Tuesday, June 10, 2008

வெளிநாட்டு முதியோர்கள் இலங்கையில் தங்கியிருக்க புதிய விஸா திட்டம் அறிமுகம்

நாட்டில் வசிக்க விரும்பும் வயது முதிர்ந்த வெளிநாட்டவர்களுக்கு விசேட வதிவிட விஸாவொன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய விஸாத் திட்டத்தை அமுல் படுத்துவதற்கு குடிவரவுகுடியகல்வு ஆணையாளர் நாயகத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த புதிய விஸா நடைமுறை மூலம் வயது முதிர்ந்த வெளிநாட்டவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டு இலங்கையில் வசிப் பதற்கு முன்வருவார்கள். அவர்களது சேமிப்பு தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு ஏற்படும் என குடிவரவுகுடியகல்வுத் திணைக் களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் புதிய விஸாத் திட்டத்தின் கீழ் விஸாக்களைப் புதுப்பிப்பதற்கான 6 மாத கால எல்லை 2 வருடமாக அதி கரிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை யின் கீழ் வதிவிட விஸாவிற்காக விண்ணப்பிற்கும் வயது முதிர்ந்த வெளிநாட்டவர்கள் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அல்லது இதற்குச் சமமான பெறுமதியுடைய பணத்தை அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும்.

அத்தோடு, ஒரு மாதத்துக்கான செலவாக 1500 அமெரிக்க டொலர் களையும் அவரில் தங்கி வாழ்வோ ரின் மாதாந்த செலவுக்காக 750 அமெ ரிக்க டொலர்களையும் சேமிப்பு அல் லது நடைமுறைக்கணக்கில் வைப்பி லிடவேண்டும். இத்திட்டமானது அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டத்தை மீளாய்வு செய்து இதன் மூலம் வெளிநாட்ட வர்களும் நன்மை அடைகின்றார்களா என்பது தொடர்பில் ஆய்வு செய்யப் படும் என்று குடியரவுகுடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: