Wednesday, June 11, 2008

பெனாசிர் வேடத்தில் ஐஸ்


பாலிவுட் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் முன்னாள் பாகிஸ்தான் பெனாசிர் புட்டோ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

உலக அழகி பட்டம் வென்று பின்னர் நடிகையான ஐஸ்வர்யாராய் பாலி வுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது வெளியாக ஓடிக் கொண்டிருக்கும் "சர்கார்ராஜ்' படத்தில் கணவர் அபிஷேக் மற்றும் மாமனார் அமிதாப்போடு நடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாராய் முன்போல அதிக படங்களில் நடிக்க ஒப்புக்ககொள்வ தில்லை. "சர்கார்ராஜ்' படத்திற்கு பிறகு அவர் எந்த புதிய படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

யூ டிவி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பு பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதனிடையே, பெனாசிர் மற்றும் பாகிஸ்தான் அரசிடம் இதற்கான அனுமதியைப் பெற யூ டிவி நிறுவனம் முயற்சித்து வருகிறது.

No comments: