் என நாம் எதிர்பார்க்கிறோம்'' என மேற்படி புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

பின்லேடன் சிறுநீரக நோயால் அவதிப்படுவதாக முதன்முதலாக தெரிவித்தவர் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவானது, பாகி ஸ்தான் பிராந்தியத்தில் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதியின்றி பின்லேடனை இலக்கு வைத்து நேரடித் தாக்குதல்களை மேற்கொள்ள ஜனாதிபதி முஷாரப்புடன் உடன்படிக்கையொன்றை செய்து கொண்டுள்ளதாக "வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: