சார்க் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.
நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த அறிவித்தலில் ஜுலை 26 முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையிலான பத்து தினங்கள் இந்தப் போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என புலிகளின் அரசியல்துறை தெரிவித்திருந்தது. புலிகளின் இந்த ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதிக்கான புலிகளின் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு தொடர்பாக பேச்சுக்கள் எதனையும் நடத்த அரசாங்கம் தயாரில்லையென்றும் அவர் மேலும் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment