Sunday, June 22, 2008

சார்ல்ஸ் அந்தனியின் இராசயனப் பயங்கரக் குண்டு- மனித இனத்தை அழித்தொழிக்கத் தந்தையைப் பின்பற்றும் தனயன்?.

- கே. சக்திவேல்- கொழும்பு

தங்களுக்குப் பிடிக்காதவர்களை அழிக்க எந்தவிதமான முறைகளையும் பாவிக்கப்புலிகள் தயங்கமாட்டார்கள் என்பது பரம இரகசியம். ஏழை இளம் மக்களைப் பலவந்தமாக பிடித்துக் கொண்டுவந்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்து, தற்கொலைக் குண்டுகளாக்கிப் பல பலிகளை எடுத்தவர்கள். ஆத்மீகம், அகிம்சை என்பனவற்றுக்கு முன்னிடம் கொடுக்கும் இந்தியாவின் முன்னாளையப் பிரதமரையே ஒரு பெண் தற்கொலைதாரி மூலம் (தனு) கொலை செய்தவர்கள். அந்தக்கொடுமையால், இலங்கைத் தமிழரில் இந்தியர் வைத்திருந்த அனுதாபத்தை அழித்துக்கொண்டவர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் மிகவும் வல்லவர்கள். 1980ம் ஆண்டுகலில், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஓடிப்போய், இலங்கைத் தமிழரின் விடுதலைப்போராட முன்வந்த தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆதரவும் கொடுத்தவர்கள் இந்தியர்.இந்திரா காந்தி, தமிழ் போராளிகளைத் தாய்மையுடன் அணைத்துக்கொண்டவர். அத்துடன் இன்றும் இலங்கையிலிருந்து ஓடிப்போகும் ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்குத் தஞ்சம் கொடுத்த, கொடுக்கும் இந்தியாவை அற்பமாக நினைத்து, அவர்களின் பிரதமரையே ஈவிரக்கமின்றிக்கொலை செய்தவர்கள்.

இன்று, போராட்டத்திற்கு ஆள்ப் பற்றாக்குறை வந்ததாலும், போரில் தோல்வி யடைந்து கொண்டுவருவதாலும், உலகமெங்கும் அவர்களின் ஆதரவாளர்கள் பிடிபடுவதாலும், எப்படியும் தங்களுக்கு ஒரு பெரிய தலையங்கத்தைத் தேடித் தவிக்கிறார்கள். ஈழம் என்ற கனவு சரிவராதபடியால், தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் பெரிய போர் ஒன்று தேவைப்படுகிறது. அத்துடன், விடுதலை எடுத்துத் தருகிறோம் என்று தமிழ் மக்களிடம் தேடிய பணத்தைத் தங்கள் உற்றார் உறவினர் பெயரில் உலகமெல்லாம் மூலதனமாகப்போட்டிருக்கிறார்கள். அதைக்கொடுத்தவர்கல் ஈழம் எடுக்க வேறு என்ன வழி வழிவைத்திருக்கிறாய் என்று கேட்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தும் நிலைக்குப்புலிகள் தள்ளுப்பட்டிருக்கிறார்கள். கோடிகளைச் சம்பாதிக்கும் புலிகளுக்குப் புத்திசொல்ல மிகவும் படித்த தமிழர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்கலின் ஆலோசனையின்படி சிங்களப்பொது மக்களைக்கொலை செய்தும் சிங்கள மக்கள், புலிகள் எதிர்பார்த்தவிதத்தில் பெரிதாகத் தமிழரை திருப்பியடிக்கவில்லை. ஒரு இனக்கலவரம் வரவுமில்லை. இதுவரை புலிகள் எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் தோல்வியிற்தான் முடிந்திருக்கின்றன. அவர்களின் பாதுகாப்பான இருப்புக்கே அபாயநிலை வந்திருக்கிறது.

இலங்கையின் தலை நகரில் அடிக்கடி, குண்டுகளை வைத்துப்பல உயிர்களை அழித்தாலும். அரசாங்கம் புலிகளின் எதிர்பார்க்கும் 'பேச்சுவார்த்தை'' என்ற தந்திரத்துக்குள் அகப்பட்டுக்கொள்ளத் தயாராயில்லை. இப்போது தொடரும் புலிகளின் தோல்வியை யாராலும் தவிர்த்து நிறுத்த முடியாது. எப்படியும் இலங்கை அரசை மண்டியிடப் பண்ண யோசிக்கும் வன்னித் தலைமை, தன் கடைசி ஆயுதமாக இராசாயனக் குண்டுக¨ளைத் தனது எதிரிக்குப்பாவிக்கப் போகிறது. அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கில இணையத்தளத்தின் செய்தியின் படி, பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அந்தோனி தனது தகப்பனை விட மேல் ஒரு படிபோய் மனித ஒழிப்பு செய்யப்போகிறார்.

அவர்கள் வைத்திருக்கும், சிறு விமானங்களில், பல இராசாயனக்குண்டுகளை வைத்து இராணுவ முகாம்கள், சிங்களக் கிராமங்களைத் தாக்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். தகப்பனைப் போலவே, மகனும் தாங்கள் செய்யும் தாக்குதலுக்குப்பின் என்ன எதிர்விளைவு வரும் என்று பார்க்கவில்லை என்பது தெரிகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில்,தங்களுக்கு அடிபணியாத ஜப்பானை அடிபணிய வைக்க அணுகுண்டுகளைப் பாவித்து ஜப்பானின் ஹிரோஷிமா போன்ற நகர்களை அழித்து ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்று குவித்தார்கள். அதன் பின், தங்களுக்கு எதிராக வளரும் இரஷ்யாவைப் பயமுறுத்தப் பலரக, பெளதிக, இரசாயனக் குண்டுகளைத் தயாரித்தார்கள். இரஷ்யாவுக்கு எதிராக, இரசாயனக் குண்டுகளைப் பாவிக்கச் சந்தர்ப்பம் வராததால், தாங்கள் கண்டுபிடித்த இராசாயனக் குண்டுகளைத் தங்கள் சினேகிதனாகவிருந்த சதாம் ஹ¤சேனுக்குக் கொடுத்தார்கள். அந்தப்பயங்கர ஆயுதங்களைச் சதாம் ஹ¤சேன், தனது எதிரிகளான கேர்டிஷ் மக்களுக்கு எதிராகப் பாவித்து நூற்றுக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றிக் கொண்று குவித்தான். ஈரானுடன் நடந்தபோரில், ஈரானியப்படைக்கு எதிராகப்பாவித்தான். நூற்றுக்கணக்கான படையினர் அழிந்தனர். ஆயிரக்கணக்கன்வர்கள் பல்வித ஊனங்களுக்கு ஆளானார்கள்.

இப்படியான, பயங்கர ஆயுதம் இன்று புலிகளின் கைவசம் இருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்ன்னரே, மிகவும், இரகசியமான ஒரு பரிசோதனை, கிளிநொச்சியில், பாதாள அறைகளில் செயற்படுவதாகச் செய்திகள் பரவின. வெளிநாடுகளில் வாழும் , புலி ஆதரவாளர்களின், இராசாயன மேற்படிப்பு படித்த இளம் சந்ததியினர் இந்தக் கொடுமையான பரிசோதனைக்கு உதவுவதாகவும் செய்திகள் கசிந்தன. பாடசாலை விடுமுறைகளில் 'ஈழம்' போய் வரும் புலிகளின் ஆதரவாளர்களின் உதவி மிகவும் பெரிதாகவிருந்தது. இன்று, தாங்கள், பரிசோதனைக்கூடங்களில் உண்டாக்கிய இராசாயனக் குண்டுகளை அப்பாவி மக்களிடம் பரிசோதித்துப் பார்க்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றன.

சார்ல்ஸ் அந்தோனியின் வசமிருக்கும் (இவர்தான் 'ஈழ 'ஆகாயப்படைத் தலைவராம்) சிறு விமானங்கள் மூலம் , இந்த இராசாயனக் குண்டுகள் இராணுவ முகாம்கள், சிங்கள மக்களின் பகுதிகளிற் போடப்படலாம். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு சில மணித்தியாலங்களில் துடித்துப் பதைத்து இறந்து விடுவார்கள். இராசாயனத்தின் துகள்கள் காற்றில் கலப்பதால், அந்தத் துகள்களிலுள்ள இராசாயனத்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் உடனையாக இறக்காவிட்டாலும் இரசாயக் கலவை படிந்த காற்றை உள்வாங்கும் மனிதர்களின் நுரையீரல்கள் பாதிக்கப்படும், மனித உயிர் வாழ்வுக்குத் தேவையான பிராணவாய்வு மாற்றம் உடலுக்குள் நடக்க முடியாத நிஉலையால் பலர் மூச்செடுக்கத்திணறி இறப்பார்கள். மாரடைப்பால் இறப்பார்கள். இரசாயனக் கலவையின் துகள்கள், கண்கள், காது, வாய்வழியால் வயிறு போன்ற அத்தனை பகுதிகளையும் பாதிக்கும். இந்த இராசாயனக் குண்டு ஐம்பது மைலகளுக்கு அப்பாற் பாவிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு, இலங்கை போன்ற சிறுநாட்டை அழிப்பதற்கு ஒருசில நாட்கள் போதுமானதாகவிருக்கும். இதிலிருந்து தப்பினாலும், பெண்களின் கருப்பபையின் தாக்கம் ( மலட்டுத் தன்மை), ண்களின் விந்து உற்பத்தியின் அழிவு வருவதைத் தடுக்கமுடியாது. எதிர்காலம் , அறிவற்ற ஒரு, மலட்டு, குருட்டு , செவிட்டுச் சமுதாயத்தைக் கொண்டுவரும். அப்பாவித் தமிழர்கள் நம்பும், அவதாரக்கடவுளான '' கார்த்திகைக் கடவுளின் வரம் இலங்கையின் அழிவாக இருக்கும்''.

புலம் பெயர்ந்த நாடுகளில் புலிகளுக்குப்பணம் கொடுக்கும் தமிழ் மக்கள், தங்களின் பணம் எதற்குப்பயன் படுகிறது என்பதைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை என்பது இந்த விடயங்களிலிருந்து தெரிகிறது. இரசாயன ஆயுதத்தில் நச்சைப் பரப்பவா நாகரீக உலகில் வாழும் தமிழர்கள் புலிகளுக்கு உதவுகிறார்கள்? இரசாயன ஆயுதத்தில் அக்கினியை அனுப்பிவைத்து அப்பாவி மக்களை அழிக்கவா புலம் பெயர்ந்த மக்கள் பணம் கொடுக்கிறார்கள்? அண்மையில் அவுஸ்திரேலியா, கனடா, இத்தாலி போன்ற இடங்களில் பல புலிகள் பிடிபட்டார்கள். ஏன் பிடிபட்டார்கள்?புலிகளுக்குப் பணம் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டதாலா? அல்லது இரசாயன, பெளதிகக் குண்டுகள் செய்யும் உபகரணங்களைக் கடத்துகிறார்கள் என்ற குற்றத்தில் பிடிபட்டார்களா என்பதை இனி இருந்து பார்க்கலாம். தகப்பன் அழித்து எஞ்சியிருக்கும் ஏழைத் தமிழர்களைத் தன் இரசாயக்குண்டுகள் மூலம் நிர்மூலம் செய்ய முனைகிறார் மகன்.

தேணி இணையம்

No comments: