Tuesday, June 10, 2008

மகன் மது அருந்தினால் தந்தைக்கு தண்டனை

இளம் வயதினரிடையே குடிப்பழக்கம் அதிகரித்துள்ளமையை அடுத்து பிரிட்டன்
அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 18 வயதிற்குட்பட்ட
இளைஞர்கள் பொது இடங்களில் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் அவர்களின்
பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படுவர் என்று பிரிட்டன் அரசு
எச்சரித்துள்ளது.

பிரிட்டன் இளைய தலைமுறையினரிடையே குடிப்பழக்கங்கள்
அதிகரித்துள்ளதால் 18 வயதிற்கு உட்பட்டவர்களில் ஐந்து பேரில் ஒருவர்
தினமும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே உள்ளனர.; இதனால் கடந்த சில
ஆண்டுகளாக பிரிட்டனின் மது விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது
மற்றும் குடித்து விட்டு வீதியில் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து
பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜாக்வி ஸ்மித் தெரிவித்தது வருமாறு 18
வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருவது
கவலை அளிக்கிறது இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து விழிப்புணர்வு
பிரசாரம் செய்யப்பட்டது. தகுந்த பலன் கிடைக்கவில்லை இதனையடுத்தே
இத்தகையதோர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தங்கள் குழந்தைகளைச் சிறந்தவர்களாக உருவாக்குவதில் பெற்றோருக்கு
முக்கிய பொறுப்பு உள்ளது. பொது இடங்களில் குடித்து விட்டு ரகளையில்
ஈடுபடும் இளைஞர்களை முதல் முறையாக எச்சரிப்போம் மீண்டும் அந்த
செயல்களில் அவர்கள் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவர் அபராதமும்
விதிக்கப்படும் அத்துடன் பெற்றோரும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்படுவர் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுவிற்பனை செய்யும்
கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஸ்மித் மேலும்
தெரிவித்தார்.

No comments: