சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் மெய்யாகக் கருதினால் அது தொடர்பான திட்டமொன்றை நோர்வே அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை சமாதான செயலகத் தலைவர் கலாநிதி ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சமாதான செயற்பாடுகளுக்காக விடுதலைப் புலிகள் திட்டமொன்றை முன்வைத்தால் அது நோர்வே அரசாங்கத்தினூடாக தமக்குக் கிடைக்கப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் களைய வேண்டும் அல்லது ஆயுதங்களை மத்தியஸ்தம் வகிக்கும் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
லக்பிம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment