Tuesday, June 10, 2008

மக்களை நம்பாது மந்திரிகளை நம்பாத மாந்திரிகத்தை நம்பும் எதிர்கட்சித் தலைவர்

கொச்சிநகருக்கு விஜயம் செய்த ஐ.தே.கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அங்கு மூடிய அறைக்குள் இரண்டு நாள்கள் பிரபல சோதிடர் ஒருவருடன் முக்கிய சோதிட சாஸ்திரப் பூஜை ஒன்றில் ஈடுபட்டிருந்தார் என எழும் செய்திகள் பலரை தலைகுனிய வைத்துள்ளது. கடந்த வியாழனன்று கொச்சின் வந்தடைந்த ரணில் விக்கிரமசிங்க கேரளத்தின் பிரபல ஜோதிடரான பரப்பனாங்காடி கிருஷ்ணபணிக்கருடன் இரண்டு நாள் இந்தப் பூஜையில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.இவரிடம் ரணில் விக்கிரமசிங்க சோதிட சாஸ்திர ஆலோசனை நாடிச் செல்வது இது இரண்டாவது தடவை என்றும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் நாள்களில் என்ன நடக்கும் என்பதை அறியும் அஷ்டமங்கல்ய பிரசன்னம் என்ற பூஜைக்காகவே ரணில் விக்கிரமசிங்க இங்கு வந்தார். இப்படி அவர் என்னுடன் தொடர்புகளை வைத்திருப்பது வழமையான விடயம். என்றும் கிருஷ்ண பணிக்கர் பின்னர் தெரிவித்தார். தமது மந்திர, தந்திர பூஜைகளுக்காக இதே சோதிட நிபுணரிடம்தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அடிக்கடி சென்று வருகிறார்.

No comments: