Tuesday, June 10, 2008
தாக்குதல் புகைப்படங்களை உடனுக்குடன் புலிகளுக்கு அனுப்பும் மர்ம ஊடகக் குழு
புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்பான விபரங்களை தாக்குதல்கள் இடம்பெற்றதும் உடனுக்குடன் புலிகள் இயக்கத் தலைவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் செயற்படும் மர்ம ஊடகக்குழு தொடர்பான தகவல்களை பாதுகாப்பு உளவுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அமச்சர் ஜெயராஜின் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புலிகள் இயக்கத் தலைவர்களின் கணனிகளுக்கு அனுப்பி வைக்கப்படிருந்தமை இதற்குச் சிறந்த உதாரணம் எனவும் பாதுகாப்பு உளவுப்பிரிவினர் தெரிவிததுள்ளனர். இவ்விதமாக புகைப்படங்களையும் அவற்றின் விபரங்களையும் வெள்நாடுகளில் இருக்கும் புலிகள் இயக்கத் தலைவர்கள் தாக்குதல்கள் சம்பவங்கள் இடம்பெற்றதுடன் உடனுக்குடன் பார்த்துக் கொள்ள முடிகிறது. அமச்சர் ஜெயராஜின் பெனாண்டோ புள்ளே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படும் வரையும் அங்கு ஒரு ஊடக நிறுவனமே புகைப்படங்களை எடுத்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு சம்பவம் இடம்பெற்று ஐந்து நிமிடங்களுக்குள் அமச்சரின் உடல் சம்பவம் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த சொற்ப நேரத்திற்குள் அமச்சரின் உடல் பாகங்களின் புகைப்படங்கள் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு எவ்வாறு சென்றடைந்தது? என்பதைக் கண்டறிவதற்காக பாதுகாப்பு உளவுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இக்குழுவினர் பாதுகாப்பு துறையினரின் இரகசியத் தகவல்களையும் ஏதோவொரு வகையில் அறிந்து அவற்றைப் புலிகள் இயக்கத்தினருக்கு கிடைக்கச் செய்யும் செயலிலும் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த மர்மக்குழு தொடர்பாக பாதுகாப்புத்துறை உளவுப் பிரிவினர் அமச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலையைத் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். புலிகள் இயக்கத்தினருடன் நற்புறவை பேணி இவ்வாறான தகவல்களை புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு வழங்குகின்ற குழுவினர் தொடர்பான சந்தேகம் பலமாக நிலவி வருவதாகவும் உளவுப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment