Wednesday, June 11, 2008

அனுமனை வழிபடும் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் பாரக் ஒபாமா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆஞ்சநேயர் வழிபாடு செய்கிறார். கருப்பின தலைவரான பாரக் ஒபாமா எப்போதும் தன்னுடன் குரங்கு கடவுளான சிறிய அளவிலான ஆஞ்சநேயர் சிலையை வைத்திருப்பதாக டைம்ஸ் நாளேடு புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவராவார். அவரது தாயார் அமெரிக்க பிரஜையாவார். சிறு வயதில் ஒபாமா இந்தோனேஷியாவில் சிறிது காலம் தங்கியிருந்தார். இந்தோனேஷியாவின் இந்து மதத்திற்கும், இந்து கடவுள்களுக்கும் அதிக வரவேற்பு இருப்பதன் காரணமாக ஒபாமாவுக்கும் ஆஞ்சநேயர் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் பொம்மை தவிர ஈராக்கில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரது பிரேஸ்லெட்டையும் ஒபாமா எப்போதும் தன் வசம் வைத்துள்ளார்.

No comments: